~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘தினமணி’

வெள்ளி விருந்து

நாற்சந்தி கூவல் – ௯௪ (94)
(கதம்பம்)

படிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.

(மின்)புத்தகம்

தீட்சிதர் கதைகள் (1936)


ராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.

>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<

கட்டுரை

 • எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி ? நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது
 • கதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/?p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect ! என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி.  இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)

கதை

 • சித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.
 • ஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.
 •  நேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)

இசை

இசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :

ஒலிந்து = ஒலியுடன் இயந்து !

எம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.

ஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.

இன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :

அனைவரும் கூடி,
அவன் புகழ் பாடி,
நிர்மலா யமுனா நதியில் நீராடி…
#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)

மீள்

(தினமணி கதிரிலிருந்து)

பரிபாஷை என்றால்  ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்!

தங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.

கோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.

இங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை! “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்!

கோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.

அரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர்! கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்!

-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.

கவிதை

 • கவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி
    இருட்டை 
    எச்சரிக்கும் 
    புரட்சிக்குரல் !
 • உன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :
  மழையில்லை மடியில் கனமில்லை,
  மகன்கள் சுகமில்லை,
  கையில் பணமில்லை,
  கள்குடிக்கக் கூட காசில்லை !

சொற்பொழிவு 

புலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன.  நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.

 >>> பதிவிறக்க <<<

படம் 

(நெட்டில் சுட்டது)

Three Friends

யோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே !

என் கிறுக்கல் 

இரவும் இதயமும்
இனிதே உறங்கட்டும்
சிறகும் சிந்தனையும்
சிலிர்த்தே வளரட்டும்

உறவும் உறக்கமும்
உணர்ந்தே கூடட்டும்
மலரும் மனமும்
மகிழ்தே விடியட்டும்

நாளும் நலமும்
நம்முடன் வாழட்டும்
காற்றும் காதலும்
காலமெல்லாம் பெருகட்டும் !

எழுத்தாளனின் அடையாளம் இவர்

நாற்சந்தி கூவல் – ௮௯(89)

(மீள் பதிவு)

எழுத்தளார் ஜெயகாந்தானை அவ்வளவாக படித்ததில்லை, அவரை பற்றி பலர் “நல்ல எழுத்தாளர்” என்று சொல்லிக் கேட்டுள்ளேன். நேற்று அவர் தனது 80ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் ! நாற்சந்தியின் நல்வாழ்த்துகள் ஐயா. உங்களை மேலும் படிக்க ஆசை.

இன்று தினமணி நாளிதழில், நடு பக்கத்தில் அவரை பற்றி ஒரு சிறப்பான சிறு உரை வெளிவந்துள்ளது. அதனுடைய மீளே இப்பதிவு. ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த படைப்புகளின் பட்டில் இதில் உள்ளது. படிக்க ஆரம்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே படித்தவர்களுக்கும் இதன் அருமை தெரியும் அல்லது (விரைவில்) புரியும்! அதை தவிர அவரின் முழுமையான சாதனைகளை நீங்கள் அறியலாம். இதனை எழுதியர் ராஜ்கண்ணன்

♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣

“சரஸ்வதி தேவியின் அருள் பெற்று அவள் கைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக் குழந்தைகளில் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும்! அந்த லட்சுமி தேவி என் பின்னால் கை கட்டி வருவதானால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்” – இப்படி தனது இலக்கியக் கோட்பாட்டை தான் எழுத ஆரம்பித்த நாள்களிலேயே துல்லியமாக வரையறைத்துக் கொண்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இவருக்கு முன்னர் தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் கதைகளில் காணப்பட்ட வாழ்க்கை குறித்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை வறட்சியை இவர் தனது கதைகளில் முற்றாகத் தவிர்த்தார். குடிசை மனிதர்கள், பிளாட்பாரவாசிகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், குஷ்டரோகிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை மனிதர்களிடம் ஒட்டியிருக்கும் மகோன்னதமான பண்புகளை எடுத்துக் காட்டினார்.

சங்கமம்

சரஸ்வதி“யில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் தமிழின் எல்லா பத்திரிகைகளிலும் நிலை கொண்டது என்றாலும் இவரது எழுத்துலக வாழ்வை சரஸ்வதி காலம், ஆனந்தவிகடன் காலம், தினமணி கதிர் காலம் என மூன்று பகுதிகளாகப் படித்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

“சரஸ்வதி’யில் இவர் எழுதிய கதைகளில் சக மனிதர்கள் மீதான அக்கறை, மனிதாபிமான உணர்வு மிகுந்து காணப்படும். வசிப்பதற்கு வாழ்விடம் என்ற ஒன்று இல்லாதவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் முதல் இரவுகூட எவ்வாறு துன்பகரமானதாக மாறிவிடும் என்பதை எழுத்தில் வடித்திருந்தார். “குழந்தை என்பது கதைப் பொருள் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட’ என்பதை உணர்த்தினார். “திரஸ்காரம்”  “பௌருஷம்”  “பால் பேதம்” “நந்தவனத்தில் ஒர் ஆண்டி”  “பிணக்கு” “போர்வை” போன்ற பல அற்புதமான கதைகள் சரஸ்வதியில் வெளிவந்தவையே.

ஆனந்த விகடனில் இவர் எழுதிய முதல் கதை “ஒவர் டைம்” தொடர்ந்து “சுயரூபம்”, “மூங்கில்”, “நான் இருக்கிறேன்”,  “பூ உதிரும்”, “அக்னிப் பிரவேசம்”, “சுயதரிசனம்”, “அந்தரங்கம் புனிதமானது” போன்ற சிறந்த கதைகள் விகடனில் வெளிவந்தன.

வணிகப் பத்திரிகையில் இலக்கியத் தரமான கதைகளுக்கு இடமில்லை என்கிற வாதத்தை பொய்ப்பித்தவர் ஜெயகாந்தன். இவர் ஆனந்த விகடனில் எழுதிய பெரும்பாலான கதைகள் முத்திரைக் கதைகளே.

தினமணி கதிர் காலகட்டத்துக் கதைகளில் தனி மனித விஷயம், தனி மனித சுதந்திரம் சார்ந்த கதைகள் அதிகம் எழுதினார். “கண்ணாமூச்சி” , “இறந்த காலங்கள்”, “சக்கரங்கள் நிற்பதில்லை” போன்றவற்றை இவ்வகைக் கதைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை வேறு சில எழுத்தாளர்களால் வேறு வேறு வகையில் மாற்றி எழுதப்பட்டது என்றால் அது இவர் எழுதிய “அக்னிப் பிரவேசம்” கதையேயாகும். அப்போது ஒரளவு பிரபலமாயிருந்த எழுத்தாளர்கள்கூட எழுதினார்கள். அவை பத்திரிகைகளில் பிரசுரமும் ஆயின.

ஜெயகாந்தன் கதைகளில் உள்ள தனிச்சிறப்பு அவர் மனித ராசியில் உள்ள சகல பிரிவினருக்கும் ஏற்படும் சகலவிதமான பிரச்னைகளையும் புதிய கோணத்தில் கண்டு தீவிரமாக விமர்சனம் செய்ததுதான்.

இவரது கதைகளுக்கு நிகராகப் புகழ் பெற்றது கதைத் தொகுதிகளுக்கு இவர் எழுதும் முன்னுரை. முன்னுரையை ஒரு இலக்கியப் பிரதி ஆக்கியவர் இவரே. இவரது முன்னுரைகளே தனித்தனி தொகுதிகளாக வெளி வந்துள்ளன. ஒரு நாவலின் (பாரீசூக்குப் போ) முன்னுரையில் இவர் இலக்கியம் பற்றி குறிப்பிட்டது

“ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்…. ஓர் எழுத்தாளன் ஆத்ம சுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்! “

இவர் அவ்வப்போது கவிதைகளும் எழுதியிருக்கிறார். 1972இல் “தீபம்” ஆண்டு மலரில் இவர் எழுதிய “சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்பி வந்தாட விரும்புகிறேன்” என்கிற கவிதையும் 1970இல் “ஞான ரதம்” இதழில் எழுதிய “வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்” என்கிற கவிதையும் பிரபலமானவை.

இவை தவிர இவருடைய கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடல்கள் எழுதியிருக்கிறார். “தென்னங்கீற்று ஊஞ்சலிலே…..” . “அழுத கண்ணீர் பாலாகுமா?….(பாதை தெரியுது பார்)  “பொறப்பதும் போறதும் இயற்கை” (காவல் தெய்வம்) “கண்டதைச் சொல்லுகிறேன்”, “வேறு இடம் தேடிப் போவாளோ?” (சில நேரங்களில் சில மனிதர்கள்), “நடிகை பார்க்கும் நாடகம்” (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) போன்றவை இவர் எழுதிய பாடல்களே.

கதை கவிதை தவிர கட்டுரைகளிலும் இவர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார். “சுதந்திரச் சிந்தனை”, “முன்னோட்டம்”, “யோசிக்கும் வேளையிலே”, “ஒரு பிரஜையின் குரல்” போன்றவை அவற்றுள் சில. இவருடைய கட்டுரை நூல்களில் மிகவும் புகழ் பெற்றது “நினைத்துப் பார்க்கிறேன்”. அதற்கு நிகராக எளிமையானதும் வலிமையானதுமான கட்டுரை நூல் இதுவரை தமிழில் மற்றொன்று வரவில்லை.

இவர் எழுதிய “உன்னைப் போல் ஒருவன்” கதையை இவரே திரைப்படமாக எடுத்து இயக்கினார். தமிழில் வெளிவந்த முதல் கலைப்படம் என்று இதனைக் கூற வேண்டும். இப்படத்துக்கு விமர்சனம் எழுதிய “ஆனந்த விகடன்” இதழ் “சினிமாத் துறையில் சற்றும் அனுபவம் இல்லாத கதாசிரியர் ஜெயகாந்தனே இப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அனுபவம் பெற்ற டைரக்டர்கள் எல்லாம் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று எழுதியது. இப்படம் அந்த ஆண்டில் சிறந்த மூன்றாவது படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. இருந்தும் ஜெயகாந்தன் தொடர்ந்து தன்னை திரைப்படத்துறையில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தான் ஒரு முழு நேர எழுத்தாளன் என்பதிலேயே உறுதியாக இருந்தார்.

“நான் ஏன் எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் வானொலியில் இவர் 24-5-1977இல் உரையாற்றியபோது,

“எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லாரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக் கிளறி சித்ரவதை செய்யும்’ என்று குறிப்பிடுகிறார். இவருடைய எழுத்துகள் எல்லாமே அப்படித்தான்.”

ஜெயகாந்தன் – எழுத்தாளனின் அடையாளம். அவர் பல்லாண்டு வாழ்க!

(ஏப்ரல் 24, 2013 ஜெயகாந்தனின் 80ஆவது பிறந்த நாள்)

♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣ ♣

நாற்சந்தி நன்றிகள் : ராஜ்கண்ணன் மற்றும் தினமணி இணையம், படத்திற்கு நன்றி : புதியதலைமுறை  மாலன்

இரங்கல் : தமிழக இசையின் இரு பெரும் அஸ்திவார தூண்கள் இந்த வாரம் மறைந்தனர் : இசையமைப்பாளர் ராமமூர்த்தி மற்றும் வயலின் லால்குடி ஜெயராமன் ! உங்கள் இசை என்றும் எங்கள் காதுகளுக்கு விருந்தே  😦

மலைக்கள்ளன்.

நாற்சந்தி கூவல் – ௮௭(87)

(புத்தகப் பதிவு)

சில நாவல்களை படிக்கும் சமயங்களில், என்னுள் ஒரு புதிய மனிதன் புகுந்து, என்னை ஆட்டி வைக்கிறானா என்ற சந்தேகம், எனக்கே தோன்றும் – அந்த மனிதன் – கதையின் ஆசானாகக் கூட இருக்கலாம் ! என்ன அழகாக தமிழ் எழுத்துகின்றனர். புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் பித்து பிடித்து தான் அலையை வேண்டியுள்ளது.

பல பல காலம் முன், பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து, இப்படி பட்ட அற்புதமான உணர்வுகளை, ரசித்து, மகிழ்ந்து வந்துள்ளேன். நாளடைவில் இந்த உணர்வு பெருக பெருக, அதன் போதையும் மெருகும் கூட கூட, அந்த ஆனந்தத்துக்கே அடிமையாகி விட்டேன். இதனால் நானே நம்ப வேண்டி வந்தது : உலகை மறந்து படிப்பது என்பது சர்வ சாதாரணம், சாத்தியம் என்று !

முடிந்த மட்டும் புத்தங்களுக்கு விமர்சனம் அல்லது நான் படித்த அனுபவங்களை எழுதுவதே இல்லை. காரணம் : உணரக்கூடிய ஆனந்தத்தை எப்படி என் எழுத்தால் உணர்த்த முடியும். ஆனாலும் தமிழ் தம்பி அடிக்கடி கேட்டு கொண்டதன் பேரில் இந்த முயற்சி. இதற்கு முன் தம்பி கொடுத்த நாவல் – சாகவரம் (இறையன்பு) பற்றி என்னுரையை எழுத ஆரம்பித்து…………………………..

malai !

நாவல் பெயர் : மலைக்கள்ளன்
ஆசிரியர் : நாமக்கல் கவிஞர்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
விலை : 150
பக்கங்கள் : 406

1930ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் நடக்கும் கதை. சிறிய கிராமம், சுற்றிலும் மலை பிரதேசங்கள். அந்த காலத்துக்குகே ஏற்ற சிறு சிறு வரிகளில் கதை வேக நடைப் போடுகிறது. பல இடங்களில் கல்கி அவர்களை படிப்பது போன்றே உணர்ந்தேன். வீரராஜனின் சேட்டைகளுடன் நம்மை ஊருக்குள் அழைத்து செல்கிறார் கவிஞர். எல்லா பணக்கார ஜெமீன் பிஸ்தாகளைப் போலவே வீரராஜனும் இருக்கிறான். அனைத்து துர்குணங்களும் சங்கமிகும் கடல் அவன். அந்த பகுதியின் பெருந்திருடன் காத்தவராயன் இவனுக்கு கையாள். தொன்று தொட்டு நம் தமிழ் சினிமாவில் வருவது போல, இவருக்கும் ஒரு அத்தை மகள் – பூங்கோதை : சர்வ லக்க்ஷன, லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்த யௌவன சுந்தரி. கம்ப ராமாயணக் கிறுக்கு. தாய் இல்லா பிள்ளை என்றே தந்தையும் செல்லத்தையும் செல்வத்தையும் வெள்ளமென்ன வழங்கி வளர்த்தார் அப்பா, ஆனால் அவளோ எல்லா நற்குணங்களின் நிறைவிடமாக திகழ்ந்தாள். இவளுக்கோ வீரராஜனை அறவே பிடிக்காது, அவனோ பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை இவளுக்கு பரிசாக அனுப்பி அவளையே பரிசாக அடைய முயற்சி செய்து, அவமானப் பட்டு போகிறான்.

இதுவே கதையின் ஆரம்பம். திருடர்கள் குழாமுக்கு, பணத்தை தண்ணி என வாரி இறைத்து, பூங்கோதை கடத்தி, காம ஆட்டங்கள் ஆட கனவு காண்கிறான். செயலில் இறங்கிய திருடர்களை அவள் வீட்டில் புகுந்து செய்யும் அட்டூலியங்களிலிருந்து காமாக்ஷி அம்மாள் பிழைத்தாரா ? வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் ? அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன ? அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார்? அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன ? அந்த முதுகிழவன் யார் ? பூங்கோதை திரும்பி வந்தாளா ? இந்த இரு திருட்டு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டை என்ன ஆகிறது ? பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் ? அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் ? இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன ? குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது ? அவர்களின் கதி என்ன ஆனது ? என பல கேள்விகளுக்கு சரளமாக, வேகமாக, அழகாக விடை சொல்கிறார் ஆசிரியர்.

புத்தக சிறப்புக்கள் :

 • எழுத்தாளாரின் தமிழ் நடை மற்றும் சுவாரஸ்யம் கூட்டும் கதை அமைப்பு
 • பாத்திரங்களை முதன் முதலில் காட்டும்/அறிமுகப்படுத்தும் சமயத்தில், அவர்கள் பெயர் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு வைத்த அழகு தமிழ் பெயர்கள்.
 • புலவரின் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் பற்று பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது
 • திரைப்படத்திருக்கு ஏற்ற கதை, பல காலம் முன்னே இந்த படம் இதே பெயரில் வெளிவெந்து வெற்றி நடை போட்டுள்ளது.

புத்தக குறைகள் :
எழுத்தாளர் மீதோ, கதையின் லாஜிக் பற்றிய குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. பதிப்பாளர் மீது மட்டும் ஒரு குறை உள்ளது.

 • அழகான புத்தக வடிவம், சுலபமாக படிக்க கூடிய எழுத்தின் அளவு (font சைஸ்) ஆனால் பல பக்கங்கள் அச்சிடப் பட வில்லை, அவை வெள்ளை தாள்கலாகவே இருக்கின்றன. அத்தியாயம் 14ங்கிள் எட்டு பக்கங்கள் புஸ்வானம், அதுவும் சேர்ந்தார் போல அல்ல. இரண்டு பக்க கதை, இரண்டு பக்க இடைவேளை என……… கதை எதோ புரிந்து. கதையின் போக்கை சரியாக ஊகிக்க முடிந்தது, இருந்தாலும் எதோ இழந்த வருத்தம் 😦

கொடுத்த கூலிக்கு நன்றாக உழைத்தது என்பார்கள். அதுபோலவே இந்த புத்தகமும். செம வேகமாக படிக்க முடிக்க முடிந்தது. மூன்றே வேலை நாட்களில் படித்து முடித்தேன் (அலுவுலகம் போக உள்ள நேரத்தில்). என்னளவில் இது வெகு சீக்கிரம் என்பேன்.

தமிழ் தம்பியிடம் இதை கொடுக்க உள்ளேன். அவருக்கு இரண்டு வேலை நாட்கள் போதுமானதாக இருக்கும். ஏனெனில் அவர் புலி பாயும் வேகத்தில் தமிழ் படித்து, புரிந்து, மதிப்புரை எழுதுவார் 🙂

தினமணி நாளிதழில் வாரா வாரம் திங்கள் அன்று புத்தக பரிந்துரை வெளி வரும். அதில் கண்டு தான் இந்த புத்தகத்தை, மதுரை ராமமூர்த்தி ஐயா மூலம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றிகள் பல, மற்றும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகள்.

தினமணி இணையத்தில் தேடினேன், அந்த விமர்சனம் மட்டும் சிக்கவில்லை, மேலும் அங்கு நான் அறிந்த தகவல்கள் :

 • கலாரசிகன் (தினமணி ஆசிரியர்) : தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான “மலைக்கள்ளன்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது. (பார்க்க)
 • இவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.(பார்க்க)
 • “மலைக்கள்ளன்’ படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். (பார்க்க)
 • முதன் முதல் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் “மலைக்கள்ளன்.'(பார்க்க)
 • இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. (வெளி வந்தது : 22/07/1954) குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க)

இணைய உலகத்தில் இந்த மலைக்கள்ளனைப் பற்றி பேசாதவர்களே கிடையாது போலும், ஆனாலும் அனைவரும் திரைப்படத்தைப் பற்றியே சிலாகித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் கவிஞரின் படைப்பின், கௌவரவத்தை அனுபவிப்பது சரியில்லை ! அவர்கள் இருவரின் தவறு எதுவம் இல்லை, தமிழ் உலகம் என்றுமே சினிமாவின் பக்கமே சாய்ந்து இருக்கிறது !

இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க, சில முறைகள் உள்ளன. அவை :

 • என்னிடமோ அல்லது நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கி படிக்கலாம்
 • சொந்த செலவில் வாங்கி / நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கலாம்
 • நாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்பவர்கள், பேசமால் நான் அடிக்கடி செய்வது போல ஈ-புத்தகத்தை (இலவசமாக) பதிவிறக்கி படிக்கலாம் ! ;->

முன்னுரையில் கவிஞர் சொல்வது : அவர் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி, ஜெயிலில் இருந்த சமயத்தில் இதை எழுதினாராம். இதில் எந்த வித வியப்பும் இல்லை. கல்கியே பல முறை இதனை செய்துள்ளார். ஆனால் இதை பற்றி ஆங்கில அரசாங்கத்தின் மீது ஒரு பெரும் பழி உள்ளது : இவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே பிடித்து வைத்திருந்தால், நாட்டு பற்றுடன் தமிழும் சேர்த்து வளர்ந்து இருக்குமல்லவா !

(இது புத்தக விமர்சனம் இல்ல ! என் புத்தக வாசிப்பு எண்ணங்களின், உணர்சிகளின் குவிப்பு :)) )

—————————————————————

பிகு

இன்று ஐந்து பதிவுகள் வெளியிட திட்டம் மற்றும் தமிழ் ட்வீப்ஸ் என்று புதிய தளத்தையும் தொடங்கி உள்ளேன்

1 இசைப்பா – வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

2 Ph’Ojas – நந்தியாவிட்டை !

3 Oojas – WaterMark

4 Cnerd – CRM Thoughts !

5  இந்த பதிவு

ஏப்ரல் – சிறப்பு தினங்கள்

நாற்சந்தி கூவல் – ௫௪(54)
(ஏப்ரல் மாதப் பதிவு)

ஏப்ரல் – சிறப்பு தினங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்……

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1. அஜீத் வடேகர் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1941.

3. ஹரிஹரன் (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்) 1955.

3. பிரபுதேவா (நடிகர், நடன ஆசிரியர்) 1973.

6. திலீப் வெங்சர்க்கார் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1956.

10. ஜி.டி.பிர்லா (தொழிலதிபர்) 1894.

11. கஸ்தூரிபாய் காந்தி (தேசப் பிதாவின் துணைவி) 1869.

14. பி.ஆர்.அம்பேத்கர் 1891.

17. விக்ரம் (நடிகர்) 1966.

18. ராம்நாத் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர், தலைவர்) 1904.

19. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்) 1957.

19. அஞ்சு பாபி ஜார்ஜ் (தடகள வீராங்கனை) 1977.

20. என்.சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர்) 1950.

23. எஸ்.ஜானகி (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி) 1938.

24. சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட் வீரர்) 1973.

24. இல.கணேசன் (அரசியல்வாதி) 1934.

29. ராஜா ரவி வர்மா (புகழ்பெற்ற ஓவியர்) 1848.

30. ரோஹித் சர்மா (கிரிக்கெட் வீரர்) 1987.

 

நினைவு தினங்கள்

5. லீலா மஜும்தார் (வங்காள எழுத்தாளர்) 2007.

5. பூர்ணசந்திர தேஜஸ்வி (கன்னட எழுத்தாளர்) 2007.

8. மங்கள் பாண்டே (இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்) 1857.

8. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய (வங்காள எழுத்தாளர்) 1894.

10. மொரார்ஜி தேசாய் (முன்னாள் பாரதப் பிரதமர்) 1995.

12. ராஜ்குமார் ( கன்னட நடிகர்) 2006.

14. எம். விஸ்வேஸ்வரய்யா (பிரபல பொறியாளர்) 1962.

15. எஸ். பாலசந்தர் (வீணை வித்வான் மற்றும் நடிகர்) 1990.

17. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (முன்னாள் பாரத குடியரசுத் தலைவர்) 1975.

23. சத்யஜித் ரே (பிரபல வங்காளத் திரைப்பட இயக்குநர்) 1992.

26. ஸ்ரீநிவாச ராமானுஜன் (கணிதமேதை) 1920.

 

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாட்கள்

1-4-1912 – இந்தியாவின் தலைநகரமாக புது தில்லி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கல்கத்தா இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வந்தது.

1-4-1936 – ஒரிசா மாநிலம் -ஆங்கிலேயர் ஆட்சியில் (பிஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு) உருவாக்கப்பட்டது. 1935-ம் ஆண்டு இதற்கான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறியது. (ஒத்ர விஷயா என்ற சமஸ்கிருத சொற்களைக் கொண்ட ஒரிசா என்ற பெயர் உருவாக்கப்பட்டது. தற்போது ஒடிசா என்று மாற்றப்பட்டுள்ளது)

1-4-1956 – இந்தியக் கம்பெனிகள் சட்டம் அமலாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கம்பெனிகளை நிறுவுதல், பண உதவி செய்தல், நடத்துதல் மற்றும் அவசியமானால் தொழில் நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.

2-4-1970 – மேகாலயா மாநிலம் – அஸ்ஸôம் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

6-4-1930 – ஆங்கிலேயர்களின் உப்பு சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டங்களில் ஒன்று தண்டி யாத்திரை.

6-4-1942 – ஜப்பான் விமானப் படை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது இந்தியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

12-4-1978 – இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ரெயில் பம்பாயிலுள்ள விக்டோரியா டெர்மினஸ் – புனே இடையில் தனது முதல் பயணத்தைத் துவக்கியது. இந்த ரெயிலின் பெயர் ஜனதா எக்ஸ்பிரஸ்.

13-4-1919 – ஜாலியன் வாலா பாக் படுகொலை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் துக்ககரமான சம்பவம். அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கூடியிருந்த மக்களின் மீது ஆங்கிலேய அதிகாரி டயர் என்பவர் 50 காவலர்களோடு நடத்திய துப்பாக்கிசூட்டில் 389 பேர் கொல்லப்பட்டனர். 1,516 பேர் காயமுற்றனர்.

13-4-1948 – ஒரிசா மாநிலத்தின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டிலிருந்து ஒரிசாவின் தலைநகராக கட்டாக் இருந்தது.

15-4-1952 – இமாசலப் பிரதேசம் (இந்திய யூனியன் பிரதேசம்) உருவாக்கப்பட்ட நாள். 30 சிறிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இமாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

17-4-1952 – இந்தியாவின் முதல் மக்களவை (லோக் சபா) அமையப்பெற்றது. அனந்தசயனம் அய்யங்கார் முதல் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18-4-1991 – இந்தியாவிலேயே முழுவதும் கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது. கணக்கெடுக்கின்படி கேரளாவின் கல்வியறிவு விகிதம் 93.91 சதவீதம். மிசோரம் மாநிலம் இரண்டாவதாக உள்ளது. அதன் கல்வியறிவு விகிதம் 91.58 சதவீதம்.

19-4-1975 – இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. (ரஷியாவின் உதவியோடு இது விண்ணில் ஏவப்பட்டது)

25-4-1982 – தூர்தர்ஷன் முதல்முதலாக வண்ணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. (15-9-1959-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் புது தில்லியில் அரை மணி நேர (வாரத்தில் மூன்று நாட்கள்) ஒளிபரப்பாக இந்திய தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்)

30-4-1998 – சமூக சேவகரான அன்னா ஹசாரேவுக்கு கேர் (இஅதஉ) அமைப்பின் சார்பாக அகில உலக மக்கள் நல விருது வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

01.   உத்கல் திவாஸ் (ஒடிசா தினம்)

02.   ஆடிசம் (அறிவுத்திறன் குறைபாடு) விழிப்புணர்வு தினம்

07.   உடல் நல தினம்

18.   பாரம்பரிய தினம்

22.   உலக நாள்

23.   நூல் மற்றும் காப்புரிமை தினம்

25.   மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்

28.   பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்

28.   உலகத் தொழிலாளர்கள் நினைவு தினம்

29.   உலக நடன தினம்

 

நன்றி – தினமணி சிறுவர்மணி (31-3-12)

வண்ணமயமான வாழ்க்கை..

நாற்சந்தி கூவல் – (௫௨)

(தினமணிப் பதிவு)

இன்று தினமணி இதழில் வெளிவந்துல்ல நடுப் பக்கக் கட்டுரை இது. படிக்க:

!!!!!!!!!!

வண்ணமயமான வாழ்க்கை..

– கே.என். ராமசந்திரன்

அன்றொரு நாள் இணையதளத்தை மேய்ந்தபோது ஓர் அமெரிக்க ஆய்வர் எழுதியிருந்த கட்டுரை கண்ணில்பட்டது. மனிதர் தூக்கத்தில் காணும் கனவுகளில் வர்ணங்கள் தெரியாது எனவும் எல்லாம் கறுப்பு-வெள்ளைப் பிம்பங்கள்தான் எனவும் அவர் கூறுகிறார்.

நாம் கண்களால் பொருள்களைப் பார்க்கிறபோது அவற்றின் பிம்பம் விழித்திரையில் விழும். அதிலுள்ள கூம்பு ùஸல்களும் தண்டு ùஸல்களும் பிம்பத்தைப் பகுப்பாய்வு செய்து வெவ்வேறு நிறங்களுக்கு வெவ்வேறு மின் சைகைகளை மூளைக்கு அனுப்பும். மூளை அவற்றைத் தொகுத்துக் கலர்க் காட்சியாக மாற்றிக் காட்டுகிறது.

கனவு காண்பதில் விழித்திரையின் பங்குப்பணி ஏதுமில்லை. எனவே கனவுகள் கறுப்பு – வெள்ளையாகத்தான் தெரியும். ஆனாலும் நம் மனதில் உள்ள முன்பதிவுகள் காரணமாக கறுப்பு – வெள்ளை ஒளிப்படங்களை அல்லது திரைப்படங்களைப் பார்க்கிறபோது குங்குமம் சிவப்பு, கூந்தல் கறுப்பு என்று கற்பித்துக்கொண்டு விடுவதைப்போலவே கனவுகளிலும் கலர்களைக் கற்பித்துக் கொண்டு விடுகிறோம் என்று அந்த ஆய்வர் கூறுகிறார்.

கலர் இல்லாத கனவு எல்லாம் ஒரு கனவா? நல்லவேளையாக நனவுலகம் கலர்ஃபுல்லாக உள்ளது. கட்டடங்களுக்குப் பூசும் வர்ணங்களை முடிவு செய்ய அதற்கென்றுள்ள ஆலோசகர்கள் வாஸ்து, மருத்துவம், மனோதத்துவம் என்று பல உத்திகளைக் கையாள்கிறார்கள். நீலமும் பச்சையும் உடலையும் மனதையும் நலமாக்கும். அதனால்தான் மருத்துவமனைகளில் நீல நிறச் சீருடைகளையும் மறைப்புகளையும் விரிப்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.

சிவப்பு ஆற்றலையும் வேகத்தையும் அதிகாரத்தையும் அடையாளப்படுத்துவது. வெள்ளையர் ஆட்சியில் சிவப்புத் தொப்பி (காவல்துறை)யைக் கண்டாலே மக்களுக்கு உதறல் எடுக்கும்.

காவல் நிலையங்களும் அரசு அலுவலகங்களும் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலிருக்கும். எல்லா நிறங்களும் அடங்கியதான வெண்மை மனதை அமைதிப்படுத்தும். மருத்துவர்களும் தாதிகளும் வெள்ளைச் சீருடை அணிவதன் நோக்கம் நோயாளியின் அச்சத்தைத் தணிப்பது ஆகும்.

நிறமில்லாத நிலையான கறுப்பு வெறுப்பு, எதிர்ப்பு, துயரம் ஆகியவற்றின் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. துறவிகள் அணியும் காவி தீயின் குறியீடாக அமைந்து சிதையை நினைவூட்டி எல்லா உயிர்களும் இறுதியில் மடிந்து போகும் எனும் உண்மையைச் சுட்டிக்காட்டும்.

கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதைவிட நீல வானத்தில் அல்லது பசும் புல்வெளியில் ஒரு புள்ளியைக் கண்ணிமைக்காமல் பார்ப்பதன் மூலம் மனதை விரைவாக ஒருமுகப்படுத்திக் குவித்து மோன நிலையை அடைய முடியும் எனச் சில யோகிகள் கூறுகிறார்கள். அந்த உத்தி கண்ணுக்கு வலுவூட்டிப் பார்வையை மேம்படுத்தும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். நீலவானையும் நீலக்கடலையும் கூர்நோக்குச் செய்வதன் மூலம் அவற்றின் விசாலத்தை மனதில் நிரப்பிச் சிந்தனைகளற்ற வெற்றிடமாக்க முடியும்.

குளிர்பருவங்களில் அடர்நிற ஆடைகளை அணிவது உடலில் கதகதப்பை உண்டாக்கும் எனவும் வெப்பப் பருவங்களில் வெளிர்நிற ஆடைகளை அணிவது உடலைக் குளிர வைக்கும் எனவும் உடையலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிற சிகிச்சை பற்றிய கருத்துகள் புராதன இந்திய, சீன, எகிப்திய மருத்துவர்களால் சுவடி நூல்களில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அவை தற்காலத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சில நிறங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் பயக்கும். வேறு சில ஊறு விளைவிக்கும். வீடுகளையும் அறைகளையும் சரியான நிறங்களில் அமைத்து நலம் பெறலாம் என நிற சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் ஆகியவற்றின் நுழைவாயில்களிலும் முகப்புகளிலும் ஊதா நிறத்தைப் பூசினால் வருகிறவர்களின் உடலும் மனதும் சஞ்சலம் நீங்கித் தொழுகை அல்லது சிகிச்சை அல்லது கற்றலுக்கு ஆயத்தமாகும்.

படுக்கையறை, படிப்பறை, பணியறை, ஓய்வறை ஆகியவற்றில் கரு நீல நிறத்தைப் பூசினால் உள்ளுணர்வுகளும் ஆன்மிக அறிவுகளும் கூர்மையாகும்.

நீல நிற அறைகள் இறுக்கத்தைத் தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி உபாதைகளைக் குறைக்கும். மனம் விட்டு வெளிப்படையாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஊக்கமளிக்கும்.

அடர் பச்சை நிறச் சுவர்களில் இடையிடையே வெளிர் பச்சைப் பரப்புகளை அமைப்பது சமநிலை, இணக்கம், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும். மஞ்சள் பூச்சு மனதில் சுறுசுறுப்பையும் உஷார் தன்மையையும் வளர்க்கும். ஆரஞ்சு நிறம் படைப்பாற்றல், உல்லாசம், உறவுச் சமநோக்கு ஆகியவற்றை மேம்படுத்தும்.

சிவப்பு நிறம் உணர்ச்சிகளையும் பசியையும் தூண்டும். அது உணவகங்களுக்கு ஏற்றது. ஆனால், சிவப்பு நிறச் சுவர்கள் அறையின் பரிமாணங்களைக் குறைத்துக் காட்டும். அறைகளின் உட்கூரை வெள்ளையாக இருப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட நிறம் குறிப்பிட்ட நல்விளைவுகளை உண்டாக்குவதாயிருந்தாலும் அதையே எல்லாவிடங்களிலும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

அண்டை வீட்டுக்காரர்கள் உங்களுடன் சுமுகமாகப் பழகாமலிருந்தால் அதற்கு உங்கள் வீட்டின் வெளிச்சுவர்களில் உள்ள நிறங்களின் தாக்கம் காரணமாயிருக்கலாம். பச்சை, நீலம், ஊதா ஆகியவற்றை வெளிர் நிறத்தில் சுவர்களில் பூசி அடர்நிறத்தில் விளிம்புப் பட்டைகளை அமைப்பதன் மூலம் அண்டை வீட்டுக்காரர்களின் அன்பைப் பெறலாம்.

உயர் குலம், நல்லொழுக்கம், அறிவாற்றல், உடல் நலம், தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் பெயரடையாக நீலம் பயன்படுத்தப்படுகிறது. நிறுவன வரவு செலவு அறிக்கைகளில் கறுப்பு லாபமாக இயங்குவதையும் சிவப்பு நஷ்டத்தில் இயங்குவதையும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் வெள்ளைப் பொய் நல்ல நோக்கத்தில் சொல்லப்படுவது. கறுப்புப் பொய் தீய நோக்கமுள்ளது. தமிழில் பச்சைப் பொய், பச்சை பச்சையாகப் பேசுவது ஆகியவை வெறுப்புக்குரியவை. ஆனால், பச்சைத் தமிழன் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.

மஞ்சள் முகமே வருக என வரவேற்கலாம். மஞ்சள் பத்திரிகை புறக்கணிக்கப்பட வேண்டியது. மஞ்சள் கடுதாசி தவிர்க்கப்பட வேண்டியது. சிவப்பு விளக்கு, சிவப்பு விளக்குப் பகுதி ஆகியவை எச்சரிக்கை செய்கிறவை. இளஞ்சிவப்பு ஆரோக்கியம், புகழ், பெருமை ஆகியவற்றின் உச்சத்தைக் குறிப்பது. பச்சைக்கொடியும் பச்சை விளக்கும் தொடர்ந்து முன்னேறு என அறிவிப்பவை

!!!!

இதனை படித்து முடித்த பொழுது வைரமுத்து அவர்களின் ‘பச்சை நிறமே’ பாடல் மனதில் ஒரு ஓரத்தில் ஓட துவங்கயது.

நாற்சந்தி நன்றிகள் : தினமணி இணையம், மற்றும் இந்த கட்டுரை ஆசிரியர்.

முடியாதது முயலாதது மட்டுமே!

நாற்சந்தி கூவல் – ௪௭(47)

(மீள்ப் பதிவு)

இன்று தினமணி நாளிதழில் வெளிவந்த நடுப்பக்க கட்டுரையின் மீள் பதிவு இது. உன்னால் முடியும்! முயற்சி செய்!! என்று அழகாக சொல்லுகிறது. நீங்களும் படியுங்கள்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முடியாதது முயலாதது மட்டுமே!

                       –சி.வ.சு. ஜெகஜோதி

நம்ம கிட்ட நாலு காசுகூட இல்லை, ஒரு சொத்துகூட இல்லை, நம்மெல்லாம் என்னைக்குத்தான் முன்னேறப் போகிறோம்” என்று சிலர் புலம்புவது உண்டு. ஒரு சிலர், “”நம்மாலும் நாலு எழுத்தாவது படிச்சிருந்தாவாவது முன்னேற முடியும்” என்றும் சொல்லுவது உண்டு.

பலரும் படிக்கக் காரணமாக இருந்தவர் படிக்காத மேதை என்று பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர். மறையும்வரை முதல்வராகவே இருந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கவிஞராக, கதை வசனகர்த்தாவாக, அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கலைஞர் மு. கருணாநிதி. பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எத்தனையோ கல்லூரிகளில் போய்ப் படித்தார். ஆனால், எந்தக் கல்லூரியிலும் பட்டம் வாங்கவில்லை அவர். படித்துப் பட்டம் பெறாத இவர்களால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்தது எப்படி?

காரைக்குடி தந்த கவியரசு கண்ணதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் சாதாரண பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்தான். ஆனால், இவர்களால் மக்களின் மனங்களை பாட்டால் வெல்ல முடிந்தது எப்படி? எந்தக் கல்லூரியிலும் போய் படிக்காத சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது எப்படி? படிக்காமலும் முன்னேற முடியும் என்பதற்கு இவர்கள் என்றுமே அழிக்க முடியாத சரித்திரச் சான்றுகள்.

சல்லிக்காசுகூட கையில் இல்லாமலும், உறவினர்கள், நண்பர்களின் உதவியும் இல்லாமலும், முயன்று முன்னேறி வெற்றிக்கனியைப் பறித்தவர்களும் ஏராளம். தோல்விகளின் குழந்தை என்று வர்ணிக்கப்பட்ட ஆப்ரகாம் லிங்கன் மிக மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இவரோ அமெரிக்க நாட்டின் அதிபராகி, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தது எப்படி?

அங்கு ஏன் போவானேன், இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில் வேலி கட்டிய அப்துல் கலாம், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். படிக்கக்கூடப் பணமில்லாமல் தட்டுத்தடுமாறிப் படித்து முன்னேறி விஞ்ஞானியாகி, இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகவும் முடிசூட முடிந்தது எப்படி? இன்றும் இவரால் இளசுகளின் இதயங்களில் இடம்பிடிக்க முடிகிறதே, அது எப்படி?

பணமே இல்லாமல் இருந்து, இன்று ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்த பல தொழிலதிபர்களின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறதே, அது எப்படி? உயரத்தின் உச்சியைத் தொட்ட எவரும் சாதாரணமாகப் படைக்கப்பட்டவர்களாக இருந்தும், இவர்களால் மட்டும் பலரும் பாராட்டும்படி உயர முடிந்தது எப்படி? இப்படி எத்தனையோ எப்படிகள் உள்ளன.

இவர்கள் தங்களது திறமைகளை நன்றாக உணர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தைக்கூட வீணாக்காமல் கடுமையாக உழைத்தார்கள். கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டைவிடாமல் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களது சேவைகளையும், செயல்பாடுகளையும் கண்டு உலகமே அவர்களை உயர்த்தியுள்ளது.

எனவே, இவர்கள் படிப்பும் இல்லாமலும், பணமும் இல்லாமலும் முன்னேற முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள்.

உலகைப் படைத்த இறைவன் ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் ஒரு சக்தியை வைத்துத்தான் படைத்திருக்கிறான். இனிய குரலுடைய குயில்கள், தோகை விரித்தாடும் மயில்கள், வானில் திரியும் பறவைக்குக் கடலுக்குள் இருக்கும் மீனைச் சரியான நேரத்தில் கொத்தித் தூக்கும் திறன், மானுக்கு விரைந்து ஓடும் சக்தி இப்படியாக இதன் வரிசைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

காலில் மிதிபடும் மண்ணில்கூட எத்தனேயோ வகைகள். மண்பானை செய்ய ஒருவகை மண், கட்டடங்கள் கட்ட ஒருவகை மண், தாவரங்களை விளைவிக்க ஒருவகை மண், மனிதர்களின் நோய்களைக் கூட தீர்த்து வைக்கும் ஒருவகையான மண், இப்படியாக மண்ணுக்கே இறைவன் பல சக்திகளை வைத்துப் படைத்திருக்கிறபோது, மனிதர்களை மட்டும் எதற்கும் அருகதை அற்றவர்களாகப் படைத்திருப்பானா?

பட்டுப்பூச்சி ஒன்று முதன்முதலாக முட்டைக் கூட்டை விட்டு வெளிவர முயற்சித்தது. முட்டைக் கூட்டை சிறிதளவு உடைத்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரக்க குணம் மிகுந்த ஒருவர், அதற்கு உதவ நினைத்து, சிறிய கத்தரிக்கோலால் அம்முட்டைக் கூட்டை சிறிதளவு மட்டும் வெட்டி அது வெளியே வர உதவினார். கூட்டை விட்டு வெளியே வந்த பட்டுப்பூச்சிக்கோ சிறகுகளை அசைத்துப் பறக்கத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் என்னவென்று அவர் விசாரித்தபோது, முட்டைக் கூட்டினை முதலாவதாக உடைத்து வெளி வர அது செய்யும் முயற்சியே இறக்கைகளுக்குப் பலமாக அமைந்து, பறக்க உதவுகிறது எனத் தெரியவந்ததாம்.

பட்டுப்பூச்சி தனது சுயமுயற்சியால் முட்டைக் கூட்டிலிருந்து வெளியில் வராமல் போனதால், இறக்கைகளுக்கு சுயபலமின்றி, அதற்கு நிரந்தரமாகவே பறக்கத் தெரியாமல் போனதாம்.

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக இருந்து வருபவர் நிக்விய்ஜெசிக். ஆஸ்திரேலிய நாட்டில் மெல்பர்ன் நகரில் பிறந்த இவருக்கோ இரு கைகளும் இல்லை, இரு கால்களும் இல்லை. ஆனால், இவர் எழுதிய நூலின் பெயர் என்ன தெரியுமா, இரு கையும் இல்லை, இரு கால்களும் இல்லை, ஒரு கவலையும் இல்லை என்பதுதான்.

உள்ளம் ஊனமில்லாமல், உடல் மட்டும் ஊனமாக இருந்த இவர், இன்று எத்தனையோ உள்ளம் ஊனமானவர்களை தனது தன்னம்பிக்கைப் பேச்சால் குணப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார். படிக்கவில்லையே, பணமில்லையே, முன்னேற முடியவில்லையே என்ற தாழ்வு எண்ணங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டு இருந்தால், அதைப் பிய்த்து எறிந்துவிட்டு சோதனைகளைச் சாதனைகளாக்குவோம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயற்சிகள் தவறலாம், முயற்சிக்கத் தவறலாமா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தினமணி சார்ந்த, அதில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை நாற்ச்நதி கொண்டுவந்துள்ளது, இது தொடரும். இதற்கு ஒரே காரணம் : இக்காலத்தில் வரும் தமிழ் தினசரிகளில் ‘தினமணி’ மிக நன்று.

நல்ல விஷயத்தை எங்கு படித்தாலும், இங்கு உங்களுக்கு கொடுக்கும், ஒரு சிறு முயற்சி தான் இது. – ஒஜஸ்

நாற்சந்தி நன்றிகள் – தினமணி மற்றும் அதன் இணையதளம்.

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: