~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘எண்ணங்கள்’

நிலை

நாற்சந்திக் கூவல் – ௧௧௯ (119)

இயந்திரம் ஓடுகிறது. அடித்து ஓட்டினால் ஆயுள் குறையும், சீக்கிரத்தில் பழுதாகும். அதை ஓய்விலேயே விட்டுவிட்டால் துறு ஏரி மக்கர் பண்ணும்.

மனித உடலின் கதியும் இதுவே. இயற்க்கையின் இறையின் ஆகச் சிறந்தப் படைப்பு இந்த உடலென்னும் அதிசிய கருவி. வாயில் சாப்பாடு போடுவது வரை தான் நம் கையில், அதன் பிறகு நடக்கும் வேள்வி வேலைகள் அசாத்தியம். இன்றும் இதனை அறிவியல் முழுதாக கண்டறிந்த பாடு இல்லை. நுணுக்கங்கள் நிறைத்த பிரமிப்பு.

இந்த பேரிடர் காலத்தில் உலகம் என்னும் இயந்திரம் சற்றே இழைப்பாரியுள்ளது, புணர் ஜென்மம் பெற்றுள்ளது என்றும் சொல்லலாம். டெல்லி மாநகரில் புகை மாசு மிகவும் குறைந்துள்ளது. மக்களால் நல்ல காற்றை சுவாசுக்க முடிகிறது. காற்று மாசால் மூடப்பட்டு கண்னுக்கு தெரியாமல் இருந்த இமாலைய பகுதிகள் இன்று அழகாக தெரிகின்றன. இரசாயன கழிவுகள் நதியில் சேராததால், யமுனை சோபித்து விளங்குகிறது பளிங்கிப் போல.

ஆனால் மனித மனங்களின் நிலையோ நேரெதிர். குப்பகளை சேர்க்க வெகுவாக நாம பழகிவிட்டோம். நம் இணையம் அதற்க்காக 24 x 7 x 365 ஓயாது உழைத்து வருகிறது. தொடு திரையில் மூழ்கி போதையில் உள்ளோம். ஒன்னும் வராதா வாட்சப்-பை எத்தனை எத்தனை முறை தொறந்தி பார்க்கிறேன். உப்புக்கு பொறாத உடன் பிறப்பு சண்டைகளை, தகவல்களை, மீம்களை கை ஒடிய ஒடிய தள்ளித் தள்ளி (scroll) முகநூலிலும் டிவிட்டரிலும் ஓட்டுகிறேன். நூறில் இரண்டு தேறும். மீளா அடிமை.

மிகினும் குறையினும் நோய்.
– குறள் 941

என்னை நானே…

நாற்சந்தி கூவல் – ௧௦௬(106)
(? பதிவு)

என்னை நானே தேடுகிறேன் !
நேரம் எங்கே ?

என் மேல் எனக்கே கோவம் !
பழைய வேகம் எங்கே ?

என்னை நானே நேசிக்கிறேன் !
பழைய நட்புகள் எங்கே?

என்னை நானே கேட்கிறேன் !
வாசிப்பு போதுமா ?
எழுத வேண்டாமா ?

என்னுள் நானே மகிழ்கிறேன் !
இசை வெள்ளம் காக்க….

சக்தி, சொல் மந்திரம் போல்
அமைய வேண்டும் !
பாரதியின் விண்ணப்பம்,
யாவருக்கும் பொருந்தும்.

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் _/\_

 

நாற்சந்தி நன்றிகள் !

நாற்சந்தி கூவல் – ௮௫(84)

(! பதிவு)

cooltext850575243

இன்று பதிவு எழுத வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் ஒரு காரணம் உண்டு. எந்த வித முன் யோசனையுமின்றி எழுத வந்துள்ளேன். இன்று நாற்சந்தி அதன் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்தி வைக்கிறது.  பிறந்த பிஞ்சு குழந்தையை, கழுத்து விட்டு போகாமல் இருக்க, கழுத்தை பிடித்து தூக்குவது வழக்கம். நீங்களும் இந்த தளத்தை அத்துனை அக்கறையுடன் பேணி, பாரட்டி, பாதுகாத்து, ஊக்குவித்து நடத்தி வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்லி முடித்து விட முடியாது…… நம் நேசமும் பாசமும், எழுத்துகள் என்னும் பாலத்தின் மூலம் பலப்படட்டும்.

என் வளர்ச்சியை கண்டு என்னை விட மகிழ்ச்சி அடைபவர்கள் இவ்வுலகில் மிகவம் சில உளர் !  அதில் ஒருவன் தான் தமிழ் தம்பி. இன்று என்னை பற்றி ஒரு, பல சில பெருமையான பொய்களை கலந்து ஒரு பதிவு எழுதி உள்ளான்.

->>>>தவறவிடக் கூடதவன்.<<<<- தலைப்பில் சிறு பிழை. ‘தவறு கூடியவன்’ இது தான் உண்மையான தலைப்பு ! நம் ‘தமிழ் பிழைகளின் தலைமையாகத்துக்கு’  மிக பொறுத்தமான தலைப்பும் கூட ! எனக்கும் தான், நானும் நாற்சந்தியும் ஒன்றே! இருந்தாலும்

என் கருத்து : நன்றி தமிழ் தம்பி! நான் இத்தனை பாராட்டுக்கு தகுதி இல்லாதவன் ! என்னை வளர்க்கும் இந்த தமிழ் சமூகமும், கல்கி, பாரதி போன்றோர் செய்யும் விந்தை 🙂

வரலாற்றில் பதிய சில எண்கள், இதுவரை நாற்சந்தியில் :

  • 84 பதிவுகள்
  • 4 பக்கங்கள்
  • 27 பகுப்புகள்
  • 108 tags
  • 104 கமெண்ட்ஸ்
  • 4619 பார்வைகள் (அரை மணி முன் வரை)
  • 126 பார்வைகள் ஒரே நாளில் 05/02/2012
  • 26 followers ( 12 wordpress, 14 ஈமெயில்)
  • 8 பகிர்வுகள்

ஏற்கனவே சொல்லியது போல, நாற்சந்திக்கும் நாலுக்கும் பொருத்தம மிக அதிகம்.

நச்சுன்னு நாலு நாற்சந்தி பட்டியல்கள்

நாற்சந்தி நாலு –  நச் வாசகர்கள் :

நாற்சந்தி நாலு –  நச் வாசகர் விருப்பம் :

நாற்சந்தி நாலு –  நச் என் விருப்பம் :

நாற்சந்தி நாலு –  நச் தம்பிகள்  :

(தமிழ் தம்பி இதில் சேர்த்து இல்லை)

இன்று முதல் youtubeலும் : ஒலி பிரவேசம், முதல் காணொளி : பாரதி சிறப்பு பாடல் – வாழிய செந்தமிழ் ! . பாடியவர் : எம்.எஸ் அம்மா


இது வரை சொந்த கருத்துகளுடன் எழுதிய பதிவுகள் மிக குறைவு, என்பது தான் உண்மை. மேலே உள்ள பட்டியலை உருவாக்கும் பொழுது, இதனை, நன்கு உணர்ந்து கொண்டேன். இன்னும் சிறப்பாக எழுத ஆசை, என்று எல்லாம் சொல்ல மாட்டேன். அனைத்து பதிவுகளிலும் என் முழு முயற்சியை தந்துள்ளேன், என்பது எனக்கு தெரியம். உங்களுக்கு அது பிடிக்கிறதா, இல்லையா என்பது வேறு விடயம் (தமிழ்டா!).

நான் பொழப்புகாக எழுத்துபவன் அல்லன். பொழுது போக்குகாக மனம் உவந்து எழுதுபவன். எனவே எனக்கு கிடைக்கும் சிறு சிறு பாராட்டுகளும் சிகரங்களே, அது ஒரு பதிவன் likeகாகவோ, commnetடாகவோ, followingகாகவோ எதுவாகவோ இருந்தாலும் சரி! படிக்க தான் நிரம்ப உள்ளது. நிறைய படிக்க தான் ஆசை, வேறு ஒன்றும் இல்லை! அதில் வரும் இன்பங்களை, அனுபவங்களை, எண்ணங்களை முடிந்த மட்டும் பகிர்ந்து கொண்டு பயன் பெறுவோம் 🙂

ஏ நாற்சந்தி, நீ எனக்கு செய்த, நன்மைகளுக்குகாக, நீ நீடுழி வாழ்க!!!

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: