~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for ஒக்ரோபர், 2012

கம்பன் கேள்விகள் ?

நாற்சந்தி கூவல் – ௮௨ (82)

(கம்பன் பதிவு)

கம்பன் கேள்விகள் ?

கம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.

Kambar Image from the web

கம்பர் – இணையப் படம்

அந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே ?

அதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.

மேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.

ஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு ?

1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே! இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.

மேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.

வானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் ?

வெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.

மேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்!!!

மேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.

இலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா ? இலக்குவன் பெயர் காரணம் ?

இல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.

மேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.

சொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana –  Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”

இந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.

மேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்!

வெற்றி விஜயம்

நாற்சந்தி கூவல் – ௮௧(81)
(விஜயதசமி பதிவு)

வெற்றி விஜயம்

நவராத்திரி – சர்வ சக்திகளையும் வழிபட நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழி. இதுவே துர்கா பூஜை என்று வட மாநிங்களிலும், தசரா என்றும் கொண்டாடப் படுகிறது. பத்தாம் நாள் தான் விஜயதசமி. ராமர் தன் வன வாசத்தை வெற்றியுடன் முடித்து விட்டு அயோத்தி திரும்பிய நாள். எனவே இத்திருநாள் வெற்றி விழாவாகவே கருதப்படுகிறது.

இந்த நாளில் ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் வெற்றியில் சென்று முடியும் என்பது புராதன ஐதீகம். வரலாற்றில் இந்த நம்பிக்கை பல முறை கடைபிடிக்கப் பட்டுள்ளது. கல்கியின் ‘சிவகாமியின் சபதத்தி’ல் , நான்காம் பாகம். ஒன்பது ஆண்டு ஏற்பாட்டுக்கு பிறகு நரசிம்ம பல்லவன் தன் முழு சைனியத்துடன் போருக்கு கிளம்பிய தினம் விஜயதசமி. பழுத்த அறிஞர் ருத்ராசாரியார் குறித்து கொடுத்த நாள். ஜெய பேரிகைகள் முழங்க, காஞ்சியில் ஏகாம்பரநாதர் சன்னதியில் நரசிம்மன் மற்றும் குறுநில மன்னர்களும் இறைவனை தொழுது, வாதாபியை நோக்கி முன்னேரிப் போக, காலாற்படை, குதிரைப்படை, யானைப்படை பின் சென்றது.

நாகநந்தி என்னும் வினை செய்த விளையாட்டு, வாதாபி மன்னன் புலிகேசி அஜந்தாவில் கலை விழாவில் கூத்தடித்து கொண்டு இருந்தார், பாவம். பல்லவ சைனியம் வாதாபியை தாண்டி சென்று, அஜந்தா செல்லும் வழியிலேயே புலிகேசியை ஏதிர் கொண்டது, போரில் மாண்டு போனான் புலிகேசி. இதனை தொடர்ந்து வாதாபி முற்றுகை நடந்து. தளபதி பரஞ்சோதியின் யுக்திகளால் மாபெரும் வெற்றி கிட்டியது.

ஒருவேல வெற்றியை எதிர்பார்த்து தான் இந்த ஆப்பிள் கும்பனிகாரங்களும் ஐ-பாட் மினியை இப்பொழுது வெளியிட்டாங்களோ !!!

வெற்றி என்பது பல சமயங்களில் ஒரு RELATIVE கருத்தாக மாறி விடுகிறது. சில இடங்களில் மட்டுமே நாம் வெளிப்படையாக வெற்றியை உணர்ந்து, மகிழ்ந்து, ரசிக்க முடிகிறது. நமது பார்வையைப் பொறுத்தே வெற்றி அமைகிறது. உதாரணத்துக்கு மாணவர்களை எடுத்து கொள்வோம். சரியா படிக்க கூட வராதவனுக்கு – பாஸ் என்பதே மிக பெரும் வெற்றி. (என்னை போல) சுமார் ஜாதிக்கு – தொண்ணூறு தொட்டால் வெற்றி. இன்னும் சிலர் உளர் – வெற்றி என்பது நூறு என்னும் நச் இலக்கு மட்டுமே.

முழு வெற்றி என்பது சில இடங்களில் மட்டுமே நிதர்சனமாக உள்ளது. விளையாட்டு , யுத்தம் , சில வர்த்தக ரீதியில் விற்பனை. வெற்றி என்பது என்றும் இன்பம் தரும் என்றும் சொல்ல முடியாது. யுத்தத்தில் நம் நாடு வெற்றி அடைந்தாலும், நாம்  இழப்பது / இழந்தது அதிகம் தான்.

வெற்றி மட்டுமே நம் இலகு என்று மாறும் தருணத்தில், நாம் பலவற்றை இழக்க முயல்கிறோம். சந்தோசம், பாசம், அன்பு, பண்பு, பணம், பலம், மனிதாபி மானம் …….. இதனை இலக்கமால் கூட வெற்றிக் கனியை பறிக்க முடியம் என்பதனை நாம் அறிதல் வேண்டும். என் தந்தை அடிக்கடி சொல்வார் Hard Work பத்தாது, Intelligent Hard Work அவசியம். இது அனுபவம் கற்று தரும் பாடம்.

முயற்சி மூனையும் முட்டும்

(படிக்க தவிர்க்க)
இந்த வெற்றியை அடைவது பற்றி நான் மேலும் சொல்லப் போவது இல்லை. இதனை பற்றி தான் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது, எத்தனை வெளிவரக் காத்து கொண்டு உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். எதோ விஜயதசமி அன்று ஒரு பதிவு எழுத வேண்டும் என்று அமர்ந்தேன். கோர்வையாய்(!?!) வந்த சிந்தனைகளை தொகுத்து உள்ளேன். மத்தபடி இதில் சொல்லப்பட்டுள்ள சிலவற்றை நானே இன்னும் சிந்தித்து செயலில் கொண்டு வர வேண்டும். அதற்கு திரு அருளும், குரு அருளும் அவசியம் என்று மட்டும் புரிகிறது.

மனிதா மாறு

(படிக்க தொடர்க)
எப்படி பார்த்தாலும் நம் மனதில் தான் உள்ளது வெற்றி. நம் மனமும் அதனை நோக்கி தான் நடைப் போடுகிறது. தோல்வி என்பது, நமக்கு கிடைத்த அரிய பாடமாக, நாம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அதுவும் வெற்றியே. ஆனால் ஒன்றை மட்டும் நாம் மாறாக்கவோ மறுக்கவோ முடியாது : வெற்றி என்பது வலியோடு தான் பிறக்கும்.

ஒருவரை சிரிக்க வைப்பது கூட வெற்றி தான் என்பதை நாம் உணர்ந்தால், வாழ்வில் எந்நாளும் விஜயதசமியே வெற்றியே.

(இந்த பதிவின் வெற்றி இலக்கு என்பதை யோசிக்கிறேன்……. யோசிக்கிறேன்….. யோசிக்கிறேன்….. சத்தியமா தெரியல!)

அச்சில் ஆஸ்கர்!

நாற்சந்தி கூவல் – 80(௮௦)

( _____ப் பதிவு)

அச்சில் ஆஸ்கர்…

ஆஸ்கார் வாங்கியதுப் போல மகிழ்ச்சி, இந்த ஆஸ்கரினால்.

பேராசிரியர் பாமதிமைந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். மாதம் தோறும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் அவர் எழுதிய(ம்) சிறுகதைகள் வெளிவரும். குறிப்பாக ‘உயிர் மெய்’ என் மனதை, சிந்தையை தொட்டக் கதை. மறக்காமல் அதனைப் படியுங்கள்.

மைந்தனுக்கு, விஜயம் ஆசிரியர் மிகவும் நெருங்கிய நண்பர் . அதன் பேரில் இருவரையும் நன்கு அறிந்து, சிநேகம் செய்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்தானந்தர் அவர்கள், ஆஸ்கர் பற்றி ஒரு காணொளியை அனுப்பி வைத்தார். அதை பார்த்து விட்டு, அதை பற்றி சுருக்கமா எழுதி அனுப்ப சொன்னார். அதன் விளைவு :


(விஜயம் இலவச மின்-புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட Sanpshots இணைக்கப்பட்டுள்ளன)

அச்சில் பெயரை பார்த்து வியந்து போனேன். இது ஒன்னும் பெரும் வெற்றி அல்ல. யாரும் இவரை பற்றி எளிதாகவும், விரைவாகவும், சுலபமாகவும் சில பத்திகள் எழுத்தலாம். அத்தகு மனிதர் இந்த ஆஸ்கர். நடந்து முடிந்த லண்டன் பாரா-ஒலிம்பிக்ஸ்ஸில் கூட பல தங்கப் பதக்கங்கள் வாங்கி உள்ளார். இவரை பார்த்து நாமும் வளருவோம்!

ஏனோ பெயர் மட்டும் ‘ஓஜஸ்புத்திரன்’ என பரிசுரமாகி உள்ளது. காரணம் தெரியவில்லை. அவர்களும் சொல்ல வில்லை. ஒரு வேளை ‘ஓஜஸ்’ இடம் இருந்து இன்னும் சிற்பாக ஏதேனும் எதிர்ப்பார்த்தார்கள் போலும். இதனால் வருத்தமும் எதுவும் இல்லை. ஆனால் எழுதியது எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்பிடியே வந்துள்ளது. அது வரை மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை தந்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் ஆதரவுக்கும் ஊக்குவிப்புகும் தலை தாழ்ந்த வணக்கங்கள். நாற்சந்திக்கு நல்லப் பாராட்டுகள். நன்றி!

கல்கிக்கு மனம் கனிந்த நன்றிகள். தாயாய், தந்தையாய் நம்மை வாழ, வளர வைக்கும் கன்னி தமிழ் வாழ்கப் பல்லாண்டு!!!!

நாற்சந்தி நன்றிகள் : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மற்றும் அதன் ஆசிரியர்

( இந்த மாத – அக்டோபர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தை இலவசமாக பதிவிறக்க = சொடுக்கவும்)

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: