~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௧௦௩(103)
(திருவிழா பதிவு)

சென்ற வாரம் இதே நாளில், என் மனோரதங்களில் ஒன்று நிறைவேறியது, முத்தமிழுக்கு சங்கம் கொண்ட ‘மதுரை’ மாநகரில். ஆதாகப்பட்டது : உற்சவம் செல்லும், ஆண்டவனின் அருள் வடிவங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. வியாழன் காலை, எட்டரை மணியளவில் எடுத்த படங்களை உங்களுக்கு, செய்திகளுடன் காட்டவே இந்த பதிவு.

ஆவணி மூல திருவிழாவின், சிறப்பை பற்றி நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் விதமாக நடக்கும் உற்சவமிது. கொஞ்சம் வரலாறு :

1 Pilliyar
முன்னொரு காலத்தில், மதுரையை சீரும் சிறப்புடன் அரிமர்த்தன பாண்டியன் ஆண்டு வந்தான். துறைமுகத்தில் வந்திறங்கும் உயர் ரக குதிரைகளை வாங்க, தனது அமைச்சரை அனுப்பி வைத்தான். அதற்கான பொன்னையும், அவரை பாதுகாக்க சிறு படையும் கூடவே அனுப்பி வைத்தான்.

சிற்றம்பலத்தில் ஆடும் அம்பல்வானின் விளையாட்டு தொடங்கியது. ஆவுடையார் கோவிலில், ஆலமரத்தின் அடியில் : தட்சிணாமூர்த்தியாக வந்தமர்ந்தான். கற்ற கேள்விகளில் வல்லவர்களான சனக்க, சனந்தன, சானதன, சனத்குமார முனிவர்களுக்கு, மௌனமாக சேவை சாதித்தான், ஐயம் தெளிவித்தான்.

போகும் வழியில் இவரை கண்ட அமைச்சர் – மாணிக்கவாசகர், மெய்மறந்து, தன் உண்மை ஈர்ப்பை உணர்த்தார். தனக்காக இறங்கி வந்த பரம்பொருளை, உலகறிய செய்ய, கோவில் ஒன்றை எழுப்ப திட்டமிட்டார். பாண்டிய மன்னனின் பொன்னைக் கொண்டு, பெரியதொரு ஆலயத்தை கட்டி தொடங்கினான். நாட்கள் ஓடின. நேர்த்தியுடன் நிர்மாணங்கள் நடைப்பெற்றன. ஆள் மீது ஆள் அனுப்பினான் அரிமர்த்தனன். கடைசியில் கைது செய்து வரும் படி, உத்தரவிட்டான்.

சிவன் செயல் எல்லாம் – என நம்பி, மாணிக்கவாசகரம் சும்மா இருந்தார், உள்ளம் நிறை பொன்னார் மேனியனை நினைந்து, நினைந்து உருகினாரே தவிர பொன்னை மறந்தார், புவியை மறந்தார், பதவியை மறந்தார், சிறையிருந்தார் !

2 Sivan with pittu

மதுரையை நோக்கி பெரியாதொரு புழுதி படலம் கவிழ்ந்தது. ஆயிரம் பதினாயிரம் புரவிகள், காற்றின் வேகத்தில் மன்னர் மாளிகையை நோக்கி விரைந்தன். குழாமின் தலைவனாக வந்த சிவபெருமான், மன்னரை சந்தித்தான், அமைச்சர் வாங்கிய குதிரைகள் இவை, என ஒப்படைதான். மன்னர் சிறைக்கு சென்றார், மன்றாடி மன்னிப்பு கேட்டு, மாணிக்கவாசகரை விடுதலை செய்தார். இரவும் வந்தது, நரிகள் பரிகளாக மாறின, நகரம் முழுதம் ஓலத்தின் ஊளை குரல்கள், ஓங்கி ஒலித்தது. பொறுமை இழந்த மன்னன், இது எல்லாம் அமைச்சரின் தந்திர மந்திர சூழ்ச்சி என்று நினைத்தான். மறுபடி அதிரடியாக முறையில் கைதானார் அமைச்சர்.

கங்கை கொண்டான், வைகையை வெள்ளமாகினான். கரைபுரண்டு கொண்டு, தண்ணீர் ஊருக்குள் வர எத்தனித்தது. கரையை உயரத்தும்  ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. முரசுகள் கொட்டப்பட்டன. வீட்டுக்கு ஒருவர் வெள்ளமடைகும் பணியில், கைகொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறந்தது.

3 Meenakshi amman

நகரின் கிழக்கு திக்கில் வாழ்ந்த, கூன் விழுந்த வந்திப்பாட்டிக்கோ கை கால் ஓடவில்லை. அவள் வீட்டில் வேறு யாரும் இல்லை. (தற்போது திரிந்து புட்டு என்கிறோம்) பிட்டு விற்று தன் பிழைப்பை நடந்த வந்தாள், அந்த மூதாட்டி. யார் யாரிடமோ தனக்கு உதவி செய்யும் படி மன்றாடினாள் கிழவி. பயனொன்றுமில்லை, பயமொன்று வந்தது, ராஜ கட்டளையை மீறினால் ஏற்படும் அபாயம் பற்றி அஞ்சினாள்.

பாட்டிக்கு உதவ சிவா பெருமான் மாறுவேடத்தில் இளைஞராக வருகிறார். வேலைக்கு சன்மானமாக, வயிறு முட்ட பிட்டை வாங்கி உண்டார். ஆற்றங்கரைக்கு சென்றார், படுத்து உறங்கினார். வேலை ஏதும் செய்யாமல், சும்மா தூங்கி கொண்டிருந்தவனை பார்த்த மன்னருக்கு, வெள்ளத்தின் வேகத்தை போல கோவம் பீறிக்கொண்டு வந்ததது. சாட்டையால் ஒரு அடி கொடுத்தார். என்ன ஆச்சரியம், அண்ணலின் மேனியை விழ எத்தனித்த அடி, அனைவரின் முதுகிலும் சுரீர் என்று விழுந்தது. இதுவே பிட்டு திருவிழாவின் பூர்வாங்கம்.

4 Murugan Thiruparangundram

ஆவணி திருவிழாவில், இதனை சித்தரிக்கும் வண்ணம் ; தலையில் மண் சுமந்த தங்க கூடையுடன் சிவனும், தனியே மீனாட்சி அம்மனும், பிள்ளையாரும், முருகனும், சண்டிகேஸ்வரரும், வந்திப்பாட்டியும் கோவிலில் இருந்து காலை வீதியுலா கிளம்புகின்றனர்.

5 Manikavasagar

திருப்பரங்குன்றம் முருகன் பாண்டிய மன்னனாகவும், தெய்வானை ராணியாகவும் வேடமிட்டு கலந்து கொள்வதாக ஐதீகம். இதற்காக, திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர், மதுரையம்பதியில் எழுந்தருளுகிறார். அதிகாலையில் மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து கிளம்பும் அனைவரும், பல மண்டகபடிகளில் தங்கினார்கள். மதியம் மூன்று மணியளவில், பிட்டு சுமக்கும் லீலை நடைபெற்றது. சிவனாக ஒரு குருக்களும், மன்னாக ஒருவரும் வேடமனித்து, வைகை கரையில் உள்ள, பிட்டு தோப்பு திருவிளையாடலை அரங்கேற்றினர்.

6 Aarathi Sivan

 

ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளி மண்டகபடியில் எடுத்த புகைப்படங்கள் இவை. நிர்வாகத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி. இதே சமயத்தில், மதுரையில் இன்னமொரு திருவிழா நடந்து கொண்டிருந்தது. மிகுந்த ஆவலுடன் அதனையும் எதிர்நோக்கி தான் பயணம் சென்றேன்….

பி.கு : படங்களை சொடுக்கினால், பெரிதாக தெளிவாக பார்க்கலாம்.

Advertisements

Comments on: "பிட்டுத் திருவிழா – மதுரை" (1)

  1. இந்த விழாக்களைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன். புகைப்படங்களுடன் விளக்கியது நன்றாக இருக்கிறது. முக்கியமாக பிட்டு கூடையுடன் ஈஸ்வரனின் திருக்கோலம் அருமை!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: