~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௯௬(96)
(கதம்பம்)

வெள்ளி விருந்தை, திங்கள் உதிக்கும், சோம்பல் தெறிக்கும் வார ஆரம்பத்தில் சமைத்துள்ளேன். வேறு என்ன : தாமதமாக வந்தாலும், ருசி குறையாது என்ற நம்பிக்கை தான். பொழுதை போக்காமல், பொழுதை ஆக்க வேண்டும் என்பதே தற்போதைய குறிக்கோள். மலை போல புத்தகங்களும், இணைப்புகளும், மின்-புத்தகங்களும், பாடல்களும்…. அப்பாடி என்ன செய் போறேன் தெரியல. பார்க்கலாம்….

மடிபா மாபெரும் சாகப்தம். புத்தன் வழியில், அகிம்சை முறையில் போராடி, தென் ஆபிரிக்கா மக்களுக்கு சுதந்தரம் வாங்கி தந்தவர், நிற வெறியை ஒழிக்க பாடுப்பட்டவர் : நெல்சன் மண்டேலா. அவரது முழுப் பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா. ரோலிஹ்லாலா என்பதன் அர்த்தம் : மரக்கிளைகளை உலுக்குபவன் அல்லது கலகக்காரன். அவர் ஒரு குத்து சண்டை வீரரும் கூட ! நாற்சந்தியின் ஆழ்ந்த இரங்கல்.

This slideshow requires JavaScript.

தீபாவளி மலர் :

தீபாவளி மலர்களின் சூறாவளி சுகந்தம் கரையைக் கடந்த பின்… கூகிள் பிளஸ்-சில் ஒரு பதிவைக் பார்த்தேன். ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2013 PDFவடிவில் (இணையத்தில் இலவசமாக) உள்ளது என்பது தான் அது. அமுதசுரபி தீபாவளி மலர் அப்படி கிட்டுமா என்று தேடினேன்…. பெரும் வியப்பு : அவர்களே தங்கள் இணையத்தளத்தில் மொத்தம் 500 பக்கம் கொண்ட மலரை, 12 கோப்புகளாக தந்துள்ளனர், நீங்களும் பதிவிறக்கி படிக்க லிங்க்

மாத இதழ்கள் :

அமுதசுரபி தளத்தை பார்வையிட்டேன். மாதம் மாதம் இதழ்கள் PDF வடிவில் இலவசமாக பதிவிறக்க வழி உள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் : டிசம்பர் மாத இதழ்

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் : டிசம்பர் இதழ்

மீள் :

ஒரு விஷயத்தை பல்வேறு விதங்களில் சொல்லலாம். ஒரு சந்தோஷத்தில் கூடுதலாக பேசலாம். இதற்கு கவித்துவ வெளிப்பாடு என்று பெயர். தமிழ் என் தாய் என்றால் அப்பன் யாரு என்று கேட்கலாகாது. இது அயோக்கியத்தனம். மனவிகாரம். மனைவி என் பிரசாதம் என்பது உயர்வுபடச் சொல்வது. அவள் எல்லோருக்குமான சக்கரைப் பொங்கல் அல்ல. அவள் சமயபுரத்தாள் எனக்கு கட்டிய பரிவட்டம். பரிவட்டமும் பிரசாதம்.. வேலையின் மனைவியின் கண்கள் மீன் போல் உள்ளது என்று நீங்கள் கூறினால் நாறுமா என்று எவரும்கேட்கக் கூடாது. நமது மொழி நாகரிகத்தின் வெளிப்பாடு மொழியை நாகரிகமாக வெளிப்படுத்துங்கள் ஆனால் வெறும் படிப்பு மட்டும் நாகரிகம் தருவதில்லை. மனக் குரூரம் இல்லாதிருக்க வேறெதோ தேவைப் படுகிறது.

– எழுத்தாளர் பாலகுமாரன்

(facebookக்கில் பகிர்ந்துக் கொண்டது)

கட்டுரைகள் :

பாரத் ரத்னா பற்றி

தமிழ் தி இந்து ஏட்டில் வந்த கட்டுரைகள்:

பாரதி மணியின் தில்லியில் நிகம் போத் காட் – அனுபவங்கள் பல… தவற விடாமல் வாசியுங்கள்

மின்புத்தகம் :

வாசிக்க கன்னாபின்னா என்று ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வது பழக்க வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் : நா.பார்த்தசாரதியின் இலக்கிய கதைகள். சங்க கால தனிப் பாடல்களின் சுவையான தொகுப்பு. சில பக்கங்கள் மட்டுமே ஆரம்பித்தேன். நீங்களும் மகிழுங்கள்

பதிவிறக்க

காணொளி :

கரு.பழனியப்பன், நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது : சுஜாதாவின் பத்து கட்டளைகள். மிகவும் பிடித்து இருத்தது.

சிறுகதை :

கடந்த வாரம் பல கதைகள் படிக்க முடிந்தது, குறிப்பாக சொல்ல வேண்டிய கதை ஜெயகாந்தன் எழுதியது : அக்னி பிரவேசம் . 1966ரில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை இது, மேலும் அவரே இதனை பற்றி சொன்ன சில வரிகள் :

எனது கதையின் முடிவை மாற்றியும், அந்த கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ்நாட்டின் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்துமீறல்களை சகித்துக் கொண்டிருந்தேன். எழுதுகிற பணிக்கு பொறுமை மிக மிக இன்றியமையாதது. அதன் பிறகு தான் அதன் முடிவை மாற்றி – நான் சொல்லவந்த கருத்தை மாற்றிக் கொள்ளலாம் – நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த ‘அத்துமீறல்‘களும் எனது ‘அக்னி பிரவேசம்‘மும் காரணமாதலால் அவர்களுக்கும் கூட நான் நன்றி பாராட்டுகிறேன்.

(ஆதாரம் – ஜெயகாந்தன் சிறுகதைகள் – NBT)

இசை :

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை தொகுப்புகள் பல : www.soundcloud.com/navinmozart இந்த தளத்தில் உள்ளன. அவரை பற்றி சொல்லவோ, எழுதவோ வேண்டியது இல்லை. ரசனை போதும்.

விளையாட்டு :

கிறிஸ்மஸ் முன்னிட்டு கூகிள் கொண்டு வந்துள்ள புதிய தளம் இது, அட்டகாசம் என்றால் இது தான் என்று அடித்து சொல்லலாம். செம கலக்கல். நிச்சயம் பாரக்க வேண்டிய அற்புதம் : http://www.google.com/santatracker/#/village

வால் பேப்ர்

எதேச்சியாக இந்த புத்தரை சந்தித்தேன், தமிழ் சினிமா நாயகன் போல கண்டதும் காதல் தான். என் மடிகணினியின் திரையை இவர், தனது மௌனமான நிம்மதியுடன் அலங்கரித்து கொண்டுள்ளார். தம்பிக்கும் பிடித்து விட்டது, உங்களுக்கும் தான் 🙂 பதிவிறக்க

படம் :

கண்ணன் மீது காதலாகிய பிரேமை கொண்டு, கன்னம் சிவக்க, வெட்கி தவிக்கும் ராதையின் அழகிய படம் :

ராதை

ராதை ரம்யம் !

Advertisements

Comments on: "வெள்ளி விருந்து #3" (6)

  1. தீபாவளி மலர்களின் சுட்டி கொடுத்ததற்கு நன்றி. விருந்தில் ரொம்பவும் ரசித்தது, ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம். நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளினால் எங்களுக்கும் படிக்க, கேட்க நிறைய கிடைத்திருக்கிறது. இதைபோல பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. தொடருங்கள்.

    Like

  2. எல்லாமே அருமையான சுட்டிகள். விளக்கங்கள். தீபாவளி மலர்களின் சுட்டியில் ஆனந்த விகடனின் சுட்டி இல்லையோ? அல்லது எனக்குத் தான் தெரியலையா? மற்றச் சுட்டிகளுக்கும் நன்றி. ஜெயகாந்தனின் அக்னிப்ரவேசம் கதையா வந்தப்போ பள்ளி மாணவி. விகடனில் வந்தது. படிக்கக் கூடாதுனு அப்பா பக்கங்களைக் கிழித்து வைத்திருந்தார். பெரியப்பா வீட்டில் போய்ப் படித்தேன். :))))

    அதைத் தொடர்ந்து வந்த நாவல், “சில நேரங்களில் சில மனிதர்கள்” அதுவும் படித்திருக்கிறேன். 🙂

    Like

  3. அருமை.
    சாதாரணமாக, ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் இவ்வளவுதான் சொல்லமுடியும்.

    எல்லாவற்றையும் தொகுக்கிற லாவகம் நன்றாக வருகிறது.

    இன்னும் எத்தனை காலம் எபிகளை கட்டிக் கொண்டு எழுதத் திட்டம்?

    இப்போதெல்லாம் அதிகம் படிப்பது நீதான்.

    வேறென்ன மகிழ்ச்சிதான்..

    விருந்தின் சுவை வாராவாரம் அதிகரிக்க விரும்புகிறேன்.

    ##நீயும் 12 மணி ஸ்லாட்டை எடுத்துக் கொண்டால், நான் என்ன செய்வது? (##என் கவலை!!)

    நிறைய சொல்லலாம். (இப்போதைக்கு இது போதுமே!)

    Like

    • எழுத்து பிழைகள் வேண்டும் என்றே செய்யப்படுவது அல்ல. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன். #அவ்வளவே

      Like

  4. ரோலிஹ்லாலாவை பற்றிய கட்டுரை நன்றாக இருக்கிறது. அடுத்தபடியாக, கொடுத்த சுட்டிகள் பலே! பலே!. எப்போ படிக்கிறது? செய்வோம்.
    அதற்கு அடுத்த படியாக ராதை ரம்யம் அபாரம். ஒரு பாட்டு இட்டுக்கட்டிவிடுவேன்.

    Like

  5. அப்பப்பா என்ன அசத்தல் பதிவு.
    நேரம்தான் இல்லாமல் உள்ளது.
    இனழய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: