~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘தமிழ்மணி’

பல்லாயிரம் பொங்கல் கண்ட நாடு!

நாற்சந்தி கூவல் – ௩௭(37)

(பொங்கல் கவிதைப் பதிவு)

பல்லாயிரம் பொங்கல் கண்ட நாடு!

நாற்சந்தி நண்பர்களுக்கு என் இனிய, மனம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். “தை பிறந்தால் வழி பிறகும்”. பல நல்ல வழிகள் பிறக்க, நம் ஆசைகள் நிறைவேற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பொங்கல் சிறப்பு கவிதை இன்றைய ‘தினமணி’ தமிழ்மணி. கலாம் அவர்கள் எழுதிய பொங்கல் கவிதை:

~~~~~~~~~~

பொங்கல் நாள் ஒரு பெருநாள்!

உழைப்பின் வியர்வையில் முகிழ்ந்திட்ட முத்துக்கள்
கொழித்திட்ட கதிர்கள் குவிந்திட்ட அறுவடை
மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்கின்ற மக்கள்
திருநாள் பொங்கல்; நாம் காணும் பெருநாள்!

பல்லாயிரம் பொங்கல் கண்டதிந்த தமிழகம்
பல்கிப் பெருகி பலகோடி மேற்காணும்
பொங்கட்டும் பொங்கல் பொலியட்டும் தமிழகம்
நலங்கண்ட தமிழகத்தால் வளங்காணும் பாரதம்

பொங்கல் நாள் ஒரு பெருநாள்!

உண்மைகளின் உன்னதங்கள் ஒலிக்கட்டும் உலகெங்கும்
வள்ளுவன்போல் ஞாலஞானிகள் வளரட்டும் ஆங்காங்கே
செழிக்கட்டும் நம்நாட்டில் குறள்போலும் பன்னூல்கள்
இறைஞானி இளங்கோவின் செந்நூலாம் சிலம்பு உணர்த்தும்
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகிவரும்
நற்சிந்தனை கருக்கொண்டு நற்செயல்கள் ஓங்கட்டும்
மகாகவிகள் தோன்றிடட்டும்; நதிநீர்கள் இணைந்திடட்டும்!
கனவுகள் நனவாகும்; கங்கைநீர் காவிரி வரும்!
சேதுசமுத்திர திட்டங்களும் நிறைவேறும்

திருநாள் பொங்கல்; நாம் காணும் பெருநாள்!

பாரதியின் கனவுபோல பாரெங்கும் கலம் செலுத்தி
செல்வங்கள் சேர்த்திடுவோம் ஏழ்மையைத் துடைத்திடுவோம்!
நிமிர்ந்த நன்னடைப் புதுமைப் பெண்களும்
செவ்வனே சேர்ந்தாள சிறக்கட்டும் நம்நாடு!
வளத்தைப் பெருக்குங்கள் கொழிக்கட்டும் நம்நாடு!

ராமானுஜம் போல் கணிதமேதைகள்
ராமன் போல் நோபல்கள் இலைக்கொன்றாய் முளைக்கட்டும்!
நம் விஞ்ஞான வளர்ச்சிகண்டு வியக்கட்டும் நிலவுலகு!
கடின உழைப்பிலும் உள்ளத்து உயர்ச்சியிலும்
நம்பிக்கை கைக்கொண்டு நம்நாடு வளரட்டும்!
தை பிறந்தது; நாம் வளர்ந்த நாடாக வழியும் பிறந்தது!

அரிசியும் பாகும் போல நம் கனவும் நல்வினையும்
இனிப்பாகக் கலக்கட்டும் உழைப்பாக மலரட்டும்!
பொங்கட்டும் எண்ணங்கள் பொலியட்டும் நற்செயல்கள்!
திருநாள் பொங்கல் நமக்கெல்லாம் பெருநாள்!

– அப்துல் கலாம்

~~~~~~~~~~

நாற்சந்தி நன்றிகள்: டாக்டர் கலாம், தினமணி தமிழ்மணி

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: