~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘கல்வி’

தந்தையின் தன்மை…

நாற்சந்தி கூவல் – ௬௩ (63)

(கடிதப் பதிவு)

தந்தையின் தன்மை…

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்:

 • தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
 • வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்
 • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
 • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
 • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
 • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
 • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

(நாற்சந்தி நன்றிகள் : இந்த கடிதத்தை ‘பேஸ்புக்’கில் பகிர்ந்து கொண்டவர்களுக்கு )

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த கடிதத்தில் உள்ள ஒரு சிறு காமெடி என்னவென்றால், லிங்கன் தன் மகனை துவக்கப் பள்ளியில் சேர்ந்ததால், அவனுக்கு இது எல்லாம் சொன்னால் புரியாது என்று ஆசிரியருக்கு எழுதினார்.

இதவே அவன் கல்லூரி செல்லும் பொழுது அவனுக்கே எழுதி இருந்தால், அது இக்காலத்து அட்வைஸ் போல அமைந்திருக்கும், என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒவ்வொரு தந்தையும் தம் குழந்தைகளிடத்தில் இது போல சில நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது தான் தந்தையின் தன்மை. தம்மிடம் இல்லா விட்டாலும், தம் மக்களிடத்தில் இந்த குணங்களை வளர்க அவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள் என்பதே நிதர்சனம். அவர்களுடைய கனவுகளை (முடிந்த வரை) நிறைவேற்றுவது நம் கடமை அல்லவோ?

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதில் இருந்து நாம் அனைவரும் சில பாடங்களை கற்க வேண்டும் . நீங்கள் எந்த வகையோ, அதற்கு ஏற்ப படியுங்கள். நான் ஒரு  _______________ :

 1. ஆசிரியர் : உங்கள் மாணவர்களிடத்தில் மேலே உள்ள திறமைகளை வளருங்கள் (முயற்சி ஆவது செய்யுங்கள்)
 2. மாணவன்  : உங்கள் மாணவ பருவத்தில் ஆசிரியர் / பெற்றோர்  உதவியுடனோ இல்லாமலோ நீங்கள் கற்று கொள்ள வேண்டிய பண்புகளின் பட்டியல். காலம் ஓடுகிறது, வேகமாக செயல் படுங்கள்.
 3. சாதாரண மனிதன் : வாழ்கையில் (பள்ளி/கல்லூரி ) கல்வி என்னும் கட்டத்தை கடந்து வந்தவர்கள். அனுபவத்தால் நீங்கள் சிலவற்றை கற்று இருக்கலாம். மேலே உள்ளதையும் புரிந்து கொண்டு மேன்மை அடையுங்கள். எதையும் துவங்க இது தான் நல்ல நேரம்.

இதை எல்லாம் உங்களுக்கு நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் வளர வேண்டும். ஒருநாள் யாராவது என்னிடம் ‘இந்த பதிவில் உள்ளது போல என்னத்தை வளர்த்து கொண்டாய்
என்று கேட்டால்’, சொல்வதற்காகவாவது எதையாவது கற்பேன் ஆகுக.

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: