~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for திசெம்பர், 2011

ட்விட்டர் விருந்து….

நாற்சந்தி கூவல் – ௨௯(29)

(கீச்சு பதிவு)

ட்விட்டர் விருந்து….

@Kaniyen கனியன். ஒரு நல்ல ட்விட்டர் நண்பர். நான் அதிகம் Favourite மற்றும் Retweet செய்வது இவர் கீச்சசுகளை தான் யென்று நான் சொல்லி, twitterstats.com கூட சரிபார்த்து சொல்கிறது.

இவருடைய ஒரு நல்ல குணம், எழுத ஆரம்பித்தால் அனைத்தும் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள். கண்டிப்பாக சென்சுரி. இல்லை ஒன்னுமே எழுத மாட்டார். பல நாட்களுக்கு பிறகு இன்று அவர் குடுத்த விருந்து உங்கள் பார்வைக்கு:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பெரும்பாலான காதல்கள் கடைசியில் சமாதி ஆகிவிடும் என்பதற்கு உதாரணம் “தாஜ்மகால்” !

எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன, ஆனால் சொர்க்கத்தை நிச்சயிக்கவில்லை !

நமக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால்தான் “மீண்டும் தலைப்புச்செய்திகள்” !

காசு, காமம் , இந்த இரண்டில் மட்டும்தான் சாதி மத பேதமில்லை !

New Thirukural:

ஆட்டை வெட்டியவுடன் அலறியது மனம் ! சமாதானமாக்கியது கறிக்குழம்பு மணம் !

எப்போதும் பொய் பேசுபவர்க்கு, ரொம்ப ஞாபக சக்தி வேண்டும் இதுவரை என்ன பேசினோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள !

அரசியல்வாதிகளை விட, அதிகம் கை தட்டு வாங்கியவை நம்ம ஊர் கொசுக்கள்தான் !

நீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் ! நீ தூங்கும்போது குறட்டை விட்டால் நீ மட்டும்தான் தூங்குவாய் !

செத்த என் தாத்தாவுக்கு எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள் ! அவர் உயிரோடிருக்கும்போது ஒரு நாதியில்லை ஒரு வாய் சோறு கொடுக்க !

இதயக்கதவை திறந்தவளையே, உள்ளே வைத்து பூட்டுவதற்கு பெயர்தான் காதல் !

இறைவனுக்கு படையலிட்டோம், பசியாறின எறும்புகள்

சயனைடின் சுவை அறிந்தவர் யாராவது அதன் சுவை பற்றி இதுவரை பேட்டி அளித்துள்ளார்களா?

விலங்குகளை வதை செய்யும் கடவுளர்களை கைது செய்ய ஏன் இன்னும் “புளு கிராஸ்” எந்த முயற்சியும் எடுக்கவில்லை !

கும்முன்னு இருக்கிற பெண்ணைவிட, கம்முன்னு இருக்கிற பெண்ணை கட்டுபவர்கள் வாழ்க்கைதான் ஜம்முன்னு இருக்கிறது !

தினமும் காலையில் தூங்குபவன் கனவிலேயே இருக்கிறான் , எழுந்திருப்பவன் கனவை நனவாக்க முயற்சிக்கிறான் !

சின்னவயதில் என்னை “கன்னுக்குட்டி” என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் “எருமைமாடு” என்று அழைக்கிறார் !

நல்ல நேரம் முடிவதற்குள் தாலி கட்டினான் மாப்பிள்ளை , தாலி கட்டிமுடித்தவுடன் நல்ல நேரம் முடிந்தேவிட்டது வாழ்க்கையில் !

நேற்றைய வேலையை இன்று செய்பவன் அயர்ச்சியில் உள்ளவன் ! நாளைய வேலையை இன்றே செய்பவன் முயற்சியில் உள்ளவன் !

கையில் காசிருக்கும்போது வேண்டாத பொருள்களையெல்லாம் வாங்குகிறோம், பின்னர் கடனாகி வேண்டிய பொருள்களையெல்லாம் விற்கிறோம் !

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

140ள் என்ன விளையாட்டு. உங்கள் சுவை மிகு பணி தொடர நல்வாழ்த்துகள் .

நாற்சந்தி நன்றிகள் : @Kaniyen

நன்றி…

நாற்சந்தி கூவல் – ௨௮(28)

(நன்றி பதிவு)

நன்றி…

இந்த சொல் என்ன மாயம் செய்கிறதோ மந்திரம் செய்கறதோ. ‘கொலைவெறி’ என நேற்று ஒரு பதிவு செய்தேன். அதை ‘கொலைவெறி’யுடன் பலர் பார்க்க வோர்ட்பிரஸ்-ஸின் தமிழ் அங்கத்தின் (ta.wordpress.com) முகப்பு பக்கத்தில் வந்துவிட்டது. (இங்கு எப்போதும் நிறைய பார்வியிடப்பட்ட ‘புதிய’ பதிவிகுளை நாம் காணலாம்)

இது போதாதுயென்று ‘இன்றிய தினத்தின் சிறந்த பதிவுகள்’ (Blog Of The Day) வோர்ட்பிரஸ்-ஸின் (botd.wordpress.com/top-posts/?lang=ta) தமிழ் அங்கத்தின் பதினைந்தாவது (now 14) இடத்தை பிடித்துள்ளது ‘கொலைவெறி’.

இந்த ஆண்டில் மொத்தம் (டிசம்பர் தொடங்கி) இதுவரை இருபத்திஏழு பதிவுகள் செய்துள்ளேன். அத்தனை முத்துகளையும் விட்டு, உலக மக்கள் போல இந்த ‘கொலைவெறி’ மட்டும் ஹிட். இதனை ஒரு நல்ல அங்கீகாரமாக எடுத்து கொள்கிறேன். படித்த (சிரித்த) நெஞ்சங்களுக்கு நன்றிகள் 😉

பல முறை இதை பல பேர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Why This கொலைவெறி

கொலைவெறியடி??

பி.கு: இது சாதாரண விஷயம் தானே. ஏனடா இந்த தம்பட்டம்…. ஒன்னும் இலீங்க, இது எனக்கு புது அனுபவம், புது சந்தோஷம் அதான் இந்த பதிவு

60 s

நாற்சந்தி கூவல் -௨௭(27)

(சித்திர பதிவு)

அறுபது நொடிகள். இதை வைத்து என்ன என்ன செய்யலாம். ஹும்….. பலவற்றை செய்யலாம் என நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.

நாம் கொஞ்சி குலாவி வாழும் இணையத்தில் ஒரு நிமிஷத்தில், அதாவது அறுபது நோடிகளில் நாடக்கும் அபத்தங்கள் (அல்ல) அற்புதங்கள் ஒரு பட வடிவில்.

யோசிக்க வேண்டிய விஷயம்.

i) இதை எல்லாம் செய்ய எவ்வளவு மின்சாரம் விரயம் செய்கிரோம்? அனைத்தையும் சேமிக்க எவ்வளவு பெரிய சர்வர் தேவை? இது எல்லாம் நடக்க மின்சாரம் என்ன மரத்தில் விளைகிறதா……………………………………………..

ii) நாணயத்தின் மறு பகுதி. இணையத்தின் பயன்கள். ப்ளாக் (வளைப்பூ). முகநூல் (facebook). அறிவ வ(ளர்/ற்)க்கும் கூகிள். மின்னஞ்சல். இணையதளங்கள். இன்றிய டீ.வீ (youtube). வேலை வாய்ப்புகள். இசை. தொலைபேசி. செய்திகள். கடைசி நம் தோழன் “ட்விட்டர்”. வாழ்க இணையம். வளர்க மகிழ்ச்சி.

நாற்சந்தி நன்றிகள்: இப்படம் வெளிவந்த அதே இணையத்திற்கு.

இருவர்…

நாற்சந்தி கூவல் – ௨௬(26)

(சித்திர பதிவு)

இருவர்…

இந்த ஆண்டு நம்மிடம் இருந்து விடை பெற்ற இரு ஜாம்பவான்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் என்னும் ஒரு பெரும் சம்பிராஜ்ஜியத்தை ஸ்தாபித்த நல்லவர் வல்லவர் . இவர் வாழ்கை எனக்கு இரண்டு பாடங்களை கற்பிக்கிறது

i) அவர் வெற்றி கதை. விடா முயற்சி. பெயர் புகழ். புதுமை (innovation), நடத்தும் (implementation) திறமை என பல நற்குணங்கள்.

ii) இரண்டு. விதி என்னும் விளையாட்டு. எவ்வளவு பணம் இருந்தாலும் என்ன செய்ய. அவருக்கு வந்த வியாதி அப்படி. நம் கையில் ஒன்றும் இல்லை. எல்லாம் ஏற்கனவே தலையில் எழுதி, நடத்தப் படுகிறது என்பதை ஸ்பஹ்டமாக காட்கிறது

அடுத்த மனிதர். இவர் இறந்த பிறகு தான், இவர் என்ன செய்தார் என நான் அறிந்தேன். டென்னிஸ். C ப்ரோக்ராம் முறையின் தந்தை. இவர் கண்டுபிடித்தது : C இன்றி ஒரு அணுவும் அசையாது.

கணினி பற்றி சிறுது அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள். நஆணானப்பட்ட விண்டோஸ் ஆகட்டும் (இலவச) லினக்ஸ் ஆகட்டும், C ப்ரோக்ராம்மே கொண்டே செய்ல் படுகிறது, இன்றுவரை.

ஜாப்ஸ் செய்த ஐ-போன் கூட  C ப்ரோக்ராம்மின் வளர்ச்சி பரிமாணம் என சொல்லலாம்.

காலம் செய்யும் மாயங்கள் என்ன? டென்னிஸ் டென்னிஸ் மற்றும் ஜாப்ஸ் பெற்ற புகழ் என்ன? ஊடகங்கள் செய்த மரியாதை என்ன?

சிந்திக்க……….

பின்வரும் படம் என்னை சிந்திக்க வைத்தது. உங்கள் பார்வைக்கு:

கொலவெறி…

நாற்சந்தி கூவல் –௨௫(25)

(கொலவெறி பதிவு)

கொலைவெறி என்று ஒரு பாடல் மிகவும் பெரிதாக பேசப்படிகறது. ஐயகோ.. இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்று வேறு சொல்கிறார்கள்….

காதல் செய்தால் மட்டும் தான் கொலைவெறி வருமா? இதோ ப்ரோக்ராம் எழுத்தும் நல்லவர்களுக்கும் (எப்படி?) இது போல ஒரு வெறி வரும்.

பாஸ், கோட் (code), மௌஸ், பக், பீர், ப்ராஜெக்ட் மேனேஜர், ஐ.டீ என்று நீண்டு செல்கிறது அந்த பட்டியல்.

 

என்ன சொல்ல…

நாற்சந்தி கூவல் -௨௪(24)
(சித்திர பதிவு)

என்னவென்று சொல்ல…..
இது முகநூல் (facebook) மோகமா அல்ல அன்பா…
😉 நீங்களே சொல்லுங்கள் 🙂
ஒரு வேலை தனி-திறமை(CREATIVITY)யோ….
ஏனோ கண்ணுக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை #சட்டனி #சப்பாத்தி

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: