கவியள்ள, கவியல்ல !
நாற்சந்தி கூவல் – ௯௦ (90)
(சொல் கீச்சுப் பதிவு)
முதல் முறை என் கீச்சுக்களை, நானே சேமிக்க வேண்டும் என்று தோன்றியது. சொல்லாடலில் தான் எத்தனை சுவை ! எனவே இப்பபதிவு
நிம்மதியின் நிறைவிடம் – இந் நிலத்தில் எங்கோ ? நிசப்தம் தான் அதோ ? நித்தியமான இறைதானோ ? நினைவில் நிற்கும் நீதானோ ??
— அ.ஓஜஸ் (@oojass) July 14, 2013
ஐந்தில் வளைந்த ஐம்பது மடிப்புகள்-என் மூளையிலும் இருக்கும்-உன் மூச்சிலும் இருக்கும்! மனம் மணம் செய் மந்திரம் நீ! http://t.co/gjeamCanmB
— அ.ஓஜஸ் (@oojass) July 20, 2013
சொற்களும் உனதருகில் கவி எழுதும் .. இசையும் உனதருகில் தாளம் போடும் .. #ரசனை
— அ.ஓஜஸ் (@oojass) July 12, 2013
மயில் பீலியும் மலர் மாலையும் குழல் விருந்தும் குழந்தை சிரிப்பும் குணமே,என் குலமே,கண்ணனே ! http://t.co/CXjwkCI0FQ @amas32
— அ.ஓஜஸ் (@oojass) July 20, 2013
சுவையான உணவை தயாரித்து, பசியுடன் நமக்காக காத்துகிடக்கும் தாயை என் சொல்லி வாழ்துவது ! உணவை ஆவலுடன் அவளுடன் சிரிப்புடன் உண்பது தான்….
— அ.ஓஜஸ் (@oojass) July 17, 2013
உருவாகும் முன்னே உள்நின்று அருளியவன், உலகையாளும் எம்பிரான் 🙂 #ThiruvasagamInspired
— அ.ஓஜஸ் (@oojass) July 13, 2013
கலாய்பில் கலந்து கொள்வதும் கொல்வதும் கலையே களையே ! #Random
— அ.ஓஜஸ் (@oojass) July 21, 2013
நேர்மை ஓடிக் கொண்டே இருக்கிறது 😉 # ஆமா யார நோக்கி : கடல நோக்கி, (நாம் கொலை செய்யும் முன்) தற்கொலை செய்ய…..
— அ.ஓஜஸ் (@oojass) July 12, 2013
சமயம் வரும் போதெல்லாம் சமத்தா இரு !
— அ.ஓஜஸ் (@oojass) July 11, 2013
சாந்தமும் சாதனமும் சாதாரணமல்ல !
— அ.ஓஜஸ் (@oojass) July 11, 2013
நிதானம் எங்கடி வரும் நீ தானம் செய்யும் அன்பைக் கண்டி ??
— அ.ஓஜஸ் (@oojass) July 11, 2013
சக்கரமாய் சுழலும் உன் மனதை – என் கையில் கொடு ! அதை செம்மை படுத்தி சாதனை செய்கிறேன் #சரணாகதி http://t.co/CXjwkCI0FQ via @amas32
— அ.ஓஜஸ் (@oojass) July 20, 2013
பண்பும் நட்பும் சேரும் போது மகிழ்ச்சி உருவாகிறது எதோ ஒரு வடிவில் !
— அ.ஓஜஸ் (@oojass) July 11, 2013
அடைத்து வைத்திருக்கும் கிளிக்கு தெரியாது, சுதந்திரத்தில் தான் சுடப்படும் வாய்ப்புகள் அதிகமென்று !
— அ.ஓஜஸ் (@oojass) July 11, 2013
காற்றைக் கூட சாப்பிட்டு விட்டு வாழலாம் – நம் காதலை சகா விட்டு விட்டு வாழமுடியாது ! #மங்களமார்நிங்
— அ.ஓஜஸ் (@oojass) July 11, 2013
காதல் வழியது காதல் வலியது காதல் வளியது காதல் வலி-யது ! #தமிழ்டா
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
என்றாவது திருந்துவாய், பின்பாவது வருந்துவாய்.
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
நிம்மதி என்பது நிசப்தத்தில் : சித்தன் நிம்மதி என்பது நிமிஷசுகத்தில் : பித்தன்
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
வண்ண வண்ண கோலம் வாழ்த்தும் நல்ல பாலம் ! எண்ணம் என்ன சொல்லும் வாழ்க்கை விளங்க சொல்லும் : நேர்மை நேர் கோட்டில் (cont) http://t.co/DrC70b3edX
— அ.ஓஜஸ் (@oojass) July 21, 2013
#புள்ளிக்கோலம்
வண்ண வண்ண கோலம்
வாழ்த்தும் நல்ல பாலம் !
எண்ணம் என்ன சொல்லும்
வாழ்க்கை விளங்க சொல்லும் :
நேர்மை நேர் கோட்டில் பயணி
வண்ணம் வந்தே தீரும்!
சுத்த விடும் சூழல் – சீக்கிரம்
சேரும் சுடர்விடும் நட்சத்திரத்தில்.
நம்பிக்கை கொள்: நடுப்பூவில் – விளங்கும்
நல் வெற்றி மாலை உனக்கே !
நீ தூங்கும் போது ஆடும் ஒற்றை முடியில் என் உள்ளத்தையும் முடிந்த மர்மம் என்ன ??
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
மஞ்சள் நிற பந்து எங்கள் நீண்ட பந்தூ ! காலமே கதிரே எதிரில் கூசும் புதிரே ஆதியே ஆதவனே வாழ்க ! http://t.co/LfDtTCxdGl via @amas32
— அ.ஓஜஸ் (@oojass) July 21, 2013
நான் பிழைகள் நிறைந்த மனிதன் ! – ஆனால் குறைகள் குறையும் என் நம்புவன் ! #random
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
நட்பு பத்தி ஒரு பதிவு படித்தேன்… என் நட்புகளை பற்றிய சிந்தனையில் உள்ளேன்… கை விரல் விட்டும் எண்ணும் அளவு நண்பர்கள் எனக்கு 🙂
— ஓஜஸ் (@oojass) July 29, 2013
ஆனால் யார் மீதும் வெறுப்பு இல்லை https://t.co/FO4IyQZDfQ 🙂 பல நண்பர்கள் இல்லையே என்ற வருத்தமும் இல்லை #புத்தகம் :~) — ஓஜஸ் (@oojass) July 29, 2013
போதாத காலங்கள் தரும் போதனைகள் நச் !
— ஓஜஸ் (@oojass) July 10, 2013
கண் கவர் காகிதம் கலர் கலர் காகிதம் காதல் சொல்ல காகிதம் – நீ காலம் எல்லாம் கா’கீதம் ! http://t.co/HwLnHzVljH @amas32
— ஓஜஸ் (@oojass) July 30, 2013
கானாகத்தில் நானிருக்க காவியத்தில் கவியிருக்க சொல்லில் செல்வம் விளக்க சோலைவனம் சொர்க்கமானது காண் !
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
என்னை அறியாமல் என்னுள் இருந்து எழுந்து வரும் எண்ண அலைகளில் மிதக்கும் எல்லா அழகும் நீ ! #அவளதிகாரம்
— அ.ஓஜஸ் (@oojass) July 10, 2013
Retweet, FAV எல்லாம் பண்ணி என்னைப் பாராட்டி வளர்த்து வரும் நண்பர்களுக்கு நன்றி பல 🙂 குறிப்பாக சுஷிமா சேகர் @amas32 அவர்களுக்கு வாழ்த்துகள்.
கவி அள்ள இவை கவிகள் அல்ல 😉
ஆனலும் கவிதை எழுத அவா உள்ளது.
இவை சொல் சேர்கையின் முயற்சி, அவ்வளவே.
ட்விட்டர் பாஷையில், கவுஜ என்றும் கூறலாம்