~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘சாதம் வைப்பது எப்படி?’

சாதம் பொங்கும் படலம்

நாற்சந்தி கூவல் – ௬௯ (69)
(சமையல் பதிவு)

சாதம் பொங்கும் படலம்

இன்று கற்று கொண்ட ஒரு (/ஒரே) நல்ல விஷயம், எப்படி சாதத்தை பிரஷர் குக்கரில் பொங்கி சாப்பிடுவது என்று. சோ நீங்களும் அனுபவிக்க :

தேவையானவை :

  1. பிரஷர் குக்கர் (மூடி, நட், இத்யாதி சாமான்கள்)
  2. சாப்பாட்டு அரிசி – ஒரு ஆளுக்கு அர டம்ளர்

பொங்கும் முறை :

  • குக்கர்ல மேலே சொன்னது போல தேவையான அளவு அரிசியை, அளந்து போடவும்.
  • மூன்று முறை அரிசியை கிளையவும் , அதவாது, நல்லா கைய விட்டு சும்மா சூப்பர் ஸ்டார் மாதரி அரிசிய சுத்து சுத்துனு, சுத்தி அரிசியை பாலிஷ் செய்யும் முயற்சி (ஒழுங்கா செய்யலைனா அப்பறம், வெள்ள சாதம் கிட்டாது)
  • ஒரு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் என்ற வீதத்தில் , குக்கருக்கு தண்ணி காட்டவும், ஸ்லாரி, தண்ணி ஊத்தி நிரப்பவும். சரியான மூடியை போடவும், நட்டை குக்கரின் தலையில் சொருகவும்.
  • (இதுவே உங்களுக்கு அடுப்புடன் முதல் விளையாட்டு, வெள்ளோட்டம் என்றால், உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி வணங்கி ஆரம்பிக்கவும். எல்லாம் நல்ல படியா முடியதானுங்கோ!)
  • அடுப்பை மூட்டி, புல்லா வைத்து விட்டு ஓய்வு எடுங்கள். குக்கரையும் மறந்துடாமல் அதன் மேல் வைக்கவும். ஒரு சவுண்ட் (விசில்) வந்ததும் அடுப்பை சிம்ல (குறைத்து) வைக்கவும். உங்களால் முடிந்தால், அந்த உருண்டு உருண்டு, எம்பி எம்பி சுத்தும் நட்டை கண்டு ரசித்து, பாடி, பழகி மகிழவும்.
  • அடுத்த கட்ட நடவடிக்கை : மூன்று சவுண்டுக்காக காத்திருப்பு. இதுவும் கை கூடிய பிறகு, அடுப்பை அணைத்து குக்கருக்கு குளுர்ச்சி தரவும். உடனே நட்டை திறந்தால் பிலாஸ்ட் தான். பொறுத்து இருந்து பிரஷர் எல்லாம் அடங்கிய பிறகு திறந்து உண்ணவும்.
  • இந்த வேலை எல்லாம் முடிய சுமார் அரை மணி நேரமாகும் என்பதை, சரியாக செய்து பார்த்தால், தெரியும் என நம்புகிறேன்.

 

பின் புராணம் :
இந்த வேலை எனக்கு எதற்கு என்று, என்னை நானே கேட்டு கொண்டேன். பதிலும் கிட்டியது. இப்ப எல்லாம் சில பல பொண்ணுங்களுக்கு சுமாரா சுடு தண்ணி கூட வைக்க தெரியறதில்லை . நாம பொலச்சுக்க வேண்டாமா?….. இந்த அழகுல பலருக்கு கல்லயாணம் வேற ஆவது. அதான் இப்பலேர்ந்து தீயா வேல செய்யணும் / கத்துகோணோம் . சொந்த கையில் சமைத்து சாப்புட்டு பாருங்கள், என்ன ஒரு ருசி, என்ன ஒரு திருப்தி….

அடுத்த காரணாம், நாற்சந்திக்கு வரும் பல பெண்களுக்கு இது எல்லாம் என்னனே தெரியாது. அவர்களும் பயன்பட பதிவு.

கடைசி காரணாம், பதிவு எழுதி பல காலம் ஆவுது. அதான் சும்மா வித்யாசமா ஒரு முயற்சி. இன்னும் இது போல வரும் என்ற எதிர்பார்புடன்,

ஒழுங்காக சமைக்க(வாவது) கற்று கொள்ள எத்தும்,
உங்கள் ஓஜஸ் 😉
(உங்களுள் ஒருவன், உங்களை போல ஒருவன்)

ஷாப்ப….. (எனக்கே) ரீல் அந்துரும் போல இருக்கு…………….

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: