படிங்க….
நாற்சந்தி கூவல் – ௩௨(32)
(சித்திர பதிவு)
படிங்க….
மனிதனின் பரிணாம வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை இப்படம் தெளிவாக காண்பிக்கிறது. நாம் முதலில் எழுத்துகளை படிக்கிறோம். பின்பு சொற்களை சரளமாக கண்ட உடன் புரிந்து கொள்கிறோம். பின் வாழ்கை முழுவதும் அதுவே தொடர்கிறது.
சுவாமி விவேகானந்தர், படிப்பதில் நம்மை விட பல பல படி மேல். அவரால் வேகமாக படிக்க முடிந்தது. அதே சமயத்தில் படித்த அனைத்தயும் புரிந்து கொண்டு, நினைவில் நிருத்தி கொள்ள முடிந்தது. மன-ஒருமைப்பாடு ஒரு காரணம். அதை அடைய அவர் கூறிய வழி பிரம்மசரியம். இன்னொரு காரணம், அவர் வளர்த்து கொண்ட படிக்கும் ஆற்றல்.
நாம் ஒரு சொல்லை பார்த்த உடன் அதை புரிந்து கொள்வதோடு நம் முயற்சியை மூட்டை காட்டி வைக்கிறோம். அவர் அதை தாண்டி பார்த்த மாத்திரத்தில் ஓர் வரியை, ஒரு பத்தியை, ஒரு பக்கத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தார். இது மேலும் பெருகியது. அவர் ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தில் உள்ள தலைப்பை பார்த்து அதன் சாரத்தை தெரிந்து கொண்டார். இது கட்டு கதை அல்ல.அவர் வாயால், அவரே ஓப்பு கொண்ட செய்தி அது.
தம்பி இந்த ஏட்டு சுரக்காய் கரிக்கு உதாவாது, என நீங்கள் சொல்வது புரிகிறது. ஒரு சின்ன உதாரணம்: கீழே உள்ளதை படியுங்கள் (வெற்றி நிச்சயம் பெறுவீர்கள்)
நீங்கள் இதை எப்படி சரியாகா படித்து புரிந்து கொள்ள முடிந்தது? விந்தை … அனால் உண்மை. சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்து சரியாகா இருந்தால் போதும், நாம் அதை அறிய. இது போல ஒரு வரியின்/பத்தியின்/பகத்தின் முதல் மற்றும் கடைசி கொண்டு நாம் ஏன் அதை அறிய முடியாது???? முயர்ச்சி….
பல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
( அப்ப
சோழனுக்கு சொல்லும் ஆயுதம்.
பாண்டியனுக்கு பல்லும் ஆயுதம்.)