~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘கம்பன்’ Category

நன்றி அறிவிப்புக’ழ்’ !

நாற்சந்தி கூவல் –  ௮௩(83)

(பல நன்றிகள்,சில அறிவிப்புகள்)

நன்றி அறிவிப்புக’ழ்’ !

(தலைப்பே கோளாறு………. x-( பின்ன என்னத்துக்கு நாற்சந்தி : தமிழ் பிழைகளின் தலைமையாகம் :))))

I

இந்த இன்ப நேரத்தில் ஒரு பதிவு அவிசயமா என்று எனக்கே தெரியவில்லை. இந்த ஒரு வாரத்துக்குள் எதாவது ஒரு பதிவாவது ஏழுதாமல் விடில் தமிழ் தலைவர் கோபித்து கொள்வார். (அவர் பெயர எல்லாம் கேக்கப்பிடாது). எனவே நாற்சந்தியின் தல தீபாவளி வாழ்த்துகளுடன் இந்த பதிவு சுபமா துவங்குகிறது. என்னை பொறுத்த வரை இந்த வருட தீபாவளி, சொல்லி புரிய வைக்க முடியாது, காணுங்கள்

என்னடா இந்த அமளி துமளி என்று கேட்டபவர்களுக்கு மட்டும் :  நாற்சந்தி தளத்தின் தலை பட்டையில் நீங்களே பார்த்து இருக்கலாம். ஆம் உங்கள் ஆதரவுடன் நாற்சந்தி நாலாயிரம் ++ பார்வைகளை தாண்டி சென்று விட்டது. இதற்கு முக்கிய காரணம் இருவர். ஒருவர் என் ஆசான் கல்கி (பதிவு : வந்தியத்தேவன்)  , மற்றவர் எனக்கு சிறிது மட்டுமே பரிச்சியம் உள்ள கம்பர் (பதவி : கம்பன் கேள்விகள்). எப்படியும் 4000 என்பது எவ்வகையில் பார்த்தாலும் மிக பெரிய இலக்கு / எண் !!!!

II

இதனால் நம்பிக்கை ததும்ப facebookஇல் நாற்சந்திக்கு என தனி பக்கம் துவங்கி உள்ளேன். பக்கத்தின் விலாசம் : http://www.facebook.com/pages/Naarchanthi/357487460942285 உங்கள் லைக், விரைவில் ஏதிர்பார்க்கப்படுகிறது. இதவரை நான்கு பேர் லைக் குத்தி என்னை ஆச்சிரியப் படுத்தி விட்டனர். நாற்சந்திக்கும் இந்த ‘நா’வுக்கும் நல்ல ராசி. (நாலாயிரம், நான்கு….) இது நிற்க. ரஞ்சனி அவர்களுக்கு என் நன்றிகள். சமீப காலாமாக நான் செய்யும் அத்தனை முயற்ச்சிகளுக்கும் மாமி கை கொடுத்து வருகிறார்.

III

பல நாள் கணவாக ஒரு இணைய ஆரம்பம், இசை இன்பம். ஆம் இசை பா isaipaa.wordpress.com பற்றி தான் சொல்கிறேன். நானும் தமிழ் தம்பியும் சேர்ந்து செய்யும் ஒரு பயணம். நீங்களும் இதில் சேருங்கள்.  தளத்தின் முதல் பதிவில் இருந்து சில வரிகள் :

உலகில் உள்ள உயிர்களையெல்லாம் இசையச் செய்வதால்தான் அது இசை. இசை என்பது சிரிப்பையும், அழுகையும் போல உலகை வசப்படுத்தக் கூடிய அனுபவம். உள்ளத்தையும் வசப்படுத்தக்கூடியது. உங்களைப் போல நாங்களும் வசப்பட்டோம். பரவசப்பட்டோம். உங்களுக்கும் அதே உணர்ச்சியை, அனுபவத்தை பகிர்ந்து பன்மடங்காக்கி  தர முயற்சிப்பதுதான், இந்த தளத்தின் அடி நாதம்!

வாருங்கள் இசையோடு பயணிப்போம். பாக்களுடன் பரவசம் மிக விரைவில் உங்கள் வசம்!

தமிழர்களின் தனி கடவுள் முருகனில் முயற்சியை ஆரம்பித்து, கமல், இளையராஜா என்று சென்று உள்ளோம். வாசகர் விருப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது வரை இரண்டு விருபங்களை பெற்று உள்ளோம்!

IV

திரும்பவும் கம்பருக்கு வருவோம். கமபன் இணைய வானொலி, அதாங்க கம்பன் பாட்-காஸ்ட தொகுப்புகள். இவர்கள் செய்யும் பணி மிக மிக அரிதானது, சுவையானது. எழுத்தாளார் சொக்கன் ஆரம்பித்து இன்று சைலன்ட் சுறாவளியாக தமிழ் இணய மக்கள் மத்தியில் கம்பன் வலம் வருகிறார். நீங்களும் நிச்சியம் சென்று கேட்டு, மகிழ்ந்து, சிந்தித்து, பகிர வேண்டிய தளம். கம்பன், தமிழ் கவி அல்ல என்பது பலரது கூற்று. சென்று சில பேச்சுகளை / பாடல்களின் விளக்கத்தை கேட்டு விட்டு நீங்களே முடிவு செய்ய வேண்டியது தான் மிச்சம்.

குறிப்பாக : சொக்கன் அவர்கள் பேசும் முறை : இன்று நிஜ வாழ்வில் நடக்கும்  சம்பவத்தை வைத்து, அதற்கு பொருத்தமான ஒரு கம்பன் பாடலின் விளக்கம். கண்ணபிரான் அவர்கள் உரைகள் தமிழ் தேன் ஒழுகும். ராகவன் அவர்கள் சொற்பொழிவுகள் பறந்து விரிந்த கண்ணோட்டதோடு வித்தியாசாமாக இருக்கும். சுஷிமா சேகர் : பெண்களின் உணர்வுகளை மிகவும் தெளிவாகவும், நேர்த்தியாகவும் எடுத்து காட்டுகிறார்…..  இன்னும் பலர் உள்ளனர், சென்று செவி மடுத்து உணருங்கள.

பேச்சுகளில் சில கருத்து வேறுபாடு கொண்டு, பேசி தீர்த்து பல நண்பர்களை பெற்று உள்ளேன் என்பதில் மிக்க மகழ்ச்சி.

V

உங்களிடம் இருந்து ஒரு உதவி :  மேலே சொன்ன கமபன் இணைய வானொலிக்கு ஒரு தலை பட்டை (header image) செய்து தர வேண்டும். எங்கள் யாருக்கும் இந்த பிரிவில், ஒரு வித பரிசியமும் இல்லை. அது போல ஒரு banner imageம் தேவைப் படுகிறது. (எடு – நாற்சந்தி வலது இறுதியில் உள்ள DOSA banner)  எனவே உங்கள் படைப்புகளை சொக்கன் அவர்களுக்கு ட்விட்டர் மூலம் அனுப்பவும்.  அதில் உங்கள் பெயரையும் சின்னதாக சேர்த்து கொண்டால், தவறு ஏதும் இல்லை. அட்வான்ஸ் நன்றிகள் !

VI

ஆஸ்கார் நாயகன், இசை புயல் , ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இணையத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆதாகப்பட்டது அவரின் அடுத்த இசை ப்ராஜெக்ட்டை முன்னிட்டு நம்மிடம் சில கேள்விகளை முன் வைக்கிறார். அதற்கான பதில்களை நீங்கள் காணொளியாக அவர்க்கு பதவி செய்து அனுப்ப வேண்டும். கேள்விகள் மட்டும் இங்கே :

  • நாடுகளின் எல்லைகள் (கோடுகளை ) நீக்குவது எப்படி ?
  • ‘விதி’ என்பதை நீங்கள் நம்ப காரணாம் என்ன ?
  • உங்களை பொறுத்த மட்டில் நல்ல இசை என்றால் என்ன ?
  • நல்ல மனிதனாக தேவியான குணங்கள் என்ன, என்ன ?
  • உங்கள் பொது (social)  வாழ்கையை வழி நடத்துவது எது : கலாச்சாரமா, நம்பிக்கையா, மதமா, சட்டங்களா ?

நல்ல கேள்விகள். யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்களும் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்!

 முழு அறிவிப்பு – சொடுக்கவும்

VII

92 ஆண்டுகள் தாண்டியும் தமிழகத்தில் வெற்றி நடை போடும் ஆன்மிக, பண்பாட்டு மாத இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நாளை முதல் நமக்காக மட்டும் : facebook பக்கம் ஆரம்பிக்கிறது. இத்தனை ஆண்டிகளில் வெளி வந்த சுவையான செய்திகள் அந்த பக்கத்தில் மறுபடி  வெளிவர உள்ளது. விரைவில் இணைப்பை பகிர்த்து கொள்கிறேன். வந்து விட்டது : இதோ www.facebook.com/srkvijayam  ஒவ்வொரு மாதமும்  விஜயம் : 1,50,000 பிரதிகளுக்கு மேல்  அச்சிடப்படுகிறது. எத்தனை வாசகர்களை கொண்டது என்பதை நீங்ளே அறிக.

VIII

ஏதோ கலவையாக ஒரு பதிவு எழுதி விட்டேன். இன்னும் ஒண்ணு மட்டும் :  கல்கி தீபாவளி மலர் சூப்பர். வாங்கலாமா வேண்டாமா, சிந்திதேன். விலை நூற்றி இருபது ஓவா. அட்டை படத்தை பார்த்த உடன் முடிவு செய்து விட்டேன். அட்டையில் சொல்லின் செல்வன் அனுமன், அழகு படம். சினிமா செய்திகள், குட்டை பாவாடை அணிந்த மங்கையர்கள் படங்கள் இல்லாமல் பல சுவையான தகவல்கள். ஆன்மீகம் நிரம்ப உள்ளது. கம்பன்,ஓவியம்,கவிதை,சிறுகதை,கட்டுரை என அட்டகாஸ். ஒரு பார்வை தான் பார்த்து உள்ளேன். படித்து விட்டு சொல்கிறேன். நமது டிவி போல விளம்பரங்கள் அதிகம். 250 பக்கங்களும் வழவழ தாள்கள்.

கலை மகள் மற்றும் அமுத சுரபி தீபாவளி மலர்களும் நன்கு உள்ளதாம். பார்த்து விட்டு வந்து சொல்றேன். மறுபடியும் தீபாவளி நல்வாழ்த்துகள். நேற்று ஒரு பாடல் கேட்டேன். அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம் என்று நினைக்கிறேன். அருமையன இசை, சாஹித்தியம்!

நாற்சந்தி நல்வணக்கங்களுடன்,

ஓஜஸ் 🙂

பிகு : அடுத்த பதிவு ‘சமையல் சார்ந்தவை’யா இருக்க வாய்ப்பு உள்ளது! தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு ஒன்று ………. :p

Advertisements

கம்பன் கேள்விகள் ?

நாற்சந்தி கூவல் – ௮௨ (82)

(கம்பன் பதிவு)

கம்பன் கேள்விகள் ?

கம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.

Kambar Image from the web

கம்பர் – இணையப் படம்

அந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே ?

அதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.

மேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.

ஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு ?

1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே! இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.

மேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.

வானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் ?

வெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.

மேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்!!!

மேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.

இலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா ? இலக்குவன் பெயர் காரணம் ?

இல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.

மேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.

சொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana –  Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”

இந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.

மேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்!

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: