~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

(அறிவிப்பு : இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள்  இந்த பதிவை படிக்க வேண்டாம் என நாற்சந்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறது)

 நாற்சந்தி கூவல் – ௫௦(50)

(பொன்னியின் செல்வன்ப் பதிவு)

 (ஐம்பதாவது சிறப்புப் பதிவு)

வந்தியத்தேவன்….

(கல்கி பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் நான் எழுத்தும் முதல் பதிவு)

சில எழுத்துகளை படிக்கும் பொழுது, நம்மை அறியமால் நமக்குள் வளர்ந்து வரும் பொறாமை செடி துளிர்விடும். ஆனால் சில ஏழுத்தோவியங்களை வாசித்து அனுபவிக்கும் சமயத்தில், ஒரு பெரிய பிரம்மிப்பு மட்டுமே மிஞ்சும். இந்த பொன்னியின் செல்வன் அது போன்றது தான்.

Ponniyin Selvan KALKI

பெரும்பாலான கதைகள் போல அது ஒன்-ஹீரோ ஸ்டோரி அல்ல. (இதனை இன்னொரு பதிவில் அலசுவோம்). ஆனாலும் வந்தியத்தேவனனை, நாம் முதன்மை கதாநாயகன் எனக் கூறலாம். காரணம் : ‘ஆடி பெருக்கில்’ அவனுடன் கதை துவங்கி, ‘மலர் உதிர்ந்தது’ என்னும் கடைசி அத்தியாத்தில் அவனுடன் சுபம் போடப்படுகிறது. (அவன் நம் மனதை கொள்ளை கொண்டவன் என்பது ஒரு கூடுதலான, சிறப்பான காரணம்)

‘பொன்னியின் செல்வன்’ படித்து முடித்ததிலிருந்து, பல முறை யோசித்தது உண்டு : “இப்படி ஒரு அழகான பாத்திரத்தை கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு முன்னோடி யார்…. யாரை ‘ரோல்-மாடல்’ஆகா கொண்டு அவன் படைக்கப்பட்டான்…..”

இதற்கான சரியான விடை கல்கி அவர்களிடம் தான் உள்ளது. ஆனால் நாம், நம் சிறு மதியை கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். யூகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!!!

மதுரை மாநகர் கொண்ட, ராமாயண ராமமூர்த்தி அவர்களிடம் இதை பற்றி பேசினேன். உலக இலக்கியங்களை அனைத்தையும் படித்த பெரியவர். அனைத்து இராமாயணங்களும் அவருக்கு அத்துபடி. மதுரை கம்பன் கழக சிறப்பு பேச்சாளர். என்னையும் படிக்க தூண்டிய மாமனிதன்.

அவர் கல்கி வாழ்கையில் நடந்து ஒரு சுவையான நிகழ்ச்சியை சொன்னார் :

(எனக்கு தெரிந்த தமிழில் அதனை திரும்ப சொல்கிறேன்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழகான நாள். பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருந்த காலம். கல்கி அவர்கள் வீடு. ஆழ்ந்த சிந்தனையில், எப்பொழுதும் போல ஊஞ்சலில் சாக்க்ஷாத் கல்கி பெருமான். அவரது செல்ல குமாரி ஆனந்தி ஓடோடி வந்தால்.

ஆனந்தி: “அப்பா! அப்பா!! அப்பா!!!”

(சிந்தனையிலிருந்து மெதுவாக வெளிவந்து, சிறு புன்முறுவலுடன்….)

கல்கி: “சொல்லடி என் செல்வமே”

ஆனந்தி : “இப்படி அழகான கதைகளை எழுத, உங்களுக்கு மூலம் ஏது? எதை பார்த்து, எதை சிந்தித்து, எதை ரசித்து இப்படி எழுதுறீங்க…. அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லுங்களேன்.”

கல்கி: “ஹஹஹா, அதில் ஒரு ரகசியமும் இல்லை. நமக்கு என்று நம் முன்னோர்கள் விட்டு சென்ற ராமாயணம் மற்றும் மகாபாரதம் தான் என் வித்து.  அந்த விதை துளிர்விட்ட இலைகளே என் எழுத்துகள்”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஹா. நமது பண்பாட்டின் அருமையை அறிந்த பண்பு கொண்ட எழுத்தாளன் அல்லவா அவன்.

VNATHIYATHEVAN POONGULALI

மேலும் தொடர்ந்தார், எனது அன்பு கொண்ட, ராமமூர்த்தி ஐயா. பொன்னியின் செல்வனில் வரும் பல கதாப்பாதிரிங்களில் ராமாயண சாயல் தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், சொல்லின் செல்வன் ஹனுமனின் மறு அவதராம். 

இது எத்தனை பெரிய உண்மை என்பதை நான் பல மாதங்களாக (சிறுது) சிந்தித்து தெரிந்து கொண்டேன்.

எனக்கு தெரிந்த,புரிந்த மட்டில் சில ஒற்றுமைகள்:

i) அசாதியமானவைகளை செய்வதில் இருவரும் சூரர்கள். அனுமார், சீதயை சந்தித்தது,பேசியது. வந்தியத்தேவன், சுந்தர சோழரை பார்த்தது, ஓலைக் கொடுத்தது, அ(பா)பயம் கேட்டது.

ii) இருவரும் கடலை கடந்து, இலங்கை சென்று, தத்தம் வாழ்வின் பயனை அடைந்தனர். அனுமன் சீதையைக் கண்டது. வல்லத்தவன், பொன்னியின் செல்வனை சந்தித்தது.

iii) அனைத்து முக்கிய கதா பாத்திரங்களுடன், இவர்கள் கொண்டிருந்த நட்பு அருமை. இரண்டிலேயும், இந்த நட்பு வலயத்தை உருவாக்க நடந்த சம்பவங்கள் நம் மனதை கொள்ளை கொண்டவை. இது கதை சொல்வதிலேயே ஒரு புதியமான யுக்தி. அனுமன் – ராமன், சீதை, இலக்குவன், சுக்ரீவன், ஜாம்பவான்…… வந்தியத்தேவன் – ஆதித்த கரிகாலார், திருமலை நம்பி, கந்த மாறன், சேந்தன் அமுதன் (உத்தம சோழர்), குந்தவை, வானதி, பூங்குழலி, பொன்னியின் செல்வன்…..

iv) இருவரும், முதலில் ஒரு தலைவனுடன் இருந்து, பிறகு ஒரு உத்தம தலைவனிடத்தில் சரணடைந்த, பெருவதர்கரிய பெரும் பேற்றை பெற்றவர்கள். அனுமன் – சுக்ரீவன் பிறகு ராமன், வந்தியத்தேவன் – முதலில் ஆதித்த கரிகாலன், பிறகு அருள் மொழிவர்மன்.

v) சொல்லிவன் செல்வர்கள். அனுமன் – ராமனிடத்தில், சீதையை கண்டதை பற்றி கூறுவது. வந்தியத்தேவன் – சுந்தர சோழரிடத்தில், ‘அபாயம்’ =  ‘அபயம்’மாக மாற்றியது.

vi) நம் மனதை கவர்ந்த அழகன்கள். (இதற்கான எடுத்துகாட்டை வர்ணிக்கும் அளவுக்கு என்னகு தமிழ் தெரியாது. எழுத வராது. மன்னிக்க. ஆனால் சிந்திக்க.)

vii) தன் தலைவனுக்கு முப்பொழுதும் தாசனாக இருப்பது மிக கடினம். இதைனை இருவரும் இறுதிவரை செய்தனர். கஷ்டக் காலம் வரும் பொழுதும் செய்தனர்.

viii) ராமருக்கு வைத்தியம் பார்க்க பெரும் உதவி செய்தார் ஹனுமான். (சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது). நாகைப்பட்டிணம் புத்த விஹாரத்தில், பொன்னியின் செல்வனை சேர்த்தான் – தேவன். இருவருமே தங்கள் தலையை அடமானம் வைத்து, உயிரைக் கொடுத்து, தத்தம் தலைவர்களுக்கு வைத்தியம் செய்தனர்.

ix) ஹனுமனுக்கு ராம நாமம் என்றால், தேவனுக்கு சொல்லும், வேலும் ஆயுதமாகின.

x) இறுதியாக….. ராமன் பெரியவனா அனுமன் பெரியவனா… என்னும் கேள்வி ராமாயணம் படிப்பவர்கள் மனதில் நிச்சியம் வந்திருக்கும். அது போல பொன்னியின் செல்வன் பெரியவனா வந்தியத்தேவன் பெரியவனா…. எனும் கேள்வி பொன்னின் செல்வன் படிப்பவர்கள் மனத்தில் எழும். (இவைக்கு ஒரு சரியான விடை இல்லை. ஹைபோதிடிகள் கேள்வி). சிந்திக்க.

HANUMAN

மேலே சொன்ன ஒற்றுமைககளில் ஏதேனும்

i) தவறுகள் இருந்தால் சொல்லவும்,

ii) திருத்தும் இருந்தால் சொல்லவும்,

iii) வேறு நல்ல உதாரணங்கள் இருந்தால் சொல்லவும்,

iv) கூடுதல் ஒற்றுமைகள் இருந்தால் சொல்லவும்

இருவருக்கும் சில பல வேற்றுமைகளை உள்ளன. உங்கள் ஊக்குவிப்பு இருப்பின், ஒரு பதிவில், அதையும் (யோசித்து) எழுத, கொள்ளை ஆசை.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

(என்னுரை)

கல்கி அவர்களின் எழுத்துக்கென ஒரு ஆரவாரமற்ற, ஆர்பாட்டமில்லா ரசிகர் கூட்டம், தமிழ் நாட்டில், உலகத்தில் உள்ளது. அதில் ஒரு கத்துக்குட்டி நான்.

அவரை படித்து ரசித்து, தமிழில் கிறுக்கவந்தவன் நான். எம் எழுத்துலக ஆசானுக்கு, தலைவனுக்கு, நவீன தமிழ் அகத்தியனுக்கு, பொன்னியின் புதல்வனுக்கு, ‘கல்கி’க்கு, இப்பதிவு சமர்ப்பணம். நாற்சந்தியும், ஓஜசும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள். இந்த ஐம்பதாவது பதிவை அவருக்கு கொடுத்ததில் எனக்கு ஆத்ம திருப்தி. இது ஒரு சிறு குரு தக்க்ஷனை எனலாம்.

மேலும் அவரை பற்றி பேசுவேன். என் எண்ணங்களை போல, பல பதிவுகள் மேலும் ‘கல்கி’யை சுற்றி சுற்றி வரும். இதற்காக உங்கள் நல்லாதரவையும், அன்பையும் கோறுகிறேன்.

இப் பதிவில்: எழுத்துப் பிழைகள், கருத்து சொதப்பல்கள் இருக்கும் பட்சத்தில், அந்த குறை, குற்றம் என்னை சாரும். நல்லவை அனைத்தும் ‘கல்கி’யை மட்டுமே சாரும்.

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனுமுலு!!!

கல்கி தாசன்,

ஒஜஸ் 😉

கல்கியின் அனைத்து படைப்புகளையும் பதிவிறக்க சொடுக்கவும்.

(என்னை போலவே கல்கி அவர்களால் தமிழ் பக்கம் ஈர்க்கப்பட்டு, என் முயற்சி அனைத்துக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கும், என் அன்பு தோழி ‘அபிநயா’ அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள், நல்வாழ்த்துகள்!!!)

Comments on: "வந்தியத்தேவன்!!!" (10)

  1. ABINAYA MANIMARAN said:

    wooowwww…. wat a gr8 comparison.. ma attraction towards vanthithevan s gettin higher and higher…!!:P:P

    Like

  2. திரு ஒஜஸ் அவர்களுக்கு,

    மிகச் சிறப்பாக வந்தியத்தேவனையும் அனுமனையும் ஒப்பிட்டு இருக்கிறீர்கள். எதிர்பாராமல் ஒரு புதையல் கண்டார்போல இருக்கிறது. எங்கள் வீட்டில் எல்லோருமே பொன்னியின்செல்வன் விசிறிகள். உங்களது கருத்தை கட்டாயம் என் அம்மாவிடம் சொல்ல வேண்டும். என் பெண்ணிடமும் சொல்ல வேண்டும். மிகவும் வியக்க வைத்தது உங்கள் கருத்துக்கள். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே மிகச் சரியாக இருவருக்கும் பொருந்துகிறது.

    வித்தியாசங்களை எழுதி விட்டீர்களா? தயவுசெய்து லிங்க் அனுப்பவும்.
    என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகிறேன்:
    என் பேரன் ‘திருப்பித்திருப்பி இந்தக் கதையை படிக்கிறாயே, எனக்கு அந்தக் கதையை சொல்லேன்’ என்றான். ‘உனக்கு தமிழ் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறேன். அப்போது நீ என்னைப்போல் திரும்பத்திரும்பப் படிக்கலாம்’ என்று சொன்னேன். திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய கதை இது, இல்லையா?

    வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, பூங்குழலி இவர்களுடனேயே (உங்களையும் சேர்த்து) தூங்கச் செல்லுகிறேன்!

    பழைய இனிமையான நினைவுகளை மீண்டும் மலரச் செய்ததற்கு நன்றி!

    அன்புடன்,
    ரஞ்ஜனி

    Like

  3. பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன், ‘சொல்லின் செல்வன்’ ஹனுமனின் மறு அவதராம்.

    வியக்கவைத்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

    Like

  4. […] கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு முன்னோடி யார்…. யாரை […]

    Like

  5. இராமாயண மகாபாரதத்தில் அநேக கதைகள் உள்ளன. Wealth of plots and twists. மணிரத்தினம் அன்று தளபதி முதல் இன்று இராவணன் வரை இதிகாசங்களில் இருந்து தானே கதைக் களத்தையும் நாயக நாயகிகளையும் வில்லன் பாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து உள்ளார்! அதே போல தான் மற்ற எழுத்தாளர்களும் படைப்பாளிகளும்!

    நல்ல பதிவு! Who would have thought Hanumaan and Vanthiathevan! 🙂

    amas32

    Like

  6. […] இருவர். ஒருவர் என் ஆசான் கல்கி (பதிவு : வந்தியத்தேவன்)  , மற்றவர் எனக்கு சிறிது மட்டுமே […]

    Like

  7. சிவக்குமார் said:

    ராமன் போல் அருண்மொழி வர்மன்
    மக்கள் மனதாண்ட மன்னன்
    தம்பியிடம் ஆட்சி தந்தது
    மந்தாகினி -சபரி

    Like

பின்னூட்டமொன்றை இடுக

குறிச்சொல் மேகம்