~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘எம்.எஸ்’

வெள்ளி விருந்து

நாற்சந்தி கூவல் – ௯௪ (94)
(கதம்பம்)

படிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.

(மின்)புத்தகம்

தீட்சிதர் கதைகள் (1936)


ராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.

>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<

கட்டுரை

 • எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி ? நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது
 • கதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/?p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect ! என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி.  இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)

கதை

 • சித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.
 • ஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.
 •  நேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)

இசை

இசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :

ஒலிந்து = ஒலியுடன் இயந்து !

எம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.

ஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.

இன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :

அனைவரும் கூடி,
அவன் புகழ் பாடி,
நிர்மலா யமுனா நதியில் நீராடி…
#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)

மீள்

(தினமணி கதிரிலிருந்து)

பரிபாஷை என்றால்  ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்!

தங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.

கோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.

இங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை! “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்!

கோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.

அரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர்! கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்!

-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.

கவிதை

 • கவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி
    இருட்டை 
    எச்சரிக்கும் 
    புரட்சிக்குரல் !
 • உன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :
  மழையில்லை மடியில் கனமில்லை,
  மகன்கள் சுகமில்லை,
  கையில் பணமில்லை,
  கள்குடிக்கக் கூட காசில்லை !

சொற்பொழிவு 

புலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன.  நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.

 >>> பதிவிறக்க <<<

படம் 

(நெட்டில் சுட்டது)

Three Friends

யோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே !

என் கிறுக்கல் 

இரவும் இதயமும்
இனிதே உறங்கட்டும்
சிறகும் சிந்தனையும்
சிலிர்த்தே வளரட்டும்

உறவும் உறக்கமும்
உணர்ந்தே கூடட்டும்
மலரும் மனமும்
மகிழ்தே விடியட்டும்

நாளும் நலமும்
நம்முடன் வாழட்டும்
காற்றும் காதலும்
காலமெல்லாம் பெருகட்டும் !

பாவேந்தர் பாரதிதாசன்

நாற்சந்தி கூவல் – ௯௩ (93)
(புத்தகப் பதிவு)

பாவேந்தரின் பெயர் என்னை சில நாட்களாகவே சுத்தி சுத்தி வருகிறது. அவருடைய கவிதை தொகுப்பை சீக்கிரம் வாங்க வேண்டும் என நான் முடிவு செய்தது தான் காரணம் போலும். இன்று, ஓடும் தருணங்களை, ஒழுங்கே செல்லுத்த, ஒரு சிறு புத்தகத்தை எடுத்து, கால ஓடத்தில், தமிழ் வெள்ளத்தில் பயணம் செய்தேன். முடிந்த மகிழ்ச்சியை, முத்துக்களை பகிரவும் வந்து விட்டேன்.

புத்தக்க விபரம்
பெயர் : பாரதிதாசன்
ஆசிரியர் : வேணு சீனிவாசன் 
பதிப்பகம் : Prodigy (கிழக்கு பதிப்பகம்)
பக்கம்: 80
விலை : ரூ.30

{பின்வருன அந்த நூலிலிருந்தும், எனக்கு தெரிந்த, நான் படித்த சம்பவங்கள் }

தமிழக அரசியலின் அழியா சரித்திரத்தின், பெரும் சித்திரம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நேற்று. பாவேந்தர் அண்ணாவுடன் பல காலமிருந்தவர். திரு.வி.க எழுதினார்

‘அண்ணாதுரை என்னும் அண்ணல் தமிழ்நாட்டின்
வண்ணான் அழுக்கெடுப்பில்’

இதனை படித்த பாரதிதாசன், குறைக் கண்டார். உவமை சரியில்லை என்றார். எதுகைக்காக எந்த சொல்லையும் போடக்கூடாது எனவும் சொல்லி, அவரே ஒரு கவிதை பாடினார்

எண்ணாதுரை நாடி ஏந்து புகழ் நட்ட
அண்ணாதுரை அண்ணல் ஆய்ந்து தமிழ் – செழிக்கப்
பண்ணாதுரை உண்டோ பைந்தமிழ் ஏன் இவனைக்
கண்ணாகக் கொள்ளார் கனிந்து

கனிகளுக்காக அண்ணனுடன் சண்டையிட்டு கவிதை எழுதியவர் தான் கனக சுப்புரத்தினம். 29/04/1891னில் பிறந்தார். இயல்பாக கவிதை பாடும் திறம் கொண்டார். படிப்பில் படு கெட்டி, பாட்டிசைப்பதிலும், நடிப்பதிலும் வல்லவர். கம்பீர உருவம் கொண்டவர். பல காலம் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். புதுவை தான் அவரது வாசத்தலம். பன்னிரண்டாம் பிராயத்துக்கு முன்னே திருக்குறள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். அத்துப்படி. ஆயினும் அசைவம் உண்பதில் மிகுந்த பிரியம் கொண்டவர். ‘மீனுக்கு தொட்டுக்க சோறுவை‘ என்பாராம். இருந்தும் புறாக்களை காண்பதும் ரசிப்பதுவும் அவருக்கு மிக பிடிக்கும்

வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும் அவற்றின் வாழ்வில்,
வெட்டில்லை, குத்துமில்லை
கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கமில்லை…

இதை படிக்க, பசிக்கு காயவைத்த தானியத்தை குருவிகளுக்கு ஈந்த பாரதி நினைவில் வந்தான்

சின்னஞ் சிறு குருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா !
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா !

புதுமையான சிந்தனைகளைக் கொண்டவர் பாரதிதாசன். நினைத்த மாத்திரத்தில் கவிதை புணைவார், அதற்க்கு சிறு துண்டு ஒற்றைப் பக்க காகிதம் கூடப் போதும். தன் பிள்ளைகள் கேட்ட மெட்டுக்கெல்லாம் கீதம் இசைப்பாராம். ஒரு திருமண விழா கச்சேரியில், தன் கம்பீர குரலில்,

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் – பின்னர்
வேறொன்றைக் கொள்வாரோ…

போன்ற பல பாரதி பாடலக்ளை ஆழமுணர்ந்து பாடினார். முடிவுல் அங்கு இருந்த பாரதி அவரை பெரிதும் பாராட்டினார். இதுவே அவரது எதேச்சியான முதல் சந்திப்பு.

குருநாதர் திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளையை மீறி, நாராயண நாமத்தை உபதேசம் பெற்றவுடன், கோவில் மதில்மீதேறி மக்களுக்கு சொல்லி, மதபுரட்சி செய்யத ராமானுஜரை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை பற்றிய தமிழ் திரைப்படத்தை கதை எழுதி,  இயக்கி, தயாரித்தார். ஆனாலும் அவர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை சார்ந்த(ர்/)வர்.

1928டில் புதுசேரியில் பெரியார் பேசியதைக் கேட்டு, அவரின் கொள்கைகள் வசம் ஈர்க்கப்பட்டார். முதலில் அவர் மிகப்பெரும் ஆதிக்கராக இருந்தார். பாரதி, வா.வே.சு ஐயர் மற்றும் சிலர் இருந்த ஒரு தருணத்தில், அவரைப் பற்றி பேச்சு வந்தது, உடனடியாக ஒரு கவிதை எழுத சொல்லி பாரதி கேட்க்க, பாரதி எழுதும் மேஜையிலேயே கனகசுப்புரத்தினம் எழுதியது தான்

எங்கெங்கு காணிணும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா….

பலே பாண்டியா!‘ என பாரதி பாரட்டி, ‘கவிதா மண்டலத்தை சேர்ந்த கனக-சுப்புரத்தினம் பாடியது‘ என் குறிப்பெழுதி, சுதேசமித்திரன்-னுக்கு அனுப்பினார். முதலில் பரிசுரமான பாவேந்தரின் கவிதை இது தான் என சொல்லப்படுகிறது. பின்பு இந்த பாடல் பல மொழிகளிலும் மாற்றம் பெற்று வெளிவந்தது. பாரதியுடன் அவரது நட்பும், அன்பும், பாசமும், மரியாதையும் வளர்ந்து வந்தது.

{இந்த ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா…..’ பாடல் பாரதிதாசன் எழுதியதே, பாரதி அல்ல. பல பிரபல நாளிதழ்கள் மற்றும் 99% இணைய தளங்கள், பதிவுகள் இதை பாரதி என்றே சொல்கிறது!}

புனைப்பெயரை தேடி, இறுதியுல் பாரதிதாசன் என்று வைத்து கொண்டார். அவரே ஓரிடத்தில் காரணமும் சொன்னார் : பாரதி போல எளிய நடையில் புலவர்கள் எழுத வேண்டும் என்பதை உணர்த்தவும், சாதி ஒழுப்பு விளம்பரமாக வேண்டும் என்பதற்காகவும் தான்.

என் அப்பா அடிக்கடி சொல்லுவார், தமிழை மக்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக பாடியவர்கள் : அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி ! இவர்களை பார்த்து தான் பிறர் மாறினார்.

புதுவையில் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளார். அவரது வேறு சில புனைப்பெயர்கள் :  புதுவை கலைமகள், தேசபக்தன், தமிழரசு, கிறுக்கான். புரட்சி கவிஞர் என பெரியார் வாழ்த்தினார். குயில் என ஒரு பத்திரிக்கையை பலகாலம் நடத்தினார்.

சிங்கங்கள்

சிங்கங்கள்

மயிலம் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டு, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுதி‘ என முப்பது பாடல்கள் பாடினார். விநாயகர், முருகன், சிவபெருமான், சரஸ்வதி, திருமால் மீது துதி பாடல்கள் புணைந்துள்ளார். இப்படிப்பட்டவர் பெரியார் கொள்கை மீது அதிக நாட்டம் கொண்டார். 1933-ல் நடந்த உலக நாத்திகர் மாநாட்டு பதிவேட்டில், நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் எனக் கையெழுத்து இட்டுள்ளார் பாவேந்தர். அப்படியே வாழ்ந்தார்.

இவர்தான் பெரியார் – இவரை, யார் தான் அறியார் என எழுதினார் வாலி. (பெரியாருக்கு நாளை பிறந்தநாள்) தனது சீர்திருத்த கொள்கைக்கு மாறாக பெரியார் திருமணம் செய்து கொண்டார் என வேதனை அடைந்தார் பாரதிதாசன். கவிதை, கட்டுரை மூலம் இதை குறித்து அவரது எண்ணங்களை பதிவு செய்தார். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தாலும், நாயக்கரின் சில கொள்கைகளினால் அவர் மீது  மதிப்பு உள்ளது எனக்கு. ஆனாலும் அவரது திருமண விடயம், புரியவில்லை. அவர் தனி மனிதர், என்ன வேணாலும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டு விளக்கமில்லாமல், வேறேதினும் இருந்தால் சொல்லுங்கள்…..

திராவிட இயக்கம் பெரியாரின் கொள்கையை விட்டு செல்கிறது என பாவேந்தர் சொல்லி/ எழுதி / கவிபாடி உள்ளார். இதை சொன்னால் நண்பர் சொல்கிறார் : பெரியாரை, பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்க்கிற எத்தனையோ இயக்கங்கள் இருக்கு, தி.க. மட்டும் இல்ல ! சமூகத்துல பெரியார் ஆதரவாளர்னாலே தி.க. தான் நினைவுக்கு வரும்.. தி.மு.க முற்றிலும் வேறுபட்டக் கொள்கைகளை உடையது. கடவுள் இல்லை என்பவர் பெரியார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் -அண்ணா

நான் சொன்னேன், கலைஞர் இன்னும் ஒரு படி மேலே உள்ளார். ரமலான், கிருஸ்மஸ் வாழ்த்து எல்லாம் சொல்லுவார், ஆனா தீபாவளி வந்தால் மறந்துவிடுவார். உண்மதானே ? என்றேன். நண்பர் : நாம அரசியல்வாதிகள் பற்றித்தானே பேசுறோம்… அவர் சிறுபான்மையினர் ஓட்டுக்காக அப்டி செய்யலாம்.. நான் அவ்ளோ deepஆ note பண்ணல. (இனியாவது நீங்களும் அவரும் நோட் பண்ணுங்க) பரதிதாசனை பற்றி பேசும் போது, அண்ணா, பெரியார், கலைஞர், எம்ஜிஆர், திமுக-காவை விட்டு விட முடியாது. நாற்சந்தியில் அரசியல் வேண்டாம், ஆனாலும் சிலவற்றை நாம் கவனிக்க மறக்கிறோம் / மறுக்கிறோம்

இன்னும் ஒரு விடயத்தை தமிழ் மக்கள் உணரும் நாளை நான் எதிர்நோக்குயுள்ளேன். பெரியார் தமிழகத்தின் மிக பெரும் சீர்திருத்த என்றால், அவரை விட சிறந்தவர் ஒருவரை நாம் ஏன் அறிய முற்படுவதில்லை. அவர் பெயர் தான் சுப்பிரமணிய பாரதி. அக்கிரகாரத்தில் பிறந்த அவன், (புதுமையான, புரட்சியான) சிந்திக்காத எண்ணங்களே  இல்லை என்றே சொல்லாம். அப்பழுக்கற்ற பார’தீ அவன். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என அவன் பாடி சென்றதை உணர வேணும், அவனை போற்ற வேணும்…. பெரியார் ‘பெரியவர்’ என்றால், பிராமன ஐயன் பாரதி, பெரியாருக்கு பெரியவர். பாடையில் போகும் போது தான் பாரதியை கவனிக்கவில்லை….. பார் போற்ற வேண்டிய கவி அவன் !

“சுத்த அறிவே சிவமென்னும் சுருதிகள் கேளிரோ?…………” – பாரதி

பாவேந்தர் பக்கம் திரும்புவோம்….
ஒளவை, பாரதி போல அவரும் புதிய ஆத்திசூடி எழுதியுள்ளார்

 • அனைவரும் உறவினர்
 • ஆட்சியைப் பொதுமைசெய்
 • ஈதல் இன்பம்
 • காற்றினைத் தூய்மை செய்
 • கல்லார் நலிவர்
 • கேனாட்சி வீழ்ந்தது

புதுவையின் மிக பிரசித்தம் பெற்ற தமிழ்தாய் வாழ்த்தும் அவர் எழுதியதே

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே செந்தமிழ் தாயே….

விடுதலை போரின் போது மிகுந்த ஆர்வம் கொண்டார். காந்திய வழி நின்றார். கதர் அணிந்தார், அதனை பற்றி பிரச்சாரம் செய்தார். கடனுக்கு கதராடைகள் விற்றார். ‘கதர் ராட்டினப்பாட்டு‘ எழுதி, சொந்த செலவில் பதிப்பித்தார். இன்னும் பல புத்தகங்கள் / கவிதை தொகுப்புகள் எழுதியுள்ளார். (சொடுக்கினால் படிக்கலாம்)

மேலும் பல படைப்புகளை செய்துள்ளார். பாரதிதாசனின் அனைத்து படைப்புகளை வாசிக்க சொடுக்கவும்

1964ஆம் வருடத்தின் ஞானபீட விருதுக்காக தேர்வு செய்யப்படார், ஆனால் வாங்கும் முன்னமே அவரது காலம் முடிந்தது. இந்த நாட்டின் சிறந்த கவி – என அவருக்கு பட்டம் தர, சாகித்தியா அகாதமி முடிவு செய்தது, ஆனால் கொடுக்கும் முன் காற்றுடன் கலந்தார். வாழும் கவிஞ்ர்களுக்கு மட்டுமே அந்த பட்டம் வழங்கப்படும். ஆனாலும் அவரது பிசிராந்தையார் நாடத்தக்கு 1969ஆம் ஆண்டின் தமிழ் சாகித்தியா அகாதமி விருது வழங்கப்பட்டது. இன்றுவரை தமிழில் விருது பெற்ற ஒரே நாடகம் இது தான். இவருடைய பெயர் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது. இவர் புதுவையில் வாழ்ந்த சாலை அவர் பெயரைக் கொண்டது. மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் அவருக்கு சிலை உள்ளது.

இமயமலைசாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்

என பாடிய பாவேந்தரின் இறுதி நாட்கள், மிகவும் மோசமாக இருந்தன. திரைப்பட முயற்சியில் தோல்வி, திமுக-வுடன் சண்டை என சென்றது. சாகும் சற்று நேர்த்துக்கு முன், பேரனுக்கு பாரதி எனப் பெயர் சூட்டினார், தன்னை புதுசேரி அழைத்து செல்லுமாறு சொன்னார். பிரேதத்தை கவிஞர் கண்ணதாசன் புதுசேரிக்கு காரில் எடுத்து சென்றார்.

புதியதோர் உலகம் செய்வோம்… என்னும் பாரதியின் கனவுகளை பின்பற்றி வாழ்ந்த பாவேந்தர் வாழ்க. பாரதிதாசனின் சில பாடல்கள் மட்டுமே எனக்கு தெரியும் 😦 அதில் மிக சிறந்தது என சொன்னால்

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? ….”

எனக்கு மிகவும் பிடித்த சுத்த தமிழ் பாடல்களுள் இதுவும் ஒன்று ! என்ன ஒரு அழகான பாடல்…. அதை பற்றி தனிப் பதிவே எழுதலாம் . நீங்களும் கேளுங்கள், பாம்மே ஜெயஸ்ரீயின் மதுர குரலில். உள்ளம் குழையும்

இன்று எம்.எஸ் அம்மாவின் பிறந்தநாள் ! இவளின் இனிமையான இசையை ரசிக்க என்ன தவம் யான் செய்தேன் ? இசையின் முடிசூடா அரசி அவள். வாழ்க்கை முழுவதும் இசையை சாதனம் செய்து, சாதனை செய்தாள். வாழ்வு முழுதும் இசையை கற்றாள் !(இசைப்பாவில் எம்.எஸ்,அம்மா) United Nations மாநாட்டில் எம்.எஸ்.அம்மா பாடிய சிலப்பதிகார பாடலை கேளுங்கள்.

இன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 91-ம் பிறந்தநாள் மற்றும் நமது நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களுக்கு பிறந்தநாள், வாழ்த்துகள். ட்விட்டர் நண்பர் திரு சக்திவேல் அவர்கள், இன்று திருமதி அர்சனாவுடன் தனது இல்லறப்பயணத்தை துவங்கி உள்ளார், மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சிங்கப்பூரின் தந்தை எனக் கருதப்படும் அரசியல்வாதி திரு.லீ குயன் யோ (Mr Lee Kuan Yeo) அவர்களின் பிறந்தநாள் இன்று.

தமிழ் அண்ணா!!!

நாற்சந்தி கூவல் – ௭௯(79)

(அண்ணாப் பதிவு)

தமிழ் அண்ணா…

இன்று அறிஞர்  (காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை)அண்ணா அவர்களின் பிறந்தநாள். அவர் வழி வந்த தமிழ் கட்சிகள் தான் இன்று வரை ஆட்சி பீடத்தில் உள்ளது. இது பற்றி சிறு கவலைகளும், புகார்களும், கண்டனங்களும் எனக்கு உண்டு. ஆனாலும் மறுக்க , மறக்க முடியாத உண்மை அவர் ஓர் “அறிஞர்”. எனவே அவரை போற்றுதல் தவறு அல்ல, என்பது என் கருத்து.

செய்தி : 1

சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது!

அப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.

உடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.

காலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா!

செய்தி : 2

அறிஞர் அண்ணா, பொது வாழ்க்கையில் ஈடுபட்ட 35 ஆண்டுகளில் அவர் பேசியவை, எழுதியவை ஏராளம். அவை :-
   சொற்பொழிவுகள் – 12775
கட்டுரைகள் – 1960
சிறுகதைகள் – 120
நவீனங்கள் – 36
ஓரங்க நாடங்கள் – 60
கவிதைகள் – 63
கடிதங்கள் – 290
ஆங்கிலக் கட்டுரைகள் – 350
ஆங்கிலக் கடிதங்கள் – 1000
ஆங்கிலச் சொற்பொழிவுகள் – 350

நாற்சந்தி நன்றிகள் : தினமணி – சிறுவர்மணி (03.09.11) & (15.09.12)

பி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் ‘Anna’ என்று தேடல் செய்தேன். ‘அண்ணா ஹசாரே’ படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, ‘Annadurai’ தேடல். அப்பொழுதும் சந்திராயன் ‘அண்ணாதுரை’ வந்தார். கடைசியில் பெரியார் மற்றும் பலருடன் சிக்கினார் அறிஞர்!!!

-> அண்ணா பற்றிய தமிழ் தம்பி எழுதிய பதவு – சொடுக்கவும்

டிசம்பர் மாதச் சித்திரங்கள்

நாற்சந்தி கூவல் – ௨(2)

(தினமணி மீள் பதிவு)

 கடந்த சில நாட்களுக்கு முன் தினமணி நாளிதளில் (நடு பக்கத்தில்) வெளிவந்த, டிசம்பர் மாத ‘தமிழர்’ தினங்கள் சிறப்பு கட்டுரை. ராஜாஜி பிறந்தநாள் போன்ற சில தினங்கள் விடுப்பட்டுள்ளது. ஒரு கட்டுரையை கதை போல சிறப்பாக எழுதிய இரா. நாறும்பூநாதன்னுக்கு என் நல்வாழ்த்துகள்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெளியூர் சென்று திரும்பிய பாரதியார் இருண்ட அறையில் கிழிந்த பாயில் சோர்வாய் படுத்திருந்த நீலகண்ட பிரம்மச்சாரியாரைக் கலக்கத்துடன் பார்க்கிறார். அவர் மெதுவாய் எழுந்து சென்று மண்பானையில் இருந்த தண்ணீரைக் குவளையில் அள்ளிப்பருகிவிட்டு மீண்டும் வந்து பாயில் படுக்கிறார்.

அதைக்கண்ட பாரதி, “என்ன பிரம்மச்சாரியாரே, உடல் நலம் சரியில்லையா?” என்று கவலையுடன் கேட்கிறார். அமைதியாய் இருந்தவரை, பாரதி மீண்டும் மீண்டும் வினவவே, அவர் கூறுகிறார் “என்ன செய்ய? சாப்பிட்டு நான்கு நாளாகின்றன. தண்ணீரை மட்டும்தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்…” என்று சொன்னாராம்.

நெல்லை மாவட்டத்தில் சுதந்திரக் கனலைப் பற்ற வைத்த வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் சேர்ந்து போராடிய ஆவேசத்துடன் முழங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியார் பட்டினியில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்காத அந்த முண்டாசுக்கவிஞன் அந்த நேரத்தில்தான் எழுதுகிறான்:

தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

என்று. அப்பேர்ப்பட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் பிறந்த நாள் டிசம்பர் 2.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த ஒரு படக்கண்காட்சி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களோடு இருந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரனுமான ச. தமிழ்ச்செல்வன், மீசை முளைக்காத ஓர் இளைஞரின் படத்தைக் காண்பித்து, “இந்த இளைஞரைத் தெரியுமா?” என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்களுக்குத் தெரியவில்லை. அவர் கூறினார்.

“இவர் பெயர் குதிராம் போஸ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகரமான இளைஞர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கிய வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட்டைக் கொலை செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 15. பிரிட்டிஷ் அரசு அவரைத் தூக்கில் போட முடிவு செய்தது. மேற்கு வங்க மக்கள் கொந்தளித்தனர்.

குதிராம் போஸின் தாய் கதறினார். “என் பச்சிளம்பாலகனை விட்டு விடுங்கள்” என்று அரற்றினார்.

குதிராம் போஸ் மனம் கலங்கவில்லை. தூக்கிலிடுவதற்கு முதல்நாள் இரவு, சிறைச்சாலையின் சுவற்றில் கரித்துண்டால் அவரது அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதினான்:

“அழாதே அம்மா!

நான் மீண்டும் பிறப்பேன்

சித்தியின் வயிற்றில் மகனாக..

பிறந்தது

நான்தான் என்ப தறிய

குழந்தையின்

கழுத்தைப்பார்

அதில் –

தூக்குக்கயிற்றின்

தழும்பு இருக்கும்!

அழாதே அம்மா!”

அந்த நேரத்தில் அவரது சித்திக்கு பிரசவ நேரம். அதனால் அவர் அப்படி எழுதிவிட்டு தூக்குமேடை ஏறினார். அதன்பிறகு மேற்கு வங்க மக்கள் குதிராம் போஸ் எழுதிய கவிதை வரிகளை சிறைச்சாலைச் சுவற்றில் தங்கள் கைகளால் தடவிப்பார்த்து ஆவேசமடைந்தார்கள். கிராமப்புறப் பாடல்களில் குதிராம் போஸின் வீரம் இன்றளவும் போற்றப்படுகிறது.”

“அப்படியானால் நமது பாடப்புத்தகத்தில் இவர் பெயர் ஏன் இடம்பெறவில்லை?” என்று கேட்டோம்.

அவர் சிரித்தபடியே “இந்த தேசத்தின் தலையெழுத்து அப்படி… பாடப்புத்தகங்களில் குதிராம்போஸும் இல்லை. பகத்சிங்கும் இல்லை. செங்கோட்டையில் வெகுண்டெழுந்த வாஞ்சி ஐயரும் இல்லை. ஆனால், மத்திய அரசு தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாற்று ஆவணத்தில் இவர்களது வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் ஆவணக் காப்பகங்களில் பெரிய நூலகங்களில் இவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள்” என்று வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வரலாற்று நாயகர் குதிராம்போஸ் பிறந்த தினம் டிசம்பர் 3.

வல்லமை தாராயோ? – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

என்று சிவசக்தியிடம் வரம் கேட்ட எங்கள் நெல்லை மண்ணின் மகாகவி பாரதி பிறந்த தினம் டிசம்பர் 11.

பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்கள் கணித ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் (ஆரிய வைசிய உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி) அடிக்கடி கேட்பார்: “ஸ்ரீரங்கத்தில் பிறந்த பிரபலமானவர் பெயரைக்கூறு” நாங்கள் வேகமாகப் பதில் அளிப்போம். “ஹேமமாலினி”.

அவர் கோபத்தில் சாபமிடுவார் “நீங்கள் யாரும் உருப்படவே போறதில்லை. அவரைவிட்டால் வேறு யாரையும் தெரியாதா?” பின்பு சிறிதுநேரம் கழித்து ஆசுவாசமடைந்து அவரே கூறுவார்.

“நடிகையின் பெயரைத்தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகத்து கணக்குப்புலிகளை எல்லாம் தனது புதிர்க் கணக்குகளால் மடக்கிய ராமானுஜத்தின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கடா… அவர் ஒரு கணித மேதை. அவரது மனைவிக்கு மேற்கு வங்காள அரசு பென்சன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டு மக்கள் அந்தக் கணிதப்புலியைக் கொண்டாடும் நாள் என்றோ, அந்த நாள்தான் புனித நாள்” என்று சொன்னது இன்னமும் காதில் எதிரொலிக்கிறது. அந்தக் கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் டிசம்பர் 22.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்த படிப்பாளி – போராளி பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கர். தன்னைப்படிக்க வைத்த ஆசிரியரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர். லண்டன் நூலகத்தின் அநேகமாக பெரும்பாலான நூல்களைப் படித்தவர்களின் வரிசையில் முன்னணியில் நிற்பவர் சட்டமேதை அம்பேத்கர். அவரது நினைவு நாள் டிசம்பர் 6.

புரட்சிகரமான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின் அமைதி வழிக்குத் திரும்பி, ஆன்மிகத் தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரவிந்தரின் நினைவு நாள் டிசம்பர் 5.

1936-ல் “சதிலீலாவதி’ என்ற திரைப்படத்தை எடுத்து சாதனை புரிந்த திரைப்பட இயக்குநர் அமெரிக்கர் எல்லீஸ்.ஆர்.டங்கன். இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா என்றபோதிலும், தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தமாகவும், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். அவர் நடித்தது என்னவோ ஒரு இன்ஸ்பெக்டர் வேஷத்தில்தான். இவருடன் நடித்த வில்லன் நடிகர் திருநெல்வேலியிலிருந்து, நாடகக் கம்பெனியில் நடிக்க ஓடிவந்த டி.எஸ். பாலையா.

இந்தப் படத்தில் இடம்பெற்ற “கைராட்டினமே கதர் பூஷணமே” என்ற பாடல் தமிழகம் முழுவதும் பிரபலமானது.

காந்திஜியின் மதுவிலக்குக் கொள்கை இப்படத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள். குடித்துச் சீரழியும் எம்.கே. ராதாவின் நடிப்பைப் பார்த்துவிட்டு “இன்று முதல் நான் குடிப்பதில்லை” என்று ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்குக் கடிதங்களாய் எழுதினார்களாம்.

இப்போது சொல்லுங்கள்… எல்லீஸ்.ஆர்.டங்கனை மறக்க முடியுமா? அவரது நினைவு நாள் டிசம்பர் 1.

கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது இனிமையான குரலால் பலரை மயக்கிய இளம் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் திரைப்படம் 1938-ல் வெளிவந்த “சேவாசதனம்”. படத்தை இயக்கியவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம்.

கல்கியின் பாடலான காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமுண்டோ? அந்த இசைமேதை எம்.எஸ்நினைவு தினம் டிசம்பர் 11.

முன்னரே குறிப்பிட்டதுபோல, தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சகாப்தமாய் விளங்கியவர் எம்.ஜி.ஆர். நல்லவனாகவே நடித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப்பெற்று, அரசியல் இயக்கத்தின் மூலமாக அரியணை ஏறியவர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலானாலும் சரி, கவியரசு கண்ணதாசன் பாடலானாலும் சரி, கவிஞர் வாலியின் பாடலானாலும் சரி, அதை எம்.ஜி.ஆர். பாடுவதாகவே மக்கள் நம்பினார்கள். இன்னமும் அவரது ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.

எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நிகழ்ந்ததுதான் நாடகக்கலைஞர் விஸ்வநாத தாஸுக்கும் நடந்தது. போலீஸாரின் கெடுபிடிகளால் நாடகங்கள் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். கடன்பட்டார். திருமங்கலம் அவரது சொந்த ஊர்.

1940 டிசம்பர் 31-ல் சென்னையில் “வள்ளி திருமணம்” நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் காந்திஜியின் கொள்கைகளை விடுதலை வேட்கைப் பாடல்களை – நாடகத்தில் புகுத்தி விடுவார் என்பதை அறிந்து போலீஸ்காரர்கள் நாடக அரங்கை முற்றுகையிட்டனர்.

மயிலாசனம் மீது அமர்ந்து “மாயமான வாழ்வு இம்மண் மீதே’” என்ற பாடலின் வரிகளைப் பாடும்போதே திணறுகிறார். மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு அதே பல்லவியைப் பாடுகிறார். மேடையின் மீதே சரிந்து விழுகிறார்.

முருகன் வேடமணிந்த விஸ்வநாத தாஸின் இறுதி ஊர்வலம் அங்கிருந்தே தொடங்கியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். மதுரகவி பாஸ்கரதாஸின் இணைபிரியா நண்பரான – அந்த நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் இறந்த தினம் டிசம்பர் 31.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாற்சந்தி நன்றிகள்: இரா. நாறும்பூநாதன்தினமணி இணையதளம்

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: