~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘வைரமுத்து’

வைரமுத்து மழை

நாற்சந்தி கூவல் – ௭௭ (77)
(மீள் கவிப் பதிவு)

வைரமுத்து மழை

கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழை படிக்க வாய்ப்பு கிட்டியது. அதை எனக்கு பரிசளித்த நண்பருக்கு நன்றிகள் பல. அனைத்தும் இன்பம். அதில் திரும்பி திரும்பி படிக்க வேண்டும் என்று தோன்றிய பல சில வரிகளை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

படித்து மகிழுங்கள். வைரமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு தாவரம் அரும்பிலிருந்து சட்டென்று
கனிக்குத் தாவிடாமல் அரும்பு – மொட்டு –
மலர் – பூ – பிஞ்சு – காய் – கனி என்று
படிப்படியாக பயன்படுவதே பரிணாமத்தின்
வியப்புதான்

உலக கவிதைகளுக்கெல்லாம் பொதுவான
குணம் ஒன்று உண்டு.
மனிதகுலம் சோகப்படும் பொழுது கண்ணீர்
வடிப்பது; தாகப்படும்போது தண்ணீர்
கொடுப்பது.

படைத்தவனைவிடவும் படைப்பு மேம்பட்டது

படைத்தவனின் மேதாவிலாசம்
புரிந்துகொள்ளப்படுவதைவிட படைப்பின்
அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதையே
ஒரு நல்ல கவிதை வேண்டி நிற்கிறது.

இசை
நாவுக்குச் சிக்காத அமிர்தம் நீ
நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணனுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

 

 

விதைச் சோளம்

தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசயெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில்
நெத்தியில ஒத்தமழை.

 

 

காலந்தோறும் காதல்
காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைத்த இடையென்பார் – இன்னும்
சுரும்பிருக்கும் கூந்தல் சுடர்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி

 

 

மழைக்குருவி
கீச்சுக் கீச்சென்றது – என்னைக்
கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே – என்மேல்
பிரியமா என்றது
(இது இன்று அளவில், ட்விட்டர் குருவிக்குச் சால பொருந்தும்)

 

 

தீ அணையட்டும்
அந்நிய ரோடு சண்டை கொண்டது
ஆரோ எழோதான் – சொந்த
மண்ணவ ரோடு சண்டை கொண்டது
மணலினும் அதிகம்தான்
~~!!~~
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு – அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் எதுக்கு?

 

 

உள்முகம்

கல்வியின் கர்ப்பத்தில்
மீண்டும் கண்வளர்

சிரிப்பு
உதுடுகளின் தொழில் ஆறு
சிரித்தால் முத்தமிடல்
உண்ணல் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
~~!!~~
தருவோன் பெருவோன்
இருவருக்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தான் சிரிப்பு
~~!!~~
சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு
~~!!~~
மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இருண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தை
தள்ளிப் போடுங்களேன்

காலமே என்னைக் காப்பாற்று
சக ரயில் பயணியின்
அரட்டை யிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று.
~~!!~~
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று.

சொல்லதிகாரம்
எதிரி என்ற வாரத்தை எதற்கு ?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்

 

பால்வினையாளி
உயரைம்… ?
வறுமைக்கோட்டில்
தலைதட்டும் உயரம்

இதில் சகிக்க முடியாது… ?
இங்கு வந்து வீடு நினைத்து
ஆண்கள் சிலபேர் அழுவது

பாடம்
மழை சொன்னது:
” கருணை உள்ளவனே
உயிர்களுக்குத்
தலைமை தாங்குகிறான்”

நதியும் ஒரு கீதை சொன்னது:
“கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே”

மழைத்துளி சொன்னது:
“முத்துக்கான வித்து
எப்போதும் விழலாம்
விழித்திரு மனிதா விழித்திரு”

சூரியன் சொன்னது:
“மறைத்தும் மறையாதிருக்க
உன் சுவடுகள் விடுச்செல்”

இதுபோதும் எனக்கு
நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைக்கழுவ கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழும்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

நண்பா உனக்கொரு வெண்பா
(எய்ட்ஸ் பற்றி)

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் – கலங்காதே
காவலனாய் வாய்ந்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனை கூசாமல் கொல்!

நதிமூலம்
கோபத்தின் சிகரத்தில்
துக்கத்தின் அடிவாரத்தில்
எப்போது மனது கூடாரமடிக்கிறதோ
அப்போதெல்லாம்
எழுதத்தோன்றும்

மற்றும் சில கேள்விகள்
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி ?
~~!!~~
உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

இதரவை (சில ஒரு வரிகள்)
இப்போது கன்னிகழிக்க
எப்போதோ வாங்கிய புத்தங்கள்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாற்சந்தி நன்றிகள் : கவிஞர் வைரமுத்து

செல்ஃபோனில் காதலித்துபார்…

நாற்சந்தி கூவல் -௩௨(32)

(கவிதை பதிவு)

 செல்ஃபோனில் காதலித்துபார்…

(இது ஒரு புத்தாண்டு சி{ரி/ற}ப்பு காவிதை)

காதலித்து பார்’ என்று ஒரு அழகான கவிதை, வைரமுத்து ‘இந்த பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் தொகுப்பிள் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.

அது போலவே ஒரு காப்பி கவிதை. படித்தேன். சிரித்தேன். ஸ்வாரசியமாக இருந்தது………

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செல்ஃபோனில் காதலித்துபார்…

செல்ஃபோனில் காதலித்துப்பார்…..!!!!!

உன்னைச் சுற்றி

ஈக்கள் மொய்க்கும்

உலகம் உன்னையே

பார்க்கும்

தொலைபேசிக் கட்டணத்தின்

பெறுமதி விளங்கும்

உனக்கும் வறுமை வரும்

கடன்கள் அதிகமாகும்

ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்

உன் விரல்கள் பட்டே

(தொலைபேசி) இலக்கங்கள் அழியும்

காதிரண்டும் செவிடாகும்

செல்ஃபோனில் காதலித்துப்பார்…..

****

குப்பை மேட்டில்

நின்று கதைப்பாய்

பல நாற்கள்

குளிக்கமாட்டாய்

Call வராவிட்டால்

நிமிசங்கள் வருசமென்பாய்

வந்துவிட்டால்

வருசங்கள் நிமிசமென்பாய்.

இந்த உலகமே உன்னைப்

பைத்தியக்காரணாய்ப் பார்க்கும்

ஆனால் யாருமே பார்க்காததுபோல்

உணர்வாய்

செல்ஃபோனில் காதலித்துப்பார்…..

****

வீட்டுக்கும் ரோட்டுக்கும்

பேயன்போல் நடந்து திரிவாய்

இந்த ஃபோன்  இந்த சிம்,

இந்த ரிலோட் எல்லாமே

காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.

செல்ஃபோனில் காதலித்துப்பார்…..

****

உன் ஃபோன் அடிக்கடி

சார்ஜில் கிடக்கும்

பேரிரைச்சல் கொண்ட

நேரத்தில்கூட – அவள்

மிஸ்கோர்ள் மட்டும்

தெளிவாய்க் கேட்கும்

உன் ஃபோனே

பெட்ரி டவுன்னாகி

உனக்கு ஆப்படிக்கும்

உன் பல மணிநேரங்களை

அது விழுங்கும்

ஃபோன் கட்டணம்

நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்

உன் பாக்கெட் மட்டும்

சஹாராவாகும்.

Miss Call வராவிட்டாள்

பைத்தியம் பிடிக்கும்

Miss Call வந்துவிட்டால்

பைத்தியம் அடங்கும்.

செல்ஃபோனில் காதலித்துப்பார்……

****

கடன்களை வாங்கி

வாங்கியே ரீலோட்

பண்ண உன்னால் முடியுமா?

Out Goingஉம் SMSஉம்

அவளிடமிருந்து வந்ததுண்டா?

Call waiting போய்

சண்டைகள் வந்ததுண்டா?

கவரேஜ் இல்லா

நேரங்களில் கூரைமேல்

ஏறிப் பேசத் தெரியுமா?

சபையிலே மெதுவாகவும்

தனிமையிலே உருகி உருகியும்

பேச உன்னால் ஒண்ணுமா?

ஃபோன் சூடாகவேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்

சாப்பாட்டுக் கடையிருந்தும்

பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய)

காசு சேர்த்துப் பழகியதுண்டா?

செல்ஃபோனில் காதலித்துப்பார்….

****

மொபிடெல் (சிம்) கொம்பனிக்காரன்

வாழவேண்டுமே

அதற்காகவேனும்

Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன்

பிழைக்கவேண்டுமே

அதற்காகவேனும்

டயலொக் சிம்முக்கும்

மொபிடெல் சிம்முக்கும்

கட்டண வித்தியாசம்

விழங்குமே

அதற்காகவேனும்

கழிவறையில்

உற்காந்து கொண்டு

பேசவும் முடியுமே

கட்டாந்தறையில்

படுதுக்கொண்டும்

பேசவும் முடியுமே

அதற்காவேனும்

செல்ஃபோனில் காதலித்துப்பார்……

****

பெற்றோர் உன்னிடம்

சண்டைபிடித்தாலும்

உறவுகள் கேவலமாய்ப்

பேசினாலும்

தொலைபேசிக் கட்டணம்

எவ்வளவுதான் எகிறினாலும்

ஃபோன் எவ்வளவுதான்

சூடானாலும்

நீ நேசிக்கும் அவள்

உனக்கு மிஸ் கோர்ள்

பண்ணாமல் விட்டாலும்

செல்ஃபோனில் காதலித்துப்பார்……

நீ பிச்சக்காரனாவாய்

இல்லை

கடன்காரணாவாய்

இரண்டில் ஒன்று

உனக்கு நிச்சயம்

செல்ஃபோனில் காதலித்துப்பார்……….

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த விடலை பயல்களின் விளையாட்டை வைரமுத்து ஐயா மன்னிப்பார் (இதனை பார்த்தல் ரசிப்பார்) என நம்புகிறேன்.

நாற்சந்தி நன்றிகள்: கடுப்பேத்றார் மை லாற்ட்

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: