~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௮௭(87)

(புத்தகப் பதிவு)

சில நாவல்களை படிக்கும் சமயங்களில், என்னுள் ஒரு புதிய மனிதன் புகுந்து, என்னை ஆட்டி வைக்கிறானா என்ற சந்தேகம், எனக்கே தோன்றும் – அந்த மனிதன் – கதையின் ஆசானாகக் கூட இருக்கலாம் ! என்ன அழகாக தமிழ் எழுத்துகின்றனர். புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் பித்து பிடித்து தான் அலையை வேண்டியுள்ளது.

பல பல காலம் முன், பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து, இப்படி பட்ட அற்புதமான உணர்வுகளை, ரசித்து, மகிழ்ந்து வந்துள்ளேன். நாளடைவில் இந்த உணர்வு பெருக பெருக, அதன் போதையும் மெருகும் கூட கூட, அந்த ஆனந்தத்துக்கே அடிமையாகி விட்டேன். இதனால் நானே நம்ப வேண்டி வந்தது : உலகை மறந்து படிப்பது என்பது சர்வ சாதாரணம், சாத்தியம் என்று !

முடிந்த மட்டும் புத்தங்களுக்கு விமர்சனம் அல்லது நான் படித்த அனுபவங்களை எழுதுவதே இல்லை. காரணம் : உணரக்கூடிய ஆனந்தத்தை எப்படி என் எழுத்தால் உணர்த்த முடியும். ஆனாலும் தமிழ் தம்பி அடிக்கடி கேட்டு கொண்டதன் பேரில் இந்த முயற்சி. இதற்கு முன் தம்பி கொடுத்த நாவல் – சாகவரம் (இறையன்பு) பற்றி என்னுரையை எழுத ஆரம்பித்து…………………………..

malai !

நாவல் பெயர் : மலைக்கள்ளன்
ஆசிரியர் : நாமக்கல் கவிஞர்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
விலை : 150
பக்கங்கள் : 406

1930ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் நடக்கும் கதை. சிறிய கிராமம், சுற்றிலும் மலை பிரதேசங்கள். அந்த காலத்துக்குகே ஏற்ற சிறு சிறு வரிகளில் கதை வேக நடைப் போடுகிறது. பல இடங்களில் கல்கி அவர்களை படிப்பது போன்றே உணர்ந்தேன். வீரராஜனின் சேட்டைகளுடன் நம்மை ஊருக்குள் அழைத்து செல்கிறார் கவிஞர். எல்லா பணக்கார ஜெமீன் பிஸ்தாகளைப் போலவே வீரராஜனும் இருக்கிறான். அனைத்து துர்குணங்களும் சங்கமிகும் கடல் அவன். அந்த பகுதியின் பெருந்திருடன் காத்தவராயன் இவனுக்கு கையாள். தொன்று தொட்டு நம் தமிழ் சினிமாவில் வருவது போல, இவருக்கும் ஒரு அத்தை மகள் – பூங்கோதை : சர்வ லக்க்ஷன, லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்த யௌவன சுந்தரி. கம்ப ராமாயணக் கிறுக்கு. தாய் இல்லா பிள்ளை என்றே தந்தையும் செல்லத்தையும் செல்வத்தையும் வெள்ளமென்ன வழங்கி வளர்த்தார் அப்பா, ஆனால் அவளோ எல்லா நற்குணங்களின் நிறைவிடமாக திகழ்ந்தாள். இவளுக்கோ வீரராஜனை அறவே பிடிக்காது, அவனோ பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை இவளுக்கு பரிசாக அனுப்பி அவளையே பரிசாக அடைய முயற்சி செய்து, அவமானப் பட்டு போகிறான்.

இதுவே கதையின் ஆரம்பம். திருடர்கள் குழாமுக்கு, பணத்தை தண்ணி என வாரி இறைத்து, பூங்கோதை கடத்தி, காம ஆட்டங்கள் ஆட கனவு காண்கிறான். செயலில் இறங்கிய திருடர்களை அவள் வீட்டில் புகுந்து செய்யும் அட்டூலியங்களிலிருந்து காமாக்ஷி அம்மாள் பிழைத்தாரா ? வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் ? அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன ? அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார்? அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன ? அந்த முதுகிழவன் யார் ? பூங்கோதை திரும்பி வந்தாளா ? இந்த இரு திருட்டு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டை என்ன ஆகிறது ? பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் ? அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் ? இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன ? குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது ? அவர்களின் கதி என்ன ஆனது ? என பல கேள்விகளுக்கு சரளமாக, வேகமாக, அழகாக விடை சொல்கிறார் ஆசிரியர்.

புத்தக சிறப்புக்கள் :

  • எழுத்தாளாரின் தமிழ் நடை மற்றும் சுவாரஸ்யம் கூட்டும் கதை அமைப்பு
  • பாத்திரங்களை முதன் முதலில் காட்டும்/அறிமுகப்படுத்தும் சமயத்தில், அவர்கள் பெயர் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு வைத்த அழகு தமிழ் பெயர்கள்.
  • புலவரின் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் பற்று பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது
  • திரைப்படத்திருக்கு ஏற்ற கதை, பல காலம் முன்னே இந்த படம் இதே பெயரில் வெளிவெந்து வெற்றி நடை போட்டுள்ளது.

புத்தக குறைகள் :
எழுத்தாளர் மீதோ, கதையின் லாஜிக் பற்றிய குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. பதிப்பாளர் மீது மட்டும் ஒரு குறை உள்ளது.

  • அழகான புத்தக வடிவம், சுலபமாக படிக்க கூடிய எழுத்தின் அளவு (font சைஸ்) ஆனால் பல பக்கங்கள் அச்சிடப் பட வில்லை, அவை வெள்ளை தாள்கலாகவே இருக்கின்றன. அத்தியாயம் 14ங்கிள் எட்டு பக்கங்கள் புஸ்வானம், அதுவும் சேர்ந்தார் போல அல்ல. இரண்டு பக்க கதை, இரண்டு பக்க இடைவேளை என……… கதை எதோ புரிந்து. கதையின் போக்கை சரியாக ஊகிக்க முடிந்தது, இருந்தாலும் எதோ இழந்த வருத்தம் 😦

கொடுத்த கூலிக்கு நன்றாக உழைத்தது என்பார்கள். அதுபோலவே இந்த புத்தகமும். செம வேகமாக படிக்க முடிக்க முடிந்தது. மூன்றே வேலை நாட்களில் படித்து முடித்தேன் (அலுவுலகம் போக உள்ள நேரத்தில்). என்னளவில் இது வெகு சீக்கிரம் என்பேன்.

தமிழ் தம்பியிடம் இதை கொடுக்க உள்ளேன். அவருக்கு இரண்டு வேலை நாட்கள் போதுமானதாக இருக்கும். ஏனெனில் அவர் புலி பாயும் வேகத்தில் தமிழ் படித்து, புரிந்து, மதிப்புரை எழுதுவார் 🙂

தினமணி நாளிதழில் வாரா வாரம் திங்கள் அன்று புத்தக பரிந்துரை வெளி வரும். அதில் கண்டு தான் இந்த புத்தகத்தை, மதுரை ராமமூர்த்தி ஐயா மூலம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றிகள் பல, மற்றும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகள்.

தினமணி இணையத்தில் தேடினேன், அந்த விமர்சனம் மட்டும் சிக்கவில்லை, மேலும் அங்கு நான் அறிந்த தகவல்கள் :

  • கலாரசிகன் (தினமணி ஆசிரியர்) : தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான “மலைக்கள்ளன்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது. (பார்க்க)
  • இவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.(பார்க்க)
  • “மலைக்கள்ளன்’ படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். (பார்க்க)
  • முதன் முதல் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் “மலைக்கள்ளன்.'(பார்க்க)
  • இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. (வெளி வந்தது : 22/07/1954) குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க)

இணைய உலகத்தில் இந்த மலைக்கள்ளனைப் பற்றி பேசாதவர்களே கிடையாது போலும், ஆனாலும் அனைவரும் திரைப்படத்தைப் பற்றியே சிலாகித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் கவிஞரின் படைப்பின், கௌவரவத்தை அனுபவிப்பது சரியில்லை ! அவர்கள் இருவரின் தவறு எதுவம் இல்லை, தமிழ் உலகம் என்றுமே சினிமாவின் பக்கமே சாய்ந்து இருக்கிறது !

இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க, சில முறைகள் உள்ளன. அவை :

  • என்னிடமோ அல்லது நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கி படிக்கலாம்
  • சொந்த செலவில் வாங்கி / நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கலாம்
  • நாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்பவர்கள், பேசமால் நான் அடிக்கடி செய்வது போல ஈ-புத்தகத்தை (இலவசமாக) பதிவிறக்கி படிக்கலாம் ! ;->

முன்னுரையில் கவிஞர் சொல்வது : அவர் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி, ஜெயிலில் இருந்த சமயத்தில் இதை எழுதினாராம். இதில் எந்த வித வியப்பும் இல்லை. கல்கியே பல முறை இதனை செய்துள்ளார். ஆனால் இதை பற்றி ஆங்கில அரசாங்கத்தின் மீது ஒரு பெரும் பழி உள்ளது : இவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே பிடித்து வைத்திருந்தால், நாட்டு பற்றுடன் தமிழும் சேர்த்து வளர்ந்து இருக்குமல்லவா !

(இது புத்தக விமர்சனம் இல்ல ! என் புத்தக வாசிப்பு எண்ணங்களின், உணர்சிகளின் குவிப்பு :)) )

—————————————————————

பிகு

இன்று ஐந்து பதிவுகள் வெளியிட திட்டம் மற்றும் தமிழ் ட்வீப்ஸ் என்று புதிய தளத்தையும் தொடங்கி உள்ளேன்

1 இசைப்பா – வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

2 Ph’Ojas – நந்தியாவிட்டை !

3 Oojas – WaterMark

4 Cnerd – CRM Thoughts !

5  இந்த பதிவு

Comments on: "மலைக்கள்ளன்." (2)

  1. தமிழ் said:

    இதுவரை எழுதியதில் இதுதான் சிறந்த பதிவு. செம…
    ஆனால் மீண்டும் மீண்டும் சில எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன.
    இதைப் போலவே நல்ல உள்ளடக்கத்தோடு நானும் ஏதாவது எழுதப்பார்க்கிறேன்,

    Like

  2. […] மலைக்கள்ளன் குறித்து பதிவு எழுதி இருந்தார். […]

    Like

பின்னூட்டமொன்றை இடுக

குறிச்சொல் மேகம்