~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௧௦௭(107)
(புத்தகப் பதிவு)

புத்தகங்கள் நம்மை தேர்வு செய்கிறன.

வாங்கி வச்ச/ பதிவிறக்கம் செய்த நூல்களை எல்லாம் வாசித்து முடித்தவர்கள், இந்த உலக சரித்திரதில் எங்கும் இல்லை ! இல்லவே இல்லை !!! இருக்கவும் முடியாது. கன்னி தமிழின், கணினி தமிழிலன் வீச்சு அப்படி.

நீயா நானா கோபிநாத், விகடனில் தொடராக எழுதிய பாஸ்வேர்ட் படித்தேன். இணையத்தில் தரமான ப்ளாக்-ஸ் இதை விட நல்லா இருக்கும். வாழ்க்கை நிகழ்வுகள், அங்கு அங்கு கொஞ்சம் தத்துவங்கள், அவதாணிப்புக்கள், வரலாறு துணுக்குகள் என்று வேகமான வாசிப்புக்கு உவந்த நூல்.

Password is incorrect :p

#NoteToSelf அடுத்து நல்ல புக்கா தூக்கணும்.

நாற்சந்தி கூவல் – ௧௦௬(106)
(? பதிவு)

என்னை நானே தேடுகிறேன் !
நேரம் எங்கே ?

என் மேல் எனக்கே கோவம் !
பழைய வேகம் எங்கே ?

என்னை நானே நேசிக்கிறேன் !
பழைய நட்புகள் எங்கே?

என்னை நானே கேட்கிறேன் !
வாசிப்பு போதுமா ?
எழுத வேண்டாமா ?

என்னுள் நானே மகிழ்கிறேன் !
இசை வெள்ளம் காக்க….

சக்தி, சொல் மந்திரம் போல்
அமைய வேண்டும் !
பாரதியின் விண்ணப்பம்,
யாவருக்கும் பொருந்தும்.

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் _/\_

 

உ…!

நாற்சந்தி கூவல் – ௧௦௫(105)
(அவசர கிறுக்கு)

உதிரம் கசியுமளவு
உடைந்த இதையத்தில் ,
உடையவளின் பெயர்
உச்சரிக்கப்படுகிறது,
உற்சாகமூட்டுகிறது!

உயிரில் ஊடுருவி
உறவில் கலந்த
உதய தாரகையே….

உள்ளமெங்கும் மட்டுமல்ல
உலகமெங்கும் தேடினேன்,
உல்லாசா பறவையே
உறங்கி போனாயோ ?
உயரே பறந்தாயோ ?
உண்மையை சொல்லுகிறேன்
உன்மத்தம் கொள்கிறேன் !

 

நாற்சந்தி கூவல் – ௧௦௪(104)
(சில வரிகள்)

கண்ணனின் கதையை வாசிப்பதில் தான் எத்தனை இன்பங்கள் உள்ளன. எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இன்னும் என இதையம் துடிக்கும், சில சமயம் இமைகள் பனிக்கும்.

தன்னை அழிக்க வல்ல, தேவகியின் எட்டாவது மகன், எங்கோ வளர்ந்து வருகிறான் என்பது மட்டும் கம்சனுக்கு தெரியும். எப்படி வருவான் ? எங்கிருந்து வருவான் ? என்ன என்ன செய்வான் ? என அவன் மனம் சதா சர்வ காலமும் கண்ணை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. முயன்று செய்யும் முனிவர்களின் தவத்தை, பயம் அவனை பண்ணுவித்தது. பயமோ, பக்தியோ : அவன் இறைவன் தான் !

மேற்சொன்ன கட்டத்தை வாசிக்கும் பொழுது தோன்றிய சில வரிகள். நான் படித்த ஆங்கில வர்ணணையின், எளிய தமிழாக்கம் எனவும் கொள்ளலாம்.

