~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘கம்ப ராமாயணம்’

வெள்ளி விருந்து

நாற்சந்தி கூவல் – ௯௪ (94)
(கதம்பம்)

படிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.

(மின்)புத்தகம்

தீட்சிதர் கதைகள் (1936)


ராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.

>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<

கட்டுரை

  • எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி ? நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது
  • கதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/?p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect ! என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி.  இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)

கதை

  • சித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.
  • ஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.
  •  நேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)

இசை

இசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :

ஒலிந்து = ஒலியுடன் இயந்து !

எம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.

ஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.

இன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :

அனைவரும் கூடி,
அவன் புகழ் பாடி,
நிர்மலா யமுனா நதியில் நீராடி…
#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)

மீள்

(தினமணி கதிரிலிருந்து)

பரிபாஷை என்றால்  ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்!

தங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.

கோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.

இங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை! “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்!

கோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.

அரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர்! கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்!

-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.

கவிதை

  • கவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி
      இருட்டை 
      எச்சரிக்கும் 
      புரட்சிக்குரல் !
  • உன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :
    மழையில்லை மடியில் கனமில்லை,
    மகன்கள் சுகமில்லை,
    கையில் பணமில்லை,
    கள்குடிக்கக் கூட காசில்லை !

சொற்பொழிவு 

புலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன.  நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.

 >>> பதிவிறக்க <<<

படம் 

(நெட்டில் சுட்டது)

Three Friends

யோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே !

என் கிறுக்கல் 

இரவும் இதயமும்
இனிதே உறங்கட்டும்
சிறகும் சிந்தனையும்
சிலிர்த்தே வளரட்டும்

உறவும் உறக்கமும்
உணர்ந்தே கூடட்டும்
மலரும் மனமும்
மகிழ்தே விடியட்டும்

நாளும் நலமும்
நம்முடன் வாழட்டும்
காற்றும் காதலும்
காலமெல்லாம் பெருகட்டும் !

குறிச்சொல் மேகம்