~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘வி.வி.ஸ்.ஐயர்’

வாஞ்சிநாதன்….

நாற்சந்தி கூவல் – ௬0(60)

(லிங்க் பதிவு)

வாஞ்சிநாதன்….

வணக்கம். உங்களை சந்தித்து பல நாட்கள் ஆகி விட்டது. என்ன செய்ய திங்கவும் தூங்கவுமே பாதி நேரம்  போய் விடுகிறது, இதில் இந்த பொல்லாத சோம்பேறித்தனம் வேற….. என் சொந்த (சோகக்) கதை இங்கு எதற்கு…. சரி, விஷயத்துக்கு வருவோம்.

மேலே சொன்ன இத்யாதி வேலைகள் போக, மிச்சம் கிட்டும் வேளைகளில், கையில் கிடைக்கும் எதையும் படிக்கும் கிறுக்கன் நான். (அந்த கடலை மடித்த பேப்பர் உள்பட). இந்த வகையில் இணையம் ஒரு வளரும் பொக்கிஷமாக உள்ளது. படிக்க படிக்க பல அருமையா பண்டங்கள தட்டுப்படுகின்றன. அதில் பலவன அரசில், மற்றும் சினிமா சார்ந்தவை என்பதை உங்களுக்கு  சொல்லி தான் தெரிய வேண்டுமா. இதையும் தாண்டி பல எழுச்சி மிக்க, சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் உள்ளன, என்பதே நிதர்சனம். ஆனாலும்,  தமிழில் இது போன்றவை சற்று குறைவு தான்.

அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த தளம், நான் அடிக்கடி ஆர்வமுடன் சென்று பார்க்கும் தமிழ் தளம் “தமிழ் பேப்பர்“. இதை சிறப்பாக நடத்தி வரும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் பாராட்டுகள். அதன் ஆசிரியர் மருதனுக்கு, என் சிறப்பு வாழ்த்துகள்.

சில நாட்களுக்கு முன் தமிழ் பேப்பரில் ஒரு (பெரிய) கட்டுரை படித்தேன். அதனுடைய லிங்கை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. 102 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் நிஜ படம். சுதந்திர போராட்டத்தில் தமிழர் செய்த வீர வேள்வி பற்றியது.  கண்டிப்பாக இதனை படியுங்கள். நேரம் இருந்தால் இந்த பதிவின் மீதியையும் படியுங்கள்.

ஆஷ் கொலை வழக்கு – பாகம் 1

ஆஷ் கொலை வழக்கு – பாகம் 2

Vanjinathan with his friends

ஏனோ இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த உடன் ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது. இதற்கான காரணம் விளங்கவில்லை. ஒரு வசாகனுக்கு கிடைக்கும் பரிசு இது தானோ….

என்றோ, எங்கோ, எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்து ஒரு விஷயத்தை ,இவ்வளவு அழகாக விவரிக்க முடியமா? உங்கள் எழுத்தாளுமை அபாரம் திரு.S.P.சொக்கலிங்கம் அவர்களே. நீங்கள் ஒரு வழக்கறிஞர் என நான் நம்புகிறேன். இன்று முதல் உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒருவன். உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இது போல சுதந்திரம் சார்ந்த, அரசியல் வழக்குகள் பல உள்ளன, எங்களுக்காக அதையும் (நேரம் கிடைக்கும் பொழுது) படித்து எழுதுங்கள். உங்கள் பணியும், எழுத்தும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள். (சொக்கலிங்கம் அவர்களின் சில படைப்புகள்)

கடந்த சில மாதங்களாக, சில நல்ல நூல்களின் வாயிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி, நேரு, சாவர்கர், வி.வி.எஸ் ஐயர், வ.உ.சி  போன்றவர்களை பற்றி படித்து வருகிறேன். இவர்களை பற்றி ஒரு முழுமையான அறிமுக வரைபடத்தை தந்துள்ளது இந்த ‘ஆஷ் கொலை வழக்கு’. வாஞ்சிநாதனை பற்றி கேள்விப் பட்டுள்ளேன், ஆனால் இது போல விரிவாக படித்ததில்லை.  தொடர்ந்து படிக்க ஆசை.

அடுத்து வரும் பதிவுகளில் சுதந்திர மனம் கமலும் . அந்தமானில் சிறையில் சாவர்கர் இருந்து. பெல்லாரி சிறையில் வி.வி.எஸ்.ஐயர் எழுதிய கம்ப ராமாயண நூல். ச்விஸர்லாந்தில் சுபாஷ் போஸ். காங்கிரஸில் நேரு குடும்பம். காந்தியின் அரசியல் ராஜா தந்திரம். ஜின்னா என்னும் காந்தியின் எதிரி. இந்தியன் நேஷனல் ஆர்மி. ராஜாஜி என்னும் சக்கரவர்த்தி. சவர்கரும் கோட்சேவும்………………… போன்ற பல விஷியங்களை பற்றி பேசுவோம். இந்த துறையில் எனக்கும்  ஊக்கமூட்டி , புத்தங்களும் கொடுத்து படிக்க உதவும் மதுரை ராமாயண ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சியம். நான் எழுத்தும் அதே தமிழ் மொழியை கொண்டு தான் சொக்கலிங்கம்  அவர்களும் எழுதுயுள்ளார். ஆனால் என்ன ஒரு கோர்வை, நேர்த்தி, நடை மற்றும் செய்திகளை சரியாக அழகாக வருசையாக சொல்லும் திறன். ஒன்னு எனக்கு தமிழ் சரியா வரவில்லை. அல்லது தேர்ச்சி போதவில்லை. அல்லது எனக்கு அழகாக எழுத வராது போலும்….. என்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். தமிழ் தாய் தான் என் பிழைகளையும் பொறுத்து, என்னையும் காத்தருள வேண்டும். நீங்களும்தான்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!!!

இந்தியன்,

ஒஜஸ்

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: