~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘தமிழ்’

சொன்னால் நம்பமாட்டீர்கள் – சின்ன அண்ணாமலை

நாற்சந்தி கூவல் – ௧௦௨(102)
(புத்தகப் பரிந்துரை)

பன்முகம் கொண்ட பண்பாளர்களை (பற்றி) வாசிப்பது ஒரு சுகானுபவம். 1900களின் காலக்கட்டத்தில் இத்தகு மேதமை கொண்ட மனிதர்கள் பல இருந்தனர் என்று நான் எண்ணமிடுவதுண்டு. சின்ன அண்ணாமலையும் அந்த பட்டியலில் பெருமையுடன் சேர்கிறார்.

யார் இவர்? அரசியல்வாதியா? நகைசுவை ததும்ப உரையாற்றும் பேச்சாளரா? காங்கிரஸ் தொண்டரா? கல்கி விசிறியா? ராஜாஜி பக்தரா? எம்.ஜி.ஆர் அண்ணாவின் அன்பு தோழரா? எழுத்தாளரா? காந்தியவாதியா? மா.பொ.சி-யின் நண்பரா? பத்திப்பாளரா? சுதந்திர போராட்ட வீரரா? திரைப்பட தாயாரிப்பாளரா வசனக்கர்த்தாவா? இன்னும் இன்னும் என்னவென்று அடுக்க முயாத அளவு கீர்த்திகளை கொண்ட எளியவர், தமிழன்பர்.

chinna annamalai with rajaji

சுயசரியதை மாதிரியான புத்தகம் தான், ஆனால் அத்தனை சுவையாக உள்ளது. நறுக்கென எழுதி, களுக்குக்கென சிரிக்க வைக்கிறார். வரிசையாக படிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஊருகாய் போல அங்கு அங்கு தொட்டு ருசிக்கலாம், பின்னர் முழுவதும் ரசிக்கலாம். தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள், அதில் பாய்ந்து வரும் ஜலமென வேக நடை.

வரலாறு என்றுமே பாரபட்சம் மிகுந்தது. அதுவும் நம் சுதந்தரக் கதை மேற்கத்திய மாநிலங்களின் ஆதிக்கத்துடன் எழுத்தப்பட்டுள்ளன எனபது சொல்லப்படாத உண்மை. அதை மட்டுமே நாம் வாசித்து, பேசி, விவாதித்து, பாராட்டி வருகிறோம் என்பதில் தான் எனக்கு அதீத வருத்தம்.

சின்ன அண்ணாமலை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ? ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ? அதற்கு பின் நடந்த சம்பவங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கலையில் இந்த செய்தியை அறிந்த மக்கள், தேவக்கோடையிலிருந்து ஊர்வலமாக திரண்டு சென்று, சிறையை உடைந்து, தீவைத்து, இவரை விடுதலை செய்தது. இவர்கள் எல்லோரும் இரவு திரும்ப வரும் வழியில், பிரிட்டிஷ் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், பல நூறு பேர் இறந்தனர்,  காயமடைந்தனர், உதவ ஆள்லில்லாமல் துடிதுடித்து செத்தனர். கையில் குண்டடியுடன் சின்ன அண்ணாமலை அதிஷ்டவசமாக தப்பித்தார். தேசத்தில் இது போல, ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை ! (காந்தியே இதைக் கேட்டு ஆச்சிரியப்பட்டு, அவரை பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இப்படி பட்ட “சொன்னால் நம்ப முடியாத” அதிசயங்கள் பல இவர் வாழிவில் நடந்துள்ளது. குமுதம் இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் புத்தக வடிவம் கொண்டுள்ளது.

இந்த புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் ? மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது ? காரணம் என்ன ? கர்த்தாக்கள் யார் ? அதன் ஆயுள் மிகுந்த ஆட்சியின் தோல்வி எப்படி சாத்தியமானது ? என்பதை போகிற போக்கில், எளிமையா, உள்ளது உள்ளபடி சொல்லி செல்கிறார் சின்ன அண்ணாமலை. இவை அனைத்தையும் அவர் நேரில் இருந்து பார்த்து, அனுபவித்து எழுதியுள்ளார்.

நான் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம்: 1950களில் இருந்த அரசியல் தலைவர்களின் பாராட்ட மிகுந்த பண்புகள். எத்தனை தான் அரசியல் கொள்கைளில் சண்டைகள் இருந்தாலும், தேர்தலில் போட்டிகள் இருந்தாலும், தாக்கி வீழ்த்தி மேடைகளில் பேசினாலும், பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட துவேஷம் அறவே இல்லை என்றே சொல்லலாம்.

தமிழிசை, செழுமை பெற்ற காலத்தின் கதை, இந்த புத்தகத்தில் உள்ளது. தேவக்கோட்டையில் இரண்டாம் தமிழிசை மாநாடு நடத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் பண்ணை – என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நல்ல தமிழ் அறிஞர்களின் இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் வெளியிட்ட கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் புத்தகங்கள் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இதன் திரைப்படங்கள் வெளிவரவும் இவரே காரணமாக இருந்துள்ளார்.

மலைக்கள்ளன் படம் வெளிவர அறிஞர் அண்ணா தான் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்ற சம்பவத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைத்தேன். போதும் மீதியை நீங்களே வாசித்து இன்புறவும்.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது, புத்தகத்தின் கடைசி அத்தியாயம் தான்! அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன்!”. இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுக் கொண்டு வருகிறது.

நிகழ்கால வந்தியதேவன் என்ற பட்டத்தை இவருக்கு தரலாம் என்று நினைக்கிறேன், இவரின் ஆளுமைக்கும் திறனுக்கும் இது சாலப்பொருத்தமானது. எத்தனை எத்தனை அரும் பெரும் காரியங்களை செய்துள்ளார்! எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார்! வாசித்து விட்டு, வந்து சொல்லுங்கள், இவரை வந்தியத்தேவன் என்று அழைப்பது சரிதானாவென்று !

பி.கு : சின்ன அண்ணாமலையின் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நாட்டுமையாக்கப்பட்ட நூல். பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் – தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம். மின்னல் வேகத்தில் நானே படித்து முடித்தேன், உங்களைப் பற்றி சொல்லவா வேணும்!

தமிழ் ட்வீப்ஸ் #1

 1. sweetsudha1
  எல்லார் கிட்டயும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை கண்டுபிடிச்சிட்டா நமக்கு எல்லாரையும் பிடிக்க ஆரம்பிச்சிடும்
 2. maethaavi
  உன்னில் இருக்கும் நீயும் என்னில் இருக்கும் நானும் ஒரு துவந்த யுத்தம் நடத்துகையில் வீழ்ந்து விழுவது நம்மில் இருக்கும் நாம்.
  Sat, Aug 04 2012 00:45:42
 3. minimeens
  ╔════════════════════╗ ║██░░░░░░░░░░░░░░░░░░╚╗ ║██░░░░░LowBattery░░░░░░ ║ ║██░░░░░░░░░░░░░░░░░░╔╝ ╚════════════════════╝ #கடுப்பு #ஸுட்டது
  Thu, Aug 09 2012 17:51:51
 4. saichithra
  காப்பி ரைட்டாமே..சே.. இது தெரியாம இத்தனை நாளா ஸ்கூல்ல காப்பி அடிக்காம இருந்துட்டேனே!! 🙂
  Sun, Aug 05 2012 06:37:46
 5. iamthamizh
  ஹிட்லர பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு ஹிட்லர பிடிக்கும்னு அர்த்தம்.
  Wed, Aug 08 2012 06:27:42
 6. siva_buvan
  நல்ல நினைவுகளை நிறைத்த மனதில் தினம் கொண்டாட்டம்தான்.
  Wed, Aug 08 2012 20:11:59
 7. iamthamizh
  குற்றத்தின் பரிமாணத்தைப் பொறுத்தது -அதை மன்னிப்பதும், மறப்பதும்.
  Wed, Aug 08 2012 06:26:03
 8. skpkaruna
  முதன் முறையாக எண்ணையில்லாத தோசை கேட்டேன். அடப்பாவிங்களா! அப்போ இத்தனை நாளா ருசி எண்ணையிலா இருந்திருக்கிறது?
  Thu, Aug 09 2012 05:46:41
 9. iamthamizh
  காந்திய பிடிக்குமா-பிடிக்காதானு யாராவது கேட்டா, அவங்களுக்கு காந்திய பிடிக்காதுனு அர்த்தம்.
  Wed, Aug 08 2012 06:27:08
 10. karaiyaan
  கவசம் போடலன்ன திவசம் தான் – Wear Helmet #OldTweet
  Sat, Aug 04 2012 10:01:32
 11. sweetsudha1
  தோல்வியின் கோபத்துக்கு வீர்யம் அதிகம், வெற்றியின் புன்னகைக்கு மதிப்பு அதிகம் …!
 12. thoatta
  இந்திய ஆண்களும் பெண்களும் சமமாயினர், ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில்.!

தமிழ் ட்வீப்ஸ் #2

 1. oojass
  இதோ தமிழ் ட்வீப்ஸ் #2 #வெள்ளோட்டம் http://pic.twitter.com/OjjubQXq
  Sat, Aug 11 2012 07:26:18
 2. kolaaru
  கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யார் வேணா என்ன வேணா சொல்லலாம்..நீ வேணா கம்ப்யூட்டர் பின்னாடி உட்காந்து சொல்லு !
  Sat, Aug 11 2012 04:25:02
 3. arattaigirl
  என் சோம்பலுக்குத்தான் எத்தனை சுறுசுறுப்பு? ஓயாமல் உழைத்துத் தீர்கிறது:-)
  Fri, Aug 10 2012 08:33:52
 4. iamkarki
  செய்ற வேலையை லவ் பண்ணனும்ன்னா,லவ் பண்றதையே வேலையா செய்ங்க.அப்பதான் லவ்வ லவ் பண்ன்லாம். சிந்தனைசிற்பி சயனைடுகுப்பி கார்க்கி #AthathuvamAday
  Sat, Aug 11 2012 02:08:40
 5. jroldmonk
  வீட்டிற்கு வாஸ்து, திருமணத்திற்கு ஜாதகம்,நாள் பார்த்து சிசேரியன்,பெயருக்கு நியுமராலஜி..விட்டால் நேரம் குறித்து சாவார்கள் :-//
 6. Sowmi_
  யாரிடமும் பேசாதவர்களை நல்ல மனிதர்கள் என மக்கள் பட்டம் கொடுக்கிறார்கள்.
  Sat, Aug 11 2012 00:27:13
 7. arivucs
  நனைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிற‌து, உப்பு வியாபாரிக்கு!
  Fri, Aug 10 2012 23:33:31
 8. iParisal
  AC என்றால் பணக்காரர்களுக்கு Air Condition. மற்றவர்களுக்கு Account.
 9. karizmasam
  கண்ணாடி உங்கள் பிம்பத்தை இடம் வளமாகவே காட்டும். நல்ல நண்பன் மட்டுமே உங்களை உங்களுக்கு சரியாக அடையாளம் காட்டுவான்
  Fri, Aug 10 2012 22:38:00
 10. Alexxious
  மடியில் கனம் ; வழியில் பயம் !! #ஏழை கர்ப்பிணி
  Fri, Aug 10 2012 05:37:39
 11. VignaSuresh
  கேக் சாப்பிட்டா வெயிட் போடும்! சொல்லியாச்சு – கேக்கறதும், கேக்காததும் உங்க இஷ்டம்!
  Fri, Aug 10 2012 00:22:18
 12. arattaigirl
  குறுஞ்செய்தி கண்டு குறுநகை புரிந்து விட்டு யாரும் கவனித்தார்களா என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொள்வதையும் நவரசத்துடன் சேர்க்கலாம்தான்:)
  Thu, Aug 09 2012 20:19:43
 13. karaiyaan
  முகத்தில் பூசப்படாத கேக்குகள் சுவைப்பதில்லை – நண்பர்கள் சூழாது பிறந்த நாள் கொண்டாடுவதும்!
  Fri, Aug 10 2012 02:15:15
 14. vambukku
  கடவுள் கிட்ட ரொம்ப கேள்வி கேக்காதீங்க.. அப்புரம் அவரு.. நேர்ல வா பதில் சொல்றேன்னு சொல்லிட்ட.. வம்பா போயிரும்..
  Fri, Aug 10 2012 03:42:18
 15. உதவிய தமிழரசு அவர்களுக்கு நன்றிகள் 😉

தமிழ் ட்வீப்ஸ் #3

 1. oojass
  இதோ தமிழ் ட்வீப்ஸ் #3 #வெள்ளோட்டம் http://pic.twitter.com/O5jiLdXn
  Sat, Aug 11 2012 22:43:52
 2. iamthamizh
  படித்தவுடனே ரீட்வீட் செய்வதில் இருக்கிறது. கீச்சின் சுவாரசியமும்-படைப்பாளியின் பெருமையும்
  Sat, Aug 11 2012 22:48:30
 3. Sricalifornia
  என்னுடைய அத்தியாவச்ய தேவைகள் என்ற பட்டியலை மிகக் குறுகியதாய் ஆக்கியது தாய்மை.
  Sat, Aug 11 2012 00:20:34
 4. senthilcp
  வினையாய் இருக்கும் மனைவி யை வீணையாய் மாற்றுவது கணவன் கையில் இருக்கிறது
  Sat, Aug 11 2012 21:25:41
 5. SIVATHENNARASU
  தினமும் என்னத்த கிழிக்கிறேனோ இல்லையோ, நாள்தவறாம தேதிய மட்டும் கிழிக்கிறேன்
  Sat, Aug 11 2012 17:51:00
 6. aidselva
  சரித்திரம் படைக்க முடியுதோ இல்லையோ, எல்லோராலையும் கட்டயமா ஏதாவது ஒரு தரித்திரம் படைக்கப்படுது!
  Sat, Aug 11 2012 10:28:03
 7. Sivasbrmni
  நாலுபேருக்கு நல்லது செய்வது, மற்றவரை துன்புறுத்துவது இரன்டுமே ஒருவகை போதை தான்… !!
  Thu, Aug 09 2012 07:48:40
 8. Tparavai
  அளவுகோலுடன் வாழுங்கள் தப்பில்லை. ரசிக்கையில் மட்டும் தூர வைத்து விட்டு வாருங்கள் அளவுகோலை
 9. saichithra
  தொலைந்து போன நட்பின் சோகம்.. துளைக்கப்பட்ட மனதின் நிம்மதி.. இரண்டுக்கும் ஒரே நேரத்தில் மருந்து.. இளையராஜாவின் இசை..
  Sat, Aug 11 2012 09:18:44
 10. kalasal
  ஒரு பெண்ணிற்காக நான் காத்திருப்பது என் தாயன்பை பெற அல்ல, அவள் தந்தையின் அன்பை உணரவைப்பதற்க்கே…!
 11. thoatta
  வாழ்ந்து கெட்டவனோ, வாழாமல் கெட்டவளோ, ரோஷம் எல்லோருக்கும் உண்டு.!!
 12. Tottodaing
  இலக்கை அடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்தான், உடனடியாக “மாற்றுவழி” கண்டறியப் படுகிறது! # டிராபிக் ஜாம்!
 13. Aruniac
  என் உயிர் போனால் உனக்கு கண்ணீர் வருமா தெரியாது, ஆனா உனக்கு கண்ணீர் வந்தாலே என் உயிர் போயிடும் ம்க்கும்.
  Sat, Aug 11 2012 22:33:28
 14. kalasal
  அவளை பற்றி எழுதும் போதும் 140 வார்த்தைகளுக்குள் எழுத சொல்லும் ட்விட்டருக்கு தெரியவில்லை என் காதலின் கனம் #இது கவிதையா?
 15. iamkarki
  சில பேருக்கு பார்க் ஹோட்டல். சில பேருக்கு பார்க்கே ஹோட்டல்
  Sat, Aug 11 2012 09:53:24
 16. minimeens
  ஆண்களும் பேங்க் பேலன்ஸும் ஒன்றுதானாம். ரெண்டுலயுமே பணம் இல்லைனா இன்ட்ரஸ்ட் இருக்காதாம்.! #சொன்னாங்க #SmS
  Sat, Aug 11 2012 09:45:33
 17. sallai7
  தாத்தா, பேத்தியை கொஞ்சும் தாராளத்தில் தெரிகிறது… அவர் தந்தையாய் இருந்தபோது தவறவிட்ட கணங்கள்…!
  Thu, Aug 09 2012 19:36:10
 18. iParisal
  நேர்மையானவனை பின்தொடர ட்ராஃபிக் சிக்னலில்கூட ஆட்கள் இருப்பதில்லை.
 19. I_am_sme
  மட்கப் போவதேயில்லை மக்குகளா எனச் சொல்லி சிரிக்கிறது பிளாஸ்டிக்!
  Sat, Aug 11 2012 10:42:33
 20. aidselva
  அவள் கண்”கள்” # போதை!
  Sat, Aug 11 2012 10:31:14
 21. kolaaru
  சுவற்றில் எழுதாதே என சுவற்றிலேயே எழுது !!! உன் சுவர் உன் உரிமை !
  Sat, Aug 11 2012 10:48:24
 22. arattaigirl
  ‘மௌனம் சாதிப்பது’ என்ற பதம் சரிதான். சாதித்து விடுகிறது.
  Thu, Aug 09 2012 07:51:35
 23. இந்த கீச்சுகளின் சொந்தகாரர்கள் அனைவர்க்கும் நன்றிகள். தொடர்ந்து இது போல கீச்ச வாழ்த்துகள்.

  எப்பொழுதும் போல தமிழரசு அவர்களுக்கு நன்றிகள் !!!

நட்பும் எழுத்துக்களும்

நாற்சந்தி கூவல் – ௬௭ ()

(தமிழ் பதிவு)

நட்பும் எழுத்துக்களும்

சரியா பள்ளிகள் தொடங்கி இருபது நாட்கள் ஆகபோகின்றன.  நட்பு என்னும் பூ ஒவ்வொரு வருடமும் பூக்கும் தருணங்கள் பல தாண்டி நம் சிறார்கள் வளர்ந்து வரும் அழகே தனி தான். இதை எல்லாம் பார்க்கும பொழுதும் கடந்து வந்த அந்த சுகமான நாட்கள் மட்டும் நினைவில் தொக்கி நிற்கின்றன.

ஏனடா இந்த பூர்விக பீடிகை என்றால், நானும் (தமிழ்) பாடம் சொல்ல வந்துள்ளேன். இந்த மாதம் ஒன்னான் தேதி மங்களம் பொங்கும் வெள்ளி. ஆனால் தொடர்ந்து வந்த இரண்டு விடுமுறை நாட்களோ, வைத்தியில் புலியை கரைத்து விட்டன. வேறென்ன, குழந்தைகளுக்காக நாம் செய்யும் வீட்டு-பாடம் ஹோம்வொர்க் தான். நட்பு மலர சந்தர்ப்பமே கொடுக்காமல் முதல் நாளே ‘நட்பு எழுத்துகளை’ நடத்தி , அசைன்மென்ட் வேறு 😦

முதலில் நட்பு எழுத்துகள் பற்றி அறிக:

(சமச்சீர் கல்வி தமிழ் புத்தகம் – ஆறாம் வகுப்பு – பக்கம் 10)

நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பத்துக்கும் குறையாமல் ஒவ்வொரு இன எழுத்துக்களுக்கும் எடுத்து காட்டு எழுத வேண்டும். குடும்பமே கூடி அமர்ந்து இந்த விளையாட்டை இனிதே மகிழ்ந்து கழித்து விளையாடினோம்

ங்க

 1. லிங்கம்
 2. பங்கம்
 3. சுரங்கம்
 4. கவியரங்கம்
 5. சங்கம்
 6. மங்களம்
 7. இருங்கள்
 8. போங்கள்
 9. பொங்கல்
 10. சிற்பங்கள்
 11. தங்கம்

 

ஞ்ச

 1. அஞ்சலி
 2. சஞ்சலம்
 3. பஞ்சம்
 4. லஞ்சம்
 5. நெஞ்சம்
 6. கொஞ்சம்
 7. அஞ்சாதே
 8. அஞ்சல்
 9. மிஞ்சி
 10. கோழிகுஞ்சு

 

ண்ட

 1. மண்டலம்
 2. கண்டம்
 3. கமண்டலம்
 4. பூண்டு
 5. வண்டு
 6. நண்டு
 7. வேண்டும்
 8. கொண்டாட்டம்
 9. கொண்டை
 10. சண்டை

 

ந்த

 1. நந்தன வருடம்
 2. நந்தி
 3. பந்து
 4. வெந்தயம்
 5. சந்தை
 6. தந்தை
 7. பந்தி
 8. வேந்து
 9. வந்து
 10. நொந்து
 11. பொந்து

ம்ப

 1. கொம்பு
 2. வம்பு
 3. கும்பம்
 4. நம்பிக்கை
 5. விருப்பம்
 6. இரும்பு
 7. கரும்பு
 8.  பிரம்பு
 9. வரம்பு
 10. தம்பி
 11. கம்பு

 

ன்ற

 1. அன்று
 2. இன்று
 3. கன்று
 4. நன்று
 5. கொன்று
 6. வென்று
 7. ஒன்று
 8. சென்று
 9. என்று
 10. இருக்கின்றோம்

இது போல பல சொற்கள் அகப்பட்டன, ஆறாம் வகுப்பு குழந்தை அறிந்துள்ள தமிழ் சொற்களின் அளவுக்கு எனக்கு தெரிய வில்லையே என்பது ஒரு வருத்தம். ஆனாலும் பரவாயில்லை, நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் இது போல எழுதி பார்கிறேன்.

நீங்களும் செய்யுங்கள். நண்பர்களுடன் நட்பாக நட்பு எழுத்துகளை சேர்த்து பாருங்கள். தமிழ் வளரும், நமது தமிழ் அறிவும் வளரும். பகிர்ந்து கொள்ளுகள் தமிழையும் மகிழ்ச்சியும்.

நீங்களும் நானும், நானும் நாற்சந்தியும், நட்பு எழுத்துகள் போல என்றும் பிரியாது, ஒரே இனமாக இருப்போமாகுக. வாழ்கிறது தமிழ்! வளர்கிறது தமிழ்!!!

எத்தனை, எத்தனை….

நாற்சந்தி கூவல் – ௬௪ (64)

(அறிக்கைப் பதிவு)

எத்தனை, எத்தனை….

நாற்சந்தி கடந்த சில மாதங்களாக நன்கு இயங்கி வருகிறது, என்பது என் நம்பிக்கை. ஒரு சில வாரங்களுக்கு முன் ஒரு தமிழ் அன்பரை, நண்பரை சந்தித்து, பேசினேன். நானும் நாற்சந்தியும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள்.

 

என்னுடைய எழுத்து முயற்சி அனைத்தயும் படித்து, அவருக்கு சரியன  படும் கருத்துகளை சட்டென சொல்லுவார். சில சமயங்களில் அது எனக்கு வேப்பம் கொழுந்தாக அமையும், என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமோ. ‘தமிழ்’ குறை கண்டு பிடிப்பதில் வல்லவர். கல்கிக்கு ராஜாஜி போல எனக்கு அவர். (கல்கிக்கு டீ.கே.சி போல எனக்கு யாரோ? தேடலில் உள்ளேன்)  நான் எழுத்தும் தப்பு தப்பான தமிழை சகிக்க முடியவில்லை, அவரால். ஒரு அறிவிப்பு போட சொன்னார். செய்து விட்டேன்.

 

எனவே இந்த நாற்சந்தியின் தலை பாகத்தில் போட்டுள்ளேன். கந்த சஷ்டி கவசத்தில் வரும் வரிகள். ‘எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்’ . தமிழின் தனி கடவுள், தமிழரின் துயர் துடைக்கும் தெய்வம் ‘முருகன் ‘. இந்த அறிவிப்பை படித்து விட்டு, முருக பெருமாள் போல என் அன்பு வாசகர்களும், என் அத்தனை குறைகளை  மன்னிக்க வேண்டுகிறேன். (அதே போல குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்).

மன்னிக்க தெரிந்தவன் மனிதன்,

மன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனிதன்!!!

 

ரொம்ப நாள்  கழித்து ஒரு ஆசை , ஆங்கிலத்தில் பதிவு எழுத வேண்டும் என்று. எனவே சற்றும் யோசிக்காமல் இறங்கி விட்டேன். CNERD . முகவரி : www.cnerd.wordpress.com . நேரம் இருந்தால் சென்று பார்த்து பயன் அடையுங்கள்.

 

நாற்சந்தியை நம்பியுள்ள,

ஓஜஸ் 😉

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: