~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘பெரியார்’ Category

விபூதி பெரியார்

நாற்சந்தி கூவல் – ௧௮(18)

(பெரியார் பதிவு)

பெரியார் நினைவுதினம்(24 டிசம்பர்) சிறப்பு பதிவு – 3

விபூதி பெரியார்

பெரியார் மற்றும் திரு.வி.க நல்ல நண்பர்கள். ஈரோடு பக்கம் வரும் பொழுது எல்லாம் திரு.வி.க தன் தோழர் வீட்டில் தங்குவது வழக்கம்.

காலம் போன போக்கில், இருவரும் வெவ்வேறு திசை நோக்கி பயணம் செய்தனர். பகுத்தறிவு என்றார் பெரியார். ஆனால் பழுத்த சிவ பக்தரானார் திரு.வி.க.

பல ஆண்டுகளுக்கு பின், வேலை நிமித்தமாக திரு.வி.க ஈரோடு வந்து சேர்ந்தார். பெரியார் வீட்டில் தங்குவதாக அவருக்கு உத்தேசம் இல்லை. ஆனால் பெருந்தன்மை கொண்ட பெரியார், அவரை தமது வீட்டிக்கு வரும் படி அன்பாக பணிந்து ஒரு தூது அனுப்பினார்.

தோழன் சொல்லை தட்ட விரும்பாமல், திரு.வி.க அவர் வீட்டில் தங்க இசைந்தார். காலை குளித்து முடித்த பிறகு, குளியலறை விட்டு வெளியே வந்து திரு.வி.க, ஒரு அதிசயமான காட்சியை கண்டார்.

பழுத்த பகுத்தறிவு கொண்ட பெரியார், தம் கையில் ஒரு விபூதி மடலுடன், தன் நண்பருக்காக காத்து கொண்டு நின்றார். முக மலர்ச்சியுடன் திருநீர் இட்டு கொண்டார் திரு.வி.க. இருவரும் அகம் மகிழ்ந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

இச்சிறு சம்பவத்திலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் நிறைய உண்டு. சிந்தியுங்கள்.

(என் தாதா வாய் மொழியில் சொல்லி கேட்ட ஒரு சுவையான சம்பவம். இந்த {மட்டமான} தமிழ் வடிவம் என்னுடையது)

நாற்சந்தி நன்றிகள் : என் அன்பு தாதாவுக்கு

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: