~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘பெண்கள்’

பெண் அழகி

நாற்சந்தி கூவல் – ௫௭(57)

(உணர்வின் பதிவு)

பெண் அழகி…..

இன்று முதல் என்னுடைய சின்ன சின்ன உணர்வுகளை இந்த நாற்சந்தியில், பகிர்ந்து கொள்ளலாம் என இறங்கியுள்ளேன். இந்த வகையில் இது தான் முதல் பதிவு என்பதால், ஒரு படத்துடன் என் உணர்வுகள்:

கொஞ்சம் நேரம் கழித்து, சிந்தித்து பாருங்கள், இதில் உள்ள தவறு உங்களுக்கு புலப்படும். ஆம், எனக்கு தோன்றிய தவறை சொல்கிறேன், செவி மடுத்து கேளுங்கள்.

அழகு என்பதற்கு ஒரு சரியான அர்த்தம்/வரையறை சொல்ல முடியாது, அதை நான் முற்றிலும் ஒப்புகொள்கிறேன். ஆனால் ஒரு பெண் அழகாக தெரிய அவர்கள் மேக்கப் போட வேண்டும், அல்லது நாம் தண்ணி போட வேண்டும் என்பதெல்லாம் சுத்த பேத்தல். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், உலகத்திலேயே மிக அழகிய பெண் யார்?

(நிதானமாக சிந்திக்க, கமர்சியல் பிரேக், குட்டி கதை)

மேலே சொன்ன கேள்வி ஒரு முறை கமலஹாசன் அவர்களிடம் கேட்கப் பட்டது, அவர் சிறு தயக்கமும் இன்றி சொன்னார் “என் அம்மா” என்று. (இதனால் நான் கமல் ரசிகன் என்று தவறாகா இடைப் போட வேண்டாமே)

அதை தான் நானும் சொல்லுவேன். ஆம் உங்களுக்காக தன் ஊன், உடல், உயிர் அத்தனையையும், எந்த நேரத்திலும், மலர்ந்த முகத்துடன் கொடுக்க உலகில் ஒரு மாதரசி இருப்பாள் என்றால், அவள் உங்களை பத்து மாதம் பத்தியம் இருந்து பெற்ற தாயாவாள்.

அவள் என்றுமே அழகின் சிகரம் தான், மேக்கப் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி. நாம் எந்த நிலையில், எந்த காலத்தில், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், அவள் நம் கண்களுக்கு பேரழகி தான்.

பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பிறந்தவர்கள் நாம். இது போல அவர்களை சித்தரிப்பது, கண்டனத்துக்கு உரிய விஷயம். இன்னும் சற்று ஆழ யோசித்து பார்த்தால், பெண்களை ஒரு போக பொருளாக பார்ப்பதே தவறு என நம் சாஸ்திரம் சொல்லுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் மனைவி மட்டும் இதற்கு விதிவிலக்கு.

பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. அது அற்புதமான இயற்கையின் லீலை. மனித குலத்தை பெருக்க, வளர்க மட்டுமே ஏற்படுத்தப் பட்டது அது. வேறு எதற்கும் இல்லை.

சீதை, சாவித்ரி, ஒளவை, நிவேதிதா, கண்ணகி போன்ற பெண்கள் வாழ்ந்து, மகோண்நதம் அடைந்த புண்ணிய பூமி இது. இது போல கேலி சித்திரங்களை உருவாக்கி, நாம் அடையும் பயன் யாது? நமது பண்பாட்டின் இடிந்த சுவர்களை செப்பனிட்டு செதுக்க வேண்டிய உளியில், நம்மை நாமே உடைத்து கொள்கிறோமோ என தோன்றுகிறது?

காலம் தான் இதற்கு விடை. ஆனாலும் நாம் ஏன், பெண்களின் பற்றிய நமது சிந்தனை போக்கை நல்வழியில் மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது…..

(இதில் சொன்னவை அணைத்தும் என் சொந்த கருத்துக்களே, பிழைகள்/ திருத்தங்கள்/ உங்கள் கருத்துகளை கமெண்ட்டாக பதிவு செய்க)

உயிருள்ள உணர்வுகளுடன்,

உங்கள் ஒஜஸ்

(உங்களுள் ஒருவன், உங்களை போல் ஒருவன், உங்கள் கருத்துக்காக காத்திருப்பவன்)

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: