~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for ஏப்ரல், 2012

சிந்திக்க THINK!

நாற்சந்தி கூவல் – ௫௯(59)

(சிந்தனைப் பதிவு)

சிந்திக்க THINK!

இந்த வாரம் புதிதாக திங்கை பற்றியே  திங்க் செய்து சிந்திப்போம். ஆங்கிலத்தில் ‘திங்க் பிபோர் யு ஸ்பீக்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது “சிந்தனை செய்து விட்டு பேசு” அல்லது “பேசும் முன் சிந்தனை செய்” என்பதே அதன் கூற்று.

அதற்கு மேலே கூறியது போல ஒரு புதிய விளக்கம் பொது வழக்கில் உள்ளது. ஒன்றை பேசுவதற்கு முன் நாமே நம்மிடம் சில கேள்வி கணைகளைத் தொடுக்க வேண்டும். அவை:

  • நாம் சொல்லப் போவது உண்மை தானா?
  •  கேட்பவருக்கு/பிறருக்கு அதனால் எதாவது நன்மை ஏற்படுமா?
  • அடுத்தவரை அது ஊக்குவிக்குமா?
  •  இந்த நேரத்தில் இதை அவசியம் சொல்லிதான் ஆகா வேண்டுமா?
  • நம் பேச்சு எவரையும், எவ்விதத்திலும் புண்படுத்தாமல் இருக்குமா?

இக்கோட்பாட்டின்படி பார்த்தால், நாம் பேசும் பல வெட்டி வாதங்கள் தேவையற்றவை, மேலே சொன்ன கேள்விகளுக்கு முரண்ப்பட்டவையே. இந்த கருத்தை மேலும் வண்ணமயமாக சொல்வதெனில் இப்படி சொல்லலாம்:

டேய், நிறுத்துடா. நீ மட்டும் என்னதை பேசி கிழிக்கிறையாக்கும், எப்ப பாத்தாலும் இந்த மண்ணாங்கட்டி ட்விட்டர தானே கட்டிட்டு அழுற…. என்று நீங்கள் சொல்வது விட்டு விட்டு கேக்குது. (சிக்னல் சரியில்லை). ஆமால நீங்க சொல்வதும் சரிதான். அதனால் நம் இணைய நெர்ட்ஸ் (nerds) அதற்க்காகவே இந்த பழமொழியை சற்று மாற்றி தந்துள்ளனர்.

செய்திகளை ட்வீடும் முன் (பேசுதல்), அதனை கூட்டாளி கூகிளிடம் விசாரித்து (சிந்தித்தல்) விட்டு தான் கீச்ச வேண்டும். என்ன புருஞ்சுச்சா ? (புரியக் கூடாதே). ஆனா நான் அப்படி எல்லாம் செய்வது இல்லை, என்பதே உண்மை. (இதுல என்னடா பெரும வேண்டி கிடக்கு)

என் மொக்கைகளை ட்விட்டர்ல தொடர்ந்து படிக்க : 

// அப்பா, நெட்டுல இருந்து ஆட்டைய போட்ட மூணு படங்களை {கொலைவெறி படம் இல்லங்க}  வைத்து ஒரு பதிவு தேத்திட்டேன். வாழ்க சித்தரப் பதிவுகள்!!! வளர்க நாற்சந்தி!!!

ட்வீட் எம்பெட்

நாற்சந்தி கூவல் – ௫௮ (58)

(சோதனைப் பதிவு)

ட்வீட் எம்பெட் செய்வது எப்படி? என்று இந்த தளத்தில்  படித்தேன். எனவே இங்கு சிலவற்றி சோதித்து பார்கிறேன்,

(இந்த வாரம் வெற்றி நடை போடும் “பெண் அழகி” – ட்வீட்)

(ஆசான் கல்கி அவர்களின் எழுத்தோவியங்கள்…)

ஆஹா! அஹா! அம்சமாக உள்ளது எம்பெடிங் . நன்றி ட்விட்டர்.

பெண் அழகி

நாற்சந்தி கூவல் – ௫௭(57)

(உணர்வின் பதிவு)

பெண் அழகி…..

இன்று முதல் என்னுடைய சின்ன சின்ன உணர்வுகளை இந்த நாற்சந்தியில், பகிர்ந்து கொள்ளலாம் என இறங்கியுள்ளேன். இந்த வகையில் இது தான் முதல் பதிவு என்பதால், ஒரு படத்துடன் என் உணர்வுகள்:

கொஞ்சம் நேரம் கழித்து, சிந்தித்து பாருங்கள், இதில் உள்ள தவறு உங்களுக்கு புலப்படும். ஆம், எனக்கு தோன்றிய தவறை சொல்கிறேன், செவி மடுத்து கேளுங்கள்.

அழகு என்பதற்கு ஒரு சரியான அர்த்தம்/வரையறை சொல்ல முடியாது, அதை நான் முற்றிலும் ஒப்புகொள்கிறேன். ஆனால் ஒரு பெண் அழகாக தெரிய அவர்கள் மேக்கப் போட வேண்டும், அல்லது நாம் தண்ணி போட வேண்டும் என்பதெல்லாம் சுத்த பேத்தல். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், உலகத்திலேயே மிக அழகிய பெண் யார்?

(நிதானமாக சிந்திக்க, கமர்சியல் பிரேக், குட்டி கதை)

மேலே சொன்ன கேள்வி ஒரு முறை கமலஹாசன் அவர்களிடம் கேட்கப் பட்டது, அவர் சிறு தயக்கமும் இன்றி சொன்னார் “என் அம்மா” என்று. (இதனால் நான் கமல் ரசிகன் என்று தவறாகா இடைப் போட வேண்டாமே)

அதை தான் நானும் சொல்லுவேன். ஆம் உங்களுக்காக தன் ஊன், உடல், உயிர் அத்தனையையும், எந்த நேரத்திலும், மலர்ந்த முகத்துடன் கொடுக்க உலகில் ஒரு மாதரசி இருப்பாள் என்றால், அவள் உங்களை பத்து மாதம் பத்தியம் இருந்து பெற்ற தாயாவாள்.

அவள் என்றுமே அழகின் சிகரம் தான், மேக்கப் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி. நாம் எந்த நிலையில், எந்த காலத்தில், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், அவள் நம் கண்களுக்கு பேரழகி தான்.

பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பிறந்தவர்கள் நாம். இது போல அவர்களை சித்தரிப்பது, கண்டனத்துக்கு உரிய விஷயம். இன்னும் சற்று ஆழ யோசித்து பார்த்தால், பெண்களை ஒரு போக பொருளாக பார்ப்பதே தவறு என நம் சாஸ்திரம் சொல்லுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் மனைவி மட்டும் இதற்கு விதிவிலக்கு.

பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. அது அற்புதமான இயற்கையின் லீலை. மனித குலத்தை பெருக்க, வளர்க மட்டுமே ஏற்படுத்தப் பட்டது அது. வேறு எதற்கும் இல்லை.

சீதை, சாவித்ரி, ஒளவை, நிவேதிதா, கண்ணகி போன்ற பெண்கள் வாழ்ந்து, மகோண்நதம் அடைந்த புண்ணிய பூமி இது. இது போல கேலி சித்திரங்களை உருவாக்கி, நாம் அடையும் பயன் யாது? நமது பண்பாட்டின் இடிந்த சுவர்களை செப்பனிட்டு செதுக்க வேண்டிய உளியில், நம்மை நாமே உடைத்து கொள்கிறோமோ என தோன்றுகிறது?

காலம் தான் இதற்கு விடை. ஆனாலும் நாம் ஏன், பெண்களின் பற்றிய நமது சிந்தனை போக்கை நல்வழியில் மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது…..

(இதில் சொன்னவை அணைத்தும் என் சொந்த கருத்துக்களே, பிழைகள்/ திருத்தங்கள்/ உங்கள் கருத்துகளை கமெண்ட்டாக பதிவு செய்க)

உயிருள்ள உணர்வுகளுடன்,

உங்கள் ஒஜஸ்

(உங்களுள் ஒருவன், உங்களை போல் ஒருவன், உங்கள் கருத்துக்காக காத்திருப்பவன்)

தமிழ் பழமொழிகள்

நாற்சந்தி கூவல் – ௫௬(56)

(பழமொழிப் பதிவு)

தமிழரசு அவர்கள் சேகரித்த தமிழ் பழமொழிகள்.

அவரைப் படியுங்கள் : www.tamiluyirppu.wordpress.com

நாற்சந்தி நன்றிகள் : நண்பர் தமிழரசு

ஐ.பி.யல் மின்சாரம் ;(

நாற்சந்தி கூவல் – ௫௫(55)

(வேண்டும்ப் பதிவு)

இந்த வார வேண்டுகோள் :

இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல் ( வணிக கிரிக்கெட் போட்டிகள் ) தொடங்க உள்ளன. மின் பற்றாக்குறை தீரும் வரை சென்னையில் கிரிகெட்டுக்கு மின்சாரம் வழங்ககூடாது என்று, தமிழக அரசுக்கும், தமிழக மின்வாரியத்துக்கும், மக்கள் உடனே கோரிக்கை அனுப்ப வேண்டும். chairman@tnebnet.org, cmcell@tn.gov.in ஆகியி மின்னஞ்சல் முகவரிகளுக்கு “When our state has severe power-cut, stop supplying power to commercial cricket, IPL in Chennai” என்ற கோரிக்கையை அனுப்புங்கள். அதிக விலைக்கு வேண்டுமானால் அவர்களுக்கு மின்சாரம் தரலாம் என்ற சமரசம் தவறானது. அடிப்படைத் தேவைகளுக்கே மின்சாரம் இல்லாதபொழுது ஆடம்பரங்களுக்கு அதிக விலை கொடுத்தாலும் மின்சராம் தரக் கூடாது.

!!!!!

இந்த வார ‘கல்கி’யின், (ஞானி எழுதும்) ‘ஓ’ பக்கத்தில் வந்துள்ள வேண்டுகோள் இது. நான் இதனை முற்றிலும் ஆமோதிக்கிறேன். அவர் சொல்வது சரி என மனதிற்கு பட்டது. எனவே மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். நீங்கள் எப்படி?

நாற்சந்தி நன்றிகள் – கல்கி வார இதழ் (08/04/12)

ஏப்ரல் – சிறப்பு தினங்கள்

நாற்சந்தி கூவல் – ௫௪(54)
(ஏப்ரல் மாதப் பதிவு)

ஏப்ரல் – சிறப்பு தினங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்……

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1. அஜீத் வடேகர் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1941.

3. ஹரிஹரன் (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்) 1955.

3. பிரபுதேவா (நடிகர், நடன ஆசிரியர்) 1973.

6. திலீப் வெங்சர்க்கார் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1956.

10. ஜி.டி.பிர்லா (தொழிலதிபர்) 1894.

11. கஸ்தூரிபாய் காந்தி (தேசப் பிதாவின் துணைவி) 1869.

14. பி.ஆர்.அம்பேத்கர் 1891.

17. விக்ரம் (நடிகர்) 1966.

18. ராம்நாத் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர், தலைவர்) 1904.

19. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்) 1957.

19. அஞ்சு பாபி ஜார்ஜ் (தடகள வீராங்கனை) 1977.

20. என்.சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர்) 1950.

23. எஸ்.ஜானகி (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி) 1938.

24. சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட் வீரர்) 1973.

24. இல.கணேசன் (அரசியல்வாதி) 1934.

29. ராஜா ரவி வர்மா (புகழ்பெற்ற ஓவியர்) 1848.

30. ரோஹித் சர்மா (கிரிக்கெட் வீரர்) 1987.

 

நினைவு தினங்கள்

5. லீலா மஜும்தார் (வங்காள எழுத்தாளர்) 2007.

5. பூர்ணசந்திர தேஜஸ்வி (கன்னட எழுத்தாளர்) 2007.

8. மங்கள் பாண்டே (இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்) 1857.

8. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய (வங்காள எழுத்தாளர்) 1894.

10. மொரார்ஜி தேசாய் (முன்னாள் பாரதப் பிரதமர்) 1995.

12. ராஜ்குமார் ( கன்னட நடிகர்) 2006.

14. எம். விஸ்வேஸ்வரய்யா (பிரபல பொறியாளர்) 1962.

15. எஸ். பாலசந்தர் (வீணை வித்வான் மற்றும் நடிகர்) 1990.

17. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (முன்னாள் பாரத குடியரசுத் தலைவர்) 1975.

23. சத்யஜித் ரே (பிரபல வங்காளத் திரைப்பட இயக்குநர்) 1992.

26. ஸ்ரீநிவாச ராமானுஜன் (கணிதமேதை) 1920.

 

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாட்கள்

1-4-1912 – இந்தியாவின் தலைநகரமாக புது தில்லி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கல்கத்தா இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வந்தது.

1-4-1936 – ஒரிசா மாநிலம் -ஆங்கிலேயர் ஆட்சியில் (பிஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு) உருவாக்கப்பட்டது. 1935-ம் ஆண்டு இதற்கான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறியது. (ஒத்ர விஷயா என்ற சமஸ்கிருத சொற்களைக் கொண்ட ஒரிசா என்ற பெயர் உருவாக்கப்பட்டது. தற்போது ஒடிசா என்று மாற்றப்பட்டுள்ளது)

1-4-1956 – இந்தியக் கம்பெனிகள் சட்டம் அமலாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கம்பெனிகளை நிறுவுதல், பண உதவி செய்தல், நடத்துதல் மற்றும் அவசியமானால் தொழில் நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.

2-4-1970 – மேகாலயா மாநிலம் – அஸ்ஸôம் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

6-4-1930 – ஆங்கிலேயர்களின் உப்பு சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டங்களில் ஒன்று தண்டி யாத்திரை.

6-4-1942 – ஜப்பான் விமானப் படை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது இந்தியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

12-4-1978 – இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ரெயில் பம்பாயிலுள்ள விக்டோரியா டெர்மினஸ் – புனே இடையில் தனது முதல் பயணத்தைத் துவக்கியது. இந்த ரெயிலின் பெயர் ஜனதா எக்ஸ்பிரஸ்.

13-4-1919 – ஜாலியன் வாலா பாக் படுகொலை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் துக்ககரமான சம்பவம். அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கூடியிருந்த மக்களின் மீது ஆங்கிலேய அதிகாரி டயர் என்பவர் 50 காவலர்களோடு நடத்திய துப்பாக்கிசூட்டில் 389 பேர் கொல்லப்பட்டனர். 1,516 பேர் காயமுற்றனர்.

13-4-1948 – ஒரிசா மாநிலத்தின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டிலிருந்து ஒரிசாவின் தலைநகராக கட்டாக் இருந்தது.

15-4-1952 – இமாசலப் பிரதேசம் (இந்திய யூனியன் பிரதேசம்) உருவாக்கப்பட்ட நாள். 30 சிறிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இமாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

17-4-1952 – இந்தியாவின் முதல் மக்களவை (லோக் சபா) அமையப்பெற்றது. அனந்தசயனம் அய்யங்கார் முதல் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18-4-1991 – இந்தியாவிலேயே முழுவதும் கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது. கணக்கெடுக்கின்படி கேரளாவின் கல்வியறிவு விகிதம் 93.91 சதவீதம். மிசோரம் மாநிலம் இரண்டாவதாக உள்ளது. அதன் கல்வியறிவு விகிதம் 91.58 சதவீதம்.

19-4-1975 – இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. (ரஷியாவின் உதவியோடு இது விண்ணில் ஏவப்பட்டது)

25-4-1982 – தூர்தர்ஷன் முதல்முதலாக வண்ணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. (15-9-1959-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் புது தில்லியில் அரை மணி நேர (வாரத்தில் மூன்று நாட்கள்) ஒளிபரப்பாக இந்திய தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்)

30-4-1998 – சமூக சேவகரான அன்னா ஹசாரேவுக்கு கேர் (இஅதஉ) அமைப்பின் சார்பாக அகில உலக மக்கள் நல விருது வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

01.   உத்கல் திவாஸ் (ஒடிசா தினம்)

02.   ஆடிசம் (அறிவுத்திறன் குறைபாடு) விழிப்புணர்வு தினம்

07.   உடல் நல தினம்

18.   பாரம்பரிய தினம்

22.   உலக நாள்

23.   நூல் மற்றும் காப்புரிமை தினம்

25.   மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்

28.   பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்

28.   உலகத் தொழிலாளர்கள் நினைவு தினம்

29.   உலக நடன தினம்

 

நன்றி – தினமணி சிறுவர்மணி (31-3-12)

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: