~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘நீயா-நானா’

அவசியமா Accessories ?

நாற்சந்தி கூவல் – ௭௬ (76)
(அவசியப் பதிவு)

அவசியமா Accessories ?

நீயா – நானா. தமிழ் கூறும் நல்லுலகில், தொலைக்காட்சி பெட்டியை பார்க்கும், வெகுஜென தமிழ் மக்கள் பார்க்கும் ஒரு விவாத மேடை. நல்ல நல்ல தலைப்புகளை எடுத்து கொண்டு அவர்கள் நடத்தும் விவாதம் சுவாரஸ்சியமாக தான் உள்ளது. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில் அதுவும் (தனியார் தொலைக்காட்சி) ஒரு வியாபாரம் செய்யும் புதிமையான யுக்தி தானே. நம்மை போல கொஞ்சம் யோசிக்க தெரிந்தவர்களே இதை பல சமயம் மறந்து விடுகிறோம்.

‘Freedom to talk’ என்பது அவர்களது குறிக்கோள். எதையும் சும்மா பார்த்து விட்டு நம்ப முடியாது. திருவள்ளுவன் கூறியது போல ஆராய்தல் அவசியம். இதில் பேசுபவர்கள் அனைவரும் சுயமாக சிந்தித்து தான் பேசுறாங்களா, இல்லை முன்னமே இப்படி இப்படி தான் பேச வேண்டும் என்று சொல்லப்படுமா, என்பது என் முதல் கேள்வி.

இரண்டாவது கேள்வி : அவர்கள் சொந்தமாக பேசினார்கள் என்று வைத்து கொள்வோம். அவர்கள் பேசியது அனைத்தும் ஒளிபரப்பப் பட்டதா…………

இந்த இரண்டையும் தாண்டி இந்த வாரம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வருவோம். Accessories. இறுதி ஒன்பது சொச்சம் நிமிடத்தில் அவர்கள் சொன்ன கருத்துக்களை நான் ஏற்க மறுக்க வில்லை. தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டுமே உகந்த தலைப்பு. ஏன் என்று கேட்டால், இதர தமிழக மாவட்டத்தில் உள்ள 95% இளசுகளுக்கு, அந்த சொல்லின் அர்த்தம் கூட தெரியாது. (இதில் கலந்து கொண்ட பலருக்கும் இதன் பொருள் தெரியாது, என்பதே என் கருத்து)

ஆனால் இது வெகு ஜன மக்களை எப்படி பாதிக்கும் என்று பார்போம். தமிழ் பேசும் வீடுகள் அனைத்திலும் இந்த Episode நேற்று பார்க்கப் பட்டு இருக்கும். அதில் கலந்து கொண்டது போல உள்ள பெரும்பாலான சென்னை இளைஞர்கள் அதனை பார்த்து இருக்கு வாய்பே இல்லை – அவர்கள் எப்பொழுதும் போல சண்டே பார்ட்டி-க்கோ, படத்துக்கோ, எங்கோ சென்று இருப்பார்கள்.

தமிழகத்தில் சென்னை மட்டும் தானா. இதர ஊர் பதின் பருவத்து பசங்களுக்கும், பெண்களுக்கும் Accessories பற்றிய ஒரு அறிமுகமா மாறி உள்ளது இந்த நிகழ்ச்சி , என்பது நிதர்சனம். சும்மா இருந்த பசங்கள், நீமேட்டீ இது போல பொருட்களின் மேல், ஆசைப்பட தூண்டியுள்ளது . இதை நீங்கள் நிச்சியம் மறுக்க முடியாது. ஒரு மணி நேரம் முழுக்கு கோபி சார் அணைத்து Accessoriesசையும் அழகாக அறிமுக படுத்தி, எது எப்படி, அதன் விலை என்ன, அது எங்கு கிடைக்கும், ஆண்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, பெண்களின் விருப்பு வெறுப்பு என்ன, அவர் அவர் அனுபவம் என்ன என்று இளசுகள் மனத்தில் நஞ்சை வார்த்து விட்டார் என்று, உங்களுக்கு நான் சொல்ல புரிய வைக்க வேண்டியது இல்லை.

தமிழ் சினிமா படங்கள் செய்வது: மொத்த படத்திலும் எல்லா கெட்டதையும் காட்டி விட்டு, கடைசி ஒரு நிமிட சிலைடில் ஞான உபதேசம் செய்வார் இயக்குனர். அச்சு அசல் அது போலவே Accessories பற்றிய (மேல் சொன்னது போல) விரிவான ஒரு ஈர்ப்பை எற்படுத்தி (இதில் கோபி பல முறை wow, correct point, (விழுந்து விழுந்து) கைதட்டி, நல்ல observation என்று சொல்லியது எல்லாம் நரகாசம்) கடைசி பத்து மணி துளிக்கும் குறைவாக சாந்தி மற்றும் ஓவிய அவர்கள் துணை கொண்டு ஒலக அறிவு கொடுத்துள்ளது இந்த நீயா -நானா. இந்த நிகழ்ச்சிக்கு இடையில் எத்தனை Accessories விளம்பரங்கள் வந்தன என்பதை நான் அறியேன் (இன்டர்நெட் மூலம் தான் பார்த்தேன்). கிளைமாக்ஸ் கருத்தை விட மொத்த படத்தில் வருன தான் நம் மனதை பாதிக்கும்,ஈர்க்கும், பேசப்படும், விவாதிக்கப்படும் …… என்பதே உண்மை. பார்த்த எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நவ நாகரிக பெண்கள் மற்றும் ஆண்கள் அணிந்து வந்த போல Accessories வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்களோ……… வானத்துக்கு தான் அது வெளிச்சம். கொஞ்சம் யோசித்து பாருங்கள், புலப்படும்.

இந்த நிகழ்ச்சியில் சில பெண்கள் கூறியதை என்னால் நம்ப முடிய வில்லை. ஆதகப்பட்டது ‘ஆண்கள் எங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த Accessoriesசை நாங்கள் பயன்படுத்த வில்லை / எங்களை கவர்ச்சிகரமாக காட்ட இவைகளை உபையோகிக்கவில்லை / எங்கள் மீது அவர்களது கவனத்தை ஈர்க்க முற்சிக்கவில்லை ‘ என்று சூடம் மேல் சத்தியம் செய்யாத குறையாக (இன்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட) பெண்கள் சொன்னது, முற்றிலும் பொய்.

Accessories = something added to a clothing or a thing that has a useful or decorative purpose. (Cambridge Dictionary). அவர்கள் அணிந்து இருந்து எதுவும் useful இல்லை. அனைத்துமே decorative தான். எதற்காக ஒரு சாமானை நாம் அலங்கராம் செய்கிறோம்? நாலு பேர் பார்க்கும் பொழுது அந்த பொருள் அழகாக தெரிய வேண்டியும் மற்றும் அந்த பொருள் பிறரை ஈர்க்கும்/கவரும் வண்ணம் அமைந்து இருக்க வேண்டும் , என்பது தானே…………………………

அழகு என்பது தற்காலிகமானது. இதனை நாம் அறிய மறுப்பது அறிவீனம். இவளோ பேசிய ஷாலினி பயன்படுத்திய இரு முக்கியமா Accessories – ஜிகு ஜிகு சட்டை, நிகழ்ச்சி நெடுக்க கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டது. இது அவரை ஈர்க்க அவர் செய்து செயல் என்றே நான் சொல்வேன். நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான், பெரியார் ரசிகை என்பது எல்லாம் அலங்கார பேச்சாக தான் தோன்றுகிறது.

ஓவியா சொன்ன ஒரு கருத்து மிகவும் முக்கியதுவம் வாய்ந்து, அதனை எத்தனை பேர் இதுவரை ஞாபகத்தில் கொண்டு உள்ளீர்களோ?! (தமிழ் பட கிளைமாக்ஸ் கருத்து போல தான்). காலம் தான் மிக முக்கியமானது. அழகோ சில காலத்தில் மறைந்து விடும். நாமும் காலத்தில் கரைந்து போய் விடுவோம். எனவே இருக்கும் காலத்தை சிந்தித்து பயன்படுத்துங்கள். Accessories வாங்க காலத்தையும் பணத்தையும் செலவு செய்து, அதை அணிந்து கொள்ள, Choose பண்ண, MakeUp பண்ண வேறு காலத்தை வீண் செய்வதன் பயன் என்ன?

பெண்களை ஒரு (போகப்) பொருளாக பார்ப்பது தவறு என்று பெண் அழகி பதிவில் எழுதி இருந்தேன். ஆனால் இதில் ஒரு பெண் நாங்கள் இந்த பாணியில் இது வரை சிந்தித்து இல்லை . இந்த நிகழ்ச்சி ஒரு EYE-OPENER என்று சொன்னது எல்லாம், காது குத்து வேலை. கல்லூரி செல்லும் பெண் இதனை உணரவில்லை என்று சொல்வது பச்சப் பொய். இதற்கு கோட் கோபி “உங்களுக்கு இந்த செய்தியை எடுத்து செல்ல தான் இந்த நிகழ்ச்சி……………………. எங்கு ஆரம்பித்து. எங்கு வந்துள்ளோம் பாருங்கள் ” எல்லாம் கொஞ்சம் செயற்கை தனமாக, விளம்பர யுக்தியகா தான் எனக்குப் பட்டது.

ஓவியா சொன்ன இன்னொரு கருத்து. ஆண்கள் தான் வேறு ஆள் என்று காட்டி கொள்ள இந்த Accessories பயன்ப்படுத்தக் கூடாது . அவர்கள் சுய குணத்தை மறைத்து கொள்ள இது உதவாது என்று சொன்னார்கள். நாம் நாமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

இந்த மாதரி நல்ல செய்திகளை எல்லாம் கடைசி சில வினாடிகள் வைத்து விட்டு, மீதி நிகழ்ச்சி முழுவதும் ~ இந்த Tatoo எங்கு குத்தப் பட்டது, அதன் விலை என்ன, எங்கு சென்று அதனை அழிக்கலாம், எங்கு இந்த மாதரி மோதரம் கிடைக்கும், அனைத்து பெண்கள் பூண்டு வந்த மோதர வகைகள் என்ன என்ன (இத வேற தனி தனியா ஜூம் போட்டு காட்டி), எதை போட்டால் எப்படி ஸ்டைல்-ஆகா நடக்க வேண்டும் என்று உதாரணம் காட்டி, எப்படி எப்படி எல்லாம் Color Color ஆகா shoe அணிந்தால் ஆண்களுக்கு, பெண்களுக்கும் பிடிக்கும், முடிக்கு எப்படி எல்லாம் வண்ணம் தீட்ட வேண்டும், எப்படி எல்லாம் ஸ்டைல்-ஆகா சிகிரெட் பிடிக்கலாம்,…………………………………..இதில் நடு நடுவில், அங்கு இருந்தவர்களை சுட்டி காட்டி இந்த மாதிரி இருந்தால் ரொம்ப பிடிக்கும், இது எல்லாம் வேஸ்ட் என்று வேறு பல ஹம்பக் ~ என்று மட்டுமே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் (மொத்த நிகழ்ச்சி ஒன்று மணி 15 நிமிடங்கள்) மேல் சொல்லிய நீயா – நானா நிகழ்ச்சிக்கு என் கடும் கண்டனங்கள்.

கடைசி கேள்வி : (சொந்த கேள்வி அல்ல) பிற தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வருவது போல, நீயா-நானா வில் ஒருவர் பேசும் பொழுது அவர்களின் பெயர் ஏன் (கீழே) காட்டப் படுவது இல்லை?!

அழகு என்பதற்கு உலகில் பல பரிமாணங்களில் உள்ளது. இசை, ஓவியம், இயற்கை, சொல், செயல், குழந்தை, மழை, மழை, மழலை, காதல் , கதை , கவிதை, அன்பு, அன்னை, அறிவு, ………………………….. என்று சொல்லி கொண்டே போகலாம். அழகை ரசிப்பதை விட்டு விட்டு இந்த Accessoriesசை கட்டிட்டு அழுவான் ஏன்?

சங்க காலம் போல “அறிவு என்பதே அழகு” , என்று தமிழர் உணரும் நாள் என்நாளோ?!

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: