~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for மார்ச், 2012

சாத்தியமா…

நாற்சந்தி கூவல் – ௫௩(53)

(சும்மா பதிவு)

சாத்தியமா…

பல நாடளுக்கு முன் ஒரு படத்தை இணையத்தில் பார்த்தேன். (இது போல கருவி உங்கள் கையில் சிக்கினாலோ/ நீங்கள் எங்காவது பார்த்தாலோ, தயவு செஞ்சு எனக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க)

முதலில் அந்த படம் :

நான் பார்த்தவரைக்கும் பல லாப்டாப்புகள் (என்னுடையது உட்பட), அதிவிரைவில் பவர் இன்றி படுத்துவிடுகிறது.

சும்மாவே இங்கு கரெண்ட் தொ(இ)ல்லை, இதில் இந்த மூன்று மணி நேரம் கூட தாங்காத ஓட்ட பாட்டரியை வைத்து கொண்டு நாம் படும் பாடும், சொல்லி மாளாது.

இதனால் தான் இத்தனை நாள் பதிவுப் போடாமல் இருந்தியா? என்று மட்டும் கேட்காதீர்கள்.

வேலைப் பழு கோடியாக கூடி விட்டது, படிக்க வேண்டிய (சத்தியமா பாட சம்பதமானவை இல்லை) புத்தக சுமை அதிகரித்து விட்டது, என்று எல்லாம் நான் புருடா விட்டால் நீங்கள் நம்புவீர்களாகும்.

என்ன செய்ய, நானும் இந்த ‘சோம்பேறி’த்தனத்தின் அராஜக, கொடுங்கோல் ஆட்சிக்கு உட்பட்ட பிரஜை தானே. இந்த நாட்டை (நிலைமையை) விட்டு வெளிவர தெரிந்தும், வெளியேர மறுப்பவன் நான். (ஏண்டா இதில் உனக்கு இத்தனை பெருமை?)

இறுதியாக இரு (நாற்சாந்யின்) நற்செய்திகள்:

1) எழுதுவதை குறைக்க முடிவு செய்துள்ளேன். (அப்பாடா தப்பிச்சோம்) முதில் நிறைய படிக்க வேண்டும். மேலும் மேலும் புத்தங்களை/இதழ்களை படிக்கும் பொழுது, ஒன்று நல்லா தெரியுது : எனக்கு தெரிந்த தமிழும்/செய்திகளும்/விஷயமும் மிக மிக கம்மி. ஆனால் என் எழுத்து எப்படி என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் ( ‘கமெண்ட்’டாக சொல்லவும்)

2) என் அன்பு தோழன், என்னையும் பலதரப்பட்ட தமிழ் சம்பந்தமான துறைகள் பக்கம் கொண்டு செல்லும் “தமிழரசு” அவர்களின் வோர்ட்ப்ரஸ் விஜயம். நீங்களும் சென்று பாருங்கள்: http://tamiluyirppu.wordpress.com மிக்க அருமை. தலைவர் ‘தமிழரசு’ தமிழ் சூப்பர்.

வண்ணமயமான வாழ்க்கை..

நாற்சந்தி கூவல் – (௫௨)

(தினமணிப் பதிவு)

இன்று தினமணி இதழில் வெளிவந்துல்ல நடுப் பக்கக் கட்டுரை இது. படிக்க:

!!!!!!!!!!

வண்ணமயமான வாழ்க்கை..

– கே.என். ராமசந்திரன்

அன்றொரு நாள் இணையதளத்தை மேய்ந்தபோது ஓர் அமெரிக்க ஆய்வர் எழுதியிருந்த கட்டுரை கண்ணில்பட்டது. மனிதர் தூக்கத்தில் காணும் கனவுகளில் வர்ணங்கள் தெரியாது எனவும் எல்லாம் கறுப்பு-வெள்ளைப் பிம்பங்கள்தான் எனவும் அவர் கூறுகிறார்.

நாம் கண்களால் பொருள்களைப் பார்க்கிறபோது அவற்றின் பிம்பம் விழித்திரையில் விழும். அதிலுள்ள கூம்பு ùஸல்களும் தண்டு ùஸல்களும் பிம்பத்தைப் பகுப்பாய்வு செய்து வெவ்வேறு நிறங்களுக்கு வெவ்வேறு மின் சைகைகளை மூளைக்கு அனுப்பும். மூளை அவற்றைத் தொகுத்துக் கலர்க் காட்சியாக மாற்றிக் காட்டுகிறது.

கனவு காண்பதில் விழித்திரையின் பங்குப்பணி ஏதுமில்லை. எனவே கனவுகள் கறுப்பு – வெள்ளையாகத்தான் தெரியும். ஆனாலும் நம் மனதில் உள்ள முன்பதிவுகள் காரணமாக கறுப்பு – வெள்ளை ஒளிப்படங்களை அல்லது திரைப்படங்களைப் பார்க்கிறபோது குங்குமம் சிவப்பு, கூந்தல் கறுப்பு என்று கற்பித்துக்கொண்டு விடுவதைப்போலவே கனவுகளிலும் கலர்களைக் கற்பித்துக் கொண்டு விடுகிறோம் என்று அந்த ஆய்வர் கூறுகிறார்.

கலர் இல்லாத கனவு எல்லாம் ஒரு கனவா? நல்லவேளையாக நனவுலகம் கலர்ஃபுல்லாக உள்ளது. கட்டடங்களுக்குப் பூசும் வர்ணங்களை முடிவு செய்ய அதற்கென்றுள்ள ஆலோசகர்கள் வாஸ்து, மருத்துவம், மனோதத்துவம் என்று பல உத்திகளைக் கையாள்கிறார்கள். நீலமும் பச்சையும் உடலையும் மனதையும் நலமாக்கும். அதனால்தான் மருத்துவமனைகளில் நீல நிறச் சீருடைகளையும் மறைப்புகளையும் விரிப்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.

சிவப்பு ஆற்றலையும் வேகத்தையும் அதிகாரத்தையும் அடையாளப்படுத்துவது. வெள்ளையர் ஆட்சியில் சிவப்புத் தொப்பி (காவல்துறை)யைக் கண்டாலே மக்களுக்கு உதறல் எடுக்கும்.

காவல் நிலையங்களும் அரசு அலுவலகங்களும் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலிருக்கும். எல்லா நிறங்களும் அடங்கியதான வெண்மை மனதை அமைதிப்படுத்தும். மருத்துவர்களும் தாதிகளும் வெள்ளைச் சீருடை அணிவதன் நோக்கம் நோயாளியின் அச்சத்தைத் தணிப்பது ஆகும்.

நிறமில்லாத நிலையான கறுப்பு வெறுப்பு, எதிர்ப்பு, துயரம் ஆகியவற்றின் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. துறவிகள் அணியும் காவி தீயின் குறியீடாக அமைந்து சிதையை நினைவூட்டி எல்லா உயிர்களும் இறுதியில் மடிந்து போகும் எனும் உண்மையைச் சுட்டிக்காட்டும்.

கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதைவிட நீல வானத்தில் அல்லது பசும் புல்வெளியில் ஒரு புள்ளியைக் கண்ணிமைக்காமல் பார்ப்பதன் மூலம் மனதை விரைவாக ஒருமுகப்படுத்திக் குவித்து மோன நிலையை அடைய முடியும் எனச் சில யோகிகள் கூறுகிறார்கள். அந்த உத்தி கண்ணுக்கு வலுவூட்டிப் பார்வையை மேம்படுத்தும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். நீலவானையும் நீலக்கடலையும் கூர்நோக்குச் செய்வதன் மூலம் அவற்றின் விசாலத்தை மனதில் நிரப்பிச் சிந்தனைகளற்ற வெற்றிடமாக்க முடியும்.

குளிர்பருவங்களில் அடர்நிற ஆடைகளை அணிவது உடலில் கதகதப்பை உண்டாக்கும் எனவும் வெப்பப் பருவங்களில் வெளிர்நிற ஆடைகளை அணிவது உடலைக் குளிர வைக்கும் எனவும் உடையலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிற சிகிச்சை பற்றிய கருத்துகள் புராதன இந்திய, சீன, எகிப்திய மருத்துவர்களால் சுவடி நூல்களில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அவை தற்காலத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சில நிறங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் பயக்கும். வேறு சில ஊறு விளைவிக்கும். வீடுகளையும் அறைகளையும் சரியான நிறங்களில் அமைத்து நலம் பெறலாம் என நிற சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் ஆகியவற்றின் நுழைவாயில்களிலும் முகப்புகளிலும் ஊதா நிறத்தைப் பூசினால் வருகிறவர்களின் உடலும் மனதும் சஞ்சலம் நீங்கித் தொழுகை அல்லது சிகிச்சை அல்லது கற்றலுக்கு ஆயத்தமாகும்.

படுக்கையறை, படிப்பறை, பணியறை, ஓய்வறை ஆகியவற்றில் கரு நீல நிறத்தைப் பூசினால் உள்ளுணர்வுகளும் ஆன்மிக அறிவுகளும் கூர்மையாகும்.

நீல நிற அறைகள் இறுக்கத்தைத் தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி உபாதைகளைக் குறைக்கும். மனம் விட்டு வெளிப்படையாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஊக்கமளிக்கும்.

அடர் பச்சை நிறச் சுவர்களில் இடையிடையே வெளிர் பச்சைப் பரப்புகளை அமைப்பது சமநிலை, இணக்கம், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும். மஞ்சள் பூச்சு மனதில் சுறுசுறுப்பையும் உஷார் தன்மையையும் வளர்க்கும். ஆரஞ்சு நிறம் படைப்பாற்றல், உல்லாசம், உறவுச் சமநோக்கு ஆகியவற்றை மேம்படுத்தும்.

சிவப்பு நிறம் உணர்ச்சிகளையும் பசியையும் தூண்டும். அது உணவகங்களுக்கு ஏற்றது. ஆனால், சிவப்பு நிறச் சுவர்கள் அறையின் பரிமாணங்களைக் குறைத்துக் காட்டும். அறைகளின் உட்கூரை வெள்ளையாக இருப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட நிறம் குறிப்பிட்ட நல்விளைவுகளை உண்டாக்குவதாயிருந்தாலும் அதையே எல்லாவிடங்களிலும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

அண்டை வீட்டுக்காரர்கள் உங்களுடன் சுமுகமாகப் பழகாமலிருந்தால் அதற்கு உங்கள் வீட்டின் வெளிச்சுவர்களில் உள்ள நிறங்களின் தாக்கம் காரணமாயிருக்கலாம். பச்சை, நீலம், ஊதா ஆகியவற்றை வெளிர் நிறத்தில் சுவர்களில் பூசி அடர்நிறத்தில் விளிம்புப் பட்டைகளை அமைப்பதன் மூலம் அண்டை வீட்டுக்காரர்களின் அன்பைப் பெறலாம்.

உயர் குலம், நல்லொழுக்கம், அறிவாற்றல், உடல் நலம், தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் பெயரடையாக நீலம் பயன்படுத்தப்படுகிறது. நிறுவன வரவு செலவு அறிக்கைகளில் கறுப்பு லாபமாக இயங்குவதையும் சிவப்பு நஷ்டத்தில் இயங்குவதையும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் வெள்ளைப் பொய் நல்ல நோக்கத்தில் சொல்லப்படுவது. கறுப்புப் பொய் தீய நோக்கமுள்ளது. தமிழில் பச்சைப் பொய், பச்சை பச்சையாகப் பேசுவது ஆகியவை வெறுப்புக்குரியவை. ஆனால், பச்சைத் தமிழன் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.

மஞ்சள் முகமே வருக என வரவேற்கலாம். மஞ்சள் பத்திரிகை புறக்கணிக்கப்பட வேண்டியது. மஞ்சள் கடுதாசி தவிர்க்கப்பட வேண்டியது. சிவப்பு விளக்கு, சிவப்பு விளக்குப் பகுதி ஆகியவை எச்சரிக்கை செய்கிறவை. இளஞ்சிவப்பு ஆரோக்கியம், புகழ், பெருமை ஆகியவற்றின் உச்சத்தைக் குறிப்பது. பச்சைக்கொடியும் பச்சை விளக்கும் தொடர்ந்து முன்னேறு என அறிவிப்பவை

!!!!

இதனை படித்து முடித்த பொழுது வைரமுத்து அவர்களின் ‘பச்சை நிறமே’ பாடல் மனதில் ஒரு ஓரத்தில் ஓட துவங்கயது.

நாற்சந்தி நன்றிகள் : தினமணி இணையம், மற்றும் இந்த கட்டுரை ஆசிரியர்.

12/12/12 குழந்தை…

நாற்சந்தி கூவல் – ௫௧(51)

(சித்திரப் பதிவு )

கடைசியில் வரும் படத்துக்காகவே இந்த பதிவை.  அது மட்டும் இருந்தலால் பத்தாது. எனவே கலியாணம் பற்றிய ஒரு பழைய பதிவி (பிளாக்கரில் எழுதியது)  இங்கு மீள் பதிவு செய்கிறேன். படித்து மகிழுங்கள். ஏனால் இது ஒரு “கல்கி சொல்லும் கதை”.
*!!!*
உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா……..
~இல்லையா. ஐஐயோ இதை சீக்கிரம் படியுங்கள்.
~ஆகிவிட்டதா. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேலே வாசுயுங்கள்.
~இரண்டாம் கலியாணமா, மாட்டிகொண்டீங்கள், உங்களுக்கு அதிர்ச்சி மட்டும் மிச்சம்.
(இதை எல்லாம் சொல்ல உனக்கு என்ன தகுதியுள்ளது என்று கேட்காதீர்கள். என் நாயகன் ‘கல்கி’ சொல்லியதை தான் சொல்கிறேன். இது நிற்க.)
மூன்று மனிதர்களுடைய ஆவி ஒரே சமயத்தில் யமனுடைய சந்நிதானத்தை அடைந்தன.
முதல் ஆவி பூலோகத்தில் பிரம்மசாரியாகவே இருந்து இறந்தவனுடையது. அவனைப் பற்றி விவரம் சித்திர குப்தன் அறிவித்ததும், யமன் “இவன் பூலோகத்தில் கஷ்டமே அனுபவியாதவன்; ஆகையால் இவனை இங்கே நரகத்தில் போடு” என்றான்.
அடுத்த ஆவி ஒரு கிரஹச்தனுடையது. “ஐயோ பாவம்!!! உலகத்தில் கலியாணம் செய்து கொண்டு வெகு கஷ்டப்பட்டிருக்கிறான். இங்கேயாவது சுகமாக இருக்கட்டும், சொர்கத்துக்கு அனுப்பு” என்றான் யமன்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது ஆவி,“யமதர்ம ராஜனே! நான் பூலோகத்தில் இரண்டு தடவை கலியாணம் செய்துகொண்டு ரொம்ப கஷ்டம் அனுபவித்தவன்”என்று முறையிட்டான். உடனே யமன் வெகு கோபத்துடன்,“அடே முட்டாள்! ஒரு தடவை கலியாணம் செய்துகொண்டு கஷ்டப்பட்ட பின், இரண்டாம் தடவையும் கலியாணம் செய்து கொண்டாயா? இப்படிப்பட்ட மூடனுக்குச் சொர்க்கத்தில் இஅடம் எது? போடு இவனைக் கொடிய நரகத்தில்!” என்று கட்டளையிட்டான்.
(யமனோடு சந்திப்பு எங்கு வரும், எப்படி வரும், எப்பொழுது வரும், எப்படி இருக்கும் என்பதை எம்பெருமான்தான் அறிவான். அதை எல்லாம் சற்று மறந்து சிரியுங்கள் J)
நன்றி: ‘கல்கி’யின் கட்டுரை கலியாணாம்
(“அட பாவி!!! உனக்கு சொந்தமாக கதை, கட்டுரை, கவிதை, பதிவு  எழுதவராதா…… நீ ஒரு பேத்தல். உன் கிறுக்கல்கள் தாங்க முடிலய.” என்ன செய்வது மஹாஜனங்களே : முற்றிய (கல்கி/)கலி காலம்)
*!!!*
சரி விஷியத்துக்கு வருவோம்…. இந்த ஆண்டு 2012. இதனுடைய சிறப்பு இந்த தேதி : 12/12/12.   இதனை முதற்கொண்டு நாம் என்ன என்ன செய்யலாம் என உலகம் இப்பவே திட்டமிட துவங்கிவிட்டது. நமோ இங்கு தூங்கி கொண்டே இருக்கோம். ஆம் நான் சொல்லப் போகும் செய்தி கூட தூங்கும் “படுக்கை அறை” சம்பந்தப்பட்டதே.
இந்த யோசனை (மேல் சொன்னது போல முதலாம்/ இரண்டாம்) கலியாணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே.  “காக்கைக்கு தன குஞ்சு, பொன் குஞ்சு” (அடிங்க, நோ டபுள் மீனிங்!!!). சதிபதிகள் எல்லோரும் நினைப்பது ‘ நம் க்கு பிறந்த/ பிறக்கப்போகும் குழந்தைக்காக நாம் என்ன என்னவற்றை சிறப்பாக செய்யலாம்’. புதிதாக இந்த ஆண்டு குழந்தை பெற திடமிடுபவர்கள், தங்கள் செல்வத்தை ஏன் இந்த ஆயிரம் ஆண்டு அபூர்வ தினத்தன்று (12/12/12) பெறக்கூடாது……………..
உங்களுக்கு இப்படி ஒரு ஆசை இருந்தால் ‘இந்த வாரம் தான் அதற்கு கெடு
புரிஞ்சுகிட்டவன் தான் பிஸ்தா!!!!
“முயற்சி திரு வினையாக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்”
(இந்த படைத்தை காண்பித்த என் அன்பு  நண்பனுக்கு, என் நன்றிகள்!!! ட்விட்டர் படம் இது)

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: