~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௭௯(79)

(அண்ணாப் பதிவு)

தமிழ் அண்ணா…

இன்று அறிஞர்  (காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை)அண்ணா அவர்களின் பிறந்தநாள். அவர் வழி வந்த தமிழ் கட்சிகள் தான் இன்று வரை ஆட்சி பீடத்தில் உள்ளது. இது பற்றி சிறு கவலைகளும், புகார்களும், கண்டனங்களும் எனக்கு உண்டு. ஆனாலும் மறுக்க , மறக்க முடியாத உண்மை அவர் ஓர் “அறிஞர்”. எனவே அவரை போற்றுதல் தவறு அல்ல, என்பது என் கருத்து.

செய்தி : 1

சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது!

அப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.

உடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.

காலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா!

செய்தி : 2

அறிஞர் அண்ணா, பொது வாழ்க்கையில் ஈடுபட்ட 35 ஆண்டுகளில் அவர் பேசியவை, எழுதியவை ஏராளம். அவை :-
   சொற்பொழிவுகள் – 12775
கட்டுரைகள் – 1960
சிறுகதைகள் – 120
நவீனங்கள் – 36
ஓரங்க நாடங்கள் – 60
கவிதைகள் – 63
கடிதங்கள் – 290
ஆங்கிலக் கட்டுரைகள் – 350
ஆங்கிலக் கடிதங்கள் – 1000
ஆங்கிலச் சொற்பொழிவுகள் – 350

நாற்சந்தி நன்றிகள் : தினமணி – சிறுவர்மணி (03.09.11) & (15.09.12)

பி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் ‘Anna’ என்று தேடல் செய்தேன். ‘அண்ணா ஹசாரே’ படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, ‘Annadurai’ தேடல். அப்பொழுதும் சந்திராயன் ‘அண்ணாதுரை’ வந்தார். கடைசியில் பெரியார் மற்றும் பலருடன் சிக்கினார் அறிஞர்!!!

-> அண்ணா பற்றிய தமிழ் தம்பி எழுதிய பதவு – சொடுக்கவும்

Advertisements

Comments on: "தமிழ் அண்ணா!!!" (4)

  1. Ariya karuthukaluku nandri….

    Like

  2. தமிழ் said:

    நல்ல பதிவு. ஆனால் ஏன் இவ்வளவு சிறிதாக எழுதி இருக்கிறாய்? கொஞ்சம் அதிகம் எழுதியிருக்கலாமே?

    Like

    • தமிழ் தம்பி,

      அது எல்லாம் உன்ன மாதிரி பிளான் செய்பவர்களுக்கு, எப்பொழுதும் போல, இன்றும் இது ஒரு இன்ஸ்டன்ட் பதவு. சோ கொஞ்சம் தான் முடிந்தது. நேரம் வேறு இல்லை. அதை தவிர ‘அண்ணாவை’ பற்றி எனக்கு என்ன தெரியும் !?!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: