~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘சுவாமி விமூர்தானந்தர்’ Category

அச்சில் ஆஸ்கர்!

நாற்சந்தி கூவல் – 80(௮௦)

( _____ப் பதிவு)

அச்சில் ஆஸ்கர்…

ஆஸ்கார் வாங்கியதுப் போல மகிழ்ச்சி, இந்த ஆஸ்கரினால்.

பேராசிரியர் பாமதிமைந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். மாதம் தோறும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் அவர் எழுதிய(ம்) சிறுகதைகள் வெளிவரும். குறிப்பாக ‘உயிர் மெய்’ என் மனதை, சிந்தையை தொட்டக் கதை. மறக்காமல் அதனைப் படியுங்கள்.

மைந்தனுக்கு, விஜயம் ஆசிரியர் மிகவும் நெருங்கிய நண்பர் . அதன் பேரில் இருவரையும் நன்கு அறிந்து, சிநேகம் செய்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்தானந்தர் அவர்கள், ஆஸ்கர் பற்றி ஒரு காணொளியை அனுப்பி வைத்தார். அதை பார்த்து விட்டு, அதை பற்றி சுருக்கமா எழுதி அனுப்ப சொன்னார். அதன் விளைவு :


(விஜயம் இலவச மின்-புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட Sanpshots இணைக்கப்பட்டுள்ளன)

அச்சில் பெயரை பார்த்து வியந்து போனேன். இது ஒன்னும் பெரும் வெற்றி அல்ல. யாரும் இவரை பற்றி எளிதாகவும், விரைவாகவும், சுலபமாகவும் சில பத்திகள் எழுத்தலாம். அத்தகு மனிதர் இந்த ஆஸ்கர். நடந்து முடிந்த லண்டன் பாரா-ஒலிம்பிக்ஸ்ஸில் கூட பல தங்கப் பதக்கங்கள் வாங்கி உள்ளார். இவரை பார்த்து நாமும் வளருவோம்!

ஏனோ பெயர் மட்டும் ‘ஓஜஸ்புத்திரன்’ என பரிசுரமாகி உள்ளது. காரணம் தெரியவில்லை. அவர்களும் சொல்ல வில்லை. ஒரு வேளை ‘ஓஜஸ்’ இடம் இருந்து இன்னும் சிற்பாக ஏதேனும் எதிர்ப்பார்த்தார்கள் போலும். இதனால் வருத்தமும் எதுவும் இல்லை. ஆனால் எழுதியது எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்பிடியே வந்துள்ளது. அது வரை மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை தந்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் ஆதரவுக்கும் ஊக்குவிப்புகும் தலை தாழ்ந்த வணக்கங்கள். நாற்சந்திக்கு நல்லப் பாராட்டுகள். நன்றி!

கல்கிக்கு மனம் கனிந்த நன்றிகள். தாயாய், தந்தையாய் நம்மை வாழ, வளர வைக்கும் கன்னி தமிழ் வாழ்கப் பல்லாண்டு!!!!

நாற்சந்தி நன்றிகள் : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மற்றும் அதன் ஆசிரியர்

( இந்த மாத – அக்டோபர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தை இலவசமாக பதிவிறக்க = சொடுக்கவும்)

நல்ல நடிகர்களா நாம்?

நாற்சந்தி கூவல் – ௭௧ (71)
(மீள் பதிவு)

நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் மாதம் மாதம் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் வந்து சேர்ந்து விடும். இந்த இதழுக்கு இப்பொழுது 92 வயதாகிறது. அதில் வரும் படக்கதைகளையும், கடைசி பக்க ஹாஸ்ய யோகத்தையும் நான் ரசித்து படிப்பேன். வயது ஏற ஏற, பல பக்கங்களை படிக்கும் பக்குவம் வந்தது. இப்பொழுது எல்லாம், மாதம் ஒரு விருந்தாய் அமைகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அத்துடன் சேர்ந்து இந்த பண்பாடு பத்திரிக்கையும் மலர்ந்து வருகிறது. மாதம் தோறும் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் இணையத்தளத்தில், மின் புத்தமாக வெளிவருகிறது. பதிவிறக்க சொடுக்கவும்.

‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’. இந்த மாதம் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை மட்டும் உங்கள் பார்வைக்கு. ‘உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னது நமக்கு தெரியும். அது சரி, ஊர் கதை முழுக்க நமக்கு அத்துபடி தானே . நம்ம ஊர் கதைகளிலும், காவியத்திலும், வேதங்களிலும் இதே உண்மை பல கலாம் முந்தியே சொல்லப்பட்டுள்ளது. இது நிற்க.

யார் சொன்னால் என்ன…. நாடகமென்பது உண்மை என்னும் பட்டசத்தில், எப்படி எல்லாம் நடிக்க வேண்டும்? / எவ்வாறான வாய்புகள் நம் முன் உள்ளன , என்பது போல பலவற்றை இந்த கட்டுரை வெளிச்சதுக்கு கொண்டு வருகிறது. படித்து , பகிர்ந்து, சிந்தித்து மகிழுங்கள்.

விஜயம் ஆசிரியர் தான் இந்த கட்டுரையின் ஆசான். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். உங்கள் பணி சிறக்க, உலகம் உயர்க!!! நீங்கள் கீழே எழுதும் கருத்துகள் அனைத்தும் ஆசிரியர் பார்வைக்கு செல்லும்.

 

நாற்சந்தி நன்றிகள் : ஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: