~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘சிவகாமியின் சபதம்’

வெற்றி விஜயம்

நாற்சந்தி கூவல் – ௮௧(81)
(விஜயதசமி பதிவு)

வெற்றி விஜயம்

நவராத்திரி – சர்வ சக்திகளையும் வழிபட நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழி. இதுவே துர்கா பூஜை என்று வட மாநிங்களிலும், தசரா என்றும் கொண்டாடப் படுகிறது. பத்தாம் நாள் தான் விஜயதசமி. ராமர் தன் வன வாசத்தை வெற்றியுடன் முடித்து விட்டு அயோத்தி திரும்பிய நாள். எனவே இத்திருநாள் வெற்றி விழாவாகவே கருதப்படுகிறது.

இந்த நாளில் ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் வெற்றியில் சென்று முடியும் என்பது புராதன ஐதீகம். வரலாற்றில் இந்த நம்பிக்கை பல முறை கடைபிடிக்கப் பட்டுள்ளது. கல்கியின் ‘சிவகாமியின் சபதத்தி’ல் , நான்காம் பாகம். ஒன்பது ஆண்டு ஏற்பாட்டுக்கு பிறகு நரசிம்ம பல்லவன் தன் முழு சைனியத்துடன் போருக்கு கிளம்பிய தினம் விஜயதசமி. பழுத்த அறிஞர் ருத்ராசாரியார் குறித்து கொடுத்த நாள். ஜெய பேரிகைகள் முழங்க, காஞ்சியில் ஏகாம்பரநாதர் சன்னதியில் நரசிம்மன் மற்றும் குறுநில மன்னர்களும் இறைவனை தொழுது, வாதாபியை நோக்கி முன்னேரிப் போக, காலாற்படை, குதிரைப்படை, யானைப்படை பின் சென்றது.

நாகநந்தி என்னும் வினை செய்த விளையாட்டு, வாதாபி மன்னன் புலிகேசி அஜந்தாவில் கலை விழாவில் கூத்தடித்து கொண்டு இருந்தார், பாவம். பல்லவ சைனியம் வாதாபியை தாண்டி சென்று, அஜந்தா செல்லும் வழியிலேயே புலிகேசியை ஏதிர் கொண்டது, போரில் மாண்டு போனான் புலிகேசி. இதனை தொடர்ந்து வாதாபி முற்றுகை நடந்து. தளபதி பரஞ்சோதியின் யுக்திகளால் மாபெரும் வெற்றி கிட்டியது.

ஒருவேல வெற்றியை எதிர்பார்த்து தான் இந்த ஆப்பிள் கும்பனிகாரங்களும் ஐ-பாட் மினியை இப்பொழுது வெளியிட்டாங்களோ !!!

வெற்றி என்பது பல சமயங்களில் ஒரு RELATIVE கருத்தாக மாறி விடுகிறது. சில இடங்களில் மட்டுமே நாம் வெளிப்படையாக வெற்றியை உணர்ந்து, மகிழ்ந்து, ரசிக்க முடிகிறது. நமது பார்வையைப் பொறுத்தே வெற்றி அமைகிறது. உதாரணத்துக்கு மாணவர்களை எடுத்து கொள்வோம். சரியா படிக்க கூட வராதவனுக்கு – பாஸ் என்பதே மிக பெரும் வெற்றி. (என்னை போல) சுமார் ஜாதிக்கு – தொண்ணூறு தொட்டால் வெற்றி. இன்னும் சிலர் உளர் – வெற்றி என்பது நூறு என்னும் நச் இலக்கு மட்டுமே.

முழு வெற்றி என்பது சில இடங்களில் மட்டுமே நிதர்சனமாக உள்ளது. விளையாட்டு , யுத்தம் , சில வர்த்தக ரீதியில் விற்பனை. வெற்றி என்பது என்றும் இன்பம் தரும் என்றும் சொல்ல முடியாது. யுத்தத்தில் நம் நாடு வெற்றி அடைந்தாலும், நாம்  இழப்பது / இழந்தது அதிகம் தான்.

வெற்றி மட்டுமே நம் இலகு என்று மாறும் தருணத்தில், நாம் பலவற்றை இழக்க முயல்கிறோம். சந்தோசம், பாசம், அன்பு, பண்பு, பணம், பலம், மனிதாபி மானம் …….. இதனை இலக்கமால் கூட வெற்றிக் கனியை பறிக்க முடியம் என்பதனை நாம் அறிதல் வேண்டும். என் தந்தை அடிக்கடி சொல்வார் Hard Work பத்தாது, Intelligent Hard Work அவசியம். இது அனுபவம் கற்று தரும் பாடம்.

முயற்சி மூனையும் முட்டும்

(படிக்க தவிர்க்க)
இந்த வெற்றியை அடைவது பற்றி நான் மேலும் சொல்லப் போவது இல்லை. இதனை பற்றி தான் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது, எத்தனை வெளிவரக் காத்து கொண்டு உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். எதோ விஜயதசமி அன்று ஒரு பதிவு எழுத வேண்டும் என்று அமர்ந்தேன். கோர்வையாய்(!?!) வந்த சிந்தனைகளை தொகுத்து உள்ளேன். மத்தபடி இதில் சொல்லப்பட்டுள்ள சிலவற்றை நானே இன்னும் சிந்தித்து செயலில் கொண்டு வர வேண்டும். அதற்கு திரு அருளும், குரு அருளும் அவசியம் என்று மட்டும் புரிகிறது.

மனிதா மாறு

(படிக்க தொடர்க)
எப்படி பார்த்தாலும் நம் மனதில் தான் உள்ளது வெற்றி. நம் மனமும் அதனை நோக்கி தான் நடைப் போடுகிறது. தோல்வி என்பது, நமக்கு கிடைத்த அரிய பாடமாக, நாம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அதுவும் வெற்றியே. ஆனால் ஒன்றை மட்டும் நாம் மாறாக்கவோ மறுக்கவோ முடியாது : வெற்றி என்பது வலியோடு தான் பிறக்கும்.

ஒருவரை சிரிக்க வைப்பது கூட வெற்றி தான் என்பதை நாம் உணர்ந்தால், வாழ்வில் எந்நாளும் விஜயதசமியே வெற்றியே.

(இந்த பதிவின் வெற்றி இலக்கு என்பதை யோசிக்கிறேன்……. யோசிக்கிறேன்….. யோசிக்கிறேன்….. சத்தியமா தெரியல!)

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: