~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘Tweets’

பொன்னியின் படங்கள்

(பொன்னியின் செல்வன் முழுமையாக படித்தவர்களுக்கு மட்டும்)

நாற்சந்தி கூவல் – ௬௨(62)
(படப் பதிவு)

சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன் திரு.கே.ஆர்.எஸ் அவர்கள் கீச்சிய சில பொன்னியின் செல்வன் படங்களின் ட்வீட்ஸ் தொகுப்பு.

அவருடைய ட்விட்டர் கணக்கு : https://twitter.com/#!/kryes

அவருடைய ப்ளாக்:  மாதவி பந்தல் –  தமிழ் பக்தி சொட்டும் பதிவு

நாற்சந்தி நன்றிகள் : நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர்  (கே.ஆர்.எஸ்)

ட்விட்டர் விருந்து….

நாற்சந்தி கூவல் – ௨௯(29)

(கீச்சு பதிவு)

ட்விட்டர் விருந்து….

@Kaniyen கனியன். ஒரு நல்ல ட்விட்டர் நண்பர். நான் அதிகம் Favourite மற்றும் Retweet செய்வது இவர் கீச்சசுகளை தான் யென்று நான் சொல்லி, twitterstats.com கூட சரிபார்த்து சொல்கிறது.

இவருடைய ஒரு நல்ல குணம், எழுத ஆரம்பித்தால் அனைத்தும் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள். கண்டிப்பாக சென்சுரி. இல்லை ஒன்னுமே எழுத மாட்டார். பல நாட்களுக்கு பிறகு இன்று அவர் குடுத்த விருந்து உங்கள் பார்வைக்கு:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பெரும்பாலான காதல்கள் கடைசியில் சமாதி ஆகிவிடும் என்பதற்கு உதாரணம் “தாஜ்மகால்” !

எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன, ஆனால் சொர்க்கத்தை நிச்சயிக்கவில்லை !

நமக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால்தான் “மீண்டும் தலைப்புச்செய்திகள்” !

காசு, காமம் , இந்த இரண்டில் மட்டும்தான் சாதி மத பேதமில்லை !

New Thirukural:

ஆட்டை வெட்டியவுடன் அலறியது மனம் ! சமாதானமாக்கியது கறிக்குழம்பு மணம் !

எப்போதும் பொய் பேசுபவர்க்கு, ரொம்ப ஞாபக சக்தி வேண்டும் இதுவரை என்ன பேசினோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள !

அரசியல்வாதிகளை விட, அதிகம் கை தட்டு வாங்கியவை நம்ம ஊர் கொசுக்கள்தான் !

நீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் ! நீ தூங்கும்போது குறட்டை விட்டால் நீ மட்டும்தான் தூங்குவாய் !

செத்த என் தாத்தாவுக்கு எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள் ! அவர் உயிரோடிருக்கும்போது ஒரு நாதியில்லை ஒரு வாய் சோறு கொடுக்க !

இதயக்கதவை திறந்தவளையே, உள்ளே வைத்து பூட்டுவதற்கு பெயர்தான் காதல் !

இறைவனுக்கு படையலிட்டோம், பசியாறின எறும்புகள்

சயனைடின் சுவை அறிந்தவர் யாராவது அதன் சுவை பற்றி இதுவரை பேட்டி அளித்துள்ளார்களா?

விலங்குகளை வதை செய்யும் கடவுளர்களை கைது செய்ய ஏன் இன்னும் “புளு கிராஸ்” எந்த முயற்சியும் எடுக்கவில்லை !

கும்முன்னு இருக்கிற பெண்ணைவிட, கம்முன்னு இருக்கிற பெண்ணை கட்டுபவர்கள் வாழ்க்கைதான் ஜம்முன்னு இருக்கிறது !

தினமும் காலையில் தூங்குபவன் கனவிலேயே இருக்கிறான் , எழுந்திருப்பவன் கனவை நனவாக்க முயற்சிக்கிறான் !

சின்னவயதில் என்னை “கன்னுக்குட்டி” என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் “எருமைமாடு” என்று அழைக்கிறார் !

நல்ல நேரம் முடிவதற்குள் தாலி கட்டினான் மாப்பிள்ளை , தாலி கட்டிமுடித்தவுடன் நல்ல நேரம் முடிந்தேவிட்டது வாழ்க்கையில் !

நேற்றைய வேலையை இன்று செய்பவன் அயர்ச்சியில் உள்ளவன் ! நாளைய வேலையை இன்றே செய்பவன் முயற்சியில் உள்ளவன் !

கையில் காசிருக்கும்போது வேண்டாத பொருள்களையெல்லாம் வாங்குகிறோம், பின்னர் கடனாகி வேண்டிய பொருள்களையெல்லாம் விற்கிறோம் !

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

140ள் என்ன விளையாட்டு. உங்கள் சுவை மிகு பணி தொடர நல்வாழ்த்துகள் .

நாற்சந்தி நன்றிகள் : @Kaniyen

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: