~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – (௫௨)

(தினமணிப் பதிவு)

இன்று தினமணி இதழில் வெளிவந்துல்ல நடுப் பக்கக் கட்டுரை இது. படிக்க:

!!!!!!!!!!

வண்ணமயமான வாழ்க்கை..

– கே.என். ராமசந்திரன்

அன்றொரு நாள் இணையதளத்தை மேய்ந்தபோது ஓர் அமெரிக்க ஆய்வர் எழுதியிருந்த கட்டுரை கண்ணில்பட்டது. மனிதர் தூக்கத்தில் காணும் கனவுகளில் வர்ணங்கள் தெரியாது எனவும் எல்லாம் கறுப்பு-வெள்ளைப் பிம்பங்கள்தான் எனவும் அவர் கூறுகிறார்.

நாம் கண்களால் பொருள்களைப் பார்க்கிறபோது அவற்றின் பிம்பம் விழித்திரையில் விழும். அதிலுள்ள கூம்பு ùஸல்களும் தண்டு ùஸல்களும் பிம்பத்தைப் பகுப்பாய்வு செய்து வெவ்வேறு நிறங்களுக்கு வெவ்வேறு மின் சைகைகளை மூளைக்கு அனுப்பும். மூளை அவற்றைத் தொகுத்துக் கலர்க் காட்சியாக மாற்றிக் காட்டுகிறது.

கனவு காண்பதில் விழித்திரையின் பங்குப்பணி ஏதுமில்லை. எனவே கனவுகள் கறுப்பு – வெள்ளையாகத்தான் தெரியும். ஆனாலும் நம் மனதில் உள்ள முன்பதிவுகள் காரணமாக கறுப்பு – வெள்ளை ஒளிப்படங்களை அல்லது திரைப்படங்களைப் பார்க்கிறபோது குங்குமம் சிவப்பு, கூந்தல் கறுப்பு என்று கற்பித்துக்கொண்டு விடுவதைப்போலவே கனவுகளிலும் கலர்களைக் கற்பித்துக் கொண்டு விடுகிறோம் என்று அந்த ஆய்வர் கூறுகிறார்.

கலர் இல்லாத கனவு எல்லாம் ஒரு கனவா? நல்லவேளையாக நனவுலகம் கலர்ஃபுல்லாக உள்ளது. கட்டடங்களுக்குப் பூசும் வர்ணங்களை முடிவு செய்ய அதற்கென்றுள்ள ஆலோசகர்கள் வாஸ்து, மருத்துவம், மனோதத்துவம் என்று பல உத்திகளைக் கையாள்கிறார்கள். நீலமும் பச்சையும் உடலையும் மனதையும் நலமாக்கும். அதனால்தான் மருத்துவமனைகளில் நீல நிறச் சீருடைகளையும் மறைப்புகளையும் விரிப்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.

சிவப்பு ஆற்றலையும் வேகத்தையும் அதிகாரத்தையும் அடையாளப்படுத்துவது. வெள்ளையர் ஆட்சியில் சிவப்புத் தொப்பி (காவல்துறை)யைக் கண்டாலே மக்களுக்கு உதறல் எடுக்கும்.

காவல் நிலையங்களும் அரசு அலுவலகங்களும் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலிருக்கும். எல்லா நிறங்களும் அடங்கியதான வெண்மை மனதை அமைதிப்படுத்தும். மருத்துவர்களும் தாதிகளும் வெள்ளைச் சீருடை அணிவதன் நோக்கம் நோயாளியின் அச்சத்தைத் தணிப்பது ஆகும்.

நிறமில்லாத நிலையான கறுப்பு வெறுப்பு, எதிர்ப்பு, துயரம் ஆகியவற்றின் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. துறவிகள் அணியும் காவி தீயின் குறியீடாக அமைந்து சிதையை நினைவூட்டி எல்லா உயிர்களும் இறுதியில் மடிந்து போகும் எனும் உண்மையைச் சுட்டிக்காட்டும்.

கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதைவிட நீல வானத்தில் அல்லது பசும் புல்வெளியில் ஒரு புள்ளியைக் கண்ணிமைக்காமல் பார்ப்பதன் மூலம் மனதை விரைவாக ஒருமுகப்படுத்திக் குவித்து மோன நிலையை அடைய முடியும் எனச் சில யோகிகள் கூறுகிறார்கள். அந்த உத்தி கண்ணுக்கு வலுவூட்டிப் பார்வையை மேம்படுத்தும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். நீலவானையும் நீலக்கடலையும் கூர்நோக்குச் செய்வதன் மூலம் அவற்றின் விசாலத்தை மனதில் நிரப்பிச் சிந்தனைகளற்ற வெற்றிடமாக்க முடியும்.

குளிர்பருவங்களில் அடர்நிற ஆடைகளை அணிவது உடலில் கதகதப்பை உண்டாக்கும் எனவும் வெப்பப் பருவங்களில் வெளிர்நிற ஆடைகளை அணிவது உடலைக் குளிர வைக்கும் எனவும் உடையலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிற சிகிச்சை பற்றிய கருத்துகள் புராதன இந்திய, சீன, எகிப்திய மருத்துவர்களால் சுவடி நூல்களில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அவை தற்காலத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சில நிறங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் பயக்கும். வேறு சில ஊறு விளைவிக்கும். வீடுகளையும் அறைகளையும் சரியான நிறங்களில் அமைத்து நலம் பெறலாம் என நிற சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் ஆகியவற்றின் நுழைவாயில்களிலும் முகப்புகளிலும் ஊதா நிறத்தைப் பூசினால் வருகிறவர்களின் உடலும் மனதும் சஞ்சலம் நீங்கித் தொழுகை அல்லது சிகிச்சை அல்லது கற்றலுக்கு ஆயத்தமாகும்.

படுக்கையறை, படிப்பறை, பணியறை, ஓய்வறை ஆகியவற்றில் கரு நீல நிறத்தைப் பூசினால் உள்ளுணர்வுகளும் ஆன்மிக அறிவுகளும் கூர்மையாகும்.

நீல நிற அறைகள் இறுக்கத்தைத் தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி உபாதைகளைக் குறைக்கும். மனம் விட்டு வெளிப்படையாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஊக்கமளிக்கும்.

அடர் பச்சை நிறச் சுவர்களில் இடையிடையே வெளிர் பச்சைப் பரப்புகளை அமைப்பது சமநிலை, இணக்கம், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும். மஞ்சள் பூச்சு மனதில் சுறுசுறுப்பையும் உஷார் தன்மையையும் வளர்க்கும். ஆரஞ்சு நிறம் படைப்பாற்றல், உல்லாசம், உறவுச் சமநோக்கு ஆகியவற்றை மேம்படுத்தும்.

சிவப்பு நிறம் உணர்ச்சிகளையும் பசியையும் தூண்டும். அது உணவகங்களுக்கு ஏற்றது. ஆனால், சிவப்பு நிறச் சுவர்கள் அறையின் பரிமாணங்களைக் குறைத்துக் காட்டும். அறைகளின் உட்கூரை வெள்ளையாக இருப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட நிறம் குறிப்பிட்ட நல்விளைவுகளை உண்டாக்குவதாயிருந்தாலும் அதையே எல்லாவிடங்களிலும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

அண்டை வீட்டுக்காரர்கள் உங்களுடன் சுமுகமாகப் பழகாமலிருந்தால் அதற்கு உங்கள் வீட்டின் வெளிச்சுவர்களில் உள்ள நிறங்களின் தாக்கம் காரணமாயிருக்கலாம். பச்சை, நீலம், ஊதா ஆகியவற்றை வெளிர் நிறத்தில் சுவர்களில் பூசி அடர்நிறத்தில் விளிம்புப் பட்டைகளை அமைப்பதன் மூலம் அண்டை வீட்டுக்காரர்களின் அன்பைப் பெறலாம்.

உயர் குலம், நல்லொழுக்கம், அறிவாற்றல், உடல் நலம், தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் பெயரடையாக நீலம் பயன்படுத்தப்படுகிறது. நிறுவன வரவு செலவு அறிக்கைகளில் கறுப்பு லாபமாக இயங்குவதையும் சிவப்பு நஷ்டத்தில் இயங்குவதையும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் வெள்ளைப் பொய் நல்ல நோக்கத்தில் சொல்லப்படுவது. கறுப்புப் பொய் தீய நோக்கமுள்ளது. தமிழில் பச்சைப் பொய், பச்சை பச்சையாகப் பேசுவது ஆகியவை வெறுப்புக்குரியவை. ஆனால், பச்சைத் தமிழன் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.

மஞ்சள் முகமே வருக என வரவேற்கலாம். மஞ்சள் பத்திரிகை புறக்கணிக்கப்பட வேண்டியது. மஞ்சள் கடுதாசி தவிர்க்கப்பட வேண்டியது. சிவப்பு விளக்கு, சிவப்பு விளக்குப் பகுதி ஆகியவை எச்சரிக்கை செய்கிறவை. இளஞ்சிவப்பு ஆரோக்கியம், புகழ், பெருமை ஆகியவற்றின் உச்சத்தைக் குறிப்பது. பச்சைக்கொடியும் பச்சை விளக்கும் தொடர்ந்து முன்னேறு என அறிவிப்பவை

!!!!

இதனை படித்து முடித்த பொழுது வைரமுத்து அவர்களின் ‘பச்சை நிறமே’ பாடல் மனதில் ஒரு ஓரத்தில் ஓட துவங்கயது.

நாற்சந்தி நன்றிகள் : தினமணி இணையம், மற்றும் இந்த கட்டுரை ஆசிரியர்.

Advertisements

Comments on: "வண்ணமயமான வாழ்க்கை.." (2)

  1. ABINAYA MANIMARAN said:

    extremely good one.. with every post ur standard of writing is increasing…!!!.. continue this good work..:):)

    Like

    • நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்… இது நான் எழுதியது அல்ல… *கே.என். ராமசந்திரன்* அவர்கள் எழுதியது!!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: