~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for ஜனவரி, 2012

தானே பணம்…

நாற்சந்தி கூவல் -௪௦0(40)

(கண்டன கூவல்)

தானே பணம்……..

தானே புயல் ஏற்படுத்திய சேதம் மிக அதிகம். இதனால் பல லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர் என்பது வருத்தம் தரும் விஷயம். பல வேளி பயிர்கள் ஒன்னும் இல்லாமல் போயின என்பது கசப்பான உண்மை. அரசு இதற்காக நிவாரண நிதி திரட்டி வருகிறது என்பது நாம் அறிந்ததே.

தமிழகத்தில் உள்ள பெரிய புள்ளிகள் முதல் நம்மை போன்ற  (பண பலத்தால்) சிறுவர்களும், நம்மால் இயன்ற உதவியை செய்து வருகிறோம். இது பெருமைப் பட வேண்டிய ஒன்று என்பதை நான் மறுக்கவில்லை. அதே சமயம் இது நமது கடமை என நாம் அறிதல் வேண்டும். நம் சக்திக்கு (சொத்துக்கு) தக்கவாறு நிவாரண நிதிக்கு பணம் தருவது நன்கு.

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தின் ஒரு பெரும் நடிகர் குடும்பம் தானாக முன்வந்து ரூ.25லட்சம் நன்கொடை கொடுத்தது. ஆம் அவர்தான் (இது போன்ற ஒன்னத்துக்கும் உதாவாத செய்திகளின் – நடமாடும் –  பொது அறிவு களஞ்சியம் நாம்) . சிவகுமார் அவர்கள் தான். அவர் குடுமத்தில் உள்ள ‘யாருக்கு ஒரு கோடி’ சூரியா, அவரது மனைவி ‘ஜோ’, மற்றும் தம்பி ‘கார்த்தி’ உள்பட தான். அவர்கள் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளத்தில்… வேண்டாம் செலவு செய்வதில் இந்த பணம் எவ்வளவு சதவீதம்….. அவர்கள் முதல்வரிடம் அந்த‘காசோலை’யை கொடுத்தனர். இதை நமது கேடு கெட்ட நாளிதழ்கள் மற்றும் வார பத்திரிகைகள் புகைப்படம் போட்டு பத்தி பத்தியாக எழுதியது. இது எந்த முறையில் நியாயம்… அவர்களால் இவ்வளவு தான் தர முடியுமா…….

போனால் போகட்டும், ‘நடிகர்கள்’ வம்சத்தினர் பரம்பரை பரம்பரையா ஆட்சி செய்து வரும் தமிழகத்தில் இது எல்லாம் சகஜம் என்று, வந்த கோவத்தை மூட்டை கட்டி அடக்கி கொண்டு (எப்பொழுதும் போல) சும்மா இருந்தோம். வழக்கம் போல இன்று காலை பேப்பர் படிக்க அமர்ந்தேன். எனக்கு ஒரு கெட்ட பழக்கம்: நான் வாங்கும் அனைத்து தினசரியின் முதல் இரண்டு பக்கத்தை முதலில் பார்ப்பது தான் அது . ஒரு பெரும் அதிர்ச்சி: ஏனோ அனைத்திலும், முதல் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் படம். எதற்கு? அவர் நிவாரண நிதிக்கு ரூ.பத்து லட்சம் (பிச்சை) பணம் கொடுத்தாராம். பாவம் அவர் சக்திக்கு மீறி செய்து விட்டார் என்பது போல பத்தியில் பாத்தி கட்டி பெரிய புகைப்படத்துடன் செய்து . மேல் சொன்னது போல சென்ற கோபம் விஸ்வரூபம் எடுத்து திரும்பி வந்தது…..  தாராளமாக நிதிக்கு நதியா ஒரு பத்து கோடி எளிதில் தர கூடிய ரஜினி அவர்கள் ஏன் இப்படி செய்தார். ஒரு வேலை ‘லைம் லைட்’டுக்கு வர வேண்டும் என்ற ஆசையோ……. அவர் (முடிந்தால்) இதற்கு பதில் : ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை விட்டு ஒரு கணிசாமான தொகை திரட்டி தந்திருக்கலாம்….

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் ரஜினியை எதிற்பவனோ அவரை ரசிப்பவனோ அல்லன். ‘என்ன தலைவர் பணம் கொடுத்தா நாளத்தில் படம் போட சொன்னார்….’ என்று நீங்கள் கோபமாக உறுமுவது எனக்கு தெளிவாக கேட்குது….  அவர் அப்படி செய்வார் என நானும் நம்ப வில்லை, நீங்களும் தான். அவர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது அவரது ‘தனி மனித விருப்பம்/சுதந்திரம்’. ஆனால் அவர் கொடுத்தது அவர் சக்திக்கு மிக குறைந்த தொகை என்பது சந்தேகமில்லை. ஒத்துக் கொள்ளுங்கள்.

அரசில், ஆபாசம், சினிமா என முக்கோணத்தில் சிந்திப்பதே நமது நாளிதழ்களின் பழக்கமாக மாறி விட்டது. இந்த கொள்கையிலிருந்து இம்மி அளவும் பிசகாது, செய்தி சேர்த்து நாளிதளை நாடத்துவதுவும் ஒரு ‘தனி திறமை தான்’. ஆனால் இதன் காரணமாக மக்களிடம் பல தப்பான கருத்துகளை/அவிப்பிராயத்தை விதைத்து வருகிறார்கள். இவை விஷ செடிகளா விஸ்வரூபம் எடுக்க கூடியவை (என்பதை தெரிந்தா? மறந்தா?)……… இது மிகவும் கண்டனத்துக்கு உரிய விஷயம். மாற்ற பட வேண்டிய, நம்மை போன்றவர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று.

‘தானே’வுக்கு திரும்புவோம். எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் தனது ‘செட்டிநாடு நிறுவனங்கள்’ சார்பாக நேற்று ரூபாய் ஒரு கோடி கொடுத்துள்ளார். அது போல ‘சிதம்பரம்’அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்று ரூபாய் ஒரு கோடி சேர்த்து தந்துள்ளது… இது போல இன்னும் பல பேர், நம் நாட்டுக்கு, நம் சகோதர சகோதரிகளுக்கு வியக்க தகுந்த உதவியை செய்து வருகின்றனர். ஆனால் மக்களுக்கோ/செய்திகளுக்கோ ரஜினி தான் தெய்வம். இது போல வர செய்திகள் மட்டும் தான் பெரும்பாலான மக்களுக்கு தெரியும்……….. தொலைக்காட்சி பெட்டியில் இது எந்த அளவுக்கு உள்ளது என்பதை நான் அறியேன்…. அதை உங்கள் சுய மதிப்பீட்டுக்கே விட்டு விடுகிறேன்…….!!!

ஒரு வேலை இதே ரஜினி அவர்கள் பத்து கோடி ரூபாய் கொடுத்திருந்தால் நான் அவரை போற்றி கட்டுரை வரைவேனா என்பது சாந்தேகமே. அது அவரது கடமையும் கூட. ஆனால் மனதளவில் அவரை கண்டிப்பாக பாராட்டி இருப்பேன். (தானேக்கு தாராளமாக தாங்கண்ணே………)

நல்லது நடந்தால் பாரட்டுவோம். தவறை கண்டிப்போம், திருத்த முயல்வோம், திருந்துவோம்.

நாமார்க்கும் குடி யல்லோம்

நமனை அஞ்சோம்…………”

காதல் மணம்…

நாற்சந்தி கூவல் – ௩௯()

(காதல் பெரியார் பதிவு)
காதல் மணம்…
காதல் மணங்களும், காந்தர்வ மணங்களும் துணைவர்களுக்குக் காம உணர்ச்சியும் அதில் தகுதியும் இருக்கும் வரைதான் இன்பம் அல்லது திருப்தி அளிக்கும். அதுவும் மற்ற வகையில் ஒத்தில்லாத பட்சம் அடிமைத்தனத்தோடு முடிந்துவிடும். பிறகு அது வாழ்க்கை என்னும் வண்டிக்கு வலுவில் பழகிப் பூட்டப்பட்ட எருதுகள் போல வாழ்க்கை முறை என்னும் வண்டிக்காரனால் அதட்டியும் அடித்தும் ஓட்டப்பட்ட மாடுகள் போல் இளைப்பாற நேரம் இல்லாமல் போய்க் கொண்டே இருந்து முடிவெய்த வேண்டியது தானே ஒழிய வேறில்லை.

– பெரியார், (“விடுதலை” – 03-05-1943)

நாற்சந்தி நன்றிகள் – தமிழச்சி

மாறும் மனிதர்கள்!

நாற்சந்தி கூவல் – ௩௮()

(பாரதீ பதிவு)

மாறும் மனிதர்கள்

சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், “நீ அடுத்த பிறவியில் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்… பிறந்திடுவாய்” என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது.

மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்:

*வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.

* உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

*மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

*அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.

*பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.

*கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன் வேட்டைநாய்.

*தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.

* மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.

*வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.

*தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.

*மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.

– முண்டாசு கவி பாரதி (பார’தீ’)

நாற்சந்தி நன்றிகள் : தினமணி சிறுவர்மணி

பல்லாயிரம் பொங்கல் கண்ட நாடு!

நாற்சந்தி கூவல் – ௩௭(37)

(பொங்கல் கவிதைப் பதிவு)

பல்லாயிரம் பொங்கல் கண்ட நாடு!

நாற்சந்தி நண்பர்களுக்கு என் இனிய, மனம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். “தை பிறந்தால் வழி பிறகும்”. பல நல்ல வழிகள் பிறக்க, நம் ஆசைகள் நிறைவேற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பொங்கல் சிறப்பு கவிதை இன்றைய ‘தினமணி’ தமிழ்மணி. கலாம் அவர்கள் எழுதிய பொங்கல் கவிதை:

~~~~~~~~~~

பொங்கல் நாள் ஒரு பெருநாள்!

உழைப்பின் வியர்வையில் முகிழ்ந்திட்ட முத்துக்கள்
கொழித்திட்ட கதிர்கள் குவிந்திட்ட அறுவடை
மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்கின்ற மக்கள்
திருநாள் பொங்கல்; நாம் காணும் பெருநாள்!

பல்லாயிரம் பொங்கல் கண்டதிந்த தமிழகம்
பல்கிப் பெருகி பலகோடி மேற்காணும்
பொங்கட்டும் பொங்கல் பொலியட்டும் தமிழகம்
நலங்கண்ட தமிழகத்தால் வளங்காணும் பாரதம்

பொங்கல் நாள் ஒரு பெருநாள்!

உண்மைகளின் உன்னதங்கள் ஒலிக்கட்டும் உலகெங்கும்
வள்ளுவன்போல் ஞாலஞானிகள் வளரட்டும் ஆங்காங்கே
செழிக்கட்டும் நம்நாட்டில் குறள்போலும் பன்னூல்கள்
இறைஞானி இளங்கோவின் செந்நூலாம் சிலம்பு உணர்த்தும்
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகிவரும்
நற்சிந்தனை கருக்கொண்டு நற்செயல்கள் ஓங்கட்டும்
மகாகவிகள் தோன்றிடட்டும்; நதிநீர்கள் இணைந்திடட்டும்!
கனவுகள் நனவாகும்; கங்கைநீர் காவிரி வரும்!
சேதுசமுத்திர திட்டங்களும் நிறைவேறும்

திருநாள் பொங்கல்; நாம் காணும் பெருநாள்!

பாரதியின் கனவுபோல பாரெங்கும் கலம் செலுத்தி
செல்வங்கள் சேர்த்திடுவோம் ஏழ்மையைத் துடைத்திடுவோம்!
நிமிர்ந்த நன்னடைப் புதுமைப் பெண்களும்
செவ்வனே சேர்ந்தாள சிறக்கட்டும் நம்நாடு!
வளத்தைப் பெருக்குங்கள் கொழிக்கட்டும் நம்நாடு!

ராமானுஜம் போல் கணிதமேதைகள்
ராமன் போல் நோபல்கள் இலைக்கொன்றாய் முளைக்கட்டும்!
நம் விஞ்ஞான வளர்ச்சிகண்டு வியக்கட்டும் நிலவுலகு!
கடின உழைப்பிலும் உள்ளத்து உயர்ச்சியிலும்
நம்பிக்கை கைக்கொண்டு நம்நாடு வளரட்டும்!
தை பிறந்தது; நாம் வளர்ந்த நாடாக வழியும் பிறந்தது!

அரிசியும் பாகும் போல நம் கனவும் நல்வினையும்
இனிப்பாகக் கலக்கட்டும் உழைப்பாக மலரட்டும்!
பொங்கட்டும் எண்ணங்கள் பொலியட்டும் நற்செயல்கள்!
திருநாள் பொங்கல் நமக்கெல்லாம் பெருநாள்!

– அப்துல் கலாம்

~~~~~~~~~~

நாற்சந்தி நன்றிகள்: டாக்டர் கலாம், தினமணி தமிழ்மணி

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

நாற்சந்தி கூவல் – ௩௬(36)
(சிறுகதை பதிவு)

கையில் கிடைத்ததை எல்லாம் படிக்கும் வழக்கம் வந்துவிட்டது. இந்த வாரம் தினமணி கதிரில் (08/01/2012) எனக்கு ஒரு விருந்து கிட்டியது. உங்களுக்கும் அதை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சி அடைய ஆசை.

ஒரு அழகான சிறுகதை இது. சில காலமாக பல சிறுகதைகள் படித்து விட்டேன். ஆனால் இது போல எந்த கதையும் இல்லை. படிக்க! சுவைக்க!! மாகிழ்க!!!

~~~~~~~~~~

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்… 

தே.புது ராஜா

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது. ஆம். அவன் எதிர்பார்த்தபடியே அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இன்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தான்? ஆனாலும் இது நேரமல்ல என்பதால், இரவு வரை பொறுமை காத்தான். தன் ஆசைகள் நிறைவேறப் போவதை எண்ணிக் களித்திருந்த அவனுக்கு அன்றைய பொழுது போனதே தெரியவில்லை.

இரவு மணி பத்து இருக்கலாம். அவன் மெல்ல அவ் வீட்டை நெருங்கினான். சுற்றிலும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டான். நிசப்தமே நிலவியது எங்கும். முன்வாசல் கேட்டை நெருங்கியவன் மீண்டுமொரு முறை திரும்பிச் சுற்றிலும் பார்த்துவிட்டு, படாரென எகிறிக் குதித்து உள்ளே போனான். தலைவாசல் கதவை நெருங்கிப் பூட்டை ஒருமுறை உற்றுப் பார்த்தான். சரியான பழங்காலத்து திண்டுக்கல் பூட்டு. அதைத் திறப்பது அத்தனை சுலபமில்லை. இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. கைவசமிருந்த அத்தனை ஆயுதங்களையும் உபயோகித்து அந்த இருட்டில் அப்பூட்டைத் திறப்பதற்குள் போதும் போதுமென்றானது. வியர்த்துக் கொட்டியது. ஒருவழியாகப் பூட்டைத் திறந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவனுக்கு அதிர்ச்சி.

“வருக! வருக! இவ்வில்லத்துக்கு அதிதியாக வருகை தந்த நண்பரை அன்புடன் வரவேற்கிறோம்!’

என்ற வாசகம் தாங்கிய பலகையொன்று மின் விளக்கின் ஜொலிப்புடன் அவனை வரவேற்றது. சற்று மிரண்டு போனவன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பி முன்வாசற் கதவை உட்புறமாகத் தாழிட்டுவிட்டு மீண்டும் திரும்பி அப்பலகையைப் பார்த்தான்.

அதில் மேலும் கீழ்க்காணுமாறு எழுதப்பட்டிருந்தது.

“நண்பரே, நீங்கள் வயிற்றுப் பசிக்காக இங்கு வந்தீர்கள் என்றால் சமையலறைக்குச் செல்லுங்கள்’

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்தீர்களென்றால் படுக்கை அறைக்குள் செல்லுங்கள்’

“வாழ்க்கையில் நிரந்தரமாகச் செட்டிலாக விரும்பி வந்திருந்தால் இருப்பு அறைக்குள் செல்லுங்கள்’

“உங்கள் முயற்சி திருவினையாகட்டும். வாழ்த்துக்கள்’

என்றிருந்தது.

மணி பதினொன்றாகப் போகிறது. நல்ல பசியும் கூடத்தான். பாழாய்ப் போன இந்தப் பூட்டைத் திறப்பதற்குள் சாப்பிட்ட புரோட்டாவே ஜீரணமாகிவிட்டது. படுக்கையறையும் இருப்பறையும் எங்கே போய்விடப் போகின்றன? பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் சமையலறை சென்று நன்றாகச் சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு அக்கறையுடன் எழுதி வைத்து விட்டுப் போனவன் நல்ல சாப்பாடும் செய்து வைத்திருப்பான். ஒரு கை பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலை! என்று எண்ணியவன் சமையலறை நோக்கி நடந்தான்.

“பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்களே, அவனும் ஒரு கணம் தன் வேலையையும் வந்த சூழலையும் மறந்து சமையலறைக்குள் நுழைந்தான். கூடவே அவனுக்கு ஒரு சந்தேகமும் வந்தது. “ஒரு வேளை சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்திருப்பானோ? அதானே இந்தக் காலத்தில் இப்படிக் கூடவா இளித்தவாயன்கள் இருப்பார்கள்? இல்லை… இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது கவனமாகத்தான் இதைக் கையாள வேண்டும்’ என்று எண்ணியவாறே உள்ளே நுழைந்தவன் பாத்திரங்கள் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தான்.

ஏமாற்றமே மிஞ்சியது அவனுக்கு. எல்லாப் பாத்திரங்களும் சுத்தமாகத் துலக்கித் துடைத்து வைக்கப்பட்டிருந்தன. குழப்பமும் பசியும் கூடவே வெறுப்பும் சேர்ந்து அவனைக் கோபமூட்டியது. மீதமிருந்த ஒரு பாத்திரத்தைக் காலால் எட்டி உதைத்தான். அதிலிருந்து ஒரு சிறு புத்தகமும் ஒரு கடிதமும் வெளிவந்து விழுந்தன.

கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். “நண்பரே மன்னிக்கவும். சமைத்து வைத்திருந்தால் உமக்குச் சந்தேகம் வரக் கூடும் என்பதால் அப்படிச் செய்யவில்லை. இதோ இங்கு தேவையான அத்தனை மளிகைப் பொருட்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தில் எளிமையான, சுவையான பலவிதமான சமையல் குறிப்புகள் உள்ளன. அதைப் பார்த்து உமக்குப் பிடித்த உணவை உமது விருப்பப்படியே சமைத்து உண்ணலாம். அதற்கான பொறுமையும் நிதானமும் நிச்சயம் உங்களிடம் உண்டு. ஒரு மணி நேரம் பொறுமையாகப் போராடி பூட்டைத் திறந்தவரல்லவா தாங்கள்’

இந்த வரியைப் படித்ததும் அவனுக்கொரு பயம் கலந்த சந்தேகம் வந்தது. “ஒரு வேளை வீட்டுக்குள் மறைந்திருந்து காண்காணிக்கிறார்களா?’ என்று. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினான். எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது முதல் கேஸ் ஸ்டவ்வை எப்படிப் பற்ற வைப்பது என்பது வரை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு, இறுதியாக, “அன்பரே மளிகைப் பொருட்களைச் சற்று சிக்கனமாக, தங்களின் தேவைக்கேற்றாற் போல் மட்டும் பயன்படுத்தவும். ஏனெனில் இந்தக் குடும்பத்தின் ஒரு மாதத்திற்கான பொருளாகும் இங்கிருப்பவை, என்று முடிக்கப்பட்டிருந்தது.

கிடைத்த குறிப்புகளைப் பார்த்துக் கவனமுடன் சமையல் வேலையில் இறங்கினான். முற்றிலும் புது அனுபவமாக இருந்தது அவனுக்கு. தான் எங்கிருக்கிறோம்? எதற்காக வந்தோம்? என்பதைக் கூட மறந்து சமையலில் மூழ்கினான். அதிலொரு தனிப் பரவசத்தையும் உணர்ந்தான். சமைத்து முடித்து சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்ட போது நினைத்துக் கொண்டான். “ஆகா… என்ன ருசி… எந்த ஹோட்டலிலும் இதற்கு முன் இப்படியொரு சுவையான உணவை நான் சாப்பிட்டதே இல்லை. ஒருவேளை நானே செய்ததால் அப்படித் தோன்றுகிறதோ? ப்ச்… ஏதோ ஒன்று. பசியாறினால் சரி’ என்று நினைத்துக் கொண்டு உண்டு முடித்தான். இப்போது அவனுக்கொரு புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் வந்திருந்தது. கூடவே வந்த வேலையும் நினைவுக்கு வந்தது. நிதானமாக அங்கிருந்து வெளியேறியவன் வெளிக் கதவை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே படுக்கையறைக்குள் நுழைந்தான்.

அங்கே ஒரு பெரிய கட்டில் மெத்தை, ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு ஏசி மெஷின், இன்னபிற சாதனங்களுடன் மூன்று பெரிய லாக்கர்களும் இரண்டு பெரிய இரும்புப் பீரோக்களும் இருந்தன. அத்தனையும் நவீனத் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை. அவற்றைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு குதூகலம் பிறந்தது. அருகிலிருந்த டீபாய் மீது பேப்பர் வெயிட்டைச் சுமந்தபடி ஒரு கடிதம் அவனுடைய கண்களைக் கவர்ந்தது. அதை எடுத்துப் படித்தான்.

“நண்பரே மன்னிக்கவும். இவற்றிற்கான சாவிக் கொத்து தொலைந்துவிட்டது. எனவே தங்களிடமுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிகம் சேதப்படுத்தாமல் திறந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இந்த மேஜையிலுள்ள உபகரணங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலுப்போ சலிப்போ அடையாதீர், முயற்சி செய்யுங்கள், உங்களால் நிச்சயம் முடியும். ஒரு மணி நேரம் போராடி வீட்டைத் திறந்து பொறுமையாகச் சமைத்துச் சாப்பிட்ட உங்களுக்கு இதுவும் சாத்தியம்தான். முயற்சியுடையான் இகழ்ச்சியடையான்’

அதைப் பார்த்த அவனுக்குதான் பூலோகத்தில்தான் இருக்கிறோமா அல்லது மாயாஜாலப் படங்களில் வருவதுபோல ஏதாவது பூதங்களின் லோகத்திலா? என்ற சந்தேகம் வந்தது. உடனே ஒருமாதிரி பயமும் குழப்பமும் வந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு இரண்டில் ஒன்று பார்த்து விடுவதெனச் செயலில் இறங்கினான்.

பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொரு லாக்கரையும் கழற்றி எறிந்தான். உள்ளே ஒன்றுக்கும் உதவாத ஒரு சில காகிதங்களைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மையில் அது பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் அது அவனுடைய மனநிலையைப் பாதிக்கவில்லை. சலிக்காமல் மீதமிருந்த இரண்டு பீரோக்களையும் திறந்தான். அதில் விலையுயர்ந்த ஆடம்பரமான துணிவகைகள் ஏராளமிருந்தன. அவை அவனுக்கு எந்த விதத்திலும் பயன்படாதவை. கடைசிப் பீரோவின் உள்ளறையில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதை வெளியே எடுத்துத் திறந்தான். முழுவதும் நகைகள்.

சிறிய மூக்குத்தி முதல் பெரிய ஒட்டியாணம் வரை. எப்படியும் நூறு சவரன் தேறும். அதிலும் ஒரு துண்டுச் சீட்டு இருப்பதைக் கண்டான்.

“நண்பரே, எதையும் வெளித் தோற்றத்தைப் பார்த்து நம்பிவிடாதீர்கள். கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ அப்படிச் செய்வதால் பின்னால் வரும் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் அல்லவா?”

“மின்னுவதெல்லாம் பொன்னல்லவே எல்லா இடங்களிலும் தெளிவாகவும் கவனமாகவும் அணுகுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது.

சற்று யோசித்தவன், நகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து உரசிப் பார்க்கத் தொடங்கினான். அத்தனையும் கவரிங் நகைகள். பெட்டி காலியானது. அடியில் ஒரு சிறிய காகிதத் துண்டு. அதையும் எடுத்துப் பார்த்தான்.

“நண்பரே கோபித்துக் கொள்ளாதீர். ஆடம்பரம் என்பதும் இப்படித்தானிருக்கும். அதை நம்பிப் போனால் இறுதியில் மிஞ்சுவது இப்படித்தான். இந்தக் காலியான பெட்டியைப் போல’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

சற்று யோசித்தான். வீட்டினுள் நுழைந்தபோது தென்பட்ட அந்த வரவேற்புப் பலகை வாசகங்கள் நினைவுக்கு வந்தன. அதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த “வாழ்க்கையில் நிரந்தரமாகச் செட்டிலாக வேண்டுமென்றால் இருப்பு அறைக்குள் செல்லவும்’ என்ற வாசகம் அவனை உந்தித் தள்ளியது. உடனே அவன் முகத்தில் ஒரு புன்னகையும் உள்ளுக்குள் ஒரு நம்பிக்கையும் பூத்தது. எனவே வேகமாக அவ்வறையை நோக்கிச் செல்ல எத்தனித்தவனுக்கு ஏனோ வேகமாக அவற்றை அப்படியே போட்டுவிட்டுப் போக மனமில்லை. கழற்றிப் போட்ட இரும்புப் பெட்டகங்களையும் பீரோக்களையும் பொறுமையாக இணைத்துப் பொருத்தி மீண்டும் கச்சிதமாக வைத்துவிட்டு, துணிகளையும் போலி நகைகளையும் இருந்த இடத்தில் வைத்து மூடிவிட்டு பொறுமையாக அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்த அறைக்குச் சென்று கதவைத் திறந்தான். அங்கே நிறையத் தட்டுமுட்டுச் சாமான்களும், உடைந்த பர்னிச்சர்களும், பழைய காகிதக் கட்டுகளும் ஒழுங்கற்ற முûறையில் போடப்பட்டிருந்தன. அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ற போதிலும் ஏமாற்றம் அடையவும் இல்லை. ஏனென்றால் முந்திய கடிதம் அவனை வழி நடத்த உதவிற்று. பொறுமையாகச் சுற்றிலும் பார்த்தான். வேறொன்றும் தென்படவில்லை. அங்கே ஓர் உடைந்த நாற்காலி மீது ஒரு முழு வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட கடிதம். எடுத்துப் பொறுமையாகப் படித்தவன் அதை அப்படியே நான்காக மடித்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறுவதற்காகத் திரும்பினான். அங்கே நிலைப்படியில் பளிச்சென்ற நிறத்தில் ஒரு வாசகம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதனருகில் சென்று படித்துப் பார்த்தான்.

“தங்களின் வருகைக்கு நன்றி’

“நண்பரே நீங்கள் உங்களை முற்றிலும் இழந்துவிட்டுப் போக வேண்டும் என்றால் கழிவறைக்குள் போய்விட்டுச் செல்லுங்கள். உங்களை முழுமையாக மீட்டெடுத்துக் கொண்டு செல்ல நினைத்தால் பூஜையறைக்குள் போய்விட்டுச் செல்லுங்கள்’

சற்று நின்று யோசித்தவன், “கழிவறையா? வேணாம் சாமீ’ கக்கூசைக் கழுவிச் சுத்தம் செய்யவும் என்று எழுதி வைத்திருந்தாலும் வைத்திருப்பான். எதற்கு வம்பு? பேசாமல் இதோடு கிளம்பி விடுவதே மேல் என்று முடிவு செய்து அங்கிருந்து வெளியேறி தலைவாசல் கதவை நெருங்கியவனுக்கு ஏதோ ஓர் உந்துதல்! “எதற்கும் கடைசி வாய்ப்பாகப் பூஜையறையை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் போவோமே!’ என்று நினைத்தவன் அங்கிருந்து நேராகப் பூஜையறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே போனான் . அதிர்ந்து நின்றான்.

அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்தது ஆளுயரத்தில் அவனுடைய படம். மறுவினாடியே அதிர்ச்சியிலிருந்து மீண்டான். ஏனெனில் அது படமல்ல, ஓர் ஆளுயர நிலைக் கண்ணாடி. அதில் தெரிந்த தன் பிம்பத்தைத்தான் அவன் பார்த்தான்.

பின்னர் சற்று நிதானித்துக்கொண்டு, அறை முழுக்கக் கண்களை ஓட விட்டான். அங்கே பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. ஆனால் எந்தவொரு சாமி படமோ, விக்ரகங்களோ, இத்யாதி அடையாளச் சின்னங்களோ ஏதும் கண்ணில் படவில்லை. ஒரே குழப்பமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது அவனுக்கு. கூடவே ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது அச்சூழல். எனவே பார்வையைக் கூர்மையாக்கி நாலா திசையிலும் தேடிப் பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக அங்கு எந்தக் கடிதமோ துண்டுக் காகிதமோ கண்ணில் படாதது ஆச்சர்யம் தந்தது. மீண்டுமொரு முறை அவன் அந்த நிலைக் கண்ணாடியை உற்றுப் பார்த்தான். அங்கே கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது சிறிதாக ஓர் ஓரத்தில்.

“யாரொருவர் தன் சொல்லாலோ, செயலாலோ நினைவாலோ பிறர்க்குத் துன்பம் விளைவிக்கவில்லையோ அவரே தெய்வம். அவரே இங்கு பூஜைக்குரியவர்’ என்றிருந்தது.

அதனைப் பார்த்த அவனுக்குள் மனம் ஏதோ செய்தது. கண்களை மூடிச் சற்று நேரம் அங்கே அமைதியாக அமர்ந்துவிட்டான். பின்னர் நிதானமாக எழுந்து சென்று தலைவாசற் கதவைத்திறந்தான். அங்கே பொழுது புலர்ந்து வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. கதவைப் பூட்டிவிட்டு விடுவிடுவென நடந்து முன் வாசல் கேட் தாண்டிக் குதித்து சாலை வழியே நடந்து ஊருக்குள் நுழைந்து ஜன சந்தடியில் ஐக்கியமாகிக் காணாமல் போனான்.

மூன்றாம் நாள் அந்தக் குடும்பம், வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிற்று. வீட்டைத் திறந்து ஒவ்வொரு அறையாகச் சென்று ஆர்வமாகப் பார்த்தனர். எல்லா அறையிலுமே யாரோ ஆள் வந்து போனதற்கான அறிகுறிகள் தென்பட்டனவேயன்றி வேறெந்த மாற்றமும் இல்லை. இறுதியாகக் கழிவறைக்குச் சென்று நிதானமாகப் பார்த்தனர். அங்கே அப்படியே வைத்தது வைத்தபடியே இருந்தன அத்தனை நகைகளும், பணமும். மாதமொன்று கடந்த பின் அந்த வீட்டின் தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. ஆவலுடன் எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.

அன்பரே வணக்கம்,

தாங்கள் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு தங்களின் கடிதத்துடன் சென்றேன். உடனே எனக்கு அங்கே வேலை கிடைத்தது. அது ஒரு நவீன இரும்பு லாக்கர் மற்றும் பீரோக்கள் செய்யும் தொழிற்சாலை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த வேலை. என் திறமைகளையும் உழைப்பையும் ஆக்கபூர்வமான வழியில் செலவிடுகிறேன் எனும் போது ஒரு மனநிறைவும் ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. இதுவரை இப்படியொரு வாய்ப்பு என் வாழ்க்கையில் அமைந்ததே இல்லை. என் திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரம் கிடைத்ததும் என்னால் வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முழு கவனத்தையும் வேலையிலேயே செலுத்தத் தொடங்கினேன். புதுப் புது உத்திகளை யோசித்து செயல் வடிவம் கொடுத்ததைப் பார்த்த முதலாளிக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. நல்ல சம்பளமும் கொடுத்து அவரது கெஸ்ட் ஹவுஸிலேயே தங்க வைத்துள்ளார். இப்போதெல்லாம் அங்கு நானே சமைத்துத்தான் சாப்பிடுகிறேன் சிக்கனமாக. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் எதிர்காலம் பற்றிய ஒரு பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது எனக்குள்.

இத்தனைக்கும் காரணமான உங்களைத் தெய்வம் என்று சொன்னால் கூடப் போதாது. அதற்கும் மேல் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது. திருட்டுப் பையனாக வந்த என்னைத் திருமகனாக மாற்றி அனுப்பியது அந்தக் கடிதங்களே! குறிப்பாக அந்தப் பூஜையறை வாசகம் எனக்கொரு மனத்தெளிவைக் கொடுத்தது. அந்தக் கடிதங்களை எழுதிய உங்களை நேரில் தரிசிக்க விரைவில் வருகிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

திரு(ட்டுப்)ந்திய பையன்

~~~~~~~~~~

நாற்சந்தி நன்றிகள் – ‘தினமணி கதிர்’ மற்றும் அதன் இணைய பக்கம். இந்த கதையின் ஆசிரியர் “தே.புது ராஜா”

குடிமகன்கள்…

நாற்சந்தி கூவல் –௩௫(35)

(குடிக் கூவல்)

குடிமகன்கள்…

தமிழன் என்றும், தமிழ் மீதும் தன் தாய் தமிழ் மீட்டும் பெரும் கர்வமும் மதிப்பும் கொண்டுளான். (இது பலரிடம் வெளிபடையாக தெரியாது)

ஆங்கிலம் ‘வர்த்தக மொழி’. லத்தீன் ‘சட்டத்தின்’ மொழி. அது போல தமிழ் ‘பக்தி’யின் மொழி, என பல கலாமாக சொல்லப்படுகிறது. தமிழ் இன்றும் வளர்ந்து வருகிறது, அதுவும் அணைத்து இடங்களிலும் விஸ்வரூப வளர்ச்சி நடை போடுகறது என்பதை நீங்கள் அறிய, இந்த பதிவு.

நவீன காலமாக தமிழ்நாடும், அதும் குறிப்பாக தமிழக அரசும் வலமாக வாழ உதவுவது டாஸ்மாக் அல்லது குடி. போன வாரம் படித்த ஒரு செய்தி: போன வருட கடைசி மற்றும் இந்த வருட முதல் நாள், மட்டும் நம் குடிமகன்கள் அரசுக்கு குடித்து செலுத்திய கப்பம் 247 கோடி ருபாய்.

நூறு% மேல் வரி கட்டியே நாம் குடிக்க முடியும். ஒரு ஆண்டில் அரசு பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் தனி துறை. இதில் மட்டும் நாம் வருடாவருடம் நல்ல வளர்ச்சி பாதையில் செல்கிறோம்.

நான் இங்கு நாற்சந்தியில் இருந்து தினம்தோறும் எழுத்து  கூவுவது சர்வ சாதாரணம். அது போல எம் ஊரில் உள் நாற்சந்திகளில் நிஜ, மதி இளந்த மனிதர்களின் கூவல்களை கேட்கலாம்.

நான்கு சாலைகளின் நடு நாற்சந்தி. நான்கு ரோடுகளிலும் மின் விளக்கு இருக்குதோ இல்லையோ, மக்களை மயக்கும் (டாஸ்)மாக் உள்ளது. பள்ளி வாசல், கோவில் பகுதி, மசூதி, சர்ச் என் பேதம் இன்றி அணைத்து இடங்களிலும் – சர்வஸ்தாபாகம் நம் மது கடைகள்.

ஐயகோ…. இதனால் எத்தனை ரணங்கள். பெரியார் பெயர் சொல்ல இங்கு யாருக்கு துப்பு உள்ளது. மது விலக்குக்காக தன் மனைவியையே (இதை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண்) தெருவில் நிறுத்திய பெரியவர். வேண்டாம் இங்கு அரசியல். இது நிற்க.

இது ஒரு புறம் இருக்க, இந்த தொழிலில் ஈடுபட்டு கொளுத்து கிடக்கும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்-காரர்கள் செய்யும் அட்டூழியம் மற்றும் லஞ்சம்…….. சொல்வதற்கல்ல

தமிழ் குடிமகன்களை நினைக்கும் போது எல்லம் ஆத்திரமும் அனுதாபமும் ஒன்று சேர்ந்து வருகிறது. தெரிந்தே தவர் செய்பவர்கள் மனிதர்கள் அல்லர். இதை நிறுத்து கூடியவர்கள், இந்த குடிமகன்களை நம்பி குடித்தனம் வந்த பெண்கள். இவர்கள் பாரதி கண்ட புதுமை பெண்கள் போல செயல்பாட்டால் இந்த சிக்கல் தீரும் என நினைக்கிறேன். பெண் கல்வி இதற்கு அடித்தளம்.

எதற்காகவோ பதிவு எழுத வந்து எங்கோ சென்றுவிட்டேன். நம் போல் தமிழர்கள் இடையில் ஒரு வியாதி/வாய்ப்பு பரவி வருகிறது: தமிழ் சொல் ஆகம், பிற மொழி சொற்களை தமிழ் படுத்துதல். உதாரணம் : முகநூல் (facebook)

சில நல்ல குடிமகன்கள், இதை ஒரு புது பரிமாணத்திற்கு எடுத்து சென்றுள்ளனர் :

எப்படி நம் மக்களின் மனம். இதில் பெரும் அடி வாங்கியது ‘சோழ’ குளம். நல்ல வேலை கல்கி இதை எல்லாம் பார்க்க உயிரோடு இல்லை.

நம் மாற்ற இனத்தவரை விட வித்தியாசமானவர்கள். ஒருவேளை ‘மூத்த குடி தமிழ் குடி’ என்பததை (தம்பு)அர்த்தம் செய்து கொண்டார்களோ. இது அந்த மதுரை மாநகரில் பல வருடங்களாக, அனைத்தயும் பார்த்து கொண்டு அமர்ந்திற்கும் தமிழ் அன்னைக்கே வெளிச்சம்.

நீங்கள் நாட்டுக்கு நல்ல குடிமகன்களாக இருங்கள் யென்று சொல்லவில்லை, ஆனால் இது போல ‘குடி’மகன்கள் நாட்டுக்கு தேவை இல்லை. தாங்கள் தமிழுக்கு நல்ல விசுவாசிகள், என்பதை காண்பிக்க இது+ தான் வழியா………..

“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த

நிலையற்ற மாந்தரை காணும்போது”

+ (குடிப்பது, அரசு கஜானாவை பெருக்குவது, உடல் நலத்தைக்  கேடுப்பது, இந்த தமிழ் பெயர் மாற்றம்…….. இன்னும் அடுக்கலாம்)

நாற்சந்தி நன்றிகள் : இது என் கவனத்திர்க்கு கொண்டு வந்த @kaattuvaasi

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: