~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௫௭(57)

(உணர்வின் பதிவு)

பெண் அழகி…..

இன்று முதல் என்னுடைய சின்ன சின்ன உணர்வுகளை இந்த நாற்சந்தியில், பகிர்ந்து கொள்ளலாம் என இறங்கியுள்ளேன். இந்த வகையில் இது தான் முதல் பதிவு என்பதால், ஒரு படத்துடன் என் உணர்வுகள்:

கொஞ்சம் நேரம் கழித்து, சிந்தித்து பாருங்கள், இதில் உள்ள தவறு உங்களுக்கு புலப்படும். ஆம், எனக்கு தோன்றிய தவறை சொல்கிறேன், செவி மடுத்து கேளுங்கள்.

அழகு என்பதற்கு ஒரு சரியான அர்த்தம்/வரையறை சொல்ல முடியாது, அதை நான் முற்றிலும் ஒப்புகொள்கிறேன். ஆனால் ஒரு பெண் அழகாக தெரிய அவர்கள் மேக்கப் போட வேண்டும், அல்லது நாம் தண்ணி போட வேண்டும் என்பதெல்லாம் சுத்த பேத்தல். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், உலகத்திலேயே மிக அழகிய பெண் யார்?

(நிதானமாக சிந்திக்க, கமர்சியல் பிரேக், குட்டி கதை)

மேலே சொன்ன கேள்வி ஒரு முறை கமலஹாசன் அவர்களிடம் கேட்கப் பட்டது, அவர் சிறு தயக்கமும் இன்றி சொன்னார் “என் அம்மா” என்று. (இதனால் நான் கமல் ரசிகன் என்று தவறாகா இடைப் போட வேண்டாமே)

அதை தான் நானும் சொல்லுவேன். ஆம் உங்களுக்காக தன் ஊன், உடல், உயிர் அத்தனையையும், எந்த நேரத்திலும், மலர்ந்த முகத்துடன் கொடுக்க உலகில் ஒரு மாதரசி இருப்பாள் என்றால், அவள் உங்களை பத்து மாதம் பத்தியம் இருந்து பெற்ற தாயாவாள்.

அவள் என்றுமே அழகின் சிகரம் தான், மேக்கப் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி. நாம் எந்த நிலையில், எந்த காலத்தில், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், அவள் நம் கண்களுக்கு பேரழகி தான்.

பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பிறந்தவர்கள் நாம். இது போல அவர்களை சித்தரிப்பது, கண்டனத்துக்கு உரிய விஷயம். இன்னும் சற்று ஆழ யோசித்து பார்த்தால், பெண்களை ஒரு போக பொருளாக பார்ப்பதே தவறு என நம் சாஸ்திரம் சொல்லுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் மனைவி மட்டும் இதற்கு விதிவிலக்கு.

பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. அது அற்புதமான இயற்கையின் லீலை. மனித குலத்தை பெருக்க, வளர்க மட்டுமே ஏற்படுத்தப் பட்டது அது. வேறு எதற்கும் இல்லை.

சீதை, சாவித்ரி, ஒளவை, நிவேதிதா, கண்ணகி போன்ற பெண்கள் வாழ்ந்து, மகோண்நதம் அடைந்த புண்ணிய பூமி இது. இது போல கேலி சித்திரங்களை உருவாக்கி, நாம் அடையும் பயன் யாது? நமது பண்பாட்டின் இடிந்த சுவர்களை செப்பனிட்டு செதுக்க வேண்டிய உளியில், நம்மை நாமே உடைத்து கொள்கிறோமோ என தோன்றுகிறது?

காலம் தான் இதற்கு விடை. ஆனாலும் நாம் ஏன், பெண்களின் பற்றிய நமது சிந்தனை போக்கை நல்வழியில் மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது…..

(இதில் சொன்னவை அணைத்தும் என் சொந்த கருத்துக்களே, பிழைகள்/ திருத்தங்கள்/ உங்கள் கருத்துகளை கமெண்ட்டாக பதிவு செய்க)

உயிருள்ள உணர்வுகளுடன்,

உங்கள் ஒஜஸ்

(உங்களுள் ஒருவன், உங்களை போல் ஒருவன், உங்கள் கருத்துக்காக காத்திருப்பவன்)

Comments on: "பெண் அழகி" (12)

  1. ABINAYA MANIMARAN said:

    heyyy realy awesome… how can u write both revolutionary thoughts and contradicting thoughts like these.. i enjoyed reading t… engayo poringa…!!!

    Like

  2. சிந்திக்க வைக்கிறீர்கள்.
    மாற்றுக் கருத்துகளும் வரலாம்.
    ஆயினும் உங்கள் கருத்துக்கள்
    உணர்பூர்வமானவை.

    Like

  3. Ennamo.. Pucha sollikeringale

    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

    Like

  4. பொதுவாகவே ஆணாகட்டும், பெண்ணாகட்டும் இயல்பே அழகு என்பது என் கருத்து. எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலவும். பளிச்சென கருத்தைச் சொல்வதில் தய்க்கம் ஏன்? நல்ல பதிவு. தொடர்க இது போல்.

    Like

  5. வெளி தோற்றத்தை நான் அழகு என்று எண்ணியது இல்லை.உள்ளத்தின் அழகே மெய்யான அழகு. மேலும் அழகு பால் சார்ந்தது இல்லை என்பது எண் கருத்து. உங்கள் கருத்துகளையும் நான் ஆமோதிக்கிறேன்… வரவேற்கிறேன் !! இந்த வயதில் இத்தனை தெளிவான கருத்துகளை பதுவு செய்வதை எண்ணி நான் மிகவும் வியப்படைகிறேன். தொடர்க …… வளர்க ….!!! வாழ்த்துக்கள் !!!

    Like

  6. உங்கள் தகவல் நன்றாக இருக்கிறது..மேலாக வளர என் வாழ்த்துக்கள்..!

    Like

  7. நல்ல கருத்து! எல்லோருக்குமே பெண்கள்தான் soft target! நாங்கள் மிகவும் பெருந்தன்மையோடு பொறுத்துப் போகிறோம்! Beauty lies in the beholder’s eyes!
    பெண்களை கீழாகப் பார்க்கும் ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது. இளைஞர்கள் தான் இந்த நிலையை மாற்ற வேண்டும்.

    Like

  8. முதல் இரண்டு வரிக்கு நீங்கள் சிரிப்பது புரிகிறது கார்த்திகேயன். ஆனால் அடுத்த இரண்டு வரிகள் ‘உங்க அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது, தண்டம்….’ என்று திட்டும் அப்பாக்களைப் பற்றியது. இதை ஒரு பெண் சொல்ல முடியுமா?
    யோசியுங்கள்!

    Like

  9. […] (போகப்) பொருளாக பார்ப்பது தவறு என்று பெண் அழகி பதிவில் எழுதி இருந்தேன். ஆனால் இதில் […]

    Like

Sharren Pristina -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

குறிச்சொல் மேகம்