கம்சன்

கம்சன்


கண்ணை மூடினான்,
  கண்ணனைக் கண்டான்!
நிலவை ரசித்தான்,
  நிர்மலன் நின்றான்!
கனவில் ஆழ்ந்தான்,
  கடவுளைக் கண்டான்!
பூக்களை பார்த்தான்,
  புருஷோத்தமன் நின்றான்!

உணவை பார்த்தான்,
  உலகநாயகனைக் கண்டான்!
தண்ணீரை நோக்கினான்,
  தவசீலன் நின்றான்!
மதுவை கொண்டான்,
  மதுசூதனைக் கண்டான்!
மாதை தொட்டான்,
  மாதவன் நின்றான்!

 

இத்தகு நிலை நாமும் பெற்றால், அவனருளாலே அவன் தாழ் வணங்கி….

இன்றுடன் வோர்ட்பிரஸ் தளத்தில் இணைத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாம். நன்றி நண்பர்களே.

நாற்சந்தி கூவல் – ௧௦௩(103)
(திருவிழா பதிவு)

சென்ற வாரம் இதே நாளில், என் மனோரதங்களில் ஒன்று நிறைவேறியது, முத்தமிழுக்கு சங்கம் கொண்ட ‘மதுரை’ மாநகரில். ஆதாகப்பட்டது : உற்சவம் செல்லும், ஆண்டவனின் அருள் வடிவங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. வியாழன் காலை, எட்டரை மணியளவில் எடுத்த படங்களை உங்களுக்கு, செய்திகளுடன் காட்டவே இந்த பதிவு.

ஆவணி மூல திருவிழாவின், சிறப்பை பற்றி நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் விதமாக நடக்கும் உற்சவமிது. கொஞ்சம் வரலாறு :

1 Pilliyar
முன்னொரு காலத்தில், மதுரையை சீரும் சிறப்புடன் அரிமர்த்தன பாண்டியன் ஆண்டு வந்தான். துறைமுகத்தில் வந்திறங்கும் உயர் ரக குதிரைகளை வாங்க, தனது அமைச்சரை அனுப்பி வைத்தான். அதற்கான பொன்னையும், அவரை பாதுகாக்க சிறு படையும் கூடவே அனுப்பி வைத்தான்.

சிற்றம்பலத்தில் ஆடும் அம்பல்வானின் விளையாட்டு தொடங்கியது. ஆவுடையார் கோவிலில், ஆலமரத்தின் அடியில் : தட்சிணாமூர்த்தியாக வந்தமர்ந்தான். கற்ற கேள்விகளில் வல்லவர்களான சனக்க, சனந்தன, சானதன, சனத்குமார முனிவர்களுக்கு, மௌனமாக சேவை சாதித்தான், ஐயம் தெளிவித்தான்.

போகும் வழியில் இவரை கண்ட அமைச்சர் – மாணிக்கவாசகர், மெய்மறந்து, தன் உண்மை ஈர்ப்பை உணர்த்தார். தனக்காக இறங்கி வந்த பரம்பொருளை, உலகறிய செய்ய, கோவில் ஒன்றை எழுப்ப திட்டமிட்டார். பாண்டிய மன்னனின் பொன்னைக் கொண்டு, பெரியதொரு ஆலயத்தை கட்டி தொடங்கினான். நாட்கள் ஓடின. நேர்த்தியுடன் நிர்மாணங்கள் நடைப்பெற்றன. ஆள் மீது ஆள் அனுப்பினான் அரிமர்த்தனன். கடைசியில் கைது செய்து வரும் படி, உத்தரவிட்டான்.

சிவன் செயல் எல்லாம் – என நம்பி, மாணிக்கவாசகரம் சும்மா இருந்தார், உள்ளம் நிறை பொன்னார் மேனியனை நினைந்து, நினைந்து உருகினாரே தவிர பொன்னை மறந்தார், புவியை மறந்தார், பதவியை மறந்தார், சிறையிருந்தார் !

2 Sivan with pittu

மதுரையை நோக்கி பெரியாதொரு புழுதி படலம் கவிழ்ந்தது. ஆயிரம் பதினாயிரம் புரவிகள், காற்றின் வேகத்தில் மன்னர் மாளிகையை நோக்கி விரைந்தன். குழாமின் தலைவனாக வந்த சிவபெருமான், மன்னரை சந்தித்தான், அமைச்சர் வாங்கிய குதிரைகள் இவை, என ஒப்படைதான். மன்னர் சிறைக்கு சென்றார், மன்றாடி மன்னிப்பு கேட்டு, மாணிக்கவாசகரை விடுதலை செய்தார். இரவும் வந்தது, நரிகள் பரிகளாக மாறின, நகரம் முழுதம் ஓலத்தின் ஊளை குரல்கள், ஓங்கி ஒலித்தது. பொறுமை இழந்த மன்னன், இது எல்லாம் அமைச்சரின் தந்திர மந்திர சூழ்ச்சி என்று நினைத்தான். மறுபடி அதிரடியாக முறையில் கைதானார் அமைச்சர்.

கங்கை கொண்டான், வைகையை வெள்ளமாகினான். கரைபுரண்டு கொண்டு, தண்ணீர் ஊருக்குள் வர எத்தனித்தது. கரையை உயரத்தும்  ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. முரசுகள் கொட்டப்பட்டன. வீட்டுக்கு ஒருவர் வெள்ளமடைகும் பணியில், கைகொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறந்தது.

3 Meenakshi amman

நகரின் கிழக்கு திக்கில் வாழ்ந்த, கூன் விழுந்த வந்திப்பாட்டிக்கோ கை கால் ஓடவில்லை. அவள் வீட்டில் வேறு யாரும் இல்லை. (தற்போது திரிந்து புட்டு என்கிறோம்) பிட்டு விற்று தன் பிழைப்பை நடந்த வந்தாள், அந்த மூதாட்டி. யார் யாரிடமோ தனக்கு உதவி செய்யும் படி மன்றாடினாள் கிழவி. பயனொன்றுமில்லை, பயமொன்று வந்தது, ராஜ கட்டளையை மீறினால் ஏற்படும் அபாயம் பற்றி அஞ்சினாள்.

பாட்டிக்கு உதவ சிவா பெருமான் மாறுவேடத்தில் இளைஞராக வருகிறார். வேலைக்கு சன்மானமாக, வயிறு முட்ட பிட்டை வாங்கி உண்டார். ஆற்றங்கரைக்கு சென்றார், படுத்து உறங்கினார். வேலை ஏதும் செய்யாமல், சும்மா தூங்கி கொண்டிருந்தவனை பார்த்த மன்னருக்கு, வெள்ளத்தின் வேகத்தை போல கோவம் பீறிக்கொண்டு வந்ததது. சாட்டையால் ஒரு அடி கொடுத்தார். என்ன ஆச்சரியம், அண்ணலின் மேனியை விழ எத்தனித்த அடி, அனைவரின் முதுகிலும் சுரீர் என்று விழுந்தது. இதுவே பிட்டு திருவிழாவின் பூர்வாங்கம்.

4 Murugan Thiruparangundram

ஆவணி திருவிழாவில், இதனை சித்தரிக்கும் வண்ணம் ; தலையில் மண் சுமந்த தங்க கூடையுடன் சிவனும், தனியே மீனாட்சி அம்மனும், பிள்ளையாரும், முருகனும், சண்டிகேஸ்வரரும், வந்திப்பாட்டியும் கோவிலில் இருந்து காலை வீதியுலா கிளம்புகின்றனர்.

5 Manikavasagar

திருப்பரங்குன்றம் முருகன் பாண்டிய மன்னனாகவும், தெய்வானை ராணியாகவும் வேடமிட்டு கலந்து கொள்வதாக ஐதீகம். இதற்காக, திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர், மதுரையம்பதியில் எழுந்தருளுகிறார். அதிகாலையில் மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து கிளம்பும் அனைவரும், பல மண்டகபடிகளில் தங்கினார்கள். மதியம் மூன்று மணியளவில், பிட்டு சுமக்கும் லீலை நடைபெற்றது. சிவனாக ஒரு குருக்களும், மன்னாக ஒருவரும் வேடமனித்து, வைகை கரையில் உள்ள, பிட்டு தோப்பு திருவிளையாடலை அரங்கேற்றினர்.

6 Aarathi Sivan

 

ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளி மண்டகபடியில் எடுத்த புகைப்படங்கள் இவை. நிர்வாகத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி. இதே சமயத்தில், மதுரையில் இன்னமொரு திருவிழா நடந்து கொண்டிருந்தது. மிகுந்த ஆவலுடன் அதனையும் எதிர்நோக்கி தான் பயணம் சென்றேன்….

பி.கு : படங்களை சொடுக்கினால், பெரிதாக தெளிவாக பார்க்கலாம்.

நாற்சந்தி கூவல் – ௧௦௨(102)
(புத்தகப் பரிந்துரை)

பன்முகம் கொண்ட பண்பாளர்களை (பற்றி) வாசிப்பது ஒரு சுகானுபவம். 1900களின் காலக்கட்டத்தில் இத்தகு மேதமை கொண்ட மனிதர்கள் பல இருந்தனர் என்று நான் எண்ணமிடுவதுண்டு. சின்ன அண்ணாமலையும் அந்த பட்டியலில் பெருமையுடன் சேர்கிறார்.

யார் இவர்? அரசியல்வாதியா? நகைசுவை ததும்ப உரையாற்றும் பேச்சாளரா? காங்கிரஸ் தொண்டரா? கல்கி விசிறியா? ராஜாஜி பக்தரா? எம்.ஜி.ஆர் அண்ணாவின் அன்பு தோழரா? எழுத்தாளரா? காந்தியவாதியா? மா.பொ.சி-யின் நண்பரா? பத்திப்பாளரா? சுதந்திர போராட்ட வீரரா? திரைப்பட தாயாரிப்பாளரா வசனக்கர்த்தாவா? இன்னும் இன்னும் என்னவென்று அடுக்க முயாத அளவு கீர்த்திகளை கொண்ட எளியவர், தமிழன்பர்.

chinna annamalai with rajaji

சுயசரியதை மாதிரியான புத்தகம் தான், ஆனால் அத்தனை சுவையாக உள்ளது. நறுக்கென எழுதி, களுக்குக்கென சிரிக்க வைக்கிறார். வரிசையாக படிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஊருகாய் போல அங்கு அங்கு தொட்டு ருசிக்கலாம், பின்னர் முழுவதும் ரசிக்கலாம். தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள், அதில் பாய்ந்து வரும் ஜலமென வேக நடை.

வரலாறு என்றுமே பாரபட்சம் மிகுந்தது. அதுவும் நம் சுதந்தரக் கதை மேற்கத்திய மாநிலங்களின் ஆதிக்கத்துடன் எழுத்தப்பட்டுள்ளன எனபது சொல்லப்படாத உண்மை. அதை மட்டுமே நாம் வாசித்து, பேசி, விவாதித்து, பாராட்டி வருகிறோம் என்பதில் தான் எனக்கு அதீத வருத்தம்.

சின்ன அண்ணாமலை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ? ஆங்கில அரசு இவரை நல்லிரவில் கைது செய்து, திவாடானை சிறைச்சாலையில் வைத்தது. காரணம் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் போட்டது, பேசியது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ? அதற்கு பின் நடந்த சம்பவங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கலையில் இந்த செய்தியை அறிந்த மக்கள், தேவக்கோடையிலிருந்து ஊர்வலமாக திரண்டு சென்று, சிறையை உடைந்து, தீவைத்து, இவரை விடுதலை செய்தது. இவர்கள் எல்லோரும் இரவு திரும்ப வரும் வழியில், பிரிட்டிஷ் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர், பல நூறு பேர் இறந்தனர்,  காயமடைந்தனர், உதவ ஆள்லில்லாமல் துடிதுடித்து செத்தனர். கையில் குண்டடியுடன் சின்ன அண்ணாமலை அதிஷ்டவசமாக தப்பித்தார். தேசத்தில் இது போல, ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை ! (காந்தியே இதைக் கேட்டு ஆச்சிரியப்பட்டு, அவரை பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இப்படி பட்ட “சொன்னால் நம்ப முடியாத” அதிசயங்கள் பல இவர் வாழிவில் நடந்துள்ளது. குமுதம் இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் புத்தக வடிவம் கொண்டுள்ளது.

இந்த புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் ? மிக முக்கியமான காரணாம், தமிழகத்தில் தி.மு.க அல்லது திராவிட கட்சிகள் எப்படி ஸ்திரம் கொண்டது, காங்கிரெஸ் எப்போது வீழ்ந்தது ? காரணம் என்ன ? கர்த்தாக்கள் யார் ? அதன் ஆயுள் மிகுந்த ஆட்சியின் தோல்வி எப்படி சாத்தியமானது ? என்பதை போகிற போக்கில், எளிமையா, உள்ளது உள்ளபடி சொல்லி செல்கிறார் சின்ன அண்ணாமலை. இவை அனைத்தையும் அவர் நேரில் இருந்து பார்த்து, அனுபவித்து எழுதியுள்ளார்.

நான் உன்னிப்பாக கவனித்த ஒரு விஷயம்: 1950களில் இருந்த அரசியல் தலைவர்களின் பாராட்ட மிகுந்த பண்புகள். எத்தனை தான் அரசியல் கொள்கைளில் சண்டைகள் இருந்தாலும், தேர்தலில் போட்டிகள் இருந்தாலும், தாக்கி வீழ்த்தி மேடைகளில் பேசினாலும், பரஸ்பர நட்பும், அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட துவேஷம் அறவே இல்லை என்றே சொல்லலாம்.

தமிழிசை, செழுமை பெற்ற காலத்தின் கதை, இந்த புத்தகத்தில் உள்ளது. தேவக்கோட்டையில் இரண்டாம் தமிழிசை மாநாடு நடத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் பண்ணை – என்னும் பதிப்பகத்தின் மூலம் பல நல்ல தமிழ் அறிஞர்களின் இலக்கியங்களை செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் வெளியிட்ட கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் புத்தகங்கள் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இதன் திரைப்படங்கள் வெளிவரவும் இவரே காரணமாக இருந்துள்ளார்.

மலைக்கள்ளன் படம் வெளிவர அறிஞர் அண்ணா தான் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்ற சம்பவத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைத்தேன். போதும் மீதியை நீங்களே வாசித்து இன்புறவும்.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது, புத்தகத்தின் கடைசி அத்தியாயம் தான்! அதன் தலைப்பு “நானும் எழுத்தாளனானேன்!”. இப்போது நினைத்தாலும் சிரிப்பு முட்டுக் கொண்டு வருகிறது.

நிகழ்கால வந்தியதேவன் என்ற பட்டத்தை இவருக்கு தரலாம் என்று நினைக்கிறேன், இவரின் ஆளுமைக்கும் திறனுக்கும் இது சாலப்பொருத்தமானது. எத்தனை எத்தனை அரும் பெரும் காரியங்களை செய்துள்ளார்! எவ்வளவோ பெரும் மனிதர்களுடன் நட்புக் கொண்டுள்ளார்! வாசித்து விட்டு, வந்து சொல்லுங்கள், இவரை வந்தியத்தேவன் என்று அழைப்பது சரிதானாவென்று !

பி.கு : சின்ன அண்ணாமலையின் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நாட்டுமையாக்கப்பட்ட நூல். பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் – தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம். மின்னல் வேகத்தில் நானே படித்து முடித்தேன், உங்களைப் பற்றி சொல்லவா வேணும்!

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: