~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் ௯௯(99)
(தேர்தல் சிந்தனைகள்)

ஒரு சமயம் நம் சகதியே, நம் சக்தி என்று மெச்சுக் கொள்கிறோம் ! என்ன ஒரு அசட்டுத் தனம் – தேவன்

விடிந்ததும் இந்தியாவின் வரலாறு, நம் விரல் நுனிகளில்!  ஜனநாயகம் வெற்றி பெற  ஓட்டு போடுங்கள் என்று கெஞ்ச வேண்டியுள்ளது. சுண்டு விரல் சுட்டும், சுத்தமான தலைவர்களை, சுலபமாக தேர்ந்தெடுக்க சரியான வழி. நாளை மட்டும் : கரை நல்லது ! அதுவும் விரல் ஓரத்துக்கு மட்டுமே. இருந்தும் பரவாயில்லை என்று சகித்து கொண்டு மேலும் சிந்தக்கலாம்.

யாருக்கு உங்கள் வாக்கு ? கட்சிக்கா ? கொள்கைக்கா ? கூட்டணிக்கா ? தனி நபருக்கா ? தொகுதி நலனுக்கா ? முடிவு உங்கள் மனதில் உள்ளது. அது சரியானது தானா என்று மறுபரிசீலனை செய்யுங்கள். இன்று தான் யோசிக்க முடியும், நாளை வெறும் செய்தியை வாசிக்க மட்டுமே முடியும். என் முடிவு, பதிவின் இறுதியில் உள்ளது.

டீக்கடையில், தெரு முனையில், கை நுனியில், இணையத்தில் பேசியதெல்லாம் செயலில் காட்டுங்கள். இருந்தும் யோசிக்கிறேன், யார் ஆண்டால் தான் எனக்கு என்ன ? இங்கு ராமர்கள் இல்லை. ராவண குணங்கள் கொண்டவர்கள் தான் அதிகம். தீதும் நன்றும் பிறர் தர வாரா, நாளை நானே எனக்கான ஐந்து வருட பலன்களை முடிவு செய்கிறேன் !

தேர்தலின் மிகப் பெரும் வேடிக்கை : நான் நேர்மையானவன், உங்களுக்கு நல்லது செய்ய தகுதியானவன். நாளை உங்கள் நாளை வளமாக்க உழைப்பவன் என்று எல்லாம் பொய்யாவது சொல்லி, தான் ஓட்டு கேட்க்க முடியும். பொய்யும் புனை சுருட்டும் சொல்பவனுக்கு கூட நல்லவன் பிம்பம் அவசியம் ! நல்லவனாகவே இருப்பதில் தான் நாட்டுக்கு எவ்வளவு புண்ணியம் 🙂

தேசம் வளர வளர, தேர்தல் முறையும் அதை சார்ந்த பரிச்சார யுக்திகளும், புது புது பரிணாமங்களை பெற்று வருகிறது :

 • நோடா-விற்கு என தனி இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே
 • தொலைபேசி மூலம் அழைத்து, பதிவு செய்யப்பட்ட குரலில் வாக்கு சேகரிப்பது
 • இணையம் முழுதும் விளம்பரங்கள். சமூக வலைதளங்களில் விவாதங்கள், குடுமி பிடி சண்டைகள்.
 • வாக்காளர் பட்டியலில் நம் விபரங்களை, இணையம் மூலமே சரி பார்க்கலாம்
 • நூதன முறைகளில் பணம் பட்டுவாடா !
 • சூறாவெளி சுற்று பயணம். பெரும் தலைவர்கள், முப்பரிணாம தொழில்நுட்பம் மூலம் பல இடங்களில் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டங்கள்
 • கட்சி வளர்ச்சி / தேர்தல் நிதிக்கான நன்கொடைகளை இணையம் மூலவே பெற எளிமையான வழிகள்

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, என்னை வியக்கவைக்கும் விளம்பரங்கள் சிலவற்றை கண்டு மகிழ்ந்து வருகிறேன். கட்சிகள் சார்ந்த பிரச்சாரங்கள் அல்ல அவை. மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வாய்ப்புகள் :

 • முதல் முறை வாக்களக்கும் இளைஞர்களுக்கு எங்கள் உணவகத்தில் 25% சிறப்பு தள்ளிபடி.
 • மையை காட்டினால், கை மேல் பலம். *** வழங்கும் ஆட்டுக்கு கால் சூப் முற்றிலும் இலவசம்
 • கடமை செய்த கரங்களுக்கு கௌரவம். பொருட்களின் பில் அமௌன்ட்-டில் 5% கழிவு

(விளம்பரங்களின் கருத்தை சொல்ல, நான் எழுதிய வாசகங்கள் இவை) இப்படியாக பல பல வண்ண பிளக்ஸ் சுவரொட்டிகள், நாளிதழ்களில் விளம்பரங்கள், துண்டு பரிசுரங்கள். இதை செய்யும் கடைகளுக்கு, ஒரே கல்லில் ரெண்டு மாம்பழங்கள் : விற்பனைக்கிக்கும் விளம்பரத்துக்கு ஒரு வழி மற்றும் சமூக விழிப்புடன் இருபதற்காக நல்ல பெயர். வாழ்க!

பேஷா போய் ஓட்டு போட்டுட்டு வாங்க. அதே வேகத்துடன், உங்கள் கையும் அதன் மையும் தெரியும் படி, உங்களை நீங்களே, ஒரு சுய புகைப்படம் (#selfie) எடுத்துக் கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள் இணையத்தில் பகிர்ந்து மகிழலாம், என்னை போல் கூச்சம் கொண்டவர்கள் பத்திரப்படுத்தி மலரும் நினைவுகளில் சேர்க்கலாம்.

ஒரு தலைவன் என்பவன் தன்னுடைய தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ஓர் இலட்சியத்துக்காக நீ உன் உயிரையும் அர்பணிக்க கூடியவனாக இருந்தால் தான், நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ஆனால் நாம் யாரும் தேவையான தியாகங்கள் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்யமாக முடிந்தது போய் விடுகிறது. இதக்கு தலைவர் சொல்வதை ஒருவரும் கேட்பதில்லை !

–    சுவாமி விவேகானந்தர்

(கம்பர் ஷமிக்கனும்)

தேர்தல் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உண்டு தீர்க்கவும்
  நிலை பெருக்கவும் நீக்கவும் நீங்களா ?
அழகிலா விளையாட் டுடையார் – அவர்
  தலைவர் அன்வருக்கே நோட்டா நாங்களே !

 

Advertisements

Comments on: "மக்கள் தீர்ப்பு !" (2)

 1. இந்த தேர்தல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்தது – அரசியல் பேசுவதில்லை என்ற கொள்கை கொண்ட நாற்சந்தியையும் வாக்குப் பதிவு பற்றி பேச வைத்துவிட்டதே!

  நிச்சயம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். எனது வேண்டுகோளும் இதுவே!

  சமீபத்தில் இங்கு நடந்த பஞ்சாயத்து தேர்தல் காரணமாக இந்த முறை எங்கள் இடது கை கட்டைவிரலில் மை!

  Like

 2. ரஞ்சனி அவர்கள் சொன்ன மாதிரியே அரசியல் பதிவுதான் இது!
  ஆனால் இது முதல் பதிவு இல்லை.

  100% வாக்குப்பதிவு அவ்வளவு சாத்தியம் இல்லாத ஒன்று.

  நூதன முறை பணப்பட்டுவாடா என்று சொன்னது 144 தடை உத்தரவையா?

  அதெல்லாம் சரி!

  அடுத்த பதிவு எப்போ? (I’m Waiting!)

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: