~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘ஒளவையார்’ Category

ஏற்றம்

நாற்சந்திக் கூவல் – ௧௧௮ (118)

யார் பெரியவர் அப்பாவா? அம்மாவா ? பட்டிமண்டப மேடைகள் பல கண்ட தலைப்பு. அம்மாதான், கொஞ்சம் சிந்தித்தால் தெரியும். அவள் நம்மை சுமந்தது மட்டுமே போதும், போட்டியில்லா வெற்றி.

பெண்னுக்கான ஏற்றம் என்றும் நிறைந்த நாடு இந்தியா. பரமசிவன் தனது பாதியை அம்மைக்கு கொடுத்தார். தமிழில் பண் இசையை, பிள்ளையார் சுழிப் போட்டு பாடி ஆரம்பித்தவர், புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார். அந்த பிள்ளையாருக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும் துதிகள் பாடி நமக்கு பாடம் சொன்ன ஒளவைப் பாட்டி ஒரு பக்கம்.

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்ற திவ்ய தேசம் உண்டு. ராஜா ராமரின் மூதாதையர், அடைக்கலப் புறாவிற்க்காக தன் உடலை ஈந்த சிபி சக்கிரவர்த்தி கட்டியக் கோவில். அங்கு செந்தாமாரைக்கண்ணன், பங்கஜ வள்ளித்தாயார் சமேதராக உள்ளார். நாழி கேட்டான் வாசல் பிரசித்தம். பெருமால் ஊர் சுற்றி விட்டு வருவாராம். தாயார் ஏன் தாமதம்? இப்ப நேரம் என்ன? என்று கேட்ப்பாளாம். தாயாருக்கு தான் ஏற்றம். அவள் படிதாண்டா பத்தினியாக கொலு வீற்றிருக்கிறாள்.

பெண் விடுதலைக்காக இராமசாமி என்பர் வித்திட்டாராம். எதையும் படிக்காமல் பிதற்றும் மாக்கள் நிறைந்த உலகம் இது. திலகவதியார் வாழ்க்கையை படியுங்கள் – அப்பர் பெருமானின் அக்கா. கனவரை சிறு வயதில் இழந்தவர். பல காலம் சிவ சேவை செய்தவர், அப்பரை சிவ வழி நடத்தியவர். சைவ கோவில்கள் அனைத்திலும் அவர் சிலை உண்டு, அறுபத்தி மூவரில் ஒருவர்.

மங்கையர்கரிசியாரை தெரியுமா ? நின்ற சீர் நெடுமாறப்பாண்டியனின் மனைவி. மதுரைக்கு சம்பந்தரை அழைத்து வந்த பெருமைக்கு உரியவர். மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம், பதிகம் பாட சம்பந்த பிள்ளையார் ஆர்ம்பித்தது – சொக்கனயோ, அங்கையர் கன்னியையோ அல்ல, மங்கையர்கரிசியாரை பாடினார். அது இன்று தேவராம உள்ளது. ஓதப்படுகிறது. பூசிக்கப்படுகிறது.

இராமாயண காவியத்தை எழுதிய ஆதி கவியான வால்மீகி அதற்கு மூன்று பெயர்கள் சூட்டினார்: இராமனின் கதை, புளச்திய வதம் (இராவண வதம்), சீதாயாஸ் மஹத் சரிதம் – சீதையின் மகத்தான கதை.

(இன்னும் எழுதலாம்…)

எழுதலாம்

நாற்சந்தி கூவல் – ௧௧௧ (111)

தினமும் பல விஷயங்களை பற்றி படிக்கிறோம், பேசுகிறோம், சிந்திக்கிறோம். ஆனால் எதையிம் எழுதும் முனைப்பு அமைவது வரமே. அது சிலருக்கு வெகு இலகுவாக அமைகிறது – கொடுத்து வைத்தவர்கள். என்னைப் போல பலருக்கு ஒரு சோப்பேறித்தனம். (தம்பி உட்பட) Procrastination என்பார்கள்.

சொல் மந்திரம் போல் அமைதல் வேண்டும் என்பான் பாரதி.

மந்திரங்கள் அமைய முயற்சியும் பயிற்சியும் அவசியம். ம் என்றால் எட்டாயிரம் பாடல்கள், கட்டளை கழித்தொகைகியில் பாட நாம் என்ன ஆசு கவிகளா? தமிழ் வள்ர்த்த சம்பந்த பெருமானா ?

தமிழை எதோ அரைகுறை மனத்துடன் நேசிக்கிறோம் என்ற தகுதியைக் கொண்ட ஏழைகள் நாம். தமிழ் அன்னை, அவள் நம் தாய், அவளுக்கு பாகுபாடு இல்லை. அம்மைக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றே. அவர் அவர் வயிற்றுக்கு ஏற்றவாரு உணவு படைக்கிறாள். ஒருவனுக்கு எளிய ஓட்ஸ் கஞ்சி, ஒருவனுக்கு மல்லிகை பூ இட்லி, ஒருவனுக்கு முருகல் தோசை, ஒருவனுக்கு வெள்ளை ஊத்தாப்பம், ஒருவனுக்கு மெத்தென இடியாப்பம், ஒருவனுக்கு பலமுள்ள பருப்பு அடை, ஒருவனுக்கு சூடானா பிரியாணி, மற்றும் ஒருவனுக்கு வெறும் கஷாயம்… அவளுக்கு தெரியும் இவன் என்னத்தை செரிப்பான் என்று.

”அம்மா அன்பில் நான் இருக்கிறேன்
எனக்கு ஒரு கவலை இல்லை…
கண்ணென என்னை காக்கிறாள்,
எல்லா பொறுப்பும் ஏறிகிறாள்…”

நம் தகுதியை வள்ர்த்து கொள்ள வேண்டியது நாமே. சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பது ஒரு அதிஷ்டம் என்றாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். யுத்தம் என்று வரும், தெரியாது. ஆனால் வாளை பட்டைத்தீட்டி பயிற்சி செய்வது வைப்பது நம் கடன்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

பாட்டி சொல் தட்டாதே. அதுவும் இவள் பாட்டிகளுக்கெல்லாம் பாட்டி – பார்ட்டி – ஒளவை பாட்டி. சொல் சித்திர கிழவி.

(இன்னும் எழுதலாம்….)

அஷ்டமத்து கஷ்டம்

நாற்சந்தி கூவல் – ௧௦௦(100)
(சனிச் சிந்தனை)

திருமுருக கிருபானந்த வாரியாரின் கட்டுரை தொகுப்பு “சிந்தனை செல்வம்”. பரணில் இருந்த புத்தகத்தை மீட்டேன். மட்டற்ற மகிழ்ச்சி, பழுப்பேரிய மஞ்சள் நிற தாள்கள், மெல்லிய வாசனை, அரிதான ஸ்பரிசம் தான். பயணத்தின் போது சிறிதுபடித்தேன். அதிலிருந்து ஒரு பாடல் மட்டும் இங்கே.

அஷ்டமத்து சனி என்பார்கள். வந்தால் படாதபாடுபடுத்தும், இருக்கதையும் இல்லாமல் செய்யும். ஆளையே சுருட்டி போடும். தலைகீழாக தருணங்கள், தடங்கல்களாக மாறும்… இன்னும் இன்னும் என்ன என்னவோ சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த கஷ்டதசையின் காரணம் : ஜாதக கட்டத்தில், எட்டாம் இடத்தில சனி வந்து அமர்வான் என்பது பொது வழக்கு. ராசி தவிர்த்து இந்த எட்டாமிடத்து சனி எப்படி வரும் என்று ஒளவை மூதரசி அழகான எளிமையான தமிழில் சொல்கிறார்.

காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்
– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி

  1. படிக்காத மூத்த மகனும்
  2. பக்கத்தில் உள்ள பகைவனும்
  3. வரவுக்கு மிஞ்சமால் செலவு செய்யும் மனையாளும்

கொண்டவர்களுக்கு எந்நாளும் அஷ்டமத்து சனி என்கிறாள் தமிழ் கிழவி

இப்ப சொல்லுங்க உங்கள்ல எத்தனை பேருக்கு, எட்டாமிடத்து சனி ? (எனக்கு இல்லப்பா!). என்றைக்கு இது பொருந்தும். ஆனாலும், இன்றைக்கு தமிழ் பாட்டி இருந்திருந்தால், என்ன எழுதியிருப்பாள் என்ற சிந்தனை, சிரிப்பை மூட்டுகிறது. நிதர்சனத்தில் உள்ளது நவரசமும் !

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: