~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘Uncategorized’ Category

என்னை நானே…

நாற்சந்தி கூவல் – ௧௦௬(106)
(? பதிவு)

என்னை நானே தேடுகிறேன் !
நேரம் எங்கே ?

என் மேல் எனக்கே கோவம் !
பழைய வேகம் எங்கே ?

என்னை நானே நேசிக்கிறேன் !
பழைய நட்புகள் எங்கே?

என்னை நானே கேட்கிறேன் !
வாசிப்பு போதுமா ?
எழுத வேண்டாமா ?

என்னுள் நானே மகிழ்கிறேன் !
இசை வெள்ளம் காக்க….

சக்தி, சொல் மந்திரம் போல்
அமைய வேண்டும் !
பாரதியின் விண்ணப்பம்,
யாவருக்கும் பொருந்தும்.

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் _/\_

 

குட்டி சுட்டி விஷ்ணு

 1. ஒரு அன்னையின் ஆனந்த கீச்சுகளின் தொகுப்பு!!!! இப்படி ஒரு தாயும் மகனும்…….. வாழ்க இவர்கள் அன்பு பல்லாண்டு. சாந்தி மற்றும் அவர்கள் குட்டி சுட்டி புதல்வன் விஷ்ணு அவர்களுக்கு நன்றிகள்.

  குழந்தைகளின் கேள்விகளை நாம் நன்கு ரசிக்கலாம். சில சமயம் கோவம் கூட வரும். ஆனாலும் இந்த தொகுப்பு அருமை. சிந்திக்க, சிரிக்க வைக்கிறது. அடுத்து முதல் வேலை சாந்தி அவர்களை பாலோ செய்வது

 2. Shanthhi
  உண்டியல் சாவி பத்திரமா இருக்கட்டும்னு உண்டியல் உள்ளயே போட்டாசசாம்்! 😮 @n4ndhu #என்னத்த சொல்ல :-))
 3. Shanthhi
  “போட்டோல இருக்கற bubbles எப்பயுமே உடையாதில்லம்மா?! “- @n4ndhu :-))
 4. Shanthhi
  நான் : சொன்ன பேச்ச கேளு .மகன் :நீ சொல்ற பேச்சை காதால கேக்கனும் அவ்வளவு தான? சரி. #biggest bulb ever :-!
 5. Shanthhi
  மகன்: (paper&penடு வந்து) உனக்கு பிடிச்ச thingஎன்னம்மா? நான்:கோவமாக “nothing” அடுப்புகிட்டவராத போ .மகன்:nothingஆ! ரொம்ப காமெடியா பேசறமாநீ
 6. Shanthhi
  “இந்த Geno (பொம்மை) கொஞ்சம் வளர்ந்துருக்கான்னு பாத்து சொல்லும்மா “ன்னு கேக்கறான் மகன் 😮 #my @n4ndhu :-))
 7. Shanthhi
  நந்்து :நான் braveஆ இருக்க ஹெல்ப் பண்ணும்மா. நான்:என்ன செய்யனும்? . நந்து : வந்து பாத்ரூம் லைட் போட்டுவிடு 😮 @n4ndhu
 8. Shanthhi
  நான்:இப்பதான குளிச்ச,கைகழுவலன்னா பரவால்ல.சாப்டு லேட்டாகுது. மகன்:handwashsong வேணும்னா பாடல ஆனா கண்டிப்பா கை கழுவிட்டுதான் சாப்டுவேன ்:-o
 9. Shanthhi
  என்பையன் கண்ணை சுருக்கி என்முகத்தை பாத்தா -நான் பொட்டு வச்சிக்கலைன்னு அர்த்தம் #kidexpression 🙂
 10. Shanthhi
  lion king ஆ இருந்தாலும் சோப் போட்டு குளிப்பாட்டும்போது கண்ண மூடிக்கனும் #சிங்கம் பொம்மைகிட்ட என் மகன :-)்
 11. Shanthhi
  நான் :கடைசி வாய்சாதத்துல தான் யானை பலம்,ஒழுங்கா சாப்பிடு .மகன் : அப்ப கடைசி வாய்சாதத்த முதல்லயே குடுத்துடு.
 12. Shanthhi
  துடைப்பம் அளவுக்கு கூட வளராத வாண்டுகள் “நானே க்ளீன் பண்றேன்”என்று பெறுக்கும் அழகை பார்க்கவே பொருட்களை கீழே கொட்ட விடலாம் 🙂
 13. Shanthhi
  மகன் : “ஏம்மா இந்த நிலா வேற யார் கூடயும் போகாம நம்மளோடையே வருது ?”
 14. Shanthhi
  மகன்:தேன் super டம்ப்ளர்லகுடேன். நான்:தேனெல்லாம் மருந்து ,சாப்பாடுமாதிரிசாப்டகூடாது.மகன்:தேனீ மட்டும்இதையே சாப்பாடாசாப்டுது? #நேற்றையபல்ப்
 15. Shanthhi
  samosa மேல தக்காளி சாஸ் விட்டுட்டு” இது volcanoமாதிரியே இருக்கு”ங்கறான் என் பையன் #:-)
 16. Shanthhi
  பீர்பாலும் தெனாலிராமனும் ஒரேமாதிரி புத்திசாலியா இருக்காங்க.அவங்க மீட்பண்ணி பண்ணிருப்பாங்களா?பண்ணிருந்தா goodfriends ஆகிருப்பாங்க @n4ndhu 
 17. சாந்தி மேடம், மேலும் இது போல உங்கள் மகனின் சேட்டை கேள்விகளை கீச்சுங்கள். உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். விஷ்ணு தம்பி உனக்கும் தான். சமத்தா இது போல உங்கள் அம்மாவை நித்தம் நித்தம் கேள்விகள் கேள்.

  இதை படித்து விட்டு, என்னுடைய பாலிய காலத்து வாழ்கையை சிந்தித்து சிரித்து சந்தோசம் கொள்கிறேன். நீங்களும் தானே………………………..

தமிழ் ட்வீப்ஸ் #1

 1. sweetsudha1
  எல்லார் கிட்டயும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை கண்டுபிடிச்சிட்டா நமக்கு எல்லாரையும் பிடிக்க ஆரம்பிச்சிடும்
 2. maethaavi
  உன்னில் இருக்கும் நீயும் என்னில் இருக்கும் நானும் ஒரு துவந்த யுத்தம் நடத்துகையில் வீழ்ந்து விழுவது நம்மில் இருக்கும் நாம்.
  Sat, Aug 04 2012 00:45:42
 3. minimeens
  ╔════════════════════╗ ║██░░░░░░░░░░░░░░░░░░╚╗ ║██░░░░░LowBattery░░░░░░ ║ ║██░░░░░░░░░░░░░░░░░░╔╝ ╚════════════════════╝ #கடுப்பு #ஸுட்டது
  Thu, Aug 09 2012 17:51:51
 4. saichithra
  காப்பி ரைட்டாமே..சே.. இது தெரியாம இத்தனை நாளா ஸ்கூல்ல காப்பி அடிக்காம இருந்துட்டேனே!! 🙂
  Sun, Aug 05 2012 06:37:46
 5. iamthamizh
  ஹிட்லர பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு ஹிட்லர பிடிக்கும்னு அர்த்தம்.
  Wed, Aug 08 2012 06:27:42
 6. siva_buvan
  நல்ல நினைவுகளை நிறைத்த மனதில் தினம் கொண்டாட்டம்தான்.
  Wed, Aug 08 2012 20:11:59
 7. iamthamizh
  குற்றத்தின் பரிமாணத்தைப் பொறுத்தது -அதை மன்னிப்பதும், மறப்பதும்.
  Wed, Aug 08 2012 06:26:03
 8. skpkaruna
  முதன் முறையாக எண்ணையில்லாத தோசை கேட்டேன். அடப்பாவிங்களா! அப்போ இத்தனை நாளா ருசி எண்ணையிலா இருந்திருக்கிறது?
  Thu, Aug 09 2012 05:46:41
 9. iamthamizh
  காந்திய பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு காந்திய பிடிக்காதுனு அர்த்தம்.
  Wed, Aug 08 2012 06:27:08
 10. karaiyaan
  கவசம் போடலன்ன திவசம் தான் – Wear Helmet #OldTweet
  Sat, Aug 04 2012 10:01:32
 11. sweetsudha1
  தோல்வியின் கோபத்துக்கு வீர்யம் அதிகம், வெற்றியின் புன்னகைக்கு மதிப்பு அதிகம் …!
 12. thoatta
  இந்திய ஆண்களும் பெண்களும் சமமாயினர், ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில்.!

ட்வீட் எம்பெட்

நாற்சந்தி கூவல் – ௫௮ (58)

(சோதனைப் பதிவு)

ட்வீட் எம்பெட் செய்வது எப்படி? என்று இந்த தளத்தில்  படித்தேன். எனவே இங்கு சிலவற்றி சோதித்து பார்கிறேன்,

(இந்த வாரம் வெற்றி நடை போடும் “பெண் அழகி” – ட்வீட்)

(ஆசான் கல்கி அவர்களின் எழுத்தோவியங்கள்…)

ஆஹா! அஹா! அம்சமாக உள்ளது எம்பெடிங் . நன்றி ட்விட்டர்.

சாத்தியமா…

நாற்சந்தி கூவல் – ௫௩(53)

(சும்மா பதிவு)

சாத்தியமா…

பல நாடளுக்கு முன் ஒரு படத்தை இணையத்தில் பார்த்தேன். (இது போல கருவி உங்கள் கையில் சிக்கினாலோ/ நீங்கள் எங்காவது பார்த்தாலோ, தயவு செஞ்சு எனக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க)

முதலில் அந்த படம் :

நான் பார்த்தவரைக்கும் பல லாப்டாப்புகள் (என்னுடையது உட்பட), அதிவிரைவில் பவர் இன்றி படுத்துவிடுகிறது.

சும்மாவே இங்கு கரெண்ட் தொ(இ)ல்லை, இதில் இந்த மூன்று மணி நேரம் கூட தாங்காத ஓட்ட பாட்டரியை வைத்து கொண்டு நாம் படும் பாடும், சொல்லி மாளாது.

இதனால் தான் இத்தனை நாள் பதிவுப் போடாமல் இருந்தியா? என்று மட்டும் கேட்காதீர்கள்.

வேலைப் பழு கோடியாக கூடி விட்டது, படிக்க வேண்டிய (சத்தியமா பாட சம்பதமானவை இல்லை) புத்தக சுமை அதிகரித்து விட்டது, என்று எல்லாம் நான் புருடா விட்டால் நீங்கள் நம்புவீர்களாகும்.

என்ன செய்ய, நானும் இந்த ‘சோம்பேறி’த்தனத்தின் அராஜக, கொடுங்கோல் ஆட்சிக்கு உட்பட்ட பிரஜை தானே. இந்த நாட்டை (நிலைமையை) விட்டு வெளிவர தெரிந்தும், வெளியேர மறுப்பவன் நான். (ஏண்டா இதில் உனக்கு இத்தனை பெருமை?)

இறுதியாக இரு (நாற்சாந்யின்) நற்செய்திகள்:

1) எழுதுவதை குறைக்க முடிவு செய்துள்ளேன். (அப்பாடா தப்பிச்சோம்) முதில் நிறைய படிக்க வேண்டும். மேலும் மேலும் புத்தங்களை/இதழ்களை படிக்கும் பொழுது, ஒன்று நல்லா தெரியுது : எனக்கு தெரிந்த தமிழும்/செய்திகளும்/விஷயமும் மிக மிக கம்மி. ஆனால் என் எழுத்து எப்படி என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் ( ‘கமெண்ட்’டாக சொல்லவும்)

2) என் அன்பு தோழன், என்னையும் பலதரப்பட்ட தமிழ் சம்பந்தமான துறைகள் பக்கம் கொண்டு செல்லும் “தமிழரசு” அவர்களின் வோர்ட்ப்ரஸ் விஜயம். நீங்களும் சென்று பாருங்கள்: http://tamiluyirppu.wordpress.com மிக்க அருமை. தலைவர் ‘தமிழரசு’ தமிழ் சூப்பர்.

போச்சு போலியோ…

நாற்சந்தி கூவல் – ௪௯(49)

(போலியோக் கூவல்)

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை ஓட்டு போடா முடியுமா, ஆனால் அதன் சுண்டு விரலில் மை உள்ளதே…. ஓஹோ போலியோ மருந்து குடித்த குழந்தை அது. மிக்க மகிழ்ச்சி!!!

ஜனநாயகத்தின் மீது எனக்கு பல முறை கோவம் எற்ப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ மட்டற்ற மகழ்ச்சி. போன ஆண்டு, இந்தியாவில் போலியோ முழுமையாக ஓடுகப் பட்டுள்ளது.

இது தொடர நாம் உதவி செய்ய வேண்டும். பக்கத்தில் உள்ள மருத்துவமணைக்குகோ, பேருந்து நிலயத்துக்கோ, நாற்சந்திகோ சென்று, சிசுகளுக்கு தவராமல் இன்று மாலை ஆறு மணிக்குள் சொட்டு மருந்து போடவும்.

இந்த பதிவின் நோக்கம் இத்துடன் முடிவு பெருகிறது. மேலும் உங்களுக்கு போலியோ பற்றி அறிந்த கொள்ள ஆரவம் இருந்தால் மேலே படிக்கவும்.

(சில விக்கிபீடியா தகவல்கள் மற்றும் படங்கள் என் கருத்துடன்)

 • 1840ஆம் ஆண்டு இந்த வியாதி கண்டறிய பட்டது.
 • வைருஸ்ஸால் ஏற்படும் உபாதி இது.
 • முக்கியமாக முதுகு தண்டையும், முலையும் பாதிக்கும் நோய்.
 • போலியோ வந்து விட்டால், அதனை குணப்படுத்த எந்த வழியும் இல்லை. (சொட்டு மருந்துடன், வருமுன் காப்போம)
 • முன்பெல்லாம் வருடா வருடம் சுமார் மூன்று லக்க்ஷம் பேர் போலியோவால் மரணத்தை சந்தித்தனர், நொண்டியானவர்கள் ஏராளம்
 • 1950ஆம் ஆண்டு இதற்கான் மாற்று மருந்து கண்டுபிடிக்க பட்டது.

(இது போல எய்ட்ஸ் வியாதி குணமாக எதாவது கண்டறிந்தால் நலம். அதை தடுக்க மக்கள் முயற்சி செய்தல், தங்களை கட்டுப்படுத்தினால் நன்று)

சமர்த்தாக இந்த தேனி சொல்வதை கேளுங்கள்:

வருடம் தோறும் இந்த போலியோ இல்லாத இந்தியாவை, உலகை உருவாக்க நாம் ஒத்துழைப்போம்.

போலியோ போன்ற நோய்களால் பாதிக்கபடாதவர்கள் நாம். இது நாம் செய்த நன்மைக்கு பரிசு. எனவே ஒழுங்கா உழைத்து, மனமுவந்து கொடுத்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, இந்த உலகுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும், நமக்கும் பெருமை சேர்போம் ஆகுக.

பலமே வாழ்வு, பலவீனமே மரணம் – விவேகானந்தர்

பொறுப்புடன் பொழப்பேத்த பய,

ஓஜஸ் 😉

{ எனது ட்வீட் : “இந்த ட்விட்டர் குருவிக்கு என்ன வயசு? <5 னா சொல்லுங்க.. #போலியோ_சொட்டு_மருந்து_போட ” }

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: