~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for பிப்ரவரி, 2012

வந்தியத்தேவன்!!!

(அறிவிப்பு : இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள்  இந்த பதிவை படிக்க வேண்டாம் என நாற்சந்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறது)

 நாற்சந்தி கூவல் – ௫௦(50)

(பொன்னியின் செல்வன்ப் பதிவு)

 (ஐம்பதாவது சிறப்புப் பதிவு)

வந்தியத்தேவன்….

(கல்கி பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் நான் எழுத்தும் முதல் பதிவு)

சில எழுத்துகளை படிக்கும் பொழுது, நம்மை அறியமால் நமக்குள் வளர்ந்து வரும் பொறாமை செடி துளிர்விடும். ஆனால் சில ஏழுத்தோவியங்களை வாசித்து அனுபவிக்கும் சமயத்தில், ஒரு பெரிய பிரம்மிப்பு மட்டுமே மிஞ்சும். இந்த பொன்னியின் செல்வன் அது போன்றது தான்.

Ponniyin Selvan KALKI

பெரும்பாலான கதைகள் போல அது ஒன்-ஹீரோ ஸ்டோரி அல்ல. (இதனை இன்னொரு பதிவில் அலசுவோம்). ஆனாலும் வந்தியத்தேவனனை, நாம் முதன்மை கதாநாயகன் எனக் கூறலாம். காரணம் : ‘ஆடி பெருக்கில்’ அவனுடன் கதை துவங்கி, ‘மலர் உதிர்ந்தது’ என்னும் கடைசி அத்தியாத்தில் அவனுடன் சுபம் போடப்படுகிறது. (அவன் நம் மனதை கொள்ளை கொண்டவன் என்பது ஒரு கூடுதலான, சிறப்பான காரணம்)

‘பொன்னியின் செல்வன்’ படித்து முடித்ததிலிருந்து, பல முறை யோசித்தது உண்டு : “இப்படி ஒரு அழகான பாத்திரத்தை கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு முன்னோடி யார்…. யாரை ‘ரோல்-மாடல்’ஆகா கொண்டு அவன் படைக்கப்பட்டான்…..”

இதற்கான சரியான விடை கல்கி அவர்களிடம் தான் உள்ளது. ஆனால் நாம், நம் சிறு மதியை கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். யூகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!!!

மதுரை மாநகர் கொண்ட, ராமாயண ராமமூர்த்தி அவர்களிடம் இதை பற்றி பேசினேன். உலக இலக்கியங்களை அனைத்தையும் படித்த பெரியவர். அனைத்து இராமாயணங்களும் அவருக்கு அத்துபடி. மதுரை கம்பன் கழக சிறப்பு பேச்சாளர். என்னையும் படிக்க தூண்டிய மாமனிதன்.

அவர் கல்கி வாழ்கையில் நடந்து ஒரு சுவையான நிகழ்ச்சியை சொன்னார் :

(எனக்கு தெரிந்த தமிழில் அதனை திரும்ப சொல்கிறேன்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழகான நாள். பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருந்த காலம். கல்கி அவர்கள் வீடு. ஆழ்ந்த சிந்தனையில், எப்பொழுதும் போல ஊஞ்சலில் சாக்க்ஷாத் கல்கி பெருமான். அவரது செல்ல குமாரி ஆனந்தி ஓடோடி வந்தால்.

ஆனந்தி: “அப்பா! அப்பா!! அப்பா!!!”

(சிந்தனையிலிருந்து மெதுவாக வெளிவந்து, சிறு புன்முறுவலுடன்….)

கல்கி: “சொல்லடி என் செல்வமே”

ஆனந்தி : “இப்படி அழகான கதைகளை எழுத, உங்களுக்கு மூலம் ஏது? எதை பார்த்து, எதை சிந்தித்து, எதை ரசித்து இப்படி எழுதுறீங்க…. அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லுங்களேன்.”

கல்கி: “ஹஹஹா, அதில் ஒரு ரகசியமும் இல்லை. நமக்கு என்று நம் முன்னோர்கள் விட்டு சென்ற ராமாயணம் மற்றும் மகாபாரதம் தான் என் வித்து.  அந்த விதை துளிர்விட்ட இலைகளே என் எழுத்துகள்”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஹா. நமது பண்பாட்டின் அருமையை அறிந்த பண்பு கொண்ட எழுத்தாளன் அல்லவா அவன்.

VNATHIYATHEVAN POONGULALI

மேலும் தொடர்ந்தார், எனது அன்பு கொண்ட, ராமமூர்த்தி ஐயா. பொன்னியின் செல்வனில் வரும் பல கதாப்பாதிரிங்களில் ராமாயண சாயல் தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், சொல்லின் செல்வன் ஹனுமனின் மறு அவதராம். 

இது எத்தனை பெரிய உண்மை என்பதை நான் பல மாதங்களாக (சிறுது) சிந்தித்து தெரிந்து கொண்டேன்.

எனக்கு தெரிந்த,புரிந்த மட்டில் சில ஒற்றுமைகள்:

i) அசாதியமானவைகளை செய்வதில் இருவரும் சூரர்கள். அனுமார், சீதயை சந்தித்தது,பேசியது. வந்தியத்தேவன், சுந்தர சோழரை பார்த்தது, ஓலைக் கொடுத்தது, அ(பா)பயம் கேட்டது.

ii) இருவரும் கடலை கடந்து, இலங்கை சென்று, தத்தம் வாழ்வின் பயனை அடைந்தனர். அனுமன் சீதையைக் கண்டது. வல்லத்தவன், பொன்னியின் செல்வனை சந்தித்தது.

iii) அனைத்து முக்கிய கதா பாத்திரங்களுடன், இவர்கள் கொண்டிருந்த நட்பு அருமை. இரண்டிலேயும், இந்த நட்பு வலயத்தை உருவாக்க நடந்த சம்பவங்கள் நம் மனதை கொள்ளை கொண்டவை. இது கதை சொல்வதிலேயே ஒரு புதியமான யுக்தி. அனுமன் – ராமன், சீதை, இலக்குவன், சுக்ரீவன், ஜாம்பவான்…… வந்தியத்தேவன் – ஆதித்த கரிகாலார், திருமலை நம்பி, கந்த மாறன், சேந்தன் அமுதன் (உத்தம சோழர்), குந்தவை, வானதி, பூங்குழலி, பொன்னியின் செல்வன்…..

iv) இருவரும், முதலில் ஒரு தலைவனுடன் இருந்து, பிறகு ஒரு உத்தம தலைவனிடத்தில் சரணடைந்த, பெருவதர்கரிய பெரும் பேற்றை பெற்றவர்கள். அனுமன் – சுக்ரீவன் பிறகு ராமன், வந்தியத்தேவன் – முதலில் ஆதித்த கரிகாலன், பிறகு அருள் மொழிவர்மன்.

v) சொல்லிவன் செல்வர்கள். அனுமன் – ராமனிடத்தில், சீதையை கண்டதை பற்றி கூறுவது. வந்தியத்தேவன் – சுந்தர சோழரிடத்தில், ‘அபாயம்’ =  ‘அபயம்’மாக மாற்றியது.

vi) நம் மனதை கவர்ந்த அழகன்கள். (இதற்கான எடுத்துகாட்டை வர்ணிக்கும் அளவுக்கு என்னகு தமிழ் தெரியாது. எழுத வராது. மன்னிக்க. ஆனால் சிந்திக்க.)

vii) தன் தலைவனுக்கு முப்பொழுதும் தாசனாக இருப்பது மிக கடினம். இதைனை இருவரும் இறுதிவரை செய்தனர். கஷ்டக் காலம் வரும் பொழுதும் செய்தனர்.

viii) ராமருக்கு வைத்தியம் பார்க்க பெரும் உதவி செய்தார் ஹனுமான். (சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது). நாகைப்பட்டிணம் புத்த விஹாரத்தில், பொன்னியின் செல்வனை சேர்த்தான் – தேவன். இருவருமே தங்கள் தலையை அடமானம் வைத்து, உயிரைக் கொடுத்து, தத்தம் தலைவர்களுக்கு வைத்தியம் செய்தனர்.

ix) ஹனுமனுக்கு ராம நாமம் என்றால், தேவனுக்கு சொல்லும், வேலும் ஆயுதமாகின.

x) இறுதியாக….. ராமன் பெரியவனா அனுமன் பெரியவனா… என்னும் கேள்வி ராமாயணம் படிப்பவர்கள் மனதில் நிச்சியம் வந்திருக்கும். அது போல பொன்னியின் செல்வன் பெரியவனா வந்தியத்தேவன் பெரியவனா…. எனும் கேள்வி பொன்னின் செல்வன் படிப்பவர்கள் மனத்தில் எழும். (இவைக்கு ஒரு சரியான விடை இல்லை. ஹைபோதிடிகள் கேள்வி). சிந்திக்க.

HANUMAN

மேலே சொன்ன ஒற்றுமைககளில் ஏதேனும்

i) தவறுகள் இருந்தால் சொல்லவும்,

ii) திருத்தும் இருந்தால் சொல்லவும்,

iii) வேறு நல்ல உதாரணங்கள் இருந்தால் சொல்லவும்,

iv) கூடுதல் ஒற்றுமைகள் இருந்தால் சொல்லவும்

இருவருக்கும் சில பல வேற்றுமைகளை உள்ளன. உங்கள் ஊக்குவிப்பு இருப்பின், ஒரு பதிவில், அதையும் (யோசித்து) எழுத, கொள்ளை ஆசை.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

(என்னுரை)

கல்கி அவர்களின் எழுத்துக்கென ஒரு ஆரவாரமற்ற, ஆர்பாட்டமில்லா ரசிகர் கூட்டம், தமிழ் நாட்டில், உலகத்தில் உள்ளது. அதில் ஒரு கத்துக்குட்டி நான்.

அவரை படித்து ரசித்து, தமிழில் கிறுக்கவந்தவன் நான். எம் எழுத்துலக ஆசானுக்கு, தலைவனுக்கு, நவீன தமிழ் அகத்தியனுக்கு, பொன்னியின் புதல்வனுக்கு, ‘கல்கி’க்கு, இப்பதிவு சமர்ப்பணம். நாற்சந்தியும், ஓஜசும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள். இந்த ஐம்பதாவது பதிவை அவருக்கு கொடுத்ததில் எனக்கு ஆத்ம திருப்தி. இது ஒரு சிறு குரு தக்க்ஷனை எனலாம்.

மேலும் அவரை பற்றி பேசுவேன். என் எண்ணங்களை போல, பல பதிவுகள் மேலும் ‘கல்கி’யை சுற்றி சுற்றி வரும். இதற்காக உங்கள் நல்லாதரவையும், அன்பையும் கோறுகிறேன்.

இப் பதிவில்: எழுத்துப் பிழைகள், கருத்து சொதப்பல்கள் இருக்கும் பட்சத்தில், அந்த குறை, குற்றம் என்னை சாரும். நல்லவை அனைத்தும் ‘கல்கி’யை மட்டுமே சாரும்.

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனுமுலு!!!

கல்கி தாசன்,

ஒஜஸ் 😉

கல்கியின் அனைத்து படைப்புகளையும் பதிவிறக்க சொடுக்கவும்.

(என்னை போலவே கல்கி அவர்களால் தமிழ் பக்கம் ஈர்க்கப்பட்டு, என் முயற்சி அனைத்துக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கும், என் அன்பு தோழி ‘அபிநயா’ அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள், நல்வாழ்த்துகள்!!!)

போச்சு போலியோ…

நாற்சந்தி கூவல் – ௪௯(49)

(போலியோக் கூவல்)

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை ஓட்டு போடா முடியுமா, ஆனால் அதன் சுண்டு விரலில் மை உள்ளதே…. ஓஹோ போலியோ மருந்து குடித்த குழந்தை அது. மிக்க மகிழ்ச்சி!!!

ஜனநாயகத்தின் மீது எனக்கு பல முறை கோவம் எற்ப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ மட்டற்ற மகழ்ச்சி. போன ஆண்டு, இந்தியாவில் போலியோ முழுமையாக ஓடுகப் பட்டுள்ளது.

இது தொடர நாம் உதவி செய்ய வேண்டும். பக்கத்தில் உள்ள மருத்துவமணைக்குகோ, பேருந்து நிலயத்துக்கோ, நாற்சந்திகோ சென்று, சிசுகளுக்கு தவராமல் இன்று மாலை ஆறு மணிக்குள் சொட்டு மருந்து போடவும்.

இந்த பதிவின் நோக்கம் இத்துடன் முடிவு பெருகிறது. மேலும் உங்களுக்கு போலியோ பற்றி அறிந்த கொள்ள ஆரவம் இருந்தால் மேலே படிக்கவும்.

(சில விக்கிபீடியா தகவல்கள் மற்றும் படங்கள் என் கருத்துடன்)

  • 1840ஆம் ஆண்டு இந்த வியாதி கண்டறிய பட்டது.
  • வைருஸ்ஸால் ஏற்படும் உபாதி இது.
  • முக்கியமாக முதுகு தண்டையும், முலையும் பாதிக்கும் நோய்.
  • போலியோ வந்து விட்டால், அதனை குணப்படுத்த எந்த வழியும் இல்லை. (சொட்டு மருந்துடன், வருமுன் காப்போம)
  • முன்பெல்லாம் வருடா வருடம் சுமார் மூன்று லக்க்ஷம் பேர் போலியோவால் மரணத்தை சந்தித்தனர், நொண்டியானவர்கள் ஏராளம்
  • 1950ஆம் ஆண்டு இதற்கான் மாற்று மருந்து கண்டுபிடிக்க பட்டது.

(இது போல எய்ட்ஸ் வியாதி குணமாக எதாவது கண்டறிந்தால் நலம். அதை தடுக்க மக்கள் முயற்சி செய்தல், தங்களை கட்டுப்படுத்தினால் நன்று)

சமர்த்தாக இந்த தேனி சொல்வதை கேளுங்கள்:

வருடம் தோறும் இந்த போலியோ இல்லாத இந்தியாவை, உலகை உருவாக்க நாம் ஒத்துழைப்போம்.

போலியோ போன்ற நோய்களால் பாதிக்கபடாதவர்கள் நாம். இது நாம் செய்த நன்மைக்கு பரிசு. எனவே ஒழுங்கா உழைத்து, மனமுவந்து கொடுத்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, இந்த உலகுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும், நமக்கும் பெருமை சேர்போம் ஆகுக.

பலமே வாழ்வு, பலவீனமே மரணம் – விவேகானந்தர்

பொறுப்புடன் பொழப்பேத்த பய,

ஓஜஸ் 😉

{ எனது ட்வீட் : “இந்த ட்விட்டர் குருவிக்கு என்ன வயசு? <5 னா சொல்லுங்க.. #போலியோ_சொட்டு_மருந்து_போட ” }

எட்டு கரண்ட்

நாற்சந்தி கூவல் – ௪௮(48)
(கரண்ட்ப் பதிவு)
!!!

தலைப்பு விளக்கம்  : எட்டு மணி நேரம் கரண்ட் கட் (வாழ்கை விழங்கும்!)

!!!

எங்கள் வீட்டில், வாண்டுகளின் சகாப்தத்துக்கு குறைச்சல் இல்லை. இன்று வேறு சனி, நமக்கோ ஏழரை சனி போலும். (இவர்களாலும் இந்த பொல்லாத கரண்ட்டாலும்) அம்புட்டு சத்தம், கூச்சல், பரபரப்பு…… ஒரு சேட்டைக்கார பெண் (என் தங்கை) கூடியிருந்த குழந்தைகுளுக்கு ராமாயணம் சொல்லி வந்து, தயரதனிடம் கைகேகி வரம் கேட்க்கும் படலத்தை சொல்லி முடித்தது. தனது சொந்த வரங்களையும் தொடர்ந்து செப்பியது.

கடவுள் என் முன் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நான் சொல்லுவேன் : என்நேரமும் கரண்ட் இருக்கும் படி செய். பெட்ரோல் விலையை குறை. இது சாத்தியப் படாது என்றால் இதற்கான மாற்று வழியை கற்பி!!!

சற்று நேரம், நான் அசந்தே போய் விட்டேன். ஒரு பத்து வயது குழந்தை கேடக்கும் வரம் இது. தனக்கா எதுவும் கேட்க தெரியாத குழந்தை மனம். ஆஹா அருமை! அவளுக்கு கரண்ட்டாலோ, பெட்ரோலாலோ எந்த வித நன்மையும் ஏற்பட போவதில்லை. அவள் கேட்டது மக்கள் நலத்துக்கு. இதனை நமது வேதம் அழகாக சொல்லுகிறது : ”லோகா சமஸ்தா சுகினோ பவந்து

!!!

நான் கடிகாரம் கட்டுவதை கடந்த சில மாதங்களாக நிறுத்தி விட்டேன். அதனால், இவ்வளவு துள்ளியமாக கரண்ட்டை வெட்டும் ஈ.பி அதிகாரிகளுக்கும் அவர்தம் கடமை உணர்ச்சிக்கும் நன்றிகள்.

!!!

விளம்பர இடைவேளை : நீங்கள் கரண்ட்டாகப் படிப்பது, கரண்டால் கசங்கிப்போன ஒரு அகதியின் எண்ணங்கள். ;-(

!!!

நேற்று என் நண்பனை காண சென்றேன். அவன் அப்பாவுக்கு விக்கல். நான் சென்று அவருடன் பேசினேன். நடுவில் பல ‘விக்’ வந்தன. விக்கல் வைத்தியத்தில் இருங்கினேன். சட்டென்று நான் “அங்கிள் எங்கள ஏரியாவில் நேற்று கரண்ட் கட்டாகவேயில்லை ” என்றேன் (வடிகட்டிய பொய்). ஆச்சரியத்துடன் அவர் என்னை பார்க்க விக்கல் நின்றது. பாவம் அவருக்கு நல்ல அதிர்ச்சி 😉

!!!

(நீ சொல்வது எல்லாம் ரொம்ப போர், கரண்ட் இருக்கும் போதே படத்த போடு டா…)

ச….. எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு வாரேன் உங்களுக்கு படம் கேக்குதா….. நல்லா பாருங்கள்:

நான் ஏழை. நீங்க எப்படீ?
(பட உதவி : பேஸ்புக்)

!!!

கல்லியாணத்திற்கு தாயாராக உள்ள ஆண்களின் நன்மை கருதி ஒரு குறிப்பு : வரதட்சனையின் (பெரும்) பட்டியலுடன் ஜெநரேட்டர், மாதம் முப்பது லிட்டர் பெட்ரோல் (வண்டிக்கு 10, மீதி ஜென் செட்டுக்கு) சேர்க்க . என்ன ரைட்டா……

(சொந்த கற்பனை அல்ல, சுட்ட பழம்)

!!!

இருக்கும் போது அதன் அருமை தெரியாது. இல்லாது போது மனம் அதற்காக கிடந்து தவிக்கும். இது அனைத்துக்கும் பொருந்தும். (அதான் நாங்க இருக்கும் பொழுதே எங்கள்ட மொக்க போடுறியா…)

பழமொழி : காற்று அடிகும்ப்பொழுது தூற்றி கொள்

பதுமொழி : கரண்ட் இருக்கும்ப்பொழுது பதிந்து கொள்(/கொல்).

(பதிவு எழுதுவது அவளோவு கஷ்டமா போச்சு)

வாழ்க, வளர்க தமிழ்நாடு ஈ.பி நண்பர்கள் :p

வாழ்க கரண்டுடன்!!!

வளர்க கரண்டுடன்!!!

( இதுக்கு பேர் தான் வஞ்ச வாழ்த்து அணி )

முடியாதது முயலாதது மட்டுமே!

நாற்சந்தி கூவல் – ௪௭(47)

(மீள்ப் பதிவு)

இன்று தினமணி நாளிதழில் வெளிவந்த நடுப்பக்க கட்டுரையின் மீள் பதிவு இது. உன்னால் முடியும்! முயற்சி செய்!! என்று அழகாக சொல்லுகிறது. நீங்களும் படியுங்கள்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முடியாதது முயலாதது மட்டுமே!

                       –சி.வ.சு. ஜெகஜோதி

நம்ம கிட்ட நாலு காசுகூட இல்லை, ஒரு சொத்துகூட இல்லை, நம்மெல்லாம் என்னைக்குத்தான் முன்னேறப் போகிறோம்” என்று சிலர் புலம்புவது உண்டு. ஒரு சிலர், “”நம்மாலும் நாலு எழுத்தாவது படிச்சிருந்தாவாவது முன்னேற முடியும்” என்றும் சொல்லுவது உண்டு.

பலரும் படிக்கக் காரணமாக இருந்தவர் படிக்காத மேதை என்று பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர். மறையும்வரை முதல்வராகவே இருந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கவிஞராக, கதை வசனகர்த்தாவாக, அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கலைஞர் மு. கருணாநிதி. பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எத்தனையோ கல்லூரிகளில் போய்ப் படித்தார். ஆனால், எந்தக் கல்லூரியிலும் பட்டம் வாங்கவில்லை அவர். படித்துப் பட்டம் பெறாத இவர்களால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்தது எப்படி?

காரைக்குடி தந்த கவியரசு கண்ணதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் சாதாரண பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்தான். ஆனால், இவர்களால் மக்களின் மனங்களை பாட்டால் வெல்ல முடிந்தது எப்படி? எந்தக் கல்லூரியிலும் போய் படிக்காத சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது எப்படி? படிக்காமலும் முன்னேற முடியும் என்பதற்கு இவர்கள் என்றுமே அழிக்க முடியாத சரித்திரச் சான்றுகள்.

சல்லிக்காசுகூட கையில் இல்லாமலும், உறவினர்கள், நண்பர்களின் உதவியும் இல்லாமலும், முயன்று முன்னேறி வெற்றிக்கனியைப் பறித்தவர்களும் ஏராளம். தோல்விகளின் குழந்தை என்று வர்ணிக்கப்பட்ட ஆப்ரகாம் லிங்கன் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இவரோ அமெரிக்க நாட்டின் அதிபராகி, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது எப்படி?

அங்கு ஏன் போவானேன், இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில் வேலி கட்டிய அப்துல் கலாம், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். படிக்கக்கூடப் பணமில்லாமல் தட்டுத்தடுமாறிப் படித்து முன்னேறி விஞ்ஞானியாகி, இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகவும் முடிசூட முடிந்தது எப்படி? இன்றும் இவரால் இளசுகளின் இதயங்களில் இடம்பிடிக்க முடிகிறதே, அது எப்படி?

பணமே இல்லாமல் இருந்து, இன்று ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்த பல தொழிலதிபர்களின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறதே, அது எப்படி? உயரத்தின் உச்சியைத் தொட்ட எவரும் சாதாரணமாகப் படைக்கப்பட்டவர்களாக இருந்தும், இவர்களால் மட்டும் பலரும் பாராட்டும்படி உயர முடிந்தது எப்படி? இப்படி எத்தனையோ எப்படிகள் உள்ளன.

இவர்கள் தங்களது திறமைகளை நன்றாக உணர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தைக்கூட வீணாக்காமல் கடுமையாக உழைத்தார்கள். கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டைவிடாமல் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களது சேவைகளையும், செயல்பாடுகளையும் கண்டு உலகமே அவர்களை உயர்த்தியுள்ளது.

எனவே, இவர்கள் படிப்பும் இல்லாமலும், பணமும் இல்லாமலும் முன்னேற முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள்.

உலகைப் படைத்த இறைவன் ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் ஒரு சக்தியை வைத்துத்தான் படைத்திருக்கிறான். இனிய குரலுடைய குயில்கள், தோகை விரித்தாடும் மயில்கள், வானில் திரியும் பறவைக்குக் கடலுக்குள் இருக்கும் மீனைச் சரியான நேரத்தில் கொத்தித் தூக்கும் திறன், மானுக்கு விரைந்து ஓடும் சக்தி இப்படியாக இதன் வரிசைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

காலில் மிதிபடும் மண்ணில்கூட எத்தனேயோ வகைகள். மண்பானை செய்ய ஒருவகை மண், கட்டடங்கள் கட்ட ஒருவகை மண், தாவரங்களை விளைவிக்க ஒருவகை மண், மனிதர்களின் நோய்களைக் கூட தீர்த்து வைக்கும் ஒருவகையான மண், இப்படியாக மண்ணுக்கே இறைவன் பல சக்திகளை வைத்துப் படைத்திருக்கிறபோது, மனிதர்களை மட்டும் எதற்கும் அருகதை அற்றவர்களாகப் படைத்திருப்பானா?

பட்டுப்பூச்சி ஒன்று முதன்முதலாக முட்டைக் கூட்டை விட்டு வெளிவர முயற்சித்தது. முட்டைக் கூட்டை சிறிதளவு உடைத்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரக்க குணம் மிகுந்த ஒருவர், அதற்கு உதவ நினைத்து, சிறிய கத்தரிக்கோலால் அம்முட்டைக் கூட்டை சிறிதளவு மட்டும் வெட்டி அது வெளியே வர உதவினார். கூட்டை விட்டு வெளியே வந்த பட்டுப்பூச்சிக்கோ சிறகுகளை அசைத்துப் பறக்கத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் என்னவென்று அவர் விசாரித்தபோது, முட்டைக் கூட்டினை முதலாவதாக உடைத்து வெளி வர அது செய்யும் முயற்சியே இறக்கைகளுக்குப் பலமாக அமைந்து, பறக்க உதவுகிறது எனத் தெரியவந்ததாம்.

பட்டுப்பூச்சி தனது சுயமுயற்சியால் முட்டைக் கூட்டிலிருந்து வெளியில் வராமல் போனதால், இறக்கைகளுக்கு சுயபலமின்றி, அதற்கு நிரந்தரமாகவே பறக்கத் தெரியாமல் போனதாம்.

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக இருந்து வருபவர் நிக்விய்ஜெசிக். ஆஸ்திரேலிய நாட்டில் மெல்பர்ன் நகரில் பிறந்த இவருக்கோ இரு கைகளும் இல்லை, இரு கால்களும் இல்லை. ஆனால், இவர் எழுதிய நூலின் பெயர் என்ன தெரியுமா, இரு கையும் இல்லை, இரு கால்களும் இல்லை, ஒரு கவலையும் இல்லை என்பதுதான்.

உள்ளம் ஊனமில்லாமல், உடல் மட்டும் ஊனமாக இருந்த இவர், இன்று எத்தனையோ உள்ளம் ஊனமானவர்களை தனது தன்னம்பிக்கைப் பேச்சால் குணப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார். படிக்கவில்லையே, பணமில்லையே, முன்னேற முடியவில்லையே என்ற தாழ்வு எண்ணங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டு இருந்தால், அதைப் பிய்த்து எறிந்துவிட்டு சோதனைகளைச் சாதனைகளாக்குவோம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயற்சிகள் தவறலாம், முயற்சிக்கத் தவறலாமா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தினமணி சார்ந்த, அதில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை நாற்ச்நதி கொண்டுவந்துள்ளது, இது தொடரும். இதற்கு ஒரே காரணம் : இக்காலத்தில் வரும் தமிழ் தினசரிகளில் ‘தினமணி’ மிக நன்று.

நல்ல விஷயத்தை எங்கு படித்தாலும், இங்கு உங்களுக்கு கொடுக்கும், ஒரு சிறு முயற்சி தான் இது. – ஒஜஸ்

நாற்சந்தி நன்றிகள் – தினமணி மற்றும் அதன் இணையதளம்.

காதல் செய்க!

நாற்சந்தி கூவல் – ௪௬(46)

(காதல் பதிவு)

 (காதலர் தின {ஒரே} சிறப்பு பதிவு)

எனக்கும் ஒரு காதலி. அவளை வர்ணித்தி சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது. சரி அதை விடுங்கள் (இதற்காக ஒரு தனி பதிவே எழுதி ஜமாய்ச்சிறலாம்) . காதலர் தின காதல் வாழ்த்துகள்.நாம் எதை வேண்டுமானாலும் காதல செய்யலாம்.

உதாரணம் : கணித காதல்.சில முத்திப் போன கணித ஆர்வலர்கள் செய்த சேட்டை இது:

கணிதத்தை கரைத்துக் குடித்த என் நண்பர்களுக்கு ஒரு வேண்டு கோள்: இந்த சமன்பாட்டை சரிப்பார்த்து சொல்லவும் ❤

!!!

(மேலும் சில காதல்:)

பெண்ணோ பொருளோ பணமோ பிணமோ. அது நமது தனிப்பட்ட விருப்பம். இருந்தாலும் நாம் ‘காதல்’ என்ற சொல்லை ஒரு ஆணுக்கும் மாதரிசிக்கும் ஏற்படும் ஒரு உருவம் இல்லதா (சில சமயம் உறுதி இல்லாத) உறவை சுட்டுகிறோம்.

சங்க இலக்கியம், காதலை களவு என்றே சொல்லுகிறது. கற்பு மற்றும் களவு தான் இரு நிலைகள். இன்று நாம் அதனை காதல் என்றும் திருமணம் என்றும் முறையே சொல்லுகிறோம்.

ஆனால் கற்போ, களவோ, கலங்கி போவது நம்மை போன்ற ஆண்கள் மட்டுமே. காதலில் தோற்று, நொந்து கொண்டு வாழ்கையை இழந்த காளைகளை பற்றி நாம் படித்துண்டு, பார்த்துண்டு, பழகியதுண்டு……. ஆனால் இது போல பெண்கள் உண்டா? இருந்தால் சொல்லவும். ச.. எங்கோ தொடங்கி எங்கோ சென்று விட்டேன். இது நிற்க….

!!!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த ஆண்டு பல காதல்கள் பூஜியத்தில் மட்டும் முடியும். இன்றைய தேதி 14-02-12. கூட்டி கழித்துப் பார்க்கவும் (14-2-12=0). பெரிய முட்டை மிஞ்சும். கவலை வேண்டம், அதனை உங்கள் காதலின் சின்னமாக வைத்துக் கொள்ளவும்

!!!

நூறு சொச்சம் காதல் படங்கள் சேர்த்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒரு கதை எழுத தகுந்தவை. விரைவில் வெளிவரும். அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, இன்னறைய ஸ்பெஷல்:

!!!

காதல் பற்றி ஏற்கனவே எழுதிய பதிவிலிருந்து சிலவை, உங்களுக்காக. “வா.வெ.சு.ஜயர்”ரின் காதல் பாடம் கேளுங்கள்:

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது, மற்ற யாரைப் பார்க்கும்போது அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷையமானாலும், அவருடைய குரலில் வீசேஷமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தயைக் காது தேவாமிரிதத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரடத்தில் பேசும்போது வாய் குளருகிறது.; நாக்குக் கெஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக் காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவ ரகசியம்  மனிதரால் சொல்ல முடியாது!!!

!!!

சில காதல் வரிகளுடன் (சத்தியமா நான் எழுதினது இல்லைங்க ;)) இந்த பதிவை முடிக்கிறேன்.

காதல் – நெருப்பின் நடனம்……

காதல் – புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

காதல் – மாய உலகம் : சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்….

குடைகள் இல்லாத நேரத்து மழைகள் வாழ்கவே,

உனது கைகள் இரண்டும் குடையானதே…. .

என்னுள் உன்னை, உன்னுள் என்னை

காலம் செய்யும் காதல் பொம்மை 

     (படம் : வெயில்)

நான் எழுதி சில காதல் பதிவுகள்:

(ஏதோ காதலர் தினத்துக்கு ஒரு பதிவு போடணும்னு ஒரு சாக்குக்கு, நீ வாயில் வட சுடும் விதம், ஆனாலும் சூப்பர் டா ஓஜஸ்….. வட போகாம பாத்துக்கோ ;-))

கலையாக் காதலுடன்,

ஓஜஸ் 🙂

உனக்குமா!

நாற்சந்தி கூவல் – ௪௫(45)

(காதல் பதிவு)

உனக்குமா!

இந்த பருமா நீ செய்யறது தான் ரைட். இப்பலேர்ந்து காதலிக்க பயற்சி செய். நீ எதை வேண்டுமானாலும் காதல செய். ஆனால் எப்பொழுதும் இந்த புன்சிரிப்பை மட்டும் விட்டு விடாதே…..

இவள் : நான் யார காதலிக்கிறேனு கரெக்டா சொன்னீங்கனா……. நான் உங்களுக்கு ஒன்னு தருவேன்………..

{ கஷ்டமான கேள்வி தான். அழகான முகம். மனதை மயக்கும், (குளி விழும்) மோகன சிரிப்பு……. ஹ்ம்ம் சூப்பர் ஏஞ்சல் நீ }

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: