~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௭௮(78)

(கல்கிப் பதிவு)

கல்கி கந்தன் கவி

எப்பொழுதும் போல காலையில்,சந்தில் (அதாங்க ட்விட்டர்ல) சுத்தி கொண்டு இருந்த பொழுது தான் தெரிய வந்தது இன்று என் எழுத்துலக ஆசானுக்கு பிறந்தநாள் என்று. நண்பர் தமிழ் “எதும் சிறப்பு பதவு உண்டா…” என்று வினவினார். அது வரை எந்த ஏற்பாடும் இல்லை. ஏனெனில் : பிறப்பின் போதே பெரும் பேறுடன் பிறந்தவர்களை தான் ஜென்ம தினத்தன்று போற்றுவது உண்டு. (எ-டு) ஆதிசங்கரர், ராமர் – நவமி, கிருஷ்ணர் – அஷ்டமி. பிறந்த பிறகு,இறவா புகழுடன், இந்த உலகத்தில் தமது முத்தரை படைதவர்களை, ஜெயந்தி அன்று போற்றுவது தான் மரபு (எ-டு) தியாகராஜர் – ஆராதனை , காந்தி – ஜெயந்தி

இருந்தாலும் கல்கி மிகவும் பெரியவர். எனக்கு மிகவும் பிடித்தமானவர். எனவே கல்கி என்னும் கவிஞனை உங்களுக்கு அறிமுப்படுத்த ஆசி எழுந்தது. இதோ இந்த பதிவு.

கல்கிக்கு : எழுத்து, இசை , நடனம், அரசியல், இலக்கணம், இலக்கியம் என பல பல  பரிமாணங்கள் உண்டு. அதிலும் சிறப்பாக அவர் கவிதை எழுதுவதில் வல்லவர். பொன்னியின் செல்வனில், பூங்குழலி பாடும் – சோகம் மற்றும் உற்சாகம் என இரண்டு தொனியில் வரும் “அலைக் கடல்…” கவிதைகளை ரசிக்காதவர்கள், இந்த வையத்தில் இல்லை. பாரதி என்னும் தீயை தமிழகத்தில் பரப்பிய பெருமை கல்கி அவர்களுக்கு உண்டு. எட்டையபுரத்தில் பாரதி மணி மண்டபம் எழ அவர் தான் காரணக்கர்த்தா. எம்.எஸ் அம்மாவை தமிழில் பாட தூண்டி, பல பாடல்கள் கற்பித்து, தானும் சிலவற்றை எழுதி தந்தவர் கல்கி.

தமிழ் தனி கடவுள் முருகன். அது போல கல்கிக்கு பிடித்த கடவுள் முருகன். கந்தன் மேல் அவர் பாடிய கவி :

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்.

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன இன்மொழி பகர்ந்தொரு
மின்னலைப் போலே மறைந்தான்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில் இனிமை கண்டேன்

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னை மறவான்
பேரருளாளன் எனக்கருள்வான் எனும்
பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்
பேரருளாளன் எனக்கருள்வான் எனும்
பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

படித்தால் மட்டுமே புரியும்,  ஆனாலும் நித்யஸ்ரீ மகாதேவன் பாடியதை கேளுங்கள், மெய்மறந்து முருகனை சிந்திப்பீர்கள்.

[மன்னிக்கவும், எனக்கு ராகம் தாளம் எல்லாம் எதுவம் தெரியாது. அதனால் அவைகளை பற்றி சொல்ல வில்லை ]

பாடலைக் கேட்கும் பொழுது, பல வரிகளின் அழகை நீங்கள் ரசித்து இருக்க வேண்டும். அந்த அழகை சொல்லும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. மறுபடியும் ஒரு முறை கேளுங்கள். பதிவிறக்கி, பகிர்ந்து, கேட்டு மகிழுங்கள்.

இந்த பாடலை கேட்டு, எனக்காக இந்த வரிகளை, அச்சில் தந்த தோழன் தமிழ் அவர்களுக்கு என் நன்றிகள். மேலும் இந்த பாடலை பற்றி அவருடைய கருத்து :

“மிக எதேச்சையாக இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. நான் கேட்டதைவிட இந்த பாடல் வரிகளை நானே மீண்டும் எழுதுகையில் பரவசம் பெற்றேன். ஏனென்றால் தினமும் 10-20 திரைப்பாடல்களை மட்டுமே கேட்கும் நான், முற்றிலும் தமிழில் இனிய வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட இந்த பாமாலையை ரசித்ததில் ஆச்சர்யமேதுமில்லை. அதே அனுபவம்தான். 6 நிமிடப் பாடல்களுக்கான எந்தவித தேவையுமில்லாது குறைந்த பாடல் வரிகளை பாடகி நித்யஸ்ரீ அவர்கள் மதுரக் குரலில் பாடிக் களிப்பூட்டுகிறார்.
வாய்ப்பைத் தந்தமைக்கு அண்ணன் ஓஜஸ்-க்கு நன்றிகள்.”

ஒரு முறை கல்கி அவர்கள் மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரை பார்க்க வந்த மகள் ஆனந்தியிடம் சில தமிழ் பாடல்கள் பாட சொல்லி கேட்க, அந்த குழந்தை சில அருமையான பாடல்கள் பாடியது. பின் தான் எழுதிய பாடல்களை பாட சொன்னார் கல்கி, அதிலும் குறிப்பாக தான் எழுதி கந்தன் கவிதைகளை பாட சொல்லி செவி மடுத்து மகிழ்ந்தார். (ஆதாரம் – கல்கி நினைவுகள் – பகிரதன்). அதில் இந்த பாடலும் இடம் பிடித்து இருக்கக் கூடம் என எனக்கு தோன்றுகிறது.

இது போல கல்கி எத்தனை எத்தனை அரிய, அழகிய தமிழ் பாடல்கள் புனைந்துள்ளார் என்பதை நான் அறியேன். சிலவற்றை சேர்த்து வைத்துள்ளேன், விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு கல்கி பாடல்கள் எதும் தெரிந்த இருக்கும் பட்சத்தில் பின்னூட்டம் இடுங்கள். அதை பற்றியும் பேசுவோம்.

தமிழ் தாய்க்கு என்னை பொன்னியின் செல்வன் மூலம் அறிமுக படுத்திய தவப்புதல்வன் கல்கி அவர்களின் பிறந்தநாள் இன்று!!! காலம் இருக்கும் வரை கல்கி புகழ் வாழ்க.

கல்கியின் அனைத்து படைப்புகளையும் பதிவிறக்க http://www.mediafire.com/?m1cuhl7n6d2lua1

நாற்சந்தி நன்றிகள் – தமிழ் தம்பி (வரிகளுக்கு) மற்றும் கண்ணபிரான் (கந்தன் படத்துக்கு)

Comments on: "கல்கி – கந்தன் கவி" (3)

 1. கல்கியின் கவிதைகளில், எனக்கு மிகவும் பிடித்த என் முருகன் பாடல்:), அதே சமயம், அவன் மேல் கோவம் தூண்டும் பாடல்!:))

  பின்னே, முருகன் வந்து மின்னலாய் மறைஞ்சான் -ன்னா, கோவம் வராம என்னவாம்?
  ஒரேயொரு புன்னகை, ஒரேயொரு இன்மொழி = போதுமா எனக்கு?
  ———————–

  பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
  வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
  தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
  தனிமையில் இனிமை கண்டேன்

  * மணத்தை முகரத் தான் முடியும் = கண்டேன் -ன்னு சொல்லுறாரு!
  * வண்ணத்தைக் காணலாம் = சரியே!
  * சுவையைச் சுவைக்கத் தானே முடியும்? = தீஞ்சுவை கண்டேன் -ன்னு சொல்லுறாரே?
  கல்கியின் தமிழறிவு அவ்ளோ தானா?:))

  அடுத்த அடியில் இருக்கு விடை!
  = தனிமையில் இனிமை கண்டேன்
  ———————–

  முருகன் வந்து மின்னலாய் மறைஞ்சதில், தனிமை வந்துருச்சி, என் உடம்பெல்லாம், மனசெல்லாம் = அவனே!
  அதனால், கற்பனையில் எல்லாமே அவனாவே தெரியுது… அவன் வாசம், அவன் சுவை -ன்னு நானாவே “காண்கிறேன்”!

  அவன் இல்லை! அதனால் அவை இல்லை!
  இருந்தாலும் “காண்கிறேன்” – கனவு!
  அதான் “கண்டேன்” -ன்னு போடுறாரு!:))

  Like

 2. பாவி முருகா
  ஒன்னையே நினைச்சிப் பாழாப் போயிருவேனோ? வெறும் கனவாப் போயீருமோ?

  இல்லை!
  அதான் அடுத்த பத்தி, நம்பிக்கையூட்டும் பத்தி! முத்தைத் தரு பத்தி!

  “வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
  வள்ளி மணாளன் என்னை மறவான்”

  – வருவான்!
  – வந்து, மீண்டும் மறைவானோ?
  – ஆனா மறவான்!
  – மீண்டும் வருவான்!
  – இப்படி வந்து வந்து, என்னுடன் விளையாடும் கந்தன், என் சொந்தன்!
  பெருமிதத்தால் மெய்மறந்தேன்…

  பூங்குயில் கூவும் பூஞ்சோலை
  மாமயில் மீது மாயமாய்… மாயோன் மருகன், என் மேனியின் பருகன்,
  வருவான் வருவான் வருவான்!

  வரவர வேலா-யுதனார் வருக!
  வருக வருக மயிலோன் வருக!

  Like

 3. முருகு என்ற சொல்லுக்கே அழகு என்றுதான் பொருள். எதையும் அழகுறச் செய்யும் கல்கி அவர்கள் கவிதைக்கு முருகனைப் பாடு பொருளாகக் கொண்டதில் வியப்பேதுமில்லை. எளிய வரிகள், பாமரர்க்கும் புரியும் சொற்கள், ஆழ்ந்த பொருள்.

  நித்யஸ்ரீ மகாதேவனின் குரல் அற்புதமாகச் சஞ்சாரம் பண்ணுகிறது தெள்ளுதமிழ் வரிகளில். இதுபோல் கவிதைகள், பாடல்கள், இசை ஆகியனவற்றைப் பற்றி பதிவெழுதும் உங்களுக்கும் உங்களுக்கு உதவியோருக்கும் எம் நன்றிகள். இதுபோல் மேலும் பல நல்ல பாடல்களைப் பற்றி எழுதுவதற்கு நான் வணங்கும் பழனி தண்டபாணியின் அருள் சித்திக்கட்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: