~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for மே, 2012

கோடை குவளை…

நாற்சந்தி கூவல் – ௬௫(65)

(தண்ணீர்ப் பதிவு)

கோடை குவளை…

தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுப்பது தமிழர் பண்பாடு. இன்றைய கலாச்சாரத்தில் நாம் இதை செய்ய {வேண்டுமென்றே} மறுக்கிறோம், மறக்கிறோம். மாறுங்கள்…

சுட்டெரிக்கும் கோடை காலம், அக்னி நட்சத்திரம். வெளியில் சென்றால், வெயிலில் நடந்தால், தலை சுத்தும் அளவுக்கு எங்கும் தனியா வெப்பம். ஒதுங்கி நிற்க, நிழல் கொடுக்கக் கூட மரங்கள் இல்லாத அவலம். தண்ணீர் மட்டுமே நமது தோழனாகிறது.

நாம் மட்டும் குடித்து, குளிரிந்து, மகிழ்ந்தால் போதுமா? கொஞ்சம் இறக்கம் கொள்ளுங்கள். மனதின் ஈரத்துடன், பறவைகளின் தாகத்தை தனியிங்கள்.

{ இப்பொழுது தான், எம் வீடு பால்கனியில், ஒரு குவளை தண்ணீர் வைத்து விட்டு வந்து இந்த பதிவை எழுதுகிறேன் }

உங்கள் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். இந்த ஊரில் குருவிகளோ, கிளிகளோ அல்லது வேறு பறவைகளோ உள்ளனவா? அப்படி இருந்தாலும் இந்த தண்ணீரை தேடி வந்து குடிக்குமா?

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லுகிறார் : “வேலையை செய், பலனை எதிர்பார்க்காதே” . இதுதான் கீதா சாரமமும் கூட.

நீங்கள் தண்ணீர் வையுங்கள். மன நிம்மதி, திருப்பதி அடையுங்கள். தினமும் இதே நம்பிக்கையுடன் வையுங்கள் “இதனால், பறவைகள் நன்மை அடையட்டுமாகுக“. நிச்சியம் நீங்கள் வைத்து நீருக்கு ஒரு குருவியேனும் வரும்.

நீங்களும் செய்யுங்கள். நண்பர்களையும் செய்ய சொல்லுங்கள்.

நல்லதை யார் சொன்னாலும் கேட்ப்பது தான் உயர் பண்பு!!!

லோகா சமஸ்தா சுகினோ பவந்து” – வேதம்

நாற்சந்தி நன்றிகள் : என்னை இப்படி சிந்திக்க தூண்டிய இந்த படம் – ‘பேஸ்புக்’கில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டது. முகவரி

எத்தனை, எத்தனை….

நாற்சந்தி கூவல் – ௬௪ (64)

(அறிக்கைப் பதிவு)

எத்தனை, எத்தனை….

நாற்சந்தி கடந்த சில மாதங்களாக நன்கு இயங்கி வருகிறது, என்பது என் நம்பிக்கை. ஒரு சில வாரங்களுக்கு முன் ஒரு தமிழ் அன்பரை, நண்பரை சந்தித்து, பேசினேன். நானும் நாற்சந்தியும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள்.

 

என்னுடைய எழுத்து முயற்சி அனைத்தயும் படித்து, அவருக்கு சரியன  படும் கருத்துகளை சட்டென சொல்லுவார். சில சமயங்களில் அது எனக்கு வேப்பம் கொழுந்தாக அமையும், என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமோ. ‘தமிழ்’ குறை கண்டு பிடிப்பதில் வல்லவர். கல்கிக்கு ராஜாஜி போல எனக்கு அவர். (கல்கிக்கு டீ.கே.சி போல எனக்கு யாரோ? தேடலில் உள்ளேன்)  நான் எழுத்தும் தப்பு தப்பான தமிழை சகிக்க முடியவில்லை, அவரால். ஒரு அறிவிப்பு போட சொன்னார். செய்து விட்டேன்.

 

எனவே இந்த நாற்சந்தியின் தலை பாகத்தில் போட்டுள்ளேன். கந்த சஷ்டி கவசத்தில் வரும் வரிகள். ‘எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்’ . தமிழின் தனி கடவுள், தமிழரின் துயர் துடைக்கும் தெய்வம் ‘முருகன் ‘. இந்த அறிவிப்பை படித்து விட்டு, முருக பெருமாள் போல என் அன்பு வாசகர்களும், என் அத்தனை குறைகளை  மன்னிக்க வேண்டுகிறேன். (அதே போல குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்).

மன்னிக்க தெரிந்தவன் மனிதன்,

மன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனிதன்!!!

 

ரொம்ப நாள்  கழித்து ஒரு ஆசை , ஆங்கிலத்தில் பதிவு எழுத வேண்டும் என்று. எனவே சற்றும் யோசிக்காமல் இறங்கி விட்டேன். CNERD . முகவரி : www.cnerd.wordpress.com . நேரம் இருந்தால் சென்று பார்த்து பயன் அடையுங்கள்.

 

நாற்சந்தியை நம்பியுள்ள,

ஓஜஸ் 😉

தந்தையின் தன்மை…

நாற்சந்தி கூவல் – ௬௩ (63)

(கடிதப் பதிவு)

தந்தையின் தன்மை…

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்:

 • தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
 • வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்
 • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
 • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
 • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
 • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
 • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

(நாற்சந்தி நன்றிகள் : இந்த கடிதத்தை ‘பேஸ்புக்’கில் பகிர்ந்து கொண்டவர்களுக்கு )

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த கடிதத்தில் உள்ள ஒரு சிறு காமெடி என்னவென்றால், லிங்கன் தன் மகனை துவக்கப் பள்ளியில் சேர்ந்ததால், அவனுக்கு இது எல்லாம் சொன்னால் புரியாது என்று ஆசிரியருக்கு எழுதினார்.

இதவே அவன் கல்லூரி செல்லும் பொழுது அவனுக்கே எழுதி இருந்தால், அது இக்காலத்து அட்வைஸ் போல அமைந்திருக்கும், என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒவ்வொரு தந்தையும் தம் குழந்தைகளிடத்தில் இது போல சில நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது தான் தந்தையின் தன்மை. தம்மிடம் இல்லா விட்டாலும், தம் மக்களிடத்தில் இந்த குணங்களை வளர்க அவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள் என்பதே நிதர்சனம். அவர்களுடைய கனவுகளை (முடிந்த வரை) நிறைவேற்றுவது நம் கடமை அல்லவோ?

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதில் இருந்து நாம் அனைவரும் சில பாடங்களை கற்க வேண்டும் . நீங்கள் எந்த வகையோ, அதற்கு ஏற்ப படியுங்கள். நான் ஒரு  _______________ :

 1. ஆசிரியர் : உங்கள் மாணவர்களிடத்தில் மேலே உள்ள திறமைகளை வளருங்கள் (முயற்சி ஆவது செய்யுங்கள்)
 2. மாணவன்  : உங்கள் மாணவ பருவத்தில் ஆசிரியர் / பெற்றோர்  உதவியுடனோ இல்லாமலோ நீங்கள் கற்று கொள்ள வேண்டிய பண்புகளின் பட்டியல். காலம் ஓடுகிறது, வேகமாக செயல் படுங்கள்.
 3. சாதாரண மனிதன் : வாழ்கையில் (பள்ளி/கல்லூரி ) கல்வி என்னும் கட்டத்தை கடந்து வந்தவர்கள். அனுபவத்தால் நீங்கள் சிலவற்றை கற்று இருக்கலாம். மேலே உள்ளதையும் புரிந்து கொண்டு மேன்மை அடையுங்கள். எதையும் துவங்க இது தான் நல்ல நேரம்.

இதை எல்லாம் உங்களுக்கு நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் வளர வேண்டும். ஒருநாள் யாராவது என்னிடம் ‘இந்த பதிவில் உள்ளது போல என்னத்தை வளர்த்து கொண்டாய்
என்று கேட்டால்’, சொல்வதற்காகவாவது எதையாவது கற்பேன் ஆகுக.

பொன்னியின் படங்கள்

(பொன்னியின் செல்வன் முழுமையாக படித்தவர்களுக்கு மட்டும்)

நாற்சந்தி கூவல் – ௬௨(62)
(படப் பதிவு)

சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன் திரு.கே.ஆர்.எஸ் அவர்கள் கீச்சிய சில பொன்னியின் செல்வன் படங்களின் ட்வீட்ஸ் தொகுப்பு.

அவருடைய ட்விட்டர் கணக்கு : https://twitter.com/#!/kryes

அவருடைய ப்ளாக்:  மாதவி பந்தல் –  தமிழ் பக்தி சொட்டும் பதிவு

நாற்சந்தி நன்றிகள் : நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர்  (கே.ஆர்.எஸ்)

ட்விட்டர் மேலாண்மை…

140ல் நமக்கு கிடைத்த வரம் “ட்விட்டர்”. நாம் பலரை பின்பற்றி அவர்களது கீச்சுகளை படித்து மகிழ்கிறோம். ஒரு சிலர் நாம் எழுதுவதை தெரிந்து கொண்டு பயன் பெருகின்றனர். இந்த பாலோவர் மற்றும் அன்-பாலோவர் மேலாண்மைக்கு உதவும் சில தளங்கள் பற்றி கூற, ஒரு சிறு முயற்சி இப்பதிவு.

குறிப்பாக நாம் ஐந்து இணையதளங்களை பற்றி பார்ப்போம். இவை அனைத்தையும் உங்கள் ட்விட்டர் அகௌன்ட் கொண்டே பயன்படுத்த முடியும். இதன் உதவியுடன் நீங்கள் எளிதில் பாலோ மற்றும் அன்-பாலோ செய்யலாம்.

இதற்கு முன், பின்வரும் சில சொற்களை அறிந்து கொள்வது அவசியம்.

பான்ஸ் (விசிறி) – உங்களை பாலோ செய்பவர்கள், நீங்கள் அவர்களை பின்தொடர்வது இல்லை.

நான்-பாலோவர்ஸ் (நோ.பா)- நீங்கள் இவர்களை படிக்க, அவர்கள் உங்களை பாலோ பண்ண வில்லை.

 1. JustUnFollow – நான்கு வசதிகளை தரும் தளம். அவை அனைத்தும் பட்டியல்கள் – விசிறிகள், நோ.பா, அணைத்து பாலோவர்ஸ், தூங்கும் பாலோவர்ஸ் (கடைசி 1/3/6 மாதங்களாக கீச்சாதவர்கள்). இந்த நபர்கள் அனைவரையும் நீங்கள், இங்கு இருந்தே பாலோ மற்றும் அன்-பாலோ செய்யலாம்.
 2. ReFollow – இந்த ஐந்தில் சிறந்தது. பல தேடல் வசதி கொண்டது. நாம் சில அழகான பட்டியல்கள் செய்யலாம். நம்மை மென்ஷன் செய்தவர்களை காணலாம். ஒரு பக்கத்தில் அனைவரின் கடைசி ட்வீட்களையும் காணலாம். ட்வீட் எண்ணிக்கை கொண்டு பட்டியல் போடலாம். லாக் மற்றும் பிளாக் வசதி கொண்டது. இதில் உள்ள தேடல் கருவியை பயன்படுத்தி பார்த்து உணரவும்.
 3. fllwrs.com – பெயரை போல தளம். இரண்டே பகுதிகள். கிடைக்பெற்ற பாலோவர்ஸ், நம்மை கைவிட்ட பாலோவர்ஸ். அவர்களுடைய பெயர், படம், பாலோவர் மற்றும் பாலோவிங் எண்ணிக்கை, ட்விட்டரரில் சேர்ந்த தேதி, நம்மை பின்தொடர்ந்த/கைவிட்ட தேதி காட்டும் தளம் இது. நம்மை அன்-பாலோ செய்தவரின் பெயரை உடனுக்குடன் ஒரு ட்வீட் (நாம் கணக்கில்) போடும் தான்-இயங்கி. அம்சமான பாலோவர்/அன்- பாலோவர் வரலாற்று ஏடு இது.
 4. ManageFlitter – இங்கு நாம் நேரிடியாக கீச்சுகளை படிக்கலாம். பாலோவிங் தேதி வாரியாக படிக்கலாம். அனைவரின் ட்வீட்/நாள், பாலோவர்/அன்- பாலோவர் எண்ணிக்கை, சேர்ந்து எவ்வளவு நாள் போன்றவற்றை காண்பிக்கிறது. (என்னை போல) ரொம்ப கீசுபர்வர்களை “டாக்கடிவ்” என்றும், சிலரை “குவையட்” என்றும் குறி போட்டு காட்டுது. அதை தவிர அகர வரிசையில், பாலோ கவுன்ட், பாலோ தேதி என்று பல வழிகளில் நாம் வட்டத்தில் உள்ளவர்களின் கீச்சுகளை படிக்கலாம்.
 5. TwerpScan – ட்விட்டர் 140 என்கிறது, இத்தளம் 100 என்கிறது. அதாவது ஒரு நேரத்தில் 100 பாலோவர்/அன்- பாலோவர் பட்டியல் மட்டும் காட்டும். டிரில்-டவுன் என்னும் வசதி நன்று. படம், கணக்கு பெயர், பெயர், பாலோவர்/அன்- பாலோவர் எண்ணிக்கை, நமக்கும் அவர்களுக்கும் உள்ள ரேஷியோ, கடைசி தீட்டிய தேதி என அழகாக கட்டம் கட்டி விளையாட்டு காடும் தளம்.

என் கருத்து: பாலோவர்/அன்- பாலோவர்/ட்வீட் எண்ணிக்கை வைத்து யாரையும் மதிப்பிட வேண்டம். அது போல இந்த மூன்று எண்களையும் மறந்து நல்லவற்றை கீச்சுதல்/மீள்-கீச்சுவது நன்மை. இதுவே மகிழ்ச்சி, அறிவை, நட்பை பெருக்கும் வழி. ஆனால் இன்று வரை எனக்கு எதற்கு இந்த 100 சொச்சம் பேர் பலோவர்ஸோ, தெரியல….

(ட்விட்டரில் ஒரு நண்பர் கேட்டதன் பேரில், போன அக்டோபர் மாதம் இந்த பதிவை எழுதினேன். ஏனோ அவர் கூறியது போல், (இன்றை வரை) அந்த தளத்தில், இது வெளிவரவில்லை. அதனால் என்ன நீங்கள் படியுங்கள், பயன்படுங்கள்)

வாஞ்சிநாதன்….

நாற்சந்தி கூவல் – ௬0(60)

(லிங்க் பதிவு)

வாஞ்சிநாதன்….

வணக்கம். உங்களை சந்தித்து பல நாட்கள் ஆகி விட்டது. என்ன செய்ய திங்கவும் தூங்கவுமே பாதி நேரம்  போய் விடுகிறது, இதில் இந்த பொல்லாத சோம்பேறித்தனம் வேற….. என் சொந்த (சோகக்) கதை இங்கு எதற்கு…. சரி, விஷயத்துக்கு வருவோம்.

மேலே சொன்ன இத்யாதி வேலைகள் போக, மிச்சம் கிட்டும் வேளைகளில், கையில் கிடைக்கும் எதையும் படிக்கும் கிறுக்கன் நான். (அந்த கடலை மடித்த பேப்பர் உள்பட). இந்த வகையில் இணையம் ஒரு வளரும் பொக்கிஷமாக உள்ளது. படிக்க படிக்க பல அருமையா பண்டங்கள தட்டுப்படுகின்றன. அதில் பலவன அரசில், மற்றும் சினிமா சார்ந்தவை என்பதை உங்களுக்கு  சொல்லி தான் தெரிய வேண்டுமா. இதையும் தாண்டி பல எழுச்சி மிக்க, சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் உள்ளன, என்பதே நிதர்சனம். ஆனாலும்,  தமிழில் இது போன்றவை சற்று குறைவு தான்.

அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த தளம், நான் அடிக்கடி ஆர்வமுடன் சென்று பார்க்கும் தமிழ் தளம் “தமிழ் பேப்பர்“. இதை சிறப்பாக நடத்தி வரும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் பாராட்டுகள். அதன் ஆசிரியர் மருதனுக்கு, என் சிறப்பு வாழ்த்துகள்.

சில நாட்களுக்கு முன் தமிழ் பேப்பரில் ஒரு (பெரிய) கட்டுரை படித்தேன். அதனுடைய லிங்கை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. 102 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் நிஜ படம். சுதந்திர போராட்டத்தில் தமிழர் செய்த வீர வேள்வி பற்றியது.  கண்டிப்பாக இதனை படியுங்கள். நேரம் இருந்தால் இந்த பதிவின் மீதியையும் படியுங்கள்.

ஆஷ் கொலை வழக்கு – பாகம் 1

ஆஷ் கொலை வழக்கு – பாகம் 2

Vanjinathan with his friends

ஏனோ இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த உடன் ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது. இதற்கான காரணம் விளங்கவில்லை. ஒரு வசாகனுக்கு கிடைக்கும் பரிசு இது தானோ….

என்றோ, எங்கோ, எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்து ஒரு விஷயத்தை ,இவ்வளவு அழகாக விவரிக்க முடியமா? உங்கள் எழுத்தாளுமை அபாரம் திரு.S.P.சொக்கலிங்கம் அவர்களே. நீங்கள் ஒரு வழக்கறிஞர் என நான் நம்புகிறேன். இன்று முதல் உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒருவன். உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இது போல சுதந்திரம் சார்ந்த, அரசியல் வழக்குகள் பல உள்ளன, எங்களுக்காக அதையும் (நேரம் கிடைக்கும் பொழுது) படித்து எழுதுங்கள். உங்கள் பணியும், எழுத்தும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள். (சொக்கலிங்கம் அவர்களின் சில படைப்புகள்)

கடந்த சில மாதங்களாக, சில நல்ல நூல்களின் வாயிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி, நேரு, சாவர்கர், வி.வி.எஸ் ஐயர், வ.உ.சி  போன்றவர்களை பற்றி படித்து வருகிறேன். இவர்களை பற்றி ஒரு முழுமையான அறிமுக வரைபடத்தை தந்துள்ளது இந்த ‘ஆஷ் கொலை வழக்கு’. வாஞ்சிநாதனை பற்றி கேள்விப் பட்டுள்ளேன், ஆனால் இது போல விரிவாக படித்ததில்லை.  தொடர்ந்து படிக்க ஆசை.

அடுத்து வரும் பதிவுகளில் சுதந்திர மனம் கமலும் . அந்தமானில் சிறையில் சாவர்கர் இருந்து. பெல்லாரி சிறையில் வி.வி.எஸ்.ஐயர் எழுதிய கம்ப ராமாயண நூல். ச்விஸர்லாந்தில் சுபாஷ் போஸ். காங்கிரஸில் நேரு குடும்பம். காந்தியின் அரசியல் ராஜா தந்திரம். ஜின்னா என்னும் காந்தியின் எதிரி. இந்தியன் நேஷனல் ஆர்மி. ராஜாஜி என்னும் சக்கரவர்த்தி. சவர்கரும் கோட்சேவும்………………… போன்ற பல விஷியங்களை பற்றி பேசுவோம். இந்த துறையில் எனக்கும்  ஊக்கமூட்டி , புத்தங்களும் கொடுத்து படிக்க உதவும் மதுரை ராமாயண ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம். நான் எழுத்தும் அதே தமிழ் மொழியை கொண்டு தான் சொக்கலிங்கம்  அவர்களும் எழுதுயுள்ளார். ஆனால் என்ன ஒரு கோர்வை, நேர்த்தி, நடை மற்றும் செய்திகளை சரியாக அழகாக வருசையாக சொல்லும் திறன். ஒன்னு எனக்கு தமிழ் சரியா வரவில்லை. அல்லது தேர்ச்சி போதவில்லை. அல்லது எனக்கு அழகாக எழுத வராது போலும்….. என்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். தமிழ் தாய் தான் என் பிழைகளையும் பொறுத்து, என்னையும் காத்தருள வேண்டும். நீங்களும்தான்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!!!

இந்தியன்,

ஒஜஸ்

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: