~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘பொறுமை’

பொறுமை!

நாற்சந்தி கூவல் – ௨௨(22)

(பொறுமை பதிவு)

பொறுமை!

கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் மிகமிகப் பொறுமையானவர். அவர் மனைவியோ அவருக்கு நேர்மாறானவர். எல்லாவற்றுக்கும் கோபப்படுவார்.

ஒருசமயம் சாக்ரடீûஸப் பார்த்துப் பேச நண்பர் ஒருவர் வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சாக்ரடீஸின் மனைவி, மூன்றாவது மனிதர் இருக்கிறார் என்பதைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் சாக்ரடீûஸ ஏதோ காரணம் கூறி வசைபாடிக் கொண்டிருந்தார்.

சூழ்நிலையை அறிந்த நண்பர் நாசுக்காக விடைபெற்றுக் கொண்டு வெளியேற முயன்றார்.

அவர் வீட்டு வாசலைகூடத் தாண்டியிருக்க மாட்டார். சாக்ரடீஸின் மனைவி ஒரு குடம் நீரைக் கொண்டு வந்து சாக்ரடீஸ் மீது கோபத்தில் கொட்டினார்.

நண்பர் இரக்கத்துடன் சாக்ரடீûஸப் பார்க்க, அவரோ எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் சாந்தமாக, “சற்று முன் இடி இடித்தது! இப்போது மழை பெய்கிறது!’ என்றார்.

வந்த நண்பருக்கு மிகவும் வியப்பாகப் போயிற்று!

நாற்சந்தி நன்றிகள் – தினமணி சிறுவர்மணி

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: