~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘வால்மீகி’

ஏற்றம்

நாற்சந்திக் கூவல் – ௧௧௮ (118)

யார் பெரியவர் அப்பாவா? அம்மாவா ? பட்டிமண்டப மேடைகள் பல கண்ட தலைப்பு. அம்மாதான், கொஞ்சம் சிந்தித்தால் தெரியும். அவள் நம்மை சுமந்தது மட்டுமே போதும், போட்டியில்லா வெற்றி.

பெண்னுக்கான ஏற்றம் என்றும் நிறைந்த நாடு இந்தியா. பரமசிவன் தனது பாதியை அம்மைக்கு கொடுத்தார். தமிழில் பண் இசையை, பிள்ளையார் சுழிப் போட்டு பாடி ஆரம்பித்தவர், புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார். அந்த பிள்ளையாருக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும் துதிகள் பாடி நமக்கு பாடம் சொன்ன ஒளவைப் பாட்டி ஒரு பக்கம்.

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்ற திவ்ய தேசம் உண்டு. ராஜா ராமரின் மூதாதையர், அடைக்கலப் புறாவிற்க்காக தன் உடலை ஈந்த சிபி சக்கிரவர்த்தி கட்டியக் கோவில். அங்கு செந்தாமாரைக்கண்ணன், பங்கஜ வள்ளித்தாயார் சமேதராக உள்ளார். நாழி கேட்டான் வாசல் பிரசித்தம். பெருமால் ஊர் சுற்றி விட்டு வருவாராம். தாயார் ஏன் தாமதம்? இப்ப நேரம் என்ன? என்று கேட்ப்பாளாம். தாயாருக்கு தான் ஏற்றம். அவள் படிதாண்டா பத்தினியாக கொலு வீற்றிருக்கிறாள்.

பெண் விடுதலைக்காக இராமசாமி என்பர் வித்திட்டாராம். எதையும் படிக்காமல் பிதற்றும் மாக்கள் நிறைந்த உலகம் இது. திலகவதியார் வாழ்க்கையை படியுங்கள் – அப்பர் பெருமானின் அக்கா. கனவரை சிறு வயதில் இழந்தவர். பல காலம் சிவ சேவை செய்தவர், அப்பரை சிவ வழி நடத்தியவர். சைவ கோவில்கள் அனைத்திலும் அவர் சிலை உண்டு, அறுபத்தி மூவரில் ஒருவர்.

மங்கையர்கரிசியாரை தெரியுமா ? நின்ற சீர் நெடுமாறப்பாண்டியனின் மனைவி. மதுரைக்கு சம்பந்தரை அழைத்து வந்த பெருமைக்கு உரியவர். மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம், பதிகம் பாட சம்பந்த பிள்ளையார் ஆர்ம்பித்தது – சொக்கனயோ, அங்கையர் கன்னியையோ அல்ல, மங்கையர்கரிசியாரை பாடினார். அது இன்று தேவராம உள்ளது. ஓதப்படுகிறது. பூசிக்கப்படுகிறது.

இராமாயண காவியத்தை எழுதிய ஆதி கவியான வால்மீகி அதற்கு மூன்று பெயர்கள் சூட்டினார்: இராமனின் கதை, புளச்திய வதம் (இராவண வதம்), சீதாயாஸ் மஹத் சரிதம் – சீதையின் மகத்தான கதை.

(இன்னும் எழுதலாம்…)

கம்பன் கேள்விகள் ?

நாற்சந்தி கூவல் – ௮௨ (82)

(கம்பன் பதிவு)

கம்பன் கேள்விகள் ?

கம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.

Kambar Image from the web

கம்பர் – இணையப் படம்

அந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே ?

அதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.

மேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.

ஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு ?

1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே! இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.

மேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.

வானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் ?

வெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.

மேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்!!!

மேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.

இலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா ? இலக்குவன் பெயர் காரணம் ?

இல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.

மேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.

சொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana –  Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”

இந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.

மேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்!

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: