~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘அம்மா’

உயிர்

மோகன் டீயுடன் சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பருகினான். பதினெட்டாம் மாடி, பால்கனி. காலை ஆறு மணி, சில்லென காற்று, நீண்ட வானத்தின் நடுவில் சிவப்பு நிற சூரிய உதயம், அம்மாவின் நினைவை, அவள் விசால நெத்தியில் மிக நேர்த்தியாக குங்குமம் வைத்திருப்பாள்.

சித்தி அனுப்பிய வாட்சப் குறுச்செய்தியை மீண்டும் வாசித்தான். பரவசம் பொங்கியது. சோகம் தொண்டைய கவ்வியது. அம்மா அவளிடம் சொன்னாளாம்: அவனது காலை காபி தான், என்னை கடைசி பத்து ஆண்டுகள் உயிருடன் வைத்திருத்த அமிர்தமான மருந்து.

இந்த பழக்கம் என்று ஆரம்பித்தது என்று நினைவில் இல்லை. குறைந்து இருபத்தி ஐந்து வருடங்களாகியிருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அம்மாவுக்கு காபி எனக்கு டீ. ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து மெல்ல மெல்ல சுவைத்து அருந்துவோம். முதலில் எழுபவர் பாணத்தை அன்புடன் தயார் செய்து ஆர்வத்துடன் காத்திருப்போம். எத்தனை எத்தனை பரிமாற்றங்கள். அரசியல், சினிமா, விளையாட்டு, கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவம், கேலி, கிண்டல், புரணி, முக்கிய முடிவுகள், அறிவுரைகள், செல்ல கோபங்கள்…. அம்மா எனக்காக பார்த்த பெண்னைப் பற்றி சொன்னது அத்தகு ஒரு பொழுதில், அவள் பாட்டியாக போகிறாள் என்று இன்பம் தந்தது அப்படி ஒரு வேளையில், இன்னும் இன்னும் அடுக்கலாம்.

வேலை மாற்றல் காரணமாக நான் பம்பாய் வந்து எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டது, ஆனால் எங்கள் அதிகாலை பந்தம் தொடர்ந்தது. முதலில் தொலைபேசி மூலம் பின் இணய வழி. முதலில் அவள் வெகுவாக குழம்பினாலும், எளிதில் விடியோ கால் மார்கத்தை கற்று தேர்ந்தாள். எது எப்படி போனாலும், நாங்கள் இருவரும் ஒரே நேர் கோட்டில் தேனீர் அருந்தினோம். வெயில், மழை, பணி, பிணி எல்லாம் எங்களை அசைக்காமல் அனுபவிக்கவிட்டது அவன் செயல்.

இன்றும் மனம் அவள் குரலுக்காக தேடுகிறது, அந்த அன்பின் கதகப்பை நாடுகிறது. உனக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், எனக்கு நீ அம்மா ஒருவளே. அவள் வானில் கரைந்து நாளொன்று ஓடிவிட்டாலும், தொலைபேசி அகராதியிலிருத்து அவள் பெயரை அழிக்க விருப்பமில்லை. அந்த அதிகாலை அழைப்பு, அரவணைப்பு மீண்டும் வராதா என்று என் கைபேசியை பார்த்து ஏங்கினேன், அம்மவின் அழகான முகம் சிரித்தது.

(கோராவில் ஒரு சம்பவம் படித்தேன், அதன் தாக்கம் இந்த கதை)

நாற்சத்திக் கூவல் – ௧௨௦ (120)
இன்னும் எழுதலாம்….

கவியள்ள, கவியல்ல !

நாற்சந்தி கூவல் – ௯௦ (90)

(சொல் கீச்சுப் பதிவு)

முதல் முறை என் கீச்சுக்களை, நானே சேமிக்க வேண்டும் என்று தோன்றியது. சொல்லாடலில் தான் எத்தனை சுவை ! எனவே இப்பபதிவு

கோலம் by @amas32

கோலம் by @amas32

#புள்ளிக்கோலம்

வண்ண வண்ண கோலம்
வாழ்த்தும் நல்ல பாலம் !

எண்ணம் என்ன சொல்லும்
வாழ்க்கை விளங்க சொல்லும் :

நேர்மை நேர் கோட்டில் பயணி
வண்ணம் வந்தே தீரும்!

சுத்த விடும் சூழல் – சீக்கிரம்
சேரும் சுடர்விடும் நட்சத்திரத்தில்.

நம்பிக்கை கொள்: நடுப்பூவில் – விளங்கும்
நல் வெற்றி மாலை உனக்கே !

Retweet, FAV எல்லாம் பண்ணி என்னைப் பாராட்டி வளர்த்து வரும் நண்பர்களுக்கு நன்றி பல 🙂 குறிப்பாக சுஷிமா சேகர் @amas32 அவர்களுக்கு வாழ்த்துகள்.

கவி அள்ள இவை கவிகள் அல்ல 😉

ஆனலும் கவிதை எழுத அவா உள்ளது.

இவை சொல் சேர்கையின் முயற்சி, அவ்வளவே.

ட்விட்டர் பாஷையில், கவுஜ என்றும் கூறலாம்

பதில் சொல்லுங்கள் அம்மா…

நாற்சந்தி கூவல் – ௧௧ (11)
(கவிதை பதிவு)

கனத்த கவிதை !

பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்

நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்

சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்

காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது

ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
“அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் ”
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்

நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை

எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.

இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை

நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .

எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக

என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்

தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
“நல்ல பையன்” என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.

எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்

என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் …

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி

நன்றி-http://www.eegarai.net/
நாற்சந்தி நன்றிகள்: தமிழரசு (இந்த கவித்தையை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு )

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: