~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

எளிமை

இந்த எளிமைக்கு தான் எத்தனை பரிணாமங்கள்: உள்ளத்தில், உறவில், உணவில், உடலில், சொல்லில், செயலில், பண்பில், பாசத்தில், எண்ணத்தில், எழுத்தில் – பட்டியல் நீள்கிறது.

நம்பிக்கையில் எளிமை பற்றி குருதேவர் ராமாகிருஷ்ணர் ஒரு கதை சொல்லுவார்: மாடு மேய்க்கும் சிறுமி, தினமும் ஓடும் நதிதைக்கடந்து பாகவதர் வீட்டிற்கு பால் விநியோகம் செய்ய வேண்டும். படகில் பயணம். அந்த படகுக்காரனோ படு சோம்பேறி, நேரத்துக்கு வர மாட்டான். கங்கை நதியில் பாதி நாள் வெள்ளம் ஓடும். மரங்களை சாய்த்து அடித்து தூக்கி செல்லும் வேகத்துடன். இத்தனைப் புற காரணங்கள்.

பால் கொடுக்க தாமதமாகும். பாகவதர் கடிந்துக்கொள்வார். வீட்டில் சிறு பிள்ளைகள் இருக்கும் போலும். ஒரு நாள், பாகவதர் இராமாயணம் பாராயணம் செய்து கொண்டிருந்தார். சம்சார சாகரத்தை கடக்க உதவும் இராம நாமம்.

அவள் வெள்ளந்தியான பெண் பிள்ளை. இராம நாமம் சாகரத்தை கடக்க உதவுமென்றால், ஏன் இந்த நதியைக் கடக்க உதவாது என்று எண்ணமிட்டாள். பால் தினமும் நேரத்துக்கு வர ஆரம்பித்தது. பாகவதருக்கு ஆச்சரியம். வினவினார். அவள் தனது எளிய உபாயத்தை சொன்னாள். இராம நாமம் சொல்லி நதியைக் நடந்துக் கடப்பதாக சொன்னாள். அவரும் அரை மனதுடன் முயற்சி செய்தார், நடக்கவில்லை.

தனது எளிய அன்பு கலந்த பக்தியால், ஆறே நாளில் பெருவதற்க்கு அரிய பேரை பெற்ற கண்ணப்பர் வாழ்ந்த பூமி இது.

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
குரள் – 991

(இன்னும் எழுதலாம்…)

பின்னூட்டமொன்றை இடுக

குறிச்சொல் மேகம்