~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௯௩ (93)
(புத்தகப் பதிவு)

பாவேந்தரின் பெயர் என்னை சில நாட்களாகவே சுத்தி சுத்தி வருகிறது. அவருடைய கவிதை தொகுப்பை சீக்கிரம் வாங்க வேண்டும் என நான் முடிவு செய்தது தான் காரணம் போலும். இன்று, ஓடும் தருணங்களை, ஒழுங்கே செல்லுத்த, ஒரு சிறு புத்தகத்தை எடுத்து, கால ஓடத்தில், தமிழ் வெள்ளத்தில் பயணம் செய்தேன். முடிந்த மகிழ்ச்சியை, முத்துக்களை பகிரவும் வந்து விட்டேன்.

புத்தக்க விபரம்
பெயர் : பாரதிதாசன்
ஆசிரியர் : வேணு சீனிவாசன் 
பதிப்பகம் : Prodigy (கிழக்கு பதிப்பகம்)
பக்கம்: 80
விலை : ரூ.30

{பின்வருன அந்த நூலிலிருந்தும், எனக்கு தெரிந்த, நான் படித்த சம்பவங்கள் }

தமிழக அரசியலின் அழியா சரித்திரத்தின், பெரும் சித்திரம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நேற்று. பாவேந்தர் அண்ணாவுடன் பல காலமிருந்தவர். திரு.வி.க எழுதினார்

‘அண்ணாதுரை என்னும் அண்ணல் தமிழ்நாட்டின்
வண்ணான் அழுக்கெடுப்பில்’

இதனை படித்த பாரதிதாசன், குறைக் கண்டார். உவமை சரியில்லை என்றார். எதுகைக்காக எந்த சொல்லையும் போடக்கூடாது எனவும் சொல்லி, அவரே ஒரு கவிதை பாடினார்

எண்ணாதுரை நாடி ஏந்து புகழ் நட்ட
அண்ணாதுரை அண்ணல் ஆய்ந்து தமிழ் – செழிக்கப்
பண்ணாதுரை உண்டோ பைந்தமிழ் ஏன் இவனைக்
கண்ணாகக் கொள்ளார் கனிந்து

கனிகளுக்காக அண்ணனுடன் சண்டையிட்டு கவிதை எழுதியவர் தான் கனக சுப்புரத்தினம். 29/04/1891னில் பிறந்தார். இயல்பாக கவிதை பாடும் திறம் கொண்டார். படிப்பில் படு கெட்டி, பாட்டிசைப்பதிலும், நடிப்பதிலும் வல்லவர். கம்பீர உருவம் கொண்டவர். பல காலம் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். புதுவை தான் அவரது வாசத்தலம். பன்னிரண்டாம் பிராயத்துக்கு முன்னே திருக்குறள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். அத்துப்படி. ஆயினும் அசைவம் உண்பதில் மிகுந்த பிரியம் கொண்டவர். ‘மீனுக்கு தொட்டுக்க சோறுவை‘ என்பாராம். இருந்தும் புறாக்களை காண்பதும் ரசிப்பதுவும் அவருக்கு மிக பிடிக்கும்

வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும் அவற்றின் வாழ்வில்,
வெட்டில்லை, குத்துமில்லை
கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கமில்லை…

இதை படிக்க, பசிக்கு காயவைத்த தானியத்தை குருவிகளுக்கு ஈந்த பாரதி நினைவில் வந்தான்

சின்னஞ் சிறு குருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா !
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா !

புதுமையான சிந்தனைகளைக் கொண்டவர் பாரதிதாசன். நினைத்த மாத்திரத்தில் கவிதை புணைவார், அதற்க்கு சிறு துண்டு ஒற்றைப் பக்க காகிதம் கூடப் போதும். தன் பிள்ளைகள் கேட்ட மெட்டுக்கெல்லாம் கீதம் இசைப்பாராம். ஒரு திருமண விழா கச்சேரியில், தன் கம்பீர குரலில்,

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் – பின்னர்
வேறொன்றைக் கொள்வாரோ…

போன்ற பல பாரதி பாடலக்ளை ஆழமுணர்ந்து பாடினார். முடிவுல் அங்கு இருந்த பாரதி அவரை பெரிதும் பாராட்டினார். இதுவே அவரது எதேச்சியான முதல் சந்திப்பு.

குருநாதர் திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளையை மீறி, நாராயண நாமத்தை உபதேசம் பெற்றவுடன், கோவில் மதில்மீதேறி மக்களுக்கு சொல்லி, மதபுரட்சி செய்யத ராமானுஜரை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை பற்றிய தமிழ் திரைப்படத்தை கதை எழுதி,  இயக்கி, தயாரித்தார். ஆனாலும் அவர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை சார்ந்த(ர்/)வர்.

1928டில் புதுசேரியில் பெரியார் பேசியதைக் கேட்டு, அவரின் கொள்கைகள் வசம் ஈர்க்கப்பட்டார். முதலில் அவர் மிகப்பெரும் ஆதிக்கராக இருந்தார். பாரதி, வா.வே.சு ஐயர் மற்றும் சிலர் இருந்த ஒரு தருணத்தில், அவரைப் பற்றி பேச்சு வந்தது, உடனடியாக ஒரு கவிதை எழுத சொல்லி பாரதி கேட்க்க, பாரதி எழுதும் மேஜையிலேயே கனகசுப்புரத்தினம் எழுதியது தான்

எங்கெங்கு காணிணும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா….

பலே பாண்டியா!‘ என பாரதி பாரட்டி, ‘கவிதா மண்டலத்தை சேர்ந்த கனக-சுப்புரத்தினம் பாடியது‘ என் குறிப்பெழுதி, சுதேசமித்திரன்-னுக்கு அனுப்பினார். முதலில் பரிசுரமான பாவேந்தரின் கவிதை இது தான் என சொல்லப்படுகிறது. பின்பு இந்த பாடல் பல மொழிகளிலும் மாற்றம் பெற்று வெளிவந்தது. பாரதியுடன் அவரது நட்பும், அன்பும், பாசமும், மரியாதையும் வளர்ந்து வந்தது.

{இந்த ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா…..’ பாடல் பாரதிதாசன் எழுதியதே, பாரதி அல்ல. பல பிரபல நாளிதழ்கள் மற்றும் 99% இணைய தளங்கள், பதிவுகள் இதை பாரதி என்றே சொல்கிறது!}

புனைப்பெயரை தேடி, இறுதியுல் பாரதிதாசன் என்று வைத்து கொண்டார். அவரே ஓரிடத்தில் காரணமும் சொன்னார் : பாரதி போல எளிய நடையில் புலவர்கள் எழுத வேண்டும் என்பதை உணர்த்தவும், சாதி ஒழுப்பு விளம்பரமாக வேண்டும் என்பதற்காகவும் தான்.

என் அப்பா அடிக்கடி சொல்லுவார், தமிழை மக்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக பாடியவர்கள் : அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி ! இவர்களை பார்த்து தான் பிறர் மாறினார்.

புதுவையில் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளார். அவரது வேறு சில புனைப்பெயர்கள் :  புதுவை கலைமகள், தேசபக்தன், தமிழரசு, கிறுக்கான். புரட்சி கவிஞர் என பெரியார் வாழ்த்தினார். குயில் என ஒரு பத்திரிக்கையை பலகாலம் நடத்தினார்.

சிங்கங்கள்

சிங்கங்கள்

மயிலம் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டு, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுதி‘ என முப்பது பாடல்கள் பாடினார். விநாயகர், முருகன், சிவபெருமான், சரஸ்வதி, திருமால் மீது துதி பாடல்கள் புணைந்துள்ளார். இப்படிப்பட்டவர் பெரியார் கொள்கை மீது அதிக நாட்டம் கொண்டார். 1933-ல் நடந்த உலக நாத்திகர் மாநாட்டு பதிவேட்டில், நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் எனக் கையெழுத்து இட்டுள்ளார் பாவேந்தர். அப்படியே வாழ்ந்தார்.

இவர்தான் பெரியார் – இவரை, யார் தான் அறியார் என எழுதினார் வாலி. (பெரியாருக்கு நாளை பிறந்தநாள்) தனது சீர்திருத்த கொள்கைக்கு மாறாக பெரியார் திருமணம் செய்து கொண்டார் என வேதனை அடைந்தார் பாரதிதாசன். கவிதை, கட்டுரை மூலம் இதை குறித்து அவரது எண்ணங்களை பதிவு செய்தார். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தாலும், நாயக்கரின் சில கொள்கைகளினால் அவர் மீது  மதிப்பு உள்ளது எனக்கு. ஆனாலும் அவரது திருமண விடயம், புரியவில்லை. அவர் தனி மனிதர், என்ன வேணாலும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டு விளக்கமில்லாமல், வேறேதினும் இருந்தால் சொல்லுங்கள்…..

திராவிட இயக்கம் பெரியாரின் கொள்கையை விட்டு செல்கிறது என பாவேந்தர் சொல்லி/ எழுதி / கவிபாடி உள்ளார். இதை சொன்னால் நண்பர் சொல்கிறார் : பெரியாரை, பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்க்கிற எத்தனையோ இயக்கங்கள் இருக்கு, தி.க. மட்டும் இல்ல ! சமூகத்துல பெரியார் ஆதரவாளர்னாலே தி.க. தான் நினைவுக்கு வரும்.. தி.மு.க முற்றிலும் வேறுபட்டக் கொள்கைகளை உடையது. கடவுள் இல்லை என்பவர் பெரியார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் -அண்ணா

நான் சொன்னேன், கலைஞர் இன்னும் ஒரு படி மேலே உள்ளார். ரமலான், கிருஸ்மஸ் வாழ்த்து எல்லாம் சொல்லுவார், ஆனா தீபாவளி வந்தால் மறந்துவிடுவார். உண்மதானே ? என்றேன். நண்பர் : நாம அரசியல்வாதிகள் பற்றித்தானே பேசுறோம்… அவர் சிறுபான்மையினர் ஓட்டுக்காக அப்டி செய்யலாம்.. நான் அவ்ளோ deepஆ note பண்ணல. (இனியாவது நீங்களும் அவரும் நோட் பண்ணுங்க) பரதிதாசனை பற்றி பேசும் போது, அண்ணா, பெரியார், கலைஞர், எம்ஜிஆர், திமுக-காவை விட்டு விட முடியாது. நாற்சந்தியில் அரசியல் வேண்டாம், ஆனாலும் சிலவற்றை நாம் கவனிக்க மறக்கிறோம் / மறுக்கிறோம்

இன்னும் ஒரு விடயத்தை தமிழ் மக்கள் உணரும் நாளை நான் எதிர்நோக்குயுள்ளேன். பெரியார் தமிழகத்தின் மிக பெரும் சீர்திருத்த என்றால், அவரை விட சிறந்தவர் ஒருவரை நாம் ஏன் அறிய முற்படுவதில்லை. அவர் பெயர் தான் சுப்பிரமணிய பாரதி. அக்கிரகாரத்தில் பிறந்த அவன், (புதுமையான, புரட்சியான) சிந்திக்காத எண்ணங்களே  இல்லை என்றே சொல்லாம். அப்பழுக்கற்ற பார’தீ அவன். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என அவன் பாடி சென்றதை உணர வேணும், அவனை போற்ற வேணும்…. பெரியார் ‘பெரியவர்’ என்றால், பிராமன ஐயன் பாரதி, பெரியாருக்கு பெரியவர். பாடையில் போகும் போது தான் பாரதியை கவனிக்கவில்லை….. பார் போற்ற வேண்டிய கவி அவன் !

“சுத்த அறிவே சிவமென்னும் சுருதிகள் கேளிரோ?…………” – பாரதி

பாவேந்தர் பக்கம் திரும்புவோம்….
ஒளவை, பாரதி போல அவரும் புதிய ஆத்திசூடி எழுதியுள்ளார்

  • அனைவரும் உறவினர்
  • ஆட்சியைப் பொதுமைசெய்
  • ஈதல் இன்பம்
  • காற்றினைத் தூய்மை செய்
  • கல்லார் நலிவர்
  • கேனாட்சி வீழ்ந்தது

புதுவையின் மிக பிரசித்தம் பெற்ற தமிழ்தாய் வாழ்த்தும் அவர் எழுதியதே

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே செந்தமிழ் தாயே….

விடுதலை போரின் போது மிகுந்த ஆர்வம் கொண்டார். காந்திய வழி நின்றார். கதர் அணிந்தார், அதனை பற்றி பிரச்சாரம் செய்தார். கடனுக்கு கதராடைகள் விற்றார். ‘கதர் ராட்டினப்பாட்டு‘ எழுதி, சொந்த செலவில் பதிப்பித்தார். இன்னும் பல புத்தகங்கள் / கவிதை தொகுப்புகள் எழுதியுள்ளார். (சொடுக்கினால் படிக்கலாம்)

மேலும் பல படைப்புகளை செய்துள்ளார். பாரதிதாசனின் அனைத்து படைப்புகளை வாசிக்க சொடுக்கவும்

1964ஆம் வருடத்தின் ஞானபீட விருதுக்காக தேர்வு செய்யப்படார், ஆனால் வாங்கும் முன்னமே அவரது காலம் முடிந்தது. இந்த நாட்டின் சிறந்த கவி – என அவருக்கு பட்டம் தர, சாகித்தியா அகாதமி முடிவு செய்தது, ஆனால் கொடுக்கும் முன் காற்றுடன் கலந்தார். வாழும் கவிஞ்ர்களுக்கு மட்டுமே அந்த பட்டம் வழங்கப்படும். ஆனாலும் அவரது பிசிராந்தையார் நாடத்தக்கு 1969ஆம் ஆண்டின் தமிழ் சாகித்தியா அகாதமி விருது வழங்கப்பட்டது. இன்றுவரை தமிழில் விருது பெற்ற ஒரே நாடகம் இது தான். இவருடைய பெயர் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது. இவர் புதுவையில் வாழ்ந்த சாலை அவர் பெயரைக் கொண்டது. மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் அவருக்கு சிலை உள்ளது.

இமயமலைசாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்

என பாடிய பாவேந்தரின் இறுதி நாட்கள், மிகவும் மோசமாக இருந்தன. திரைப்பட முயற்சியில் தோல்வி, திமுக-வுடன் சண்டை என சென்றது. சாகும் சற்று நேர்த்துக்கு முன், பேரனுக்கு பாரதி எனப் பெயர் சூட்டினார், தன்னை புதுசேரி அழைத்து செல்லுமாறு சொன்னார். பிரேதத்தை கவிஞர் கண்ணதாசன் புதுசேரிக்கு காரில் எடுத்து சென்றார்.

புதியதோர் உலகம் செய்வோம்… என்னும் பாரதியின் கனவுகளை பின்பற்றி வாழ்ந்த பாவேந்தர் வாழ்க. பாரதிதாசனின் சில பாடல்கள் மட்டுமே எனக்கு தெரியும் 😦 அதில் மிக சிறந்தது என சொன்னால்

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? ….”

எனக்கு மிகவும் பிடித்த சுத்த தமிழ் பாடல்களுள் இதுவும் ஒன்று ! என்ன ஒரு அழகான பாடல்…. அதை பற்றி தனிப் பதிவே எழுதலாம் . நீங்களும் கேளுங்கள், பாம்மே ஜெயஸ்ரீயின் மதுர குரலில். உள்ளம் குழையும்

இன்று எம்.எஸ் அம்மாவின் பிறந்தநாள் ! இவளின் இனிமையான இசையை ரசிக்க என்ன தவம் யான் செய்தேன் ? இசையின் முடிசூடா அரசி அவள். வாழ்க்கை முழுவதும் இசையை சாதனம் செய்து, சாதனை செய்தாள். வாழ்வு முழுதும் இசையை கற்றாள் !(இசைப்பாவில் எம்.எஸ்,அம்மா) United Nations மாநாட்டில் எம்.எஸ்.அம்மா பாடிய சிலப்பதிகார பாடலை கேளுங்கள்.

இன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 91-ம் பிறந்தநாள் மற்றும் நமது நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களுக்கு பிறந்தநாள், வாழ்த்துகள். ட்விட்டர் நண்பர் திரு சக்திவேல் அவர்கள், இன்று திருமதி அர்சனாவுடன் தனது இல்லறப்பயணத்தை துவங்கி உள்ளார், மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சிங்கப்பூரின் தந்தை எனக் கருதப்படும் அரசியல்வாதி திரு.லீ குயன் யோ (Mr Lee Kuan Yeo) அவர்களின் பிறந்தநாள் இன்று.

Advertisements

Comments on: "பாவேந்தர் பாரதிதாசன்" (3)

  1. பாவேந்தர் பாரதிதாசனில் ஆரம்பித்து, இசையரசி எம்.எஸ்.எஸ்., திரு கி.ரா., திரு ப.சி., சிங்கப்பூரின் தந்தை என்று பலருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாம்பே ஜெயஸ்ரீ பாடல் இனிமை. அதேபோல எம்.எஸ்.எஸ்., பாடிய சிலப்பதிகாரப் பாடலும்.
    பாராட்டுக்கள்!

    Like

  2. பெரு மதிப்பு உடைய தோழருக்கு,
    உன் பதிவைக் கண்டு உண்மையிலேயே ஆச்சர்யங்களில் விழி விரிக்கிறேன்.
    அரசியல் அத்தனை அமர்க்களமாக அதீதமான தேவையில்லாத சொற்களை, விவரங்களை விடுத்து உன் பாணியையே மாற்றி எழுதியிருக்கிறாய்.

    வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    சில வருத்தங்கள். உண்மையாக நோக்கினால்,

    பாரதியார் பிறந்தது – 1882
    பெரியார் பிறந்தது – 1879

    பெரியார் வயதிலும் மூத்தவர் தான். பெரியார் பெரியார்தான். பெரியவர்தான் 🙂 🙂

    பாரதியாருக்கு வாய்க்காத ஒரு வாய்ப்பு பெரியாருக்குக் கிடைத்தது. அதுதான் அவர் வாழ்ந்த ஆண்டுகள்.

    பாரதியார் அளவைக் காட்டிலும் பெரியார் அதிகமான புரட்சிகரமான கருத்துக்களை கூறியிருக்கலாம். (may be) காரணம் பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95. அது தவிர இறுதிவரை அவர் போராடிக்கொண்டேதான் இருந்தார்.

    இருவரையுமே, முழுமையாகப் படித்தால் மட்டுமே எந்தவொரு முடிவுக்கும் வர இயலும்.

    தளத்தின் மாறுதல்கள் இன்னும் ஈர்க்கின்றன.

    இந்நாளில் உம் பதிவு கண்டு உள்ளம் பூரிக்கிறேன் நண்பா!

    பாவேந்தர் குறித்து அதிகம் அறிய முடிந்தது நன்றி.

    அவர் எழுதிய தமிழியக்கம் படித்துவிட்டு இன்னும் சொல்லு!

    வாழ்த்துகளோடும், நன்றியோடும்,
    அன்பன்
    தமிழ்

    Like

    • மிக்க நன்றி. ஓ. இந்த விடயம் எனக்கு தெரியாது. மூன்று ஆண்டுகள் ! இன்னும் பல பல எண்ணங்கள் இதனை பற்றி தோன்றுகிறது… எனவே இந்த கமெண்ட் பெட்டியில் எழுதவில்லை.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: