~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௮௨ (82)

(கம்பன் பதிவு)

கம்பன் கேள்விகள் ?

கம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.

Kambar Image from the web

கம்பர் – இணையப் படம்

அந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே ?

அதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.

மேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.

ஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு ?

1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே! இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.

மேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.

வானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் ?

வெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.

மேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்!!!

மேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.

இலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா ? இலக்குவன் பெயர் காரணம் ?

இல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.

மேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.

சொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana –  Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”

இந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.

மேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்!

Comments on: "கம்பன் கேள்விகள் ?" (13)

 1. காலாட் படை என்பதுதான் காலர் படை?

  நல்ல கேள்விகளும் பதில்களும்.

  அதை அழகாக தொகுத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றிகள்.

  Like

 2. நம்ம ராஜா பண்ணின ஊழலுக்கு எத்தனை பூஜ்யம்?

  Like

  • காலாட் படை தான் காலர் படை என்று எழுதி விட்டேன். நன்றிகள் பல

   நாற்சந்தி பொதுவாக அரசியல் பேசாது. ஆனாலும் உங்கள் கேள்விக்கு பதில், லட்சம் கோடிக்கு மேல் , அதாவது 1 76 645 00 00 000 + . மொத்தம் 12 பூஜ்யம்!

   Like

 3. நல்ல பதிவு. டிவிட்டரில் சொக்கன், ஜிரா அவர்களால் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணத்தை கையில் எடுத்து இருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் மிக பரிச்சயமில்லா கத்துக்குட்டி நான். ஒரு சந்தேகம்… விக்கியில் இராவணனை படிக்கும் போது திராவிடன் என்ற, எதிர் வினைகள் கொண்ட கருத்து தமிழ் ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது என அறிந்தேன். பிராமணனான இராவணன் திராவிடனாக/தமிழனாக இருக்க வாய்ப்புள்ளதா/ கூடாதா? இந்த கேள்வியில் எவ்வித பின் நோக்கமும் இல்லை. அறிய முற்ப்படுகிறேன். அவ்வளவே! 🙂 நன்றி.. நல்ல பகிர்வுக்கு…

  Like

  • நானும் ஓரு கத்துக்குட்டி தான்! தமிழனா என்று எனக்கு தெரிய வில்லை, பேராசிரியிரிடம் கேட்டு சொல்கிறேன்… ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ‘யார் இந்த திராவிடர்கள்’ பல பேர் பல விதமான கருத்துகளை சொல்லுறாங்க… கொஞ்சம் விளக்குங்க, அப்பறம் ராவணன் திராவிடனா என்பது பற்றி யோசிப்போம்

   Like

   • “திராவிடர்” பற்றி பல கருத்துகள் இருக்குனு நினைக்கிறேன். வட மொழி(சமஸ்கிருதம்) சாரா, அதன் கிளை மொழிகளை சார மொழியை பேசுபவர்கள், தென் இந்திய பிராந்தியர்கள் என சொல்லப்படுகிறது. திராவிடம் என்பதே ஒரு மாயை எனவும் ஒரு கருத்து உண்டாம். எனக்கு சரியாக தெரியவில்லை 😉
    வால்மீகி இராமயணத்தில் இராவணன் பேசும் மொழியென எங்கேனும் தகவல் இருக்கா?
    மேலும் ஒரு சந்தேகம் ;)… எங்கள் நாகை மாவட்ட கோடிய காடு எனும் பகுதிக்கு அருகில் இராமர் பாதம் என்ற ஒரு தளம் உள்ளது. அறிவீர்கள் என நினைக்கிறேன். அதனை பற்றிய குறிப்பு ஏதேனும் உள்ளதா? முடிந்தால் பேராசிரியரிடம் கேட்டு சொல்லவும். மெனக்கெடல் வேண்டாம். நன்றி 🙂

    Like

 4. Thank you @oojass Great job!

  amas32

  Like

 5. தமிழ் said:

  அண்ணன் ஓஜஸ்,
  வலுவான கட்டுரையைத் தந்திருக்கிறீர்கள். இதுபோல கட்டுரைகளை நீங்கள் தருவதானால் மாதம் ஒன்று கூட எழுதுங்கள். பொறுத்துக்கொள்கிறேன்.
  அதேசமயம் அரசியல் தவிர்ப்பது எப்படி சாத்தியம்?? பார்க்கலாம்!
  தம்பி
  தமிழ்!

  Like

 6. கேள்விகளும் பதில்களும் அருமை…

  நன்றி…

  Like

 7. […] பரிச்சியம் உள்ள கம்பர் (பதவி : கம்பன் கேள்விகள்). எப்படியும் 4000 என்பது எவ்வகையில் […]

  Like

 8. […] கம்பன் கேள்விகள் ? -ஓஜஸ் – @oojass 😉 […]

  Like

 9. மாரன்சடகோபன் said:

  இராவணன் தமிழன் என கம்ப இராமாயணத்தில் கம்பர் கூறியிருக்கிறாரா என தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.தற்போது மிகவும் தேவையான ஒன்று.அடியேன் இல்லை என சாதித்துவிட்டேன் இருப்பினும் சிறு ஐயம் .

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